நிறுத்தம் - Author's Note

ராஜ்-வினோதினியின் பிரிவை possessiveness என்ற ஒற்றை வார்தையில் வரையறுக்கப்பட முடியாது. Need- சுவாசிக்கும் காற்று போல் ஒருவர் நமக்கு தேவையாய் இருக்கும் ஒரு காதலை அவ்வளவு எளிதில் தூசியாக்க முடியாது, இருவரும் பிரிந்து போவது கட்டம் கட்டமாக நடைப்பெறும் ஒரு வலி. உயிரை சிறிது சிறிதாய் பிய்க்கும் ஒரு நீண்ட நிகழ்வு.

வானம் எங்கும் உன் பிம்பம்
ஆனால் கையில் சேரவில்லை
காற்றில் எங்கும் உன் வாசம்
ஆனால் வாசம் வாழ்க்கையில்லை

பிம்பம் நிஜமல்ல ஆனால் நான் காண்பதெல்லாம் உன் சிரிப்பை மட்டுமே. வாசம் வாழ்க்கையல்ல ஆனால் அதோடு தான் மிச்சம் இருக்கும் சொற்ப வாழ்க்கையை கடக்க ஆசை. உள்ளுக்குள் ஓர் ஏக்கம். உன்னோடு ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டேன் இப்போது அதை கனவாய் நினைத்து மறந்துவிடு என்றால் எப்படி.

முழுவதும் காதல் என்று சொல்ல I'm not a saint. காமமும் மோகமும் திக்குமுக்காட வைத்துள்ளது. மேனியை துளிர்க்க வைத்துள்ளது. நீ தீண்டிய இடமெல்லாம் எரிகிறது. சோப்பு வைத்து பலமுறை உடல் முழுக்க தேய்த்தும் இரத்தம் வராத குறை ஆனால் நீ தொட்ட இடமெல்லாம் எனக்கு மட்டும் தெரியும் தழும்புகள் தென்படுகின்றன. அவற்றில் உன் விரல் நகங்களின் தழும்பும் சேரும். (காதல் இதம், காமம் பேராசை. After all, it's one of the human needs under Maslow's hierarchy of needs. It's a feral emotion, one that was there before man was human. )

என் உயிர் போகும் முன் உன்னை ஒரு முறையேனும் பார்த்துவிட வேண்டும். பார்க்க அதிக வாய்ப்பும் இருக்கிறது ஆனால் பார்த்தால் என்ன சொல்வது? நான் அழுதுவிடுவேனோ என்றும் ஒரு பயம். அத்தருணத்தில் எண்ணிலடங்கா சண்டைகள் நினைவுக்கு வந்தால் தைரியத்துடன் உன்னை கடந்திருப்பேன் ஆனால் நீண்ட இடைவேளிக்கு பிறகு நல்லெண்ணங்களே உதிக்குமல்லவா? என்ன தோன்றும் எனக்கும் உனக்கும்? அதற்குள் உன்மேல் இருந்த போதை குறைந்திருக்குமா? உதிர்ந்த இலைகள் மீண்டும் கிளை சேருவதில்லை என்று உணர்ந்துள்ளேன் ஆனால் கடைப்பிடிப்பது கடினமாய் உள்ளது. ஆனால் உன்னை காணும் அந்நாள் வரும் வரை இப்போதைய வாழ்க்கையை கடக்க வேண்டும். இன்றைய வலியை கடந்தாக வேண்டும். வலி மரத்துவிடும் என்று என்னை நானே ஏமாற்றிக்கொண்டாக வேண்டும்.

[I'm stopping my writing for an indefinite amount of time. மற்றவர்கள் போல் வாரத்துக்கு ஒரு முறை எழுதுவது அல்லது முன்கூட்டியே கதையை plan செய்வது கிடையாது ஆதலால் தான் எப்போதாவது திடீரென தோன்றும் என் எழுத்து. மனசுல ஏதாவது தோன்றினால் உடனே கிறுக்கி அடுத்த அரை மணி நேரத்தில் post செய்துவிடுவேன். ஆனால் இப்போ எழுத எனக்கு மனசு வரல. இதயத்தை அடகு வைத்து சொற்கள் வாங்கி கோர்க்க மனமில்லை. What i wish to convey doesn't come off satisfactory. Thank you for your support. என்றாவது என் எழுத்தைக் காண தோன்றினால் பாதியில் நின்ற இக்கதை இங்கேயே இருக்கும். காதலுக்கு ஓர் அழகியல் உண்டு. அதுவும் அவ்வழகு மேலோங்கு நிற்பது பிரிவில். இது இக்கதையிலிருந்து நான் பிரியும் தருவாய். நன்றி. ]

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top