எனதருமை தோழிகளே!
ராணி மெய்யம்மையில் தமிழ் கற்று,
வாணி அம்மையின் அருள் பெற்று,
போராடி வாழ்வைக் கடந்து வந்து,
நடு வழியில் நிற்கின்றோம் தளர்ந்து இன்று;
குடும்பம், வேலை, சமூகச் சுமைகள்,
நடுங்க வைக்குமா நம்மை அவைகள்?
பார்த்து விடுவோம் ஒரு கை அவற்றை;
தேர்ந்து விடுவோம் நம் வாழ்வின் அர்த்தத்தை!
பி.கு.
நான் பயின்ற எனது பள்ளிக்கு எனது சிறு காணிக்கை.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top