தீயாய் சுடும் என் நிலவு 15
ஒரு மணிநேரம் எந்த தகவலும் இல்லாமல் இருவரும் அல்லாடி நிற்க, மருத்துவர் வெளியே வருவதை கவனித்து அவரை நோக்கி ஓடினர்.
"பெஷண்டுக்கு நீங்க யாரு?" என்று கேட்டார்.
"சார்! அவங்க என் அக்கா. அவங்க எப்படி இருக்காங்க?" என்றாள் ஸ்ரீ அமுதன் திணறுவதை பார்த்து.
"உங்ககிட்ட பேசணும் வாங்க" என்று அறைக்கு செல்ல, இருவரும் பதறிய இதயதோடுபின்னே சென்றனர்.
பத்து நிமிடதிர்க்கு பின் வெளியே வந்த இருவரின் முகமும் வெளியேறி போய் இருக்க, பேயரைந்ததை போல் இருந்தனர் இருவரும்.
"அமுதா அவங்க பேரன்ஸ்கிட்ட சொல்லிடலாமா?" என்றாள் ஸ்ரீ.
"இல்ல ஸ்ரீ. அவசர படவேண்டாம். அவ முதல்ல கண் முழிக்கட்டும். அப்புறம் அதை பத்தி பேசலாம்" என்றான் அமுதன் முடிவாக.
அதன் பின் ஏகபட்ட போராட்டங்கள் அமுதன் அடமாய் நின்று பெயரில் புது ஷாப்பை ரெஜிஸ்டர் செய்து ஆரம்பிதான். ஆறு மாதங்கள் ஓடிட மிருதி புது ஷாப்பை ரெஸ்டாரண்டாய் மாற்றி இருந்தாள். அவளின் அயராத உழைப்பால் நல்ல முன்னேற்றம் இருக்க, மிருதியின் உடல் நிலையில் அவ்வபொழுது தேய்வும் காணப்பட்டது.
அவள் உடல்நிலையால் குழந்தையை கணவனிடம் கொடுத்துவிட முடிவு செய்திருந்தாள்.
அதன் விளைவு தான் இன்று தீரணை சந்தித்தது.
அவனின் விழிகளில் இதற்கு முன் தெரியாத ஒரு உணர்வு தனக்காக ஒளிர்வாத்தை அவள் கண்டுகொண்டாலும் தான் இருக்கும் நிலையும் கடந்து வந்த காலங்களும் அவளின் மனதை கல்லாக்கியது.
ஆயிரம் தான் அவனிடம் கோபம் இருந்தாலும் அவளின் மனம் கவர்ந்த ஒருவன் அவன் மட்டும் தானே.
அவனின் அருகாமையை அவளின் பெண்மை உணர்ந்து அவனுக்காக ஏங்கதான் செய்தது.
விடாபிடியாக அவளும் அவனிடம் இருந்து தன்னை காத்து கொண்டு வெளியேறினாள்.
வீட்டிற்கு வந்தவளிடம் இருவரும் கேள்விகளை அடுக்கி கொண்டே போயினர்.
"என்ன தி உங்க அவரை பார்தியா? பேசுனியா? எனி ரொமான்ஸ் நாங்க மிஸ் பண்ணிட்டோமா? பரவால்ல வந்துட்டியே எங்க அவரோட போய்டுவியோன்னு நாங்க இங்க யோசிச்சிட்டு இருந்தோம்" என்றான் அமுதன் கிண்டலாக.
இருவரையும் முறைத்தவள்.
"எருமை அறிவே கிடையாதா? உனக்கு வேற வேலையே இல்லையா? ஒழுங்கு மரியாதையா போய்டுங்க ரெண்டு பேரும்" என்று அருகில் இருந்த தலையணை எடுத்து பொய் கோபத்தோடு அமுதன் மேல் வீசினாள்.
"என்னம்மா அடிக்கிற? உங்க மாமாவை பார்க்க போனியே? என்ன ஆச்சுன்னு தானே கேட்டேன்?" என்றான் அமுதன்.
வெளியே கோபம் காட்டினாலும் அவளின் முகத்தில் மறைந்து இழைந்து ஓடியது ஒரு மெல்லிய நாணம்.
"நீங்க நினைக்கிற மாதிரில்லாம் அங்க எதுவும் நடக்கலை" என்று நடந்ததை கூறினாள் மிருதி.
"அப்போ மாம்ஸ்கிட்ட நாளைக்கு பாப்பாவை கூட்டிட்டு போகனுமாக்கா?" என்றாள் ஸ்ரீ.
"ஆமாடா. ஆனா.." என்று இழுத்தாள் ஸ்ரீ.
"என்னக்கா?" என்றாள் ஸ்ரீ.
"உங்க ரெண்டு பேரையும் கேக்காம நான் ஒரு முடிவு பண்ணி ஒரு விஷயத்தை சொல்லிட்டு வந்துட்டேன்." என்றாள் மிருதி.
"என்ன சொல்லிட்டு வந்த?" என்றான் சுவரில் சாய்ந்து நின்றபடி.
"அது நான் கட்டிக்க போறவருடன் வரேன்னு சொல்லிட்டேன்" என்றாள் மிருதி.
"என்னது கட்டிக்க போறவரா? அது யாரு? ஏன் அப்படி சொன்ன?" என்றான் அமுதன்.
"எதுக்காக குழந்தையை இப்போ தரேன்னு கேட்டார். என் கிட்ட வந்துடு என்கூட நீ இல்லாம நரகமா இருக்கு. வந்துருவல்ல? ன்னு கேட்டார். அதனால தான் நான் வேரா ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொல்லிட்டேன்" என்றாள் மிருதி.
"அடிப்பாவி ஏன் அப்படி சொன்ன? இப்போ என்ன பண்ண போறே" என்று கேட்டான் அமுதன்.
"அதுக்கு தான் எனக்கு ஹெல்ப் பண்றதுக்கு நீ இருக்கியே" என்று சிரித்தாள் மிருதி.
"நான் என்ன பண்ணனும்? என்னால எப்படி உதவமுடியும்?" என்றான் அமுதன்.
"உங்களை விட்டா நான் யாரை நம்புவேன். அதனால.." நிறுத்தி இருவரையும் பார்த்தாள் மிருதி.
"அதனால...?" என்று இருவருமே கேட்க.
"நாளைக்கு நீ தான் என்கூட வரபோற" என்றால் பட்டென்று.
"என்னது நான் உன் பிரென்ட்டி. அதுவுமில்லாம எனக்கு இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் ஆகபோகுது. உனக்கே கொஞ்சம் இது ஓவரா தெரியலை" என்றான் அமுதன்.
"இது எதுவுமே எனக்கு தெரியாது பாரு. நீ புதுசா சொல்ற?" என்று முறைத்தாள் மிருதி.
"தி சீரியசா தான் சொல்றியா?" என்றான் அமுதன் அமைதியாக.
"ஆமா" என்றாள் மிருதி.
ஸ்ரீ எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,
"தி நீ அவர்கூட சேர்ந்து வாழனும்னு நினைக்கலையா?" என்றான் அமுதன்.
"இப்போதைக்கு முடியாது" என்றாள் மிருதி.
.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top