இங்க வந்ததுல இருந்து அந்த பொண்ணு யார்டையும் தானா போய் பேசல!! யாரது போய் பேசுனா பேசமா இல்ல நல்லா பேசுது!! "
"ஆமாடி!! இத்தன நாள் யாருனு தெரியாம இருந்தோம்!! ஆனா தண்ணி சரியா இல்லனு , காத்து வராத காத்தாடி, சாப்பாடு சரியில்லனு, பாத்ரூம் கிளினிங்ல இருந்து எல்லா அடிபட வசதிக்காக நாம எல்லாம் ஜெயில் வார்டன்டயும் ஜெயில ரவுண்ட்ஸ் வர போலிஸ்டயும் சண்ட பாேடுவோம்!
ஆனா அந்த பாெண்ண பாக்க வந்த பத்திரிக்க காரவாங்கள்ட எல்லாத்தையும் சொல்லி வெளி உலகத்துக்கு சிறையில உள்ளவங்க அடிபட தேவைக்கு கஷ்டபடுறத சொல்லி மாத்துச்சு!!
ஆனா!! அந்த கேஸ் விஷயமா யாரு வந்தாலும் அத பத்தி பேசல!! கொர்டுலயும் ஏதும் சொல்லல!!
அந்த பொண்ண கெடுத்த விஷயம் பரபரப்பா போச்சு!!, அதுக்கு காரணமா உள்ளவங்கள தீவிரமா வலை விரிச்சு தேடுறாங்க!!ஆனா இந்த பொண்ணு செத்துருச்சு!! அதோட பாடி மாரசரில இருந்து வாங்க போகும் போது காணும்னு அது கொஞ்சம் பரபரப்பா போச்சு!! அடுத்த நியூஸ் வந்ததும்,இத பத்தி யாரும் யோசிக்கவே இல்ல!! அந்த பொண்ணோட பாடியும் கிடக்கல, அந்த பையள்கலயும் பிடிக்கல!! அஞ்சு வருஷம் இப்படியே போச்சு!! திடீர்னு அஞ்சு பேற கொண்ணுட்டு ஒரு பொண்ணு சரணடஞ்சா அது அஞ்சு வருஷம் முன்னாடி செத்ததா நனைச்ச பொண்ணு!! னு நியூஸ் வந்தது!! இது எல்லாம் கொலம்புது டி!! "
"எனக்கும் அதான் புரில கா!! அதும் இல்லாம அந்த பொண்ணுக்கு வேற அப்ப அப்ப உடம்பு சரியில்லாம வருது!!,மயக்கம், பிக்ஸ், குளிர் சொரம் னு!!! "
"ஆமா டி!! பாவம் ரொம்ப சின்ன வயசு!! நாமலாது கல்யாணம் காச்சி, புருஷன் , புள்ளங்கனு கொஞ்சம் வாழ்ந்தோம்!! ஆனா அது!! வாழ வேண்டிய வயசு புள்ளய இப்படி நாசம் பண்டானுங்களே படுபாவிங்க!! அவனுங்க போய் சேந்தாச்சு!! ஆனா இந்த புள்ளயோட வாழ்க்க!! அவனுங்கள கொண்ணது சரி தான் !! "
"என்னா பண்றீங்க இன்னும்?? " வார்டன் வந்தா
"இல்ல அந்த சுவாதி பொண்ண பத்தி தான்!!"
"என்ன??அந்த பொண்ண பத்தி நீங்க இரண்டு பேரும் என்ன பேசுறீங்க??"
எல்லாம் சொன்னோம்!!
"ம்" வார்டன் சொன்னுச்சு
"என்ன வெறும் ம் னு சொன்னா?? " அகல்யா கேட்டா
"இந்த மாறி ஒரு நாளைக்கு ஆயிரம் கேஸ் வருது!! ஒன்னு ஒன்னுதுக்கும் இப்படி யோசிச்சா ஒன்னும் பண்ண முடியாது!! நம்ம வேளய பாத்துட்டு போக வேண்டு தான்!! இது தப்பு தான் ஆனா பொளப்பு, குடும்பம் னு ஒன்னு இருக்கே!! சரி தூங்குங்க போங்க" அந்த வார்டன் சொல்லிட்டு கிளம்புது
அதுக்கு அவங்க பொளப்பு அப்படி!! நாளுக்கு ஒரு நாப்பது பேர் கைதிங்களா வந்தா?? அது என்ன பண்ணும்??
சரி அந்த பொண்ண பத்துன நனப்பு மட்டும் ஏன் போக மாட்டுதுன்னு தெர்ல!!
ஏன் இப்படி எல்லஅம் மானங்கெட்டு திரிறானுங்கனு தெர்ல!! பொட்ட புள்ளய தெய்வமா இல்ல, அம்மாவா,அக்கா தங்கச்சியா கூட இல்ல பொண்ணாவாது மதிக்கலாம்ல!!!!
எம்மா காலம் ஆனாலும் இத்திபொன உடம்பு சுகம் தான் பெருசா தெரியுது!!! இதுக்கு எல்லாம் முடிவே இல்லயா!! அஞ்சு வயசு புள்ளல இருந்து அறுபது வயசு கிழவி வர எல்லாம் பயத்தோடே போவ வேண்டிருக்கு!!
இதுக்கு எல்லாம் முடிவு எந்த காலத்துலயும் வராது போல!!
"யக்கா அந்த பொண்ண நினச்சுட்டே நீ ஏன் இப்படி கிடக்குற??"
"என்ன பேசுற ?? அந்த புள்ள ஒரு வேள நம்ம வூட்டு புள்ளயா இருந்தா?? பொட்டபுள்ளடி!!,சின்ன பொண்ணு!!,வயித்த எரிது இவனுங்கள எல்லாம் நடு ரோட்டுல போட்டு அப்படி வட சட்டில போட்டு எடுக்கனும்!!!!"
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top