சிட்டுக்குருவி முத்தம் கொடுக்க
குழலி...குழலி...எழுந்திருமா என்று தன்னவளை வைத்த கண் வாங்காமல்,தன் அடைத்தகுரலில் எழுப்பினான் மயிலன்.
வெண்மையான வானத்தில் கார்மேகம் தவழுவதுப் போல தன் கரிய விழியை சுழலவிட்டு, சூரியக் கதிர்கள் பூமியில் வரும் முன்னே இங்கு சுட்டெரித்துக் கொண்டிருந்தாள் குழலி.
இவளுக்கு என்னாச்சு காலையிலேயே இப்படி முறைக்கிறாள் என்று இரவு மயிலன் அவளிடம் வெளியூர் பயணம் பற்றிக் கூறிய விஷியத்தை மறந்து மனதில் பொலம்பிகிட்டு இருந்தான் பல் வரிசைக் காட்டி.
என்னை இங்க விட்டுவிட்டு எப்படி...வெளியூர் போய் சந்தோஷமா இருக்கலாம் என்று
மனசுக்குள்ள மகிழ்ச்சி பொங்குதுப் போல அதான் பல்ல காட்றான் என்று அவன் இரவு கூரியவற்றை எண்ணிக் கொண்டு பதிலுக்கு குக்கர் விசிலுக்கு அருகில் இருப்பதுப் போல முகத்தைத் திருப்பிக் கொண்டு நகன்றாள் குழலி.
ஆஹா...இனிக்கு நமளுக்கு சாவு மணி தான் . . . சச்ச...அப்படி செய்ய மாட்டா பிறந்த நாள் கொண்டாடி., வச்சு செய்வாள் என்று கூரிக்கொண்டே அவள் சென்ற இடம் தேடிச் சென்றான் மயிலன்.
தோட்டத்தில் வேப்ப மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தவள் அருகில் சென்று சிரித்துக் கொண்டே
காலை வணக்கம் கூறி பேச்சை ஆரம்பித்தான் மயிலன்.
பதில் ஏதும் இல்லாமல் மெளனமாய் இருந்தாள்.
என்ன மேடம் மெளனவிரதம் போல என்று கூரிக்கொண்டே அவளருகில் அமர்ந்தான்.
உங்களுக்கு நேரம் ஆகுது,சீக்கிரம் புறப்படுங்கள் சட்டென்று சொல்லிவிட்டு எழுந்துச் சென்றுவிட்டாள்.
மயிலனுக்கு ஒன்னும் புரியாமல் அங்கேயே அமர்ந்து என்ன நடந்தது என்று பின்நோக்கிச் சென்று மூளையிள் மாவு ஆட்டி அதில் வெற்றிக் கண்டுவிட்டான் என்று அவன் சிரிப்பிலே தெரிந்தது.
வீட்டினுள் சென்று முகத்தை இருக்கமாய் வைத்துக்கொண்டு
நல்ல வேலை நியாபகம் படுத்தினாய்,நேரம் ஆச்சு நான் கிளம்புறேன் என்றான்.குழலியோ,அவன் சந்தோசமாக இருக்கிறான் நான் தான் இங்க கவலைப் படுறேன் என்று பிரிவை எண்ணி வருந்திக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் ,நீயும் கிளம்பி வா என்று கடிந்து அலைத்தான் பெரிய கோவத்தில் இருப்பதுப் போல ஆனால் அவளுக்கு தெரியாமல் சிரித்துக் கொண்டே இருந்தான்.
குழலிக்கோ சரியான எரிச்சல் ,சொல்லப் போனால் நான் தான் கோபம் கொள்ளனும் எல்லாம் தலையெழுத்து.அவன் ஊருக்கு போகுறப்ப சண்டைப்போடக்கூடாது என்று தனக்குள் முடிவு எடுத்துக் கொண்டாள்.
இருவரும் பாதி தூரம் தாண்டிய பிறகும் அமைதி நிழவியது. மயிலனுக்கோ அவளுக்கு இன்ப அதிர்ச்சி குடுக்கப் போகிறோம் என்ற ஆர்வத்தில் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே அமைதிக்காத்தான்.
இங்கோ குழலி அமைதி காத்தது போதும் கேட்டுவிட வேண்டியதுதான் என்று ஆரம்பிக்கும் முன்னே முந்திரிக்கொட்டை மயிலன் உண்மையை ஒலறிவிட்டான்.
"குழலி இப்ப நம போக போற இடம் உனக்கு பிடிக்கும் தானே?"என்று கூறி கண்களை உருட்டி மாட்டிக் கொண்டான்.
குழலிக்கோ நாம் சரியாகத்தான் கேட்டோமா என்று இரண்டு நிமிடம் யோசித்துவிட்டு,பேச்சைத் தொடங்கினாள்.
என்னது நானும் வரேனா...என்று ஆணந்த அதிர்ச்சியில் கேட்டாள் குழலி.
இதுக்கு மேல் இவ்வக்கிட்ட மறைக்கமுடியாது,ஆமா என்று சொல்லிக்கொண்டே இடைவேளையை நீக்கினான்.
பத்து நிமிடத்தில் இருவரும் மகிழ்ச்சியில் பறந்து பயணித்துக் கொண்டிருக்க அவர்களை நோக்கி அந்த ஆபத்து கதிர்வீச்சின் ரூபமாய் வந்தது.
சில நாட்கள் கழித்து, ஒரு சின்ன பையன் அதே வேப்ப மரத்தின் கீழ் நின்றுக்கொண்டு மரத்தின் மேலே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய தாய் ஜன்னல் அருகில் தோட்டத்தில் பூத்திருந்த பூவை தொடுத்துக்கொண்டே இவற்றை
கவனித்துக் கொண்டிருந்தாள்.
இயற்கையை ரசிப்பதே மகிழ்ச்சி தரும், அதிலும் சிறு குழந்தைகள் அவற்றை ரசிப்பதை காணுகையில் மனதில் ஒரு வகை அளவு க்கடந்த சுகம் தான்.
தன் குழந்தையை தொலைத்த தாய் போல் மூச்சுவாங்க ஓடி வந்து அவன் தாய் அருகில் அமர்ந்தான் ஆதித்யா.
"எதுக்கு டா இப்படி ஓடி வர?", என்று முந்தானையை கொண்டு ஆதி முகத்தை துடைத்தவாரே கேட்டாள்.
"அம்மா அந்த மரத்தில் குருவி கூடுல இருந்த குழலியையும் மயிலனையும் காணோமா ", என்று வருத்தத்துடன் கூறினான்.
"இப்ப வெயில் காலம்ல அதான் சிட்டுக்குருவி குளிர்கால பகுதிகளுக்கு செல்லும் நீ தினமும் பறவைகளுக்கு தண்ணீர் வச்சேனா அவை திரும்பி வந்துவிடும் செல்லம்.அதுமட்டும் அல்லாமல் செல் போன் கோபுரம் மூலமாக வரும் கதிர்வீச்சாலும் அவற்றுக்கு ஆபத்து வருகிறது. "என்று அவன் கண்களையேப் பார்த்துக் கூறினாள்.
"இனிமேல் நான் எல்லா பறவைகளுக்கும் மண் குப்பியில் தண்ணீர் வைப்பேன்மா என்று கூறி "வீட்டினுள் சென்று கையில் அவற்றை எடுத்துக் கொண்டு வந்தான்.
பச்சை நிறத் தோட்டத்தில் பல வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்க
எல்லாம் வண்ணமையமாக இருந்தாலும் வேப்ப மரத்தில் வசித்த குழலி மயிலன் இசைப்பாடல் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது அச்சோலை.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top