💝👀காற்றாய் வருவேன்👣 உன்னோடு கதை பேச-09
திருமணமாண பிறகு காதல் கணவனுக்காக தன்னை மிக நேர்த்தியாக அலங்கரித்து கொண்டவள் அவனை காணும் ஆவல் மனதை கட்டுப்படுத்தமுடியாமல் துடிக்க வைக்க.
'இத்தோ வந்துட்டோம்... அவனும் எனக்காக தான் காத்திருக்கான். காலைலர்ந்து நாலு முறை போன் பண்ணிட்டான். இந்த கல்யாணம் முடிஞ்சதும் நாளைக்கு அப்பாகிட்ட வந்து பேசுறேன்னு சொல்லிருக்கான். அதுவேற திக்கு திக்குங்குது... கடவுளே எல்லாம் நல்லபடியா முடிஞ்சு அப்பா எங்க காதலுக்கு சம்மதிகனும்... நானும் அவனும் சேர்ந்து சந்தோஷமா வாழனும்..' என்று யோசித்துக்கொண்டே வந்தவள் தனது கார் மண்டபத்தின் வாசலில் நிற்கவும் விழிகளில் காதலோடும் கனவுகளோடும் இறங்கினாள்.
"எனக்கு இங்க யாரையும் தெரியாது.. சொன்னா கேட்கிறானா பாரு... முகுர்த்த நேரம் வேற நெருங்கிட்டு..." என்று புலம்பியபடி அங்கிருந்தவர்கள் யாரையும் தெரியவில்லை என்றாலும் லேசான ஓரு புன்னகையை வீசிவிட்டு மண்டபத்தின் வாசலுக்குள் அடியெடுத்து வைக்கவும் கெட்டிமேளம் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.
"அயோ தாலியே கட்றாங்க. இவன் எங்க ஆளையே காணோமே?" என்று விழிகளை சுழலவிட்டபடி வேகமாய் உள்ளே சென்றாள்.
இறுதியாக மணமக்களிடம் பார்வையை செலுத்த அவளின் இதயம் துடிக்க மறந்து போனதென்னவோ உண்மை தான்...
அங்கே மணமகளின் கழுத்தில் அவளுடைய காதலனும் கணவனுமான வருண் மாங்கல்யத்தை கட்டி கொண்டிருந்தான்.
எதுவும் யோசிக்க முடியாமல் மூளை செயலிழந்து போக, விழிகளில் அருவியாய் கண்ணீர் ஊற்றெடுக்க தொடங்கியது. மெதுவாய் தள்ளாடும் கால்களில் மணப்பந்தல் முன் சென்று நின்றாள்.
எந்த வித முகபாவத்தையும் காட்டாமல் இறுகி போயிருந்த வருணின் விழிகளில் தன் காதல் மனைவியை கண்டதும் பேரதிர்ச்சியை காட்டிட அவனின் விழிகளிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.
இருவரின் விழிகளும் சில நொடிகள் கலந்திருக்க, ஐயரின் வார்த்தைகள் இருவரின் கவனத்தை கலைத்தது.
"இந்த குங்குமத்தை பொண்ணு நெத்தில வைங்கோ" என்றதும் மீண்டும் வலியோடு வருணின் விழிகள் எதிரே நின்றவளின் விழிகளோடு கலந்துநின்றது.
"வருண் குங்குமம் எடுத்து வைப்பா" என்ற தன் அன்னையின் வார்த்தைகளில் மீண்டும் கல்லாகிப்போன முகத்தோடு எதிரே நிற்பவளின் முகத்தை காணமுடியாமல் எங்கோ பார்த்தபடி குங்குமத்தை வைக்க, அதை காண சகியாமல் விழிகளை மூடினாள் தாரணி.
வருணின் விழிகளில் காரணத்தை கூறுகிறேன் என்ற கெஞ்சல் தெரிய, இனி என்னக்கூறி என்ன பயன்? என்று ஒரு வெற்று புன்னகையோடு வேகமாக திரும்பி நடந்தாள்.
வாசல் வரைக்கும் சென்று நின்றவள் வேகமாய் திரும்பி அங்கிருந்தோரை பார்த்தாள். எல்லோரும் மணமேடையை நோக்கி கொண்டிருந்தனர்.
ஆனால் வருணின் விழிகள் மட்டும் இவளை நோக்கி கொண்டிருந்தது. வருணை பார்த்துக்கொண்டே தன் கழுத்தில் இருந்த தாலியை வெளியே எடுத்து அறுத்து கைக்குள் அடக்கி கொண்டு இறுதியாக ஒரு முறை அவனை விழிகளில் நிரப்பி கொண்டு கனத்த இதயத்தோடு வெளியேறினாள்.
வீட்டிற்கு பித்து பிடித்தவள் போல் வந்தவளை கண்டு பயந்துபோயினர் அவளின் பெற்றோர்.
எவ்வளவு கேட்டும் வாய் திறக்காமல் எங்கோ வெறித்தபடி இருந்தாள்.
இரண்டு நாட்கள் யார் பேசியும் கெஞ்சியும் கோபப்பட்டும் தனதறையை திறக்கவில்லை. சாப்பிடவில்லை... களைந்து சென்ற காதல் வாழ்விற்காகவும் மீட்டெடுக்க முடியாத காதலுக்காகவும் தன்னையே இரையாக்கி தவமிருக்க தொடங்கினாள்.
எதை தேடுகின்றாள் என்ற நோக்கில்லாமல் தேடத்தொடங்கியிருந்தாள்.
இவளின் நிலையறிந்து ஊருக்கு சென்றிருந்த அவளின் அண்ணன் பதட்டதோடு நேரில் வந்து நிற்க, தாயை கண்ட சேய் போல் ஓடி சென்று அவன் தோளில் சாய்ந்து தன் துக்கத்தை கண்ணீரால் கொட்ட தொடங்கினாள்.
எதற்கு அழுகிறாள்... ஏன் அழுகிறாள்... யாரால் அழுகிறாள்... எதுவும் தெரியாது இருந்து தங்கைக்கு தந்தையானான்.
எவ்வளவு கேட்டும் பயனில்லை...
அழுது அழுது ஓய்ந்தவள்... ஒருவழியாய் தன் மனதிருந்த காதலுக்கு இதயத்திலேயே இடம் ஒதுக்கி சமாதியாக்கினாள்.
இதற்கு மேல் இங்கிருக்க பிடிக்காமல் வீட்டிலிருப்பவர்கள் எவ்வளவு தடுத்தும் அடுத்த ஒருவாரத்தில் தோழியின் உதவியால் சென்னையில் ஒரு நல்லவேலையில் சேர்ந்தாள்.
"இவளுக்கு வேலை செய்யணும்னு என்ன தலையெழுத்து.. இவ முதலாளியா ஆயிரம் பேருக்கு சம்பளம் தர நிலைமை இருந்தும்... என்னால இதெல்லாம் தாங்க முடியலை" என்று கண்ணீர் சிந்தினார் அவளின் தாய்.
"அவளுக்கு என்னவோ வேலைக்கு போகனுமனு தோனிருக்கு... போனா அவளும் பழையபடியாக சான்ஸ் இருக்கு.. போகட்டும் விடு ம்மா..." என்றார் அவளின் தந்தை.
"என்னமோ போங்க... வயசுக்கு வந்த பொண்ணு... கல்யாணம் பண்ணி இன்னொரு வீட்டுக்கு அனுப்பிறதை விட்டுட்டு கண்காணா தூரத்துல வேலைக்கு தனியா போய் தங்குறதெல்லாம் எனக்கு சரியா படலை." என்று புரிந்து தள்ளினார் அம்மா.
இவர்களின் பேச்சை கேட்டு கொண்டிருந்த மகனோ... "அம்மா கவலை படாதீங்க... உங்க உடம்புக்கு ஏதாவது ஆச்சுன்னா எங்களுக்கு யார் இருக்கா. தங்கச்சி நல்லா இருக்கா?" என்றான்.
"ஆமா போடா.. நீயும் தான அவள் போறேன்னு சொன்னவுடன் போம்மான்னு அனுப்பி வைச்ச... இப்போ வந்து கதை பேசுறான்..." என்று பொறிந்தார்.
"அம்மா.. என்னை என்ன நினைச்சீங்க? என் தங்கச்சி எங்கேயோ வேலைக்கு போறேன்னு சொன்னவுடன் அனுப்பிட்டு நான் இங்கே நிம்மதியா இருப்பேனா?" என்று சிரிக்கவும் ஒன்றும் புரியாமல் பார்த்தனர் இருவரும்.
"அம்மா... அவ வேலைக்கு போயிருக்கிற கம்பெனி என் பிரன்டோட அப்பாவோடது... அதுவுமில்லாம அவங்க நம்ம சப் கான்டராக்டர்... அப்புறம் அவ இருக்கிற வீடும் அவ பேர்ல வாங்கிட்டேன். ஆனா இதெல்லாம் தெரிஞ்சா உங்க பொண்ணு சும்மா இருப்பாளா?? திரும்பி வேற வேலை தேடறேன்னு கிளம்பிடுவா... அதனால தான் வேலை செய்ற இடத்துல நம்மள பத்தி எதுவும் சொல்ல கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிருக்கேன். வீட்டோட பழைய ஓனர்கிட்டயும் வீடு அவரோடது மாதிரி குறைந்த வாடகை வாங்க சொல்லிருக்கேன். அந்த வாடகையும் அங்க அவளுக்கு தெரியாம என் தங்கச்சி பேர்ல நான் ஓபன் பண்ண பேங்க் அக்கவுண்ட்கு போய்டும்." என்று சிரித்தான்.
"அதானே பார்த்தேன்.. நீயாவது உன் தங்கச்சியை சும்மா விடறதாவது.." என்று சிரித்தனர். இருவரும்.
"சரிம்மா. இனி டென்சன் ஆகாம நிம்மதியா இருங்க. நான் இருக்கேன் நான் பார்த்துக்குறேன்... "என்றவன் தன் தந்தையை பார்த்து, "அப்பா நான் உங்ககிட்ட தனியா பேசணும்" என்றான் முகத்தை சீரியஸாக வைத்து.
தந்தையுடன் தன் அலுவலக அறைக்குள் சென்றதும் கதவடைத்தவன்...
"அப்பா நான் முதல்லயே உங்களை எச்சரிச்சேன்... நம்ம அரண்மனை விஷயம் வெளிய போகக்கூடாது... தெரிஞ்சா நம்ம பாப்பாக்கு ஆபத்துன்னு.. கேட்டிங்களா? இப்போ பாருங்க அரண்மனைய பார்த்துக்க வந்த மாரி... வெளிய யார்கிட்டயோ சொல்லிட்டான்னு தோணுது... பாப்பா உயிருக்கு ஆபத்து வரப்போகுதுன்னு என் உள்ளுணர்வு சொல்லிகிட்டே இருக்கு... அதனால தான் அவளை இங்க இருக்க விடாம ஊர்லையே இருக்கட்டும்னு அமைதியா இருக்கேன். " என்றான் கோபமாக.
"அயோ என்னப்பா சொல்ற? " என்றார் அவனின் தந்தை.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top