காதல் கண்கட்டுதே...💓

காஞ்சி மலர்கள் பூத்து அழகிய வண்ணம் மரத்தின் மேல் இருந்து தொங்க. அதனடியில் ரோஜா மலர்கள் மலர்ந்தது அழகாய் அமர்ந்து அங்கு வருபவர்களை வேடிக்கை பார்த்துக்க கொண்டிருந்தது. வேப்ப மரத்தின் குளிர் காற்று கோவிலுக்கு என்று இருக்கும் பத்தி சாம்பிராணி சந்தனதின் நறுமணத்தில் சேர்ந்து சுழன்று கொண்டு இருந்த்தது. அரசமரதடி பிள்ளையார் அமர்களமாய் அமர்ந்து தீபங்களின் ஒளியில் ஜொலித்து கொண்டு இருந்தார். வெள்ளிக்கிழமை கோவிலில் கூட்டம் அலை மோதியது.

எறும்பு எங்கு சென்றாலும் நேர் வரிசையாகச் செல்லும். ஆனால் இங்கு அப்படி எதிர் பாக்க முடியுமா! ஒரே நெரிசல் தேனீ கூட்டமாக மொயித்தனர் பிரசாதம் குடுக்கும் இடத்தில்.

சிவப்பு சட்டை வெள்ள வேஷ்டி அணிந்து சந்தன நெற்றியுடன் அவன் தாய் ராஜியின் கட்டளையால் அனைவருக்கும் பிரசாதத்தை வழங்கி கொண்டு இருந்தான் விக்னேஷ்.

விக்னேஷ் அம்மாவின் ஒரே செல்ல பையன். தோழி தோழர்கள் என்று பெரிய கூட்டம் உண்டு. அம்மா சொல்லும் பொண்ணை தான் கல்யாணம் பணிகிடனும் என்று கொள்கைக் கொண்டவன். ரொம்ப நல்ல பையன் தான நினைக்கிறீங்க. அது தான் தவறு நல்ல பையன் தான் ஆனால் சரியான ஜொள்ளு பார்ட்டி . ஆனால் எதையும் ஒரு அளவாகவே வைத்துக் கொள்வான். இவன் யாரையாவது விரும்புகிறான் என்று கூறினால், எந்த பொன்னாக இருந்தாலும் சிரித்து விடும். அப்படி ஜொள்ளு விடுவான். எப்போதும் சிரித்த முகம் ,எல்லோரையும் சிரிக்க வைக்கணும் என்கிற எண்ணம் கொண்டவன். இயற்கையிலையே வசீகரமான தோற்றம். நல்ல உத்யோகத்தில் இருக்கிறான்.

பச்சை தாவணியில் மதுரை மீனாக்ஷி போல் கோவிலை வலம் வரும் பேரழகி என்று கூறலாம். கோழிக்குண்டு கண்ணு, சின்ன வைரக் கல்லில் மூக்குத்தி கொண்ட மூக்கு திமிரான பார்வை அளவாக சிரிக்கும் உதடு குங்குமம் நிறைந்த நெற்றி. அழகு என்றால் அப்படி ஒரு அழகு. அழகே பொறாமை படும் பேரழகு.

படித்தது நல்ல பெயர் கொண்ட பெரிய கல்லுரியில். சராசரியாக படிப்பாள். புதுமையின் புதல்வி என்று சொல்லலாம். புதுமையை வரவேர்த்தும் கலாச்சாரங்களையும் பின்பற்றுவத்திலும் கவனம் செலுத்துபவள். தாத்தாவின் சுட்டிப் பேத்தி. தாத்தா வீட்டில் இருந்து வந்தால் தாவணியில் மின்னுவாள். கல்லூரியில் இருந்தால் நவ நாகரியத்தில் திகழ்வாள்.

"இந்த காலத்திலியும் தாவணி கடுத்துங்கலே பெண் பிள்ளைகள் பாக்கவே, அம்மன் மாதிரி இருக்காடா செம்மயா... இந்த மாதிரி பொண்ண தான்டா உனக்கு நான் பார்ப்பேன்" என்று கூறி இடத்தை விட்டு நகன்றால் ராஜி.

"ஏன் இந்த பொன்னே பார்த்தால்
என்ன என்று " மனதினில் நினைக்கிறோம் என்று வெளியில் ஒளரி விட்டான் விக்னேஷ். அவனுக்கும் கல்யாணம் செய்து செட்டில் ஆகணும்னு தான் ஆசை. வெளியில் எப்படி தான் கல்யாணம் பணிக்கிரங்களோ எல்லோரும். சிங்கில் தான் கெத்துனு வாய் உதாறு. இவன் அம்மா தேடிக் கொன்டே இருக்கிறார் தேடிக் கொன்டே. அவன் கெட்ட நேரம் அவன் பார்த்தபோது அவள் அங்கு இல்லை.

"ஹே நில்லுடி மெதுவாக சுத்து " என்று பச்சை தவாணியுடன் வலம் வந்து கொண்டிருந்தாள் அவள் தோழி ஹேமா. பதில் ஏதும் இல்லை.

ஹேமா , அவளின் ஹாஸ்டல் தோழி...உயிர் தோழி...அன்று காலை தான் ஊரில் இருந்து வந்தடைந்தாள். தற்போது கூட யாரும் வர தயங்கும் சைபர் ஸ்டைஷன்க்கு துணையாக வருகிறாள்.

"என்னக்கு புரியுது இப்ப நீ ஏன் இவ்வளவு வேகமாக சுத்திகிறாய்"
என்று அவளின் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடந்து வந்தாள்.

"ஓ...உனக்கு தெரியுமா..நீயும் பார்த்துவிட்டியா. அப்ப வேகமாவா....புளியோதரையும் தயிர் சாதமும் முடிய போது ஏற்கனவே பொங்கல் முடுஞ்சு" என்று சிறிது நேரம் நின்று அவள் அருகில் வந்து மெதுவாக கூறியவள் மறுபடியும் வேக நடையை மேற் கொண்டாள்.

" நீ சத்தியமா லூசுதான்டி ... ஸ்ருதி....இப்ப நம போக போறது போலீஸ் ஸ்டேஷனுக்கு என்பதை மறந்துராத " என்று ஸ்ருதியின் காதருகில் வந்து கூறினாள் ஹேமா. இருவரும் பிரசாதம் கொடுக்கும் இடத்தில் நின்றனர்.

இவள் கூறுவதை காதில் வாங்காமல் கையில் தொண்ணையை பிசைந்து கொண்டு புளியோதரை இருக்கும் அண்டாவை பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி. எரிச்சல் வந்து எதுவும் பேசாமல் அவளின் கசப்பான சூழ்நிலை கண்டு அமைதிக் காத்தால் ஹேமா. ஒரு வழியாக இரண்டையும் வாங்கி விட்டு தூணிற்கு அருகில் வந்து அமர்ந்தனர்.

"டேய்.. டேய்...நா சொன்ன பொண்ணு அந்தா போகிறாள் பாருடா " என்று அவள் அம்மாவின் புருவம் நடனமாடச் சுட்டிக்காட்டினால்.

கையில் வைத்திருந்த கரண்டி தானாக அவன் அம்மா கையில் வந்தடைந்தது. இதோ வரேன் இந்த இரண்டு வார்த்தைகள் மட்டுமே உதிர்ந்தது அவன் உதடுகளில் இருந்து. அவளைப் பற்றி தெரிந்துக் கொள்ள இவன் மனம் இவனைப் பிரண்டியது.

"டேய் ...இந்த பொண்ணு மதிரினு தான் டா சொன்னே ...இந்த பொன்னுதாணு சொல்லலடா.." என்று கூட்டத்தின் காரணமாக மெதுவாக சொன்னாள். அது அவன்
காதில் விளவில்லை
கால்கள் நிற்கவில்லை
கண்கள் இமைக்கவில்லை அவளை காணவில்லை
என்பதனால்.

"ஹே... எனக்கு புரியுதுடி உன் சூழ்நிலை அதுக்காக அமைத்தியாவே இருக்காதடி....மூஞ்சிய பாரு இஞ்சி திண்ண குரங்காட்டம்" என்று சோகத்தை அவள் பேச்சில் காட்டினாள் ஹேமா.

"எப்படி கண்டு பிடித்தாய் ....." என்று அதே சோகத்தில் கேட்டாள் ஸ்ருதி.

"என்னக்கு உண்ண பற்றி தெரியும்.... அதுனால தான் இப்ப உன்னுடன் போலீஸ் ஸ்டேஷணக்கு வரேன்" என்று புளியோதரையையும் அவள் வார்த்தையையும் சேர்த்து மென்று முழுங்கினால் ஹேமா.

"ஹே...ஹெமு உணமியாகவே இஞ்சியை கடுச்சுட்டன்.."என்று கையில் அடுத்து சிக்கிய பச்சை மிளகாய் இருக்கும் தயிர் சாதத்தை பார்த்து கொண்டு இருந்தாள்.

"நான் எவ்வளவு சீரியசா பேசிட்டுருக்கேன்...உனக்கு இப்ப நீ என்ன பண்றனு தெரிஞ்சு தான் பன்றியா..??" என்று அவள் புருவத்தை சுருக்கிக் கொண்டு கேட்டாள்.

"நா நல்ல யோசுச்சு தான் செய்யறேன் போதும்டி நம்ம தள்ளி தள்ளி போறது தான் நிறைய பேருக்கு தவறு செய்ய தூண்டுது." என்று அவள் கண்களை தீர்க்கமாகப் பார்த்துக் கூறினாள்.

விக்கி அத்துண்ணிற்கு அருகில் வந்து அப்பெண்ணைப் பார்த்ததும் ஆயிரம் வாளா பட்டாசு வெடித்ததுப் போல அவன் இதயம் காதல் என்னும் இன்பத்தில் மிதந்தது. அவன் பார்த்தது அவனின் அங்கிரி பேர்ட் (angry bird). மூன்று வருடங்களாய் வாரம் வாரம் தவறாமல் பார்த்து வருகிறான். ஆனால் அதுவரை அவனுக்கு தெருஞ்சதெல்லாம் அவள் பெயர் ஸ்ருதி என்பது மட்டும் தான். எல்லாரிடமும் எளிதில் பேச்சை ஆரம்பிப்பவன். இவளிடம் என்னவோ தயங்குவான். என்ன சொல்லி பேசுறதுதான். முதல் வருடம் முழுவதும் வெறும் பார்வையில் தீண்டியவன். இரண்டாம் ஆண்டு தொடக்கத்தில் சிரிப்பை உதிர்த்தான் அவளை காணும் போதெல்லாம். அதும் பாதியிலே நின்றது அவளின் சுட்டெரிக்கும் மைத் தீண்டிய கண்களில் இருந்து வரும் கதிர் வீச்சால்.

அவர்கள் இருவரும் என்ன தான் பேசுகிறார்கள். அவளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று மறு புறம் அவள் அருகில் பின்புறமாக அமர்த்துக் கொண்டு காதை அருவாமனையின் கூர்மைக்கு சாணம் தீட்டுவதுப் போல் தீட்டிக்கொண்டு இருந்தான். அவர்கள் உரையாடல் தெளிவாக அவனுக்கு விழ ஆரம்பித்தது.

ஸ்ருதி சொன்னது சரிதான் என்று ஒத்து ஊதினால் ஹேமா இங்கு நடக்கும் தவறுகளை தட்டு கேக்க ஆள் இல்லாததால் தான் தவறுகள் கூடுகிறது மேலும் இவள் இச்சுழ்நிலையில் இருக்கும் போது அவள் ஸ்ருதிக்கு தொணையாக இல்லாமல் போனதுக்கு வருந்தினாள்.

" தாத்தாவின் வீட்டிற்கு ஒரு வாரம் விடுப்பின்னு போனேன் எப்போதும் போல் உங்களுடன்
பேசுவதற்காக கைபேசியைய் எடுத்தேன் ஒரு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து ஒரு வீடியோ வந்திருந்தது ....சரி நீங்க யாரோ தான் அனுப்பிற்கிங்கன்னு அதை பார்தேன் .... என்ன செய்வது என்று எனக்கு தெரியல அந்த எண்ணை ப்ளாக் மட்டும் செய்து விட்டு அழ ஆரம்பிச்சுடன் .... அப்போது தற்கொலை செய்யக் கூட மனம் போச்சுடி. யாரிடம் இதை பற்றி கூறிவது என்று கூட எனக்கு தெரியவில்லை. எனக்குன்னு இருப்பது என் ஒரே தாத்தா தான்." என்று ஒரு வாரம் கடந்த நிகழ்ச்சியை படி படியாக அடுகினால், ஸ்ருதி.

"ஹே ...என் கிட்ட கூட ஏன்டி நி சொல்லல... உன் தாத்தாவுக்கு விஷியம் தெரியுமா ?" என்று அவள் பேசுவதை பாதியில் நிறுத்திக் கேட்டால் ஹேமா.

"இவர்கள் இரண்டு பேரும் சீரியசாக ஏதோ பேசுகிறார்கள். ஆனால் என்னன்னு சொல்ல மாட்டேன்ரங்கா ....ஏதோ பெரிய பிரச்சனை போல தோணுது போலீஸ் கேசுலாம் பற்றி பேசுரங்க ...பார்த்தால் பால்வாடி பொண்ணு மாதிரி இருந்திக்கிட்டு போலீஸ் ஸ்டேஷன் போரேணு சொல்றாளே." என்று தனியாக மனதில் புலம்பி கொண்டு இருந்தான் விக்கி.

"தெரியாது தாத்தாவிடம் வயிற்று வலி என்று பொய் சொல்லிட்டேன்" என்றாள் ஸ்ருதி.அப்போது தான் ஸ்ருதி அவளின் பெற்றவர்களை ரொம்ப மிஸ் பண்ணாள்.

"பாவம் நீ நான் இருக்கேன் டி..பிச்...... தாத்தா கிட்ட மெதுவா பாத்துட்டு சொல்லிக்கிடலாம் " என்று ஆறுதல் கூறினால்.

"ம்ம்ம்....ஆமா ...தாத்தாகிட்ட சொல்லலாமானு யோசிக்கிறேன்..." என்று இழுத்துக் கூறினாள்.

"நானே....இப்பா தான் டி சமாதானம் அகிருகேன்டி ..... எப்படித்தான் இவுங்களுகலாம் மனசு வருதோ தெரிலடி ... பெண்கள் எல்லாரையும் போதை பொருளாய் நினைக்கிறது...ஒரு சில படம்னு எடுத்தாக் கூட அதுல பெண்களை வைத்து கேளிக்கை செய்வதும் ...அவர்களை வைத்து ஒரு குத்துப்பாட்டு போட்டு படத்தை ட்ரைட் மார்க் உயர்துரத்துக்கு தான் பார்க்கிறார்கள் . " என்று கொஞ்சம் உயர்த்திய குரலில் சொன்னாள் ஸ்ருதி.

"சரிதாண்டி ....அமைதி ...ஸ்ருதி ..இது கோவில் ..."என்று அவள் மெதுவாக கூறினாள் .

"எப்படி என்ன நீ அமைதியா இருக்க சொல்ற ...நான் என்ன செய்தேன்...நியே சொல்லு ...நான் சமுக வலைத்தளதுல எதில்லாவுது அதிகமாக
பயன்படுதுரேனா ...இல்லை ... என் புகைப்படங்களை எதிலும் அப்லோட் செஞ்சுகேனா???.... ஒன்னுமே செய்யலா..... அப்புறம் ஏண்டி என்னக்கு இப்படி நடக்குது.... உண்மையை சொன்னால்.... அப்படி செய்வதை கூட நான் தப்பு சொல்ல மாட்டேன். இந்த சமுதாயம் பெண்களுக்கு அந்த சுதந்திரத்தைக் கூட தரல... " என்று மிகவும் வருந்தி கூறினாள்.

"இப்ப உன் புகைப்படத்தை இப்படி மார்ப்பிங் செய்து வீடியோ போட்டு அவனுக்கு என்ன சுகம் வந்துச்சா... இவுங்க பெற்றோர்கள் தான் பாவம்... இவர்களை பெற்றதற்கு... சரியான பைத்தியம்.... என்னக்கு நல்ல வாயில பச்சை பச்சையாக வருது ... " என்று பொது இடம் கருதி அமைதிக்காத்தால் ஹேமா.

"படுச்ச படிப்பை நல்ல வேலைக்கு பயன்படுத்தலாம் ... அதை விட்டுவிட்டு இப்படி தண்டமா ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுகிராங்கல் கொஞ்சம் கூட நினைத்து பார்க்காம நானா இருக்க போய் உயிரோட இருக்கேன் ... இது மாதிரி நிறைய வீடியோஸ் இணையதளத்துல சுத்திட்டு இருக்கு..." என்று கண்களில் தேங்கி நின்ற கண்ணீர் குளம் போல் காட்சி அளித்தது.

"ஹே...தயவு செய்து அழாமல் இருடி..." என்று அவள் முதுகில் காய் வைத்து அணைத்தார் போல் சமாதானம் செய்தால் ஹேமா.

"விடுடி... இதுக்கு மேல அழுக அங்கு கண்ணீர் இல்லை... நான் எந்த தவறும் செய்யவில்லை... இது யார் பண்ணது கூட தெரியலை.. எதுக்கு செய்றாங்கா என்பதும் தெரியலை... ஆனால் மித்த பொண்ணுங்க மாதிரி நானும் வீட்டுக்குலே அடைஞ்சு அழ மாட்டேன்... தப்பு செஞ்சவன சும்மா விட மாட்டேன்டி.... " என்று கடல் நீர் போல் தேங்கிய கண்ணீர் கடல் உள்வாங்குவது போல் ஸ்ருதி கண்களின் கண்ணீர் வெளியில் வராமல்  சிறு சிரிப்போடு உள்வாங்கியது.

தூணிற்கு பின்னால் அமர்ந்து அனைத்தையும் கேட்டு கொண்டிருந்த விக்கிக்கு கோபம் எரிமலையையாய் கொப்பளித்து கொண்டு வந்தாலும். இதில் கோபம் மட்டும் போதாது திறம் பட இதைக் கையாளனும் என்று முடிவு எடுத்தான். என் காதலி புத்திசாலியும் தைரியசாலியும் கூட என்று பெருமை பட்டு கொண்டான். காதலை சொல்லாமல் இருக்கும் காதலியை எண்ணி.

" இதற்கு மேல் என்னவள் தனியாக சமுதாயம் என்ற கொடிய வார்த்தையை கொண்ட உலகத்தில் தனியாக தவிக்க விட கூடாது. அவளுடன் நானும் அதில் பங்கு கொள்ள வேண்டும்" என்று தீர்மானிதான் விக்னேஷ்.

"என் பெயர் விக்னேஷ்... உங்க பிரச்னையை எல்லாம் கேட்டேன்." என்று சற்றும் யோசிக்காமல் எழுந்து அவள் அருகில் நின்று பேச்சை ஆரம்பித்தான்.

"ஹலோ... மிஸ்டர்.... இப்ப எதுக்கு சம்மந்தம் இல்லாம பேசுரங்க..." என்றாள் ஹேமா.

"ஹே.... நில்லுடி... சர் ஏதோ சொல்ல வராரு " என்று அவளும் கையை மடக்கிக் கொண்டு எழுந்து நின்றாள் ஸ்ருதி.
இவ்வ விட்டாலும் இந்த குட்டி ஜாத்தான் விடாது போல என்று ஹேமா மேல் கோவம் கொண்டான் விக்கி.

" இங்க பாருங்க ஸ்ருதி ... உங்களுக்கு தெரியும் என்ன மூன்று வருடங்களா.... நான் ஒன்னும் உங்க சூழ்நிலையை உபயோக படுத்த ஒன்னும் இப்ப பேசல.... என்னக்கு உங்க மேல ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மை தான்... ஆனால் இப்ப என்னோட காதலா சொல்ற நேரம் இது இல்லை... ஏன் என்றால் தற்போது நான் உங்களை நன்கு புரிந்து கொண்டேன்... அதுவும் இல்லாம இப்ப நீங்க என்னைப்பற்றி யோசுகிற நிலமையிலும் இல்லை...  என்ன நீங்க உங்க ஒரு தோழரா நிணச்சு இப்ப உங்களோட போலீஸ் ஸ்டேஷணக்கு கூட்டி போங்க ப்ளீஸ்..." என்று சொல்ல வந்ததை சரியாக சொல்லணும் என்று ஒப்பித்தான் விக்னேஷ்.

ஒரு பக்கம் ஹேமா இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு இருந்தாள். ஒருத்தன் என்ன என்றால் மூன்று வருங்கால தெரியும்... அப்புறம் காதலை சொல்லவில்லை... இப்போதைக்கு தோழரனு சொல்றான்.... என்ன நடக்குது இங்கன்னு ஒன்னும் புரியாமல் பேந்த பேந்தனு முழித்துக் கொண்டு இருந்தாள்,ஹேமா.

எதுவும் கூறாமல் சிரித்துக் கொண்டே இருந்தால்
ஸ்ருதி. விக்கிக்கு இவள் சிரிப்பை பார்த்ததும் கொஞ்சம் ஆறுதல் தந்தது. நல்ல வேலை அங்கிரி பேர்ட் ஏதும் சொல்லாமல் இருக்கிறாள் என்று ஒரு புறம் சந்தோசம் தந்தாலும் மறு புறம் அவள் பதிலுக்கு எதிர் பார்த்தான்.

"ஹ்ம்ம் உங்களை எங்கு நல்லாவே தெரியும்... சோ லேட் ஸ் பெ பிரண்ட்ஸ் ...."(so let's be friends )என்று கூறி கை  குலுக்கினால் ஸ்ருதி.

ஹேமவுக்கு ஸ்ருதி மேல் முழு நம்பிக்கை அவள் முடிவு எடுத்தாள். அதில் கருத்து இருக்கும் என்று சிரிப்பை மட்டும் உதிர்ந்தான் . ஸ்ருதிக்கு விக்கி மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் வர காரணமே இவள் வேண்டாம் என்ன பார்வையினால் அவன் சிரிக்கும் போது விளக்கிய உடனே விலகி போனது தான்.

மூவரும் ஒரு சேர்ந்து சமுதாயம் என்னும் பெரிய போரில் சிறிய முயற்சியை தொடங்கினர். காதலன் காதலிக்காக இனி சந்திக்கும் இன்னல்களை தாக்குவதற்கு முற்படும் செயலாக காற்றில் பறந்த காஞ்சி மலர்களால் நினையப்பட்டான்.

***************************   Heeeeeyyyy.... 
                         Lovelies...

This is also my contest story. If u guyz already  read in contest update.  Just share your thoughts  about the social media we are traveling  through.

Frnds.. What u feel about this story...??? Is it boring?? Tell your opinion.

Feel free to give suggestions in either in comment box or private message.

Keep smiling..  ☺
Love yourself  more...  😍


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top