என் மகள்
இயற்கையின் வரம் என் மகள்,
என் தாய்மைக்கு இலக்கணம் தந்தாள் அவள்;
அவளோடு நான் பேசும் சிறு பேச்சு,
என்னை எனக்கே காண்பிக்கும் கண்ணாடி ஆச்சு;
ஒன்றாக ஆராய்ந்தோம் வாழ்க்கையின் கோணத்தை,
நன்றாகப் பயில்கின்றாய் மருத்துவப் பாடத்தை;
என் தவறுகளைச் சாடும் என் தோழி,
மகளே! நீ பல்லாண்டு பல்லாண்டு வாழி!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top