Empty

"இது அந்த திருடன் pocket ல இருந்து விழுந்து இருக்கு!" என Leena ஏதோ ஒன்றை நீட்ட robin ன் சந்தேகம் மேலும் வலுவானது.

"Hey! இது மாதிரியான ஒரு pen தான் Carlos Sir என்கிட்ட தந்தது. Albert Einstein ட தலை இருக்கிற pen" என robin கூற "But unbelievable நான் கொஞ்சம் கூட Carlos Sir இப்படியானவர் என்று எதிர்பார்க்கவில்லை. ஏன் அவர் இப்படி செய்தாரு? அவருக்கு நம்முடைய projects எதுக்கு?" என Leena வினவினாள்.

"Miss sabrina, principal மீதும் எதுக்கு சந்தேகம் வந்ததே தவிர Carlos Sir மீது கொஞ்சம் கூட சந்தேகம் வரவில்லை. அப்போ robin அன்று அந்த show ல கண்டது கூட Carlos Sir ஆக இருக்கலாமே!" என Albert கூற "But how?" என Deniyal கூற வர முன்பே குறுக்கிட்ட leo "Hey, யாருடையோ குறட்டை சத்தம் கேட்குது. யாரு அது? Who is that?" என்று ஆளை தேடினான்.

அருகில் towel ஐ சுத்தி pillow போல செய்து நன்றாக சுருண்டு கொண்டு தூக்கி கொண்டிருந்தான் danish. "Ok guys, tomorrow நாம இதை பற்றி கட்டாயம் Principal கிட்ட சொல்லனும். நம்முடைய proof தான் underground ல உள்ள நம்ம projects!" என robin கூற பலத்த எதிர்பார்ப்புடன் உறங்கச் சென்றனர் அனைவரும்.

அடுத்த நாளை காலை சூரியன் தன் கதிர்களால் பூமியை அலங்கரிக்க தன்னை படைத்த இறைவனை துதித்த வண்ணம் பறவைகளும் பூச்சிகளும் உணவு தேடி பறந்து சென்றன.

Principal வரும்வரையில் நண்பர்கள் வழி மீது விழி வைத்து காத்துக் கொண்டிருந்தனர்.

8 மணியாகியும் principal வந்தபாடு இல்லை. நண்பர்கள் அனைவரும் வாயில் கதவருகில் வரிசையில் நின்றுக் கொண்டிருந்தனர்.

8.30 மணியளவில் Newton robot அவர்களிடம் வந்து தங்களது வேலைகளுக்கு செல்லுமாறு உத்தரவிட, அவற்றில் ஒன்றேனும் அவர்களின் மூளை வாங்கிக் கொள்ளவில்லை.

5 நிமிடங்களின் பின் danish ன் பின்பக்கமாக யாரோ வந்து, labs கு செல்லுமாறு கூற "அய்யோ Newton, ஏன் சும்மா நொய் நொய் என்று இருக்க! நாங்க பெரிய task ஒன்றுல இருக்கோம். சும்மா வந்து வந்து disturb பண்ணாத. மீண்டும் ஒரு முறை disturb பண்ண என்றால் உன் motherboard கழற்றி துண்டு துண்டாக உடைச்சு நடு கடலில சுறா மீன்களுக்கு சாப்பிட போடுவேன்!" என பின்னால் பார்க்காமலேயே சொல்லிக் கொண்டு போனான்.

"ஆமா நீங்க எல்லாரும் எந்த கிரகத்தை பிடிக்க இப்படி ஒரு task பண்ணுறீங்க?" என பின்னால் இருந்த Miss Irish வினவ "Newton கு girl ட voice கொடுத்துடாங்களா?" என திரும்பிப் பார்க்க, பின்னால் Miss Irish இருப்பதை அப்போது தான் உணர்ந்தான்.

"இங்கு என்ன பண்ணுறீங்க எல்லோரும்?" என Miss Irish வியப்புடன் வினவ "Ma'am அது வந்து..." என loral விளக்க வர, பின்னால் கம்பீரமான குரல் ஒன்று கேட்டது.

"இங்கு என்ன சார்க் மாநாடா நடக்குது?" என்றவாறு உள்ளே நுழைந்தார் Carlos Sir. அவரின் முகத்திலே எவ்வித மாற்றமும் இருக்கவில்லை. நேற்றிரவு நடந்த சம்பவத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தாக எவ்வித சான்றும் அவரின் செயலில் இருக்கவில்லை. எல்லா நாட்களை போல சர்வ சாதாரணமாகவே நடந்து கொண்டார்.

இதனை கண்ட நண்பர்கள் திக்கு முக்காடி இருக்க, "ஏன் இந்த பார்வை பார்க்குறீங்க? விழுங்க போகின்ற மாதிரி!" என Carlos Sir கேட்க, இன்னும் அதே அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தனர்.

"Hey fellows! What are you all doing here?" என்றவாறே தனது suitcase உடன் உள்ளே நுழைந்தார் Principal.

"Sir! Sir! We waited for you! இங்க நடக்குற projects மர்மத்தை பற்றி எங்களுக்கு எல்லாம் தெரியும்!" என்று Albert கூற அவனை இடைமறித்து "Hey what nonsense is this? Project மர்மம்? What is that? Please என்னுடைய time அ waste பண்ணாம இங்கிருந்து எல்லோரும் கிளம்புங்க!" என்றார் Principal.

"But Sir! It's true. நாங்க சொல்றதை கொஞ்சம் கேளுங்க.  நாங்க projects ஐ செய்து முடித்து விட்டு project room lab ல வைத்தோம் but அடுத்த நாள் அந்த room ல projects இருக்கவில்லை. இது யாருடைய வேலை என்று எங்களுக்கு அப்போது விளங்கவில்லை.

பின் Deniyal ன் அக்காவின் friend உம் எங்களுக்கு முன்புள்ள batch ல இருந்து இருக்கா! அவளோட contact பண்ண போது அவகூட project காணாமல் போனதை பற்றி சொன்னாள்.

So இதுல ஏதோ மர்மம் நடக்குறதாக எங்களுக்கு விளங்கியது. அதோட year books அ பார்த்த போது நம்மலுடைய school ல underground ஒன்று இருக்கிறதை கண்டுபிடிச்சோம். அதை பற்றி தேடி போன போது அங்கு எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு நம்மலுடைய projects யாவையும் யாரோ திருடி, அதனை pack பண்ணி Brazil நாட்டுக்கு அனுப்புவதற்காக வைத்து இருக்கிறார்கள். பின் அதை நாங்க அப்படி வைத்து விட்டு உங்களுக்கு இதை பற்றி அறியப்படுத்த வரும் போது நீங்க special leave ல போனதாக கேள்விப்பட்டோம்.

அதே நாள் இரவு Katherine ன் project ஐயும் என்னுடைய project ஐயும் திருட அந்த திருடன் மீண்டும் வந்தான். அவனை பிடிக்க plan போட்டும் அது தோல்வியில முடிச்சது. But ஒரு விஷயம் மட்டும் கண்டுபிடிச்சோம். அந்த திருடன் வேற யாருமில்லை. இதோ நிற்கிறாரே இவர் தான்! நம்ம Carlos Sir!" என நீண்ட விளக்கத்தோடு முடித்தான் robin.

Principal மற்றும் மூன்று ஆசிரியர்களுக்கும் பூமியின் சுற்றுகை திடீரென நின்றது போல தோன்றியது.

அத்தோடு நின்றுவிடாமல் robin உம் மற்றவர்களும் அவர்களை மேலும் உறுதிப்படுத்துவதற்காக underground ற்கு அழைத்து சென்றனர். அங்கு அனைவருக்கும் மரத்தால் விழுந்தவனை மாடு குத்தியது போல இருந்தது.

Underground ல் projects ஐ விட்டு ஒரு ஈ கூட இருக்கவில்லை. முழுவதும் empty ஆக காட்சியளித்தது.

Principal ன் முகமோ சுவாலைசோதனை செய்யப்பட்ட strontium போல குருதிசிவப்பு நிறத்தில் இருக்க நண்பர்களின் முகமோ பரிவு நரம்பு தொழிற்பாட்டால் வெளுவெளுத்து இருந்தது.

"இன்றோட உங்க அத்தனைபேரோட இங்க படிக்கிற வாய்ப்பு கை நழுவிப்போச்சு!" என low voice லும் பயங்கரமாக சொன்னார் principal.

"But but...Sir...!" என அனைவரும் கூற வர கண்களால் வேண்டாம் என்றார் Miss Irish.

"Sir! இவங்களுக்கு வேணும்னா punishment கொடுக்க but suspend பண்ண வேண்டாம்!" என Miss Irish பிள்ளைகள் பக்கம் நின்று பேச "No no no miss Irish. இவங்க என் time ஐ waste பண்ணாங்க அதுமட்டுமா என் rules எல்லாவற்றையும் மீறி இருக்காங்க.

ஒன்னா இரண்டா! Garden விட்டு வெளியே போக கூடாது என்றேன் அதை செய்தாங்க, இரவு 7 மணிக்கு பிறகு rooms ல இருந்து வெளியே வரகூடாது என்றேன் அதையும் செய்தாங்க, landline ல வீட்டுக்கு மட்டும் தான் பேசனும் என்றேன் அதையும் மீறி வீட்டினரை தவிர மற்றவர்களோட பேசி இருக்காங்க,

& முக்கியமானது என் room ற்கு வந்தது கூட இந்த கூட்டம் தான். வந்தது மட்டுமில்லாமல் என் laptop லும் juice bottle லும் கை வைத்தது இவங்க தான்!

எப்படி நான் கண்டுபிச்சேன் என்று பார்க்குறீங்களா? ஏற்கனவே CCTV ல கதவு திறந்து மூடப்படுவது மட்டும் பதிவாகி இருந்தது. அதை விட எனக்கு சந்தேகம் வர காரணம் என் bookmark வைத்து இருந்த page number பிழை ஆகியது தான்!

அதுக்கு பிறகு வேடையாடுகின்ற பருந்து போல ஒவ்வொனுவருடைய activities யும் கவனித்து கொண்டு தான் இருந்தேன். எந்த சாட்சியும் கிடைக்கவில்லை. But இன்று வலுவான சாட்சி கிடைத்தது.

Underground அ பற்றின விபரம் அடங்கிய school plan என் laptop ல மாத்திரம் தான் இருந்தது!" என இந்த முறை Principal விபரமாக கூற அனைவரினதும் இதயம் லப் டப் என்று அடிப்பதை நிறுத்தி விட்டதை போல உணர்ந்தனர்.

Thanks for the votes & comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top