பகுதி 1

ஆனந்தபுரத்தில் ஓர் அழகான குருவிக்கூடு. அதில் பாசம் மற்றும் சந்தோஷத்தை தவிர மற்ற எண்ணங்களுக்கு இடமில்லை.

ஆம்!!அது குயிலியின் குடும்பம் தான். அந்த குடும்பத்தில் தந்தை மாறன், தாய் பர்வதம் மற்றும் அவர்களது செல்ல மகள் குயிலி என மூவர் மட்டுமே.

பேர் சொல்லும் அளவிற்கு வசதி இல்லை என்றாலும் அவ்வூரில் மாறனுக்கு மரியாதை அதிகம்.சிறுகுடும்பமானாலும் அவர்களது குடும்பத்தில் ஆனந்தத்திற்கு அளவில்லை.

திருமணமாகி பல வருடங்கள் கழிந்து தெய்வத்தின் வரமாய் தங்களுக்கு கிடைத்த குழந்தை என்பதால் பர்வதமும் மாறனும் குயிலியை மிகுந்த அன்புடன் வளர்த்தனர்.தந்தை மற்றும் தாயின் அரவனைப்பில் குயிலி ஒரு குறும்புப் பெண்ணாக வளர்ந்தாள்.

தான் படிப்பறிவு இல்லாமல் வளர்ந்தது போல தன் பிள்ளையும் வளர்ந்து விடக்கூடாது என்று முடிவெடுத்தார் மாறன். குயிலியின் ஆசை படியே அவளை கல்லூரியில் சேர்த்து படிக்கவைத்தார்.

மாறனின் மனம் குளிரும் படி குயிலியும் அனைத்து வகுப்புகளிளும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவியாக திகழ்ந்து வந்தாள்.

மகளின் வெற்றியை கண்டு மனம் குளிர்ந்தாலும் அதை வெளியே காட்டாமல் குயிலியின் குறும்புத்தனத்தை தன் கனவனிடம் குறைகூறிக் கொண்டிருந்தார் பர்வதம்.

"நீங்களே பாருங்க இப்படியே படிக்குறேன் படிக்குறேன்னு எப்பபாத்தாலும் புக்க எடுத்து வச்சு ஒக்காந்துக்குறா நாளைக்கு வேற இடத்துல கட்டி கொடுத்தா அங்க போய் இப்படியே ஒக்காந்துக்குவியானு கேட்டா என்ன சொல்றா பாருங்க உங்க மக" என்று மாறனிடம் பஞ்சாயத்தை ஆரம்பித்தார் பர்வதம்.

மாறனோ மனதில் 'தப்பு செஞ்சா மட்டும் அவ என் மக, நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணும்போது உன் மகளா ' என்று நினைத்து விட்டு எங்கே அதை வெளியே சொன்னால் மனைவியின் கோப தீ தன்மீது விழுமோ என பயந்து அமைதியாக,

"அவ என்னம்மா சொன்னா?" என்றார்.

இதை அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த குயிலி தன் தந்தையை 'யூ டூ புருடஸ்' என்பதுபோல் பார்த்தாள். மகளின் பார்வை அர்தத்தை அறிந்து கொண்ட மாறன் 'இது எல்லாம் அவன் செயல் எதுவும் என் கையில் இல்லை தடுத்தால் தலை போயிடும் ' என்று பார்வையில் பதில் சொன்னார்.

தன் தந்தையின் நிலைபார்த்து சிரிப்பு வந்தாலும் அதை அடக்கிக் கொண்டாள் குயிலி.

இவர்களது பார்வை பரிமாற்றத்தை அறியாத பர்வதம் தன் வாதங்களை முன் வைத்துக் கொண்டிருந்தார்.

"பூ கட்டி கத்துக்கடி கல்யாணமாகி வேற வீட்டுக்கு போனா பூ கட்ட தெரியாதுன்னா சொல்வன்னு கேட்டேன் அதுக்கு என்ன சொன்னான்னு கேளுங்க!!" என்று பார்வையில் ஒரு வித கண்டிப்புடன் தன் கனவரை நோக்கினார் பர்வதம்.

அதை புரிந்து கொண்ட மாறன் மனதில், 'நான் சொன்னபடி செய்யல உனக்கு மதிய சோறு இல்லன்னு பார்வையில் நீ சொல்றது புரியுது பாரு, இப்ப என்ன பன்ன' என்று இருகொள்ளி எறும்பாய் தவித்தார்.

தந்தையின் நிலையறிந்த குயிலி தன் தாயிடம்,

"இப்ப எதுக்கு அப்பாவ இழுக்குற,ஆமா நான் தான் சொன்னேன் கடைல பூ வாங்கிக்கவேண்டியது தான் இதுக்கு ஏன் பூ கட்டி கத்துக்கனும்னு , நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு.தன்னோட மனைவிக்கு ஒரு மொழம் பூ கூட வாங்கித்தற முடியாதவன் கடைசி வர எப்படி காப்பாத்துவான்" என்று மல்லுகட்டி நின்றாள்.

குயிலிக்கு தன் தாய் என்றால் அவ்வளவு இஷ்டம் அவரிடம் செல்ல சண்டை போடுவது என்றால் அதைவிட இஷ்டம்.சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள் 'தாய் போல் சேய்' என்று.

"என்ன வாய் கெழுப்பு பாருங்க இவளுக்கு "என்று தாயும் மகளும் செல்ல சண்டை போடுவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவரை நினைவிற்கு வர வழைத்தார் பர்வதம்.

"மறுபடியும் ஏன் அப்பாவ இழுக்குற நம்ம சண்டைல,உனக்கு என் கூட தான பிரச்சன நீ என்ன கேக்கனுமோ என்கிட்டயே கேளு"என்று இரண்டாம் முறையாக தன் தந்தையை காப்பாற்றினாள் குயிலி.

"சமைக்க தெரியல,துணி துவைக்க தெரியல,பாத்திரம் விலக்க தெரியல இப்பிடி இருந்தா புகுந்த வீட்ல எப்படி சமாளிப்ப"என தன் வேதனைகளை வரிசையாக அடுக்கினார் பர்வதம்.

தாயின் வாதத்தை கேட்ட குயிலி குறும்புப் பார்வையுடன்,"இவ்வளவு தானா இல்ல இன்னும் இருக்கா?"என்று கேட்டாள்.

மீண்டும் தன் தாயை வாய்திறக்க விடாமல் அவளே தொடர்ந்தாள்,"சமைக்க குக் வைச்சுக்குவேன், துணி துவைக்க வாஷிங் மெஷின் வாங்கிக்குவேன்,மத்த வீட்டு வேலை செய்ய வேலையாள் வச்சுப்பேன் அவ்வளவு தான் சிம்பிள்"என கூறி கண்சிமிட்டினாள் குயிலி.

இதை கேட்டு வாய் திறந்தே சிரித்துவிட்டார் மாறன். சிரித்த பிறகுதான் அதன் பலனை புரிந்து கொண்டார்.

தன் வாழ்வின் இறுதி நாள் இன்று தான் என்று,ஆம் அவர் மீது பர்வதத்தின் பார்வை கோபக் கனல் வீசியது,அடுத்து என்னாகுமோ என பயத்தில் விழித்தார்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #shortstory