விதி.
வணக்கம்.
விருதுகளும் விதிமுறைகளும்.
எந்த நல்ல செயலுக்குமே சில வரைமுறைகள், சில கோட்பாடுகள் வகுத்துக்கொண்டால், அளவுக்கு மீறாமல் அமிர்தமாகவே அதை வைத்திருக்கலாம். எனவே நம் விருதுகள் விழாவுக்கும், சில விதிகள், சில வழிகள்.
விருதுகள் வழங்கப்படும் வகைகள் முதலில்.
● சிறந்த எழுத்தாளர் 2021 (பல்வேறு கதை வகைகள்... Romance, scifi, horror, etc.)
● சிறந்த இளம் முனைவர் 2021 (2020ல் எழுதத் தொடங்கி, இப்போது ஒரு கதையையேனும் முடித்திருப்பவர்)
● சிறந்த கதைவாசகர் 2021
(இந்த வருடத்தில் குறைந்தது ஆறு கதைகளை முழுதாக வாசித்து, அதில் ஒவ்வொன்றுக்கும் 3 கமெண்ட்டுகள் செய்திருப்பவர்)
● சிறந்த கவிதையாளர் 2021 (கவிதைகளால் மனதைக் கொள்ளை கொண்டவர்)
● இவர் இலக்கியவாதி 2021
(தமிழம் நடத்தும் வினாடி வினா போட்டியில் வெல்பவர்)
● வாட்பேட் நட்புவட்டம் 2021 (வாட்பேடில் சந்தித்து நட்பாகிய நண்பர் குழு ஒன்று)
● நண்பேன்டா 2021 (வாட்பேட் வாசகர்களால் மிகச் சிறந்த நண்பனென்று தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர்.
● தமிழ் வாட்பேடின் 'செல்லப்பிள்ளை' 2021 (இந்த வருடத்தில் அதிக நண்பர்களை சம்பாதித்த ஒருவர்)
● வாட்பேடின் வால்டர் வெற்றிவேல் 2021! (தனது கதைகளில் நிறைய ஆட்களை 'போட்டுத்தள்ளியவர்')🤣
● வாட்பேடின் நாட்டாமை 2021!
(நிறைய காதல் கதைகளில் யார்மேல் தவறு என்று கமெண்ட்டில் விவாதிப்பவர்!)😆😋
● வாட்பேடின் பாட்டுக்குயில்கள் 2021
(தமிழம் நடத்தும் பாட்டுப்போட்டியில் வெல்லும் ஜோடி!)
● வாட்பேடின் சிரஞ்சீவி 2021
(2017க்கு முன் தொடங்கப்பட்டு, இன்றுவரை இயக்கத்தில் உள்ள பயனர் ஒருவர்!)
ஆகமொத்தம் பன்னிரெண்டு விருதுகள்!!! நமது இவ்வருடத்தின் பன்னிரெண்டு மாதப் பயணத்தைக் குறிக்கும்படி! (எப்படி, சூப்பர்ல??😉)
இப்போது, விதிமுறைகள்.
● பக்கத்து இலைக்கு பாயாசம் இங்கே பரிமாறப்பட மாட்டாது!! தங்கள் சொந்தக் கதைகளை மட்டுமே விருதுகளில் பங்கேற்க பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு ஒரு கதை பிடிக்கும் என்றால், அதன் எழுத்தாளரை அழைத்து, போட்டியிட சொல்லலாம்.
● உதவியாளர்கள் இனி வேண்டாம். உதவும் உள்ளங்கள் நிறைய உள்ளன இப்போது.
●போட்டியிட விரும்பும் நபர்கள், (எந்த வகையாக இருப்பினும்) "தமிழம் விருதுகள்" என்னும் இப்புத்தகத்தை, தங்களுடைய வாசிப்புப் பட்டியலில், அதாவது, reading list(existing, updating one)ல் சேர்க்க வேண்டும்.
● தங்களது மெசேஜ் போர்டில், இந்த புத்தகத்தின் லிங்க்கை பதிவிட வேண்டும்.
(இதெல்லாம் எதற்காக என்றால், அழைப்பில் விட்டுப்போன சொந்தங்கள் வழிமாறிச் செல்லாமல் வந்து சேர்வதற்காக.)
●போட்டியாளர்கள் வாட்பேடில் குறைந்தது மூன்று மாதங்களேனும் பயனராக இருத்தல் வேண்டும்.
●தங்களுக்கு பயனில் உள்ள ஒரு ஈமெயில் ஐடி இருக்க வேண்டும். தினமும் ஒருமுறையேனும் அதைத் திறந்துபார்க்கும் வசதியும், நேர அவகாசமும் இருத்தல் நன்று.
●தமிழம் நடத்தும் வினாடிவினா மற்றும் பாட்டுப் போட்டிகளில் பங்குபெற விரும்பினால், Madhu_dr_cool என்ற பயனர் பக்கத்தில் (dm or message board) தங்களது பெயரைத் தந்து முன்னரே பதிவிடல் வேண்டும்.
● தாங்கள் இவ்விழாவில் ஏதேனும் குறைகள் அறிந்தாலோ, தங்களை இங்குள்ள எவரேனும் வருந்தும்படி செய்துவிட்டாலோ, முதலில் ஒருங்கிணைப்பாளர்களிடம் பேசி, உங்கள் கருத்துக்களைப் பதிவிடலாம். அதிலும் திருப்தி அளிக்கவில்லை என்றால், வாட்பேடில் புகாரளிக்கலாம்.
● மதிப்பீட்டாளர்கள் விபரம் போட்டியின் பின்னரே வெளியிடப்படும். பெயர்கள் கேட்டு வரும் கேள்விகள் பதிலளிக்கப்படமாட்டாது.
● பணமோ, முதலீடோ இங்கே பரிசாகத் தரப்பட மாட்டாது. வெற்றியாளர்கள், அவர்கள் வென்ற விருதின் ஒரு இலட்சினையையும்(stamp/sticker), ஒரு சான்றிதழையும் பெறுவர்.
● பிற போட்டியாளர்களை இம்சிப்பதோ, பிற கதைகளை இகழ்வதோ இங்கே நடக்கக்கூடாது. ஒரு offensive comment தென்பட்டாலும், பயனரின் பங்கேற்பை ரத்து செய்யும் முழு உரிமை ஒருங்கிணைப்பாளர்களுக்கு உண்டு.
● முக்கியமாக, போட்டியில் பங்குபெற விண்ணப்பிக்கும் பயனர்களைத் தேர்வு செய்வதும், நிராகரிப்பதும் யாருடைய தனிப்பட்ட முடிவும் கிடையாது. விதிமுறைகளுக்கு உட்பட்டு வரும் அனைத்துப் பங்கேற்புகளும் வரவேற்கப் படுகின்றன. ஆயினும், படிவத்தில் செய்யும் தவறால் நிராகரிக்கப்படும் பங்கேற்புகளுக்கு, நிர்வாகம் பொறுப்பேற்காது.
● இது, எழுத்துலக அனுபவத்தை ஒரு நல்ல நினைவாக மாற்றும் சிறு முயற்சியே. பணம், பெயர், புகழ் ஆகியவை எதுவும் இதன் பிரதான நோக்கம் கிடையாது. விழாவின் முனைப்பெல்லாம்...just for fun தான்!!! So chill.. நாங்கள் சொல்லித்தான் நீங்கள் பெரிய எழுத்தாளரெனத் தெரியவேண்டும் என்று இல்லை. உங்கள் வாசகர்களுக்கு நீங்கள் நாயகர் தான்! அதேபோல் நாங்கள் சொல்லாவிட்டால் உங்களுக்குத் திறமையில்லை என்றும் கிடையாது. மீண்டும் அடுத்த வருடம் பார்த்துக்கொள்ளலாம்.
● முடிந்தவரை வெளிப்படையாகவே மதிப்பீடுகள் நடக்கும். போட்டியாளர்கள் விரும்பினால், ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டு, அவர்களின் கதைக்கு மதிப்பீடு செய்யப்பட்ட மதிப்புத் தாளை வாங்கி சரிபார்க்கலாம். (Revaluation தான் இங்கயும்🤣)
● வாட்பேடின் நிர்வாகத்துக்கும். இப்போட்டிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. இது தனிநபர் நடத்தும் விழா ஆகும்.
எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை😅🤣🤣
ரூல்ஸ் நிறையப் போட்டாச்சு.. போதும்னு நினைக்கறேன். இருந்தாலும், என்ன சந்தேகம்னாலும் இங்கே கேளுங்க, முடிந்தவரை, தெரிந்தவரை நானும் பதில் சொல்லப் பார்க்கிறேன். (ஃபர்ஸ்ட் டைம் பா.. கஷ்டமாக கொஸ்டீன் எல்லாம் கேக்காதீங்க!!😁🥺🥺)
All the very best for all of you Amazing people!!!!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top