பகுதி 3
"ஐ எம் ஸாரி!! உங்க மனைவிக்கு எய்ட்ஸ் இருக்கு!!"
--------------------------------------------------------------------------
"அவங்க ஸ்டேஜ் ரொம்ப கிரிடிகளா இருக்கு! இனி எங்களால எதுவும் செய்ய முடியாது " என்று டாக்டர் கூறக் கேட்ட மூவருக்கும் வாழ்வே இருண்டது போல் ஆனது.
நடப்பதெல்லாம் கனவாக இருக்க வேண்டும் என தங்கள் இஷ்ட தேவதையை வேண்டிக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களது இஷ்ட தேவதையோ அவர்களது வேண்டுதலளுக்கு செவிசாய்க்கவில்லை.
உண்மையின் உச்சகட்ட ஆட்டத்தில் பலியாடாய் தவித்தனர் அம்மூவரும்.
"அ...... அது... அது எப்படி டா... டாக்டர் நடக்கும்?!" என்று நடப்பது எதையும் ஏற்றுக்கொள்ள முடியாதவளாய் துக்கம் தொண்டையை அடைக்க வாயிலிருந்து வார்த்தைகளை வெளியேற்றினாள் நடுங்கிய குரலில்.
"எய்ட்ஸ் ஒருத்தருக்கு வர பல காரணங்கள் இருக்கும்மா!! உதாரணத்துக்கு பெற்றோர்களுக்கு எய்ட்ஸ் இருந்தா அது அவங்களுக்கு பிறக்கபோகும் குழந்தைக்கும் வர சான்ஸ் இருக்கு, எய்ட்ஸ் இருக்கவங்களோட ரத்தத்தை பரிசோதனை பண்ணாம நம்ம உடலுக்குள்ள செலுத்துறதுனால வரலாம், பலரோட தவறான உடலுறவு கொள்றதுனால வரலாம், எய்ட்ஸ் நோயாளிக்கு பயன்படுத்துன ஊசிய பயன்படுத்துறதாலயும் வர வாய்ப்பிருக்கு....."என்று அவர் தொடர்ந்து கொண்டே போக குயிலியின் மூளையோ அந்த இறுதி வாக்கியத்திலேயே நின்றுவிட்டது.
அஅதை கேட்ட போது அவளுக்கு ஓர் சம்பவம் நினைவிற்கு வந்தது.
பல மாதங்களுக்கு முன்பு பர்வதத்திற்க்கு உடல் நிலை சரி இல்லை என்று தங்கள் ஊர் மருத்துவர் ரகுவிடம் அழைத்துச் சென்றனர் மாறனும் குயிலியும். அப்போது அங்கு குயிலி அந்த மருத்துவர் ஒரு ஊசியை தண்ணீரில் போட்டு வைத்திருந்ததை பார்த்தாள். அதைத்தான் பர்வதத்திற்க்கும் உபயோகப் படுத்தினார்.
இதை அப்போது குயிலி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அதன் விளைவு இன்று அவள் தாயின் உயிருக்கே ஆபத்தாயிற்று.
அன்று அவர்களுக்கு முன் மருத்துவரை காண அமர்ந்திருந்தவனன் சில தினங்களுக்கு முன் எய்ட்ஸ் நோயால் இறந்துவிட்டான் என்று கேள்விப்பட்ட செய்தி குயிலியின் நினைவிற்கு வந்தது.
அனைத்தையும் ஒன்று சேர்த்த போது தான் குயிலிக்கு அந்த கெடூர உண்மை தெரியவந்தது.
ஆம் தன் தாயின் இந்நிலைக்கு அந்த மருத்துவர் பயண்படுத்திய ஊசியே
காரணம் என அறிந்து கொண்டாள்.
இதை தன் பெற்றோரிடமும் மருத்துவரிடமும் கூறினாள். அப்போது அந்த மருத்துவர் இதுவே பர்வதத்தின் நோய்கு காரணமாக இருக்கக் கூடும் என்றார்.
"இது போன்ற போலி மருத்துவர்கள் மக்களை குறைந்த செலவில் சிகிச்சை அளிக்கிறோம் என்று கூறி ஏமாற்றி விடுகிறார்கள். இதனால் மக்களின் பணம் போவது மட்டுமில்லாமல் அவர்களது உடல்நிலையும் பாதிக்க பணுகிறது. இக்குறற்றம் கிராமப்புறங்களில் தான் அதிகமாக நடந்து வருகிறது "
இவ்வாறு கூறிக் கொண்டிருக்க மாறன் மற்றும் பர்வதத்தின் மனமோ மருத்துவர் அவர்களிடம் கூறிய முதல் வாக்கியத்திலேயே நின்றுவிட்டது.
குயிலியோ தான் இத்தனை நாள் படித்த படிப்பில் பயனில்லை, எவ்வளவு படித்து எவ்வளவு பாராட்டுகள் பெற்று பயனென்ன?? தன்னை பிறக்கும் முன் வயிற்றிலும் பிறந்த பின் மனதிலும் சுமந்த தன் தாயை காப்பாற்ற முடியாதவளாய் ஆனதை எண்ணி மனமுடைந்து போனாள்.
மாறனோ தன் உமையாளை விட்டு ஒரு கணம் பிரிய இயலாத தன்னால் இனி அவளில்லமல் வாழ இயலுமா?? சிறு வலியை கூட தாங்க முடியாதவள் இக்கொடுந்துயரை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறாள் என்று நினைக்க நினைக்க பழுத்த இரும்பு கத்தியை இதயத்தில் குத்தி புதைத்தாற் போன்று இருந்து.
இவ்விருவரும் இவ்வாறு வருந்திக் கொண்டிருக்க பர்வதமோ தான் இறக்கப் போவதை பற்றி கூட வருந்தாமல் தன்னால் தன் உலகமாகிய கனவரும் மகளும் என்னென்ன வேதனைகளையம் அவமானங்களையும் எதிர் கொள்ளப் போகிறார்கள் என்பதை நினைக்கும் போது இந்நிமிடம் தான் இறந்தால் கூட வருத்தமில்லை என்று நினைத்தாள்.
எழில் கொஞ்சும் மரங்களும் பறவைகளும் பூக்களும் நிறைந்திருக்கும் இயற்கை வனத்தில் சலசலத்து கலகலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஓடையை அணைகட்டி தடுத்தாற் போல் இன்பமும் மகிழ்ச்சியும் துள்ளி விளையாடிய அக்குடும்பத்தில் எய்ட்ஸ் என்னும் கொடிய நோயால் வாழ்க்கை இழந்து வழியின்றி காலத்தோடு கரைந்து விட்டது.
இது விதியின் விளையாட்டா?? இல்லை சில அறியாமையால் ஏற்பட்ட சிதைவா??
" விதியின் விளையாட்டை கூட
மனவுறுதியுடன் எதிர்கொள்ளும்
மானுடர்களாய் இருந்தும்
அறியாமை என்னும் மாயவளையில்
சிக்கி மாண்டவர் பல"
எனவே விழித்திருங்கள் விழித்திடுங்கள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top