வேலை கிடைக்குமா?
"படித்தது போதும் தூங்க போ," என்றார் நதியாவின் தாய்.
"இன்னும் கொஞ்சம் தான் படிக்கனும் அம்மா படித்து முடித்து விடுகிறேன்"
"சரி! நான் தூங்கபோரேன் நீயும் சீக்கிரம் தூங்கு," என்றார் அவள் தாய்.
"சரி மா,"
என் பெயர் நதியா. என் பெற்றோர் அரசாங்க ஊழியர்கள், நான் அவர்களின் செல்ல பொண்ணு. நான் தனியார் கல்லூரியில் M.E இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். எனக்கு ஆசிரியராக வேண்டும் என்பதுதான் கனவு லட்சியம் எல்லாமே. நான் எல்லா செமஸ்டர்களிலும் முதல் மதிப்பெண் பெற்றிருந்தேன். இந்த செமஸ்டரிலும் முழு மதிப்பெண் பெற்று விடுவேன் அதன் பிறகு நான் படித்த கல்லூரியில் வேலைக்கு சேர்ந்து விட வேண்டும் என்ற ஆசை மேலோங்கியது.
நாளைக்கு இறுதி பிராஜட் தேர்வு. அதற்காக தான் என்னை தயார் படுத்தி கொண்டிருக்கிறேன்.
இரவு 10 மணிக்கு தூங்க சென்றேன்.
மறுநாள் காலை
கல்லூரிக்கு சென்றேன். தேர்வு நன்றாக முடிந்தது. இன்று கல்லூரியின் இறுதி நாள். தோழிகளை பிரிய கடினமாக இருந்தது. தோழிகள் நாங்கள் மாறி மாறி ஆட்டோகிராப் எழுதினோம், அனைத்து தோழிகளும் என் ஆசையை அறிந்து வருங்காலத்தில் ஆசிரியராக வாழ்த்தினார்கள். தோழிகளோடு பிரியா விடை பெற்று வீடு திரும்பினேன்.
நான் தேர்வு முடிவிற்காக காத்து கொண்டிருந்தேன். தினமும் அண்ணா பல்கலைக்கழக வேப்சைட்டை பார்ப்பேன். ஒரு வழியாக ஒரு மாதத்திற்கு பிறகு தேர்வு முடிவு வெளியானது. அதிலும் முழு மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றேன்.
அன்றே தற்குறிப்பு (Resume) ரெடி செய்தேன். மறுநாள் காலை நான் பயின்ற கல்லூரிக்குச் சென்று என் தற்குறிப்பை கல்லூரி முதல்வரிடமே கொண்டு போய் கொடுத்தேன்.
அவர் பார்த்து விட்டு இரண்டு நாள்களுக்கு பின் அழைக்கிறோம் என்றார். நானும் சரியென்று புன்சிரிப்போடே வீடு திரும்பினேன்.
இரண்டாவது நாள், நான் கல்லூரியிலிருந்து அழைப்புகாக காத்துக் கொண்டிருந்தேன். அன்று அழைப்பு வரவில்லை அப்படியே ஒரு வாரம் ஆகிவிட்டது. நானும் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.
கோவிலுக்கு என் பெற்றோருடன் சென்றிருந்தேன். அங்கு வழியில் என் ஆசிரியர் ஒருவரை சந்தித்தேன். அவரிடம் நலம் விசாரித்து விட்டு கல்லூரியை பற்றி கேட்டேன்.
அப்போது அவர், "நீ ஏன் ஆசிரியர் பணி நேர்காணலுக்கு(Interview) வரல?" என கேட்டார்.
"இன்டர்விய்-ஆ? எனக்கு தெரியாது மேம். எப்போது நடைபெற்றது?" என்று அதிர்ச்சியில் கேட்டாள்.
"மூன்று நாட்களுக்கு முன் தான் கல்லூரியில் நேர்காணல் நடந்தது. ஆசிரியர்களையும் தேர்வு செய்து விட்டார்கள்," என்றார்.
"சரி மேம். நன்றி" என்று கிளம்பி விட்டேன்.
"என்னமா! உங்க மேம் இன்டர்விய் முடிந்துவிட்டதுனு சொல்றாங்க," என்றார் அப்பா.
"அப்பா, அது எங்க டிப்பாட்மண்ட் இன்டர்விய்வா இருக்காது பா அப்படி இருந்திருந்தால் என்னை கண்டிப்பாக அழைத்திருப்பார்கள்,"
"சரிம்மா"
"அப்பா, நாளைக்கு கல்லூரிக்குச் சென்று வருவோம்" என்றேன். அப்பாவும் சம்மதித்தார்.
மறுநாள் காலையில் என் தந்தையுடன் கல்லூரிக்கு சென்றேன்.
அங்கு ஏற்கனவே இன்டர்விய்வில் ஆள் எடுத்தது உண்மை என்று அறிந்து அதிர்ச்சியுற்றேன்.
என்னை இன்டர்விய்விற்கு கூட அழைக்காத காரணத்தை அறிய வேண்டும் என்று காத்திருந்து நீண்ட நேரத்திற்கு பிறகு கல்லூரி முதல்வரை சந்தித்தேன்.
என் தந்தையும் நானும் உள்ளே சென்றோம்.
அவர் என்னை பார்த்ததும் சொல்வதறியாது திகைத்தார்.
"ஏன் சார் என்னை இன்டர்விய்விற்கு கூட அழைக்கவில்லை," என்றேன் கண்ணீர் தழும்ப.
அவர் எங்களை அமரவைத்தார் என் தந்தையை நோக்கி, "உங்கள் மகள் மிகவும் திறமைசாலி, படிப்பில் கெட்டிக்காரி, நல்லொழுக்கத்தில சிறந்தவள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனா?........." என்று இழுத்தார்.
"என்ன சார்?" என்று தந்தை கேட்க.
அவர் தயக்கதோடே "இந்த கல்லூரிக்குனு சில விதிமுறை இருக்கு சார் அதற்கு நான் ஒன்றும் பண்ண இயலாது" என்றார்
"என்ன விதிமுறை?"
"இந்த கல்லூரியில் பணி புரியும் அனைவரும் இந்த கல்லூரியை சார்ந்த ஜாதி மதத்தவராக இருக்க வேண்டும் மற்ற ஜாதி மத மக்களுக்கு இடமில்லை," என்றார். நான் நினைத்து கூட பார்க்காத பதில். என்னை அதிர்ச்சியில் உரையவைத்தது.
என் அப்பா கோபத்தில் இருக்கையிலிருந்து எழுந்து நான் மனதில் நினைத்ததை அப்படியே கூறினார், "படிப்பில் என்ன சார் ஜாதி, மதம்னு? உங்களுக்கு இதை சொல்ல வெட்கமாய் இல்லை. ஜாதி, மதம் தான் முக்கியம் என்றால் உங்கள் இன மக்களுக்கே உங்கள் கல்வி சேவையை தொடரலாமே? அப்போது பணத்திற்காக அட்மிஷன் தேவை படுகிறது. இந்த கல்லூரியில என் மகளை படிக்க வைத்ததை எண்ணி வருந்துகிறேன்," என்று கூறி கொண்டு என்னையும் அழைத்து வீடு வந்தார்.
"ஏன் இருவரும் சோகமாயிருக்கிங்க?" என அம்மா கேட்க நடந்ததை கூறினோம்.
"உன்னை தேர்வு செய்ய அந்த கல்லூரிக்கு தான் கொடுத்து வைக்கல மகளே! அதை நினைத்து நீ வருந்தாதே! அங்கு இல்லன்னா என்ன வேற கல்லூரியில் முயற்சி செய்யலாம். நீ கவலை படாதே மகளே," என்று எனக்கு ஆறுதல் வார்த்தை கூறினார்.
"அம்மா, எப்போ தகுதிக்கு முக்கியத்துவம் இல்லாமல் கேவலம் ஜாதி மதத்தை பார்க்கிறார்களோ அப்போதே என்னை கூப்பிட்டு. கொடுத்தாலும் எனக்கு அந்த வேலை தேவை இல்லமா. இதற்காக நான் ஒரு நிமிடம் கூட கவலைபட விரும்பவில்லை. வேறு கல்லூரிகளில் முயற்சிக்கலாம்," என்ற தைரியம் என்னிடம் இருந்தது.
"உன் அறிவுக்கு தனியார் கல்லூரி எதற்கு மா? நீ நன்றாக படித்து அரசாங்க தேர்வு எழுதலாமே?" என்றார் அப்பா.
"அப்பா இப்போது அரசாங்க ஆசிரியர் காலி இடங்கள் இல்லை பா இதை தவிர்த்து வேறு அரசாங்க வேலைகள் பார்க்க விருப்பம் இல்லை பா," என்றேன். என் பெற்றோரும் புரிந்து கொண்டனர்.
மறுநாள் காலையில் என் மாவட்டத்தில் உள்ள பாதி கல்லூரிகளுக்கு தற்குறிப்பு (Resume) வை அப்பாவிடம் கொடுத்து விட்டேன் மீதமுள்ள கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன் விரைவில் நேர்காணலுக்கு அழைப்பார்கள் என்ற நம்பிக்கையில்.
ஒரு வாரம் கழிந்தது, என் உறவினர் வீட்டு திருமணத்திற்கு என் பெற்றோருடன் சென்றிருந்தேன்.
அங்கு வந்த என் உறவுகாரர்கள் என்னிடம், "எப்படி இருக்க நதியா? வேலை கிடைச்சா?" என்று கேட்டனர்.
"நல்லா இருக்கேன். வேலைக்கு முயற்சி பண்ணிடே இருக்கேன்,"
"இவ்வளவு மதிப்பெண் பெற்றும் வேலை கிடைக்கலியா? இவ்வளவு பணம் செலவு பண்ணி இன்ஜினியரிங் முடித்து விட்டு சும்மா இருக்க. என் மகள் சென்னையில் ஒரு நல்ல கம்பேனியில் வேலை பார்க்கிறாள்," என்றார் என்னை பார்த்து ஏளனமாக.
மற்றொரு உறவினர் "நீ கவலை படாதே, நிச்சயம் கிடைக்கும்," என்று என்னிடம் கூறிவிட்டு நான் கவனிக்க வில்லை என்று எண்ணி மற்றொரு உறவினரிடம் "இவளுக்கு இனி வேலை கிடைப்பது அவ்வளவு தான்," என்று புன்முறுவலுடன் மெதுவாக கூறினார்.
எனக்கு உறவினர்களின் குணத்தை அறிய கடவுள் கொடுத்த சந்தர்ப்பமாய் எண்ணி இறைவனுக்கு நன்றி கூறினேன்.
மதியம் வீடு திரும்பினோம்.
அன்று மாலை, ஒரு கல்லூரியிலிருந்து நாளை நேர்காணல்கான அழைப்பு வந்தது. அவள் அதற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டாள்.
இன்று கல்லூரியில்
மூன்று காலியிடங்களுக்கான நேர்காணலுக்காக 500க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். அங்கு என் தோழிகளையும் சந்தித்தேன். எங்க பேட்சுல ஒரு சில பேரை தவிர வேறு யாருக்கும் வேலை கிடைக்காததை எண்ணி மனம் வருந்தினேன்.
நேர்காணல் ஆரம்பித்தது, நான் தன்னம்பிக்கையோடே இருந்தேன். எந்த ஒரு பதற்றமும் இல்லை.
முதலில் எழுத்து தேர்வு நடந்தது. அதன் முடிவுகளை அரை மணி நேரத்தில் தெரிவித்து விட்டனர். இத்தேர்வின் மூலம் 100 பேரை தேர்வு செய்தனர். அதில் நானும் வெற்றி பெற்று விட்டேன்.
அடுத்து, பாடம் நடத்த சொன்னார்கள், அதிலிருந்து 20 பேரை தேர்வு செய்தனர். அதிலும் வெற்றி பெற்று விட்டேன்.
அதன்பிறகு, பர்சனல் இன்டர்விய் மற்றும் சாண்றிதழ் சரிபார்த்தல் நடந்தது. அதிலிருந்து ஐவரை தேர்வு செய்தனர். மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அன்று வீட்டில் ஒரே கொண்டாட்டம் தான்.
"மூன்று காலி இடங்களுக்கு ஐந்து பேர் தேர்வு செய்தனர் எதற்கு என்று புரியவில்லை?" என்றேன்.
"ஒரு வேளை நீங்கள் ஐந்து பேரும் அதீத புத்திசாலியாக இருக்கலாம்,"என்றார் அப்பா பெருமிதத்துடன்.
அதற்குள்ளே கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தது.
"நதியா, நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள்.
நீங்கள் நாளைக்கு வந்து வேலைக்காக 2லட்சம் டோனேசன் கொடுத்தால் உடனடியாக வேலையை உறுதி செய்து விடலாம்,"என்றார். எனக்கு தூக்கி வாரி போட்டது. எவ்வளவு கஷ்டப்பட்டு தேர்வாகி தகுதிக்கு முக்கியம் இல்லாமல் போய்விட்டது.
என் தந்தை என்னிடம் "என் மகளின் முகத்தில் சிரிப்பை பார்க்க, 2 லட்சம் என்ன? 10லட்சம் கேட்டால் கூட கொடுக்க தயார்," என்றார் என் முகம் சோர்வுற்றதை கண்டு. என் தந்தை நேர்மையான முறையில் அரசாங்க உத்யோகம் பார்த்தவர், எனக்காக இப்படி கூறும் நிலைக்கு ஆளாகி விட்டார்.
அந்நேரத்தில் தோழியிடமிருந்து அழைப்பு வந்தது. அவளது அக்கா அந்த கல்லூரியில் தான் பணிபுரிகிறார்
"நதி, உனக்கு கல்லூரியில் இருந்து அழைப்பு வந்ததா?"
"ஆமா," நான் நடந்தவற்றை அவளிடம் கூறினேன்.
"நதி, அங்கு தேர்வு செய்யப்பட்ட ஐவரில் இரண்டுபேர் முதல் சுற்றிலே தோல்வி அடைந்தவர்கள். அவர்களின் பெற்றோர்களின் பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மீதமுள்ள மூவரில் யார் அதிக டோனேசன் கொடுக்கிறார்களோ அவர்களை தேர்வு செய்யயுள்ளனர்," என்றாள்.
"என்னவெல்லாம் நடக்கிறது. பணத்தை வைத்து வேலைக்கு பேரம் பேசுகிறார்கள்,"
அன்று இரவு,
நான் என்ன தான் வெளியில் கவலைப்படாமல் என் பெற்றோரிடம் பேசினாலும் இன்று எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. காலையிலிருந்து ஒவ்வொரு தேர்விலும் வெற்றி பெற எவ்வளவு முயற்சி செய்தேன். என் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என மனமகிழ்தேன் ஆனால் இப்போது எல்லாம் கனவாக மாறியது என நினைக்க கண்ணீர் துளிகள் சட்டென்று வடிந்தது. என்னால் அழுகையை கட்டுப்படுத்த இயலவில்லை. நீண்ட நேரம் தூக்கம் வராமல் தவித்தேன்.
நாட்கள் கடந்து மாதங்கள் ஆயின. நாட்கள் போக போக என் லட்சிய கனவு நிறைவேறுமா? என்ற பயமும் எழுந்தது.
அந்த நேரம் தான், பல்கலைக்கழக ரேங் பட்டியல் வெளியானது அதில் முதல் ரேங் (Gold Medal) பெற்றேன். அப்போது எனக்கு புது நம்பிக்கை பிறந்தது இனி எப்படியாவது வேலை கிடைக்கும் என்று.
நான் நினைத்தது போல, இரு தினங்களுக்கு பிறகு ஒரு கல்லூரியிலிருந்து அழைப்பு வந்தது. B.E & M.E டிகிரி சாண்றிதழ் மற்றும் 10 அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி சாண்றிதழோடு வர சொன்னார்கள்.
மறுநாள் காலை அதிக தொலைவு கடந்து கல்லூரியை சென்றடைத்தோம். என் தந்தையை அலக்கழிப்பதல் எனக்கு ஈடுபாடே கிடையாது ஆனாலும் அவர் என் மீதுள்ள பாசத்தில் என்னை அழைத்து வருவார்.
அங்கு மொத்தமே 3பேரை மட்டும் தான் நேர்காணலுக்காக அழைத்திருந்தனர் இது நான் எதிர் பாராத ஒன்று.
எங்கள் மூவரையும் HOD அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் இல்லை.
முதலில் எங்களிடம் ஒரு ஒப்பந்த சாண்றிதழ் கொடுத்தனர் கையெழுத்து இடுவத்தற்காக. அது என்ன என்று வாசித்துப் பார்த்தேன்.
அதில், நான் இக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்ற போவதாக குறிப்பிட்டிருந்தது..அதே போல் தான் என்னுடன் வந்த சக போட்டியாளர்களுக்கும் கூறிப்பிட்டிருந்தது. எங்கள் மூவருக்கும் ஒரு ஒற்றுமை என்னவென்றால் சமீபத்தில் வெளியான அண்ணா பல்கலைக்கழக ரேங் பட்டியலில் ரேங் பெற்றது.
சற்று நேரத்தில் HOD அவசர அவசரமாக உள்னுளைந்தார். அவர் எங்களிடம், "நீங்கள் மூவரும் அண்ணா பல்கலைக்கழக ரேங் பெற்றிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள். உங்கள் மூவருக்கும் இக்கல்லூரி ஒரு வாய்ப்பு அளிக்கிறது. அது என்னவென்றால், நேற்றைக்கு உங்களிடம் கொண்டுவர சொன்ன மூன்று சாண்றிதழ்களையும் எங்களிடம் சமர்பிக்க வேண்டும். நீங்கள் வேலைக்கு வர தேவையில்லை. ஒரு வருடம் அச்சாண்றிதழ்கள் தரபடாது. இது கல்லூரி இன்ஸ்பேக்ஷனுக்காக நீங்கள் உதவி செய்வதாகும். இந்த உதவிக்கு பதிலாக நாங்கள் உங்களுக்கு கல்லூரிக்கு வராமலே ஒரு வருட வேலை பார்த்ததாக சாண்றிதழ் (Experience certificate) தருகிறோம். உங்களுக்கு விருப்பமென்றால் உங்கள் கையிலிக்கும் ஒப்பந்த சாண்றிதழில் கையெழுத்து இடுங்கள்," என்றார்.
ஒரு நோடி கூட சிந்திக்க விரும்பாத நான் ஒப்பந்த சாண்றிதழை அவர்களிடமே கொடுத்துவிட்டு என் சாண்றிதழ்களை பத்திரமாக எடுத்து வந்து விட்டேன்.
அப்பா என்னை நோக்கி வெளியில் காத்துக்கொண்டிருந்தார். அவரிடம் நடந்ததை கூற, நான் செய்தது சரியென்று என்னை பாராட்டினார்.
வண்டியில் வர வர என் சிந்தனைகள் எங்கோ சென்றது. வேலைக்காக தந்தையை கஷ்டப்படுத்துகிறேன் என்று மிகவும் வருந்தினேன்.
எனக்கு வேலை கிடைக்காது என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது. ஒரு வித மன அழுத்தம் ஏற்பட்டதை உணர்ந்த நான் அதிலிருந்து வெளிவர தனிமையில் அழுவேன் அடிக்கடி அப்போது என் மனது லேசானது போல் உணர்வேன்.
என் பொன்னான நாட்களை வீண்ணாக்க விரும்பாத நான் படம் வரைய்ய, புத்தகங்கள் எழுதி வெளியிட ஆரம்பித்தேன். எனக்கு அவை என் தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் மீட்டு தர உதவியது. என்றோ ஒரு நாள் இச்சமயம் வேலையில் இருப்பேன் என்ற நம்பிக்கையை கொடுத்தது ஆனால் எப்போது என்று தெரியவில்லை.
நாட்கள் உருண்டோட, எப்போதும் போல் ஒரு கல்லூரியிலிருந்து அழைப்பு வர, இச்சமயம் எனக்கு பழைய உத்வேகம் இல்லை ஏனெனில் என்னால் என் தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியும் ஆனால் என் தோல்விகள் அல்லாத ஒன்றை இனி என் மனம் ஏற்கும் வகையில் பக்குவப்படவில்லை. இம்முறையும் ஜாதி, மதம், பணம் இன்னும் வேறு சில காரணங்களால் என்னை தவிர்த்தால் என் மனதால் அதை ஏற்க சக்தி இல்லை.
மறுநாள் காலை
"அப்பா,இம்முறை நான் நேர்காணலுக்குச் செல்ல வில்லை,"
"ஏன்? என்னவாய்ற்று மகளே"
"இந்த முறையும் நாம் சந்தித்த அல்லது சந்திக்காத புது காரணங்களால் வேலை கிடைக்காமல் போனால் என்னால் தாங்கி கொள்ள முடியாது அப்பா,"
"அது உன் தவறு இல்லை மகளே. வாழும் வாழ்க்கையில் வெற்றி தோல்வி, ஏற்ற தாழ்வு இருக்கத்தான் செய்யும் அதை கண்டு துவண்டுவிடாமல் உன் முயற்சியை கைவிடாமலிருந்தால் இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒரு நாள் வெற்றி உன்னை தேடிவரும். ஒரு வருடத்திற்கு முன்னால் கொடுத்த தற்குறிப்பைப் (Resume) பார்த்து இப்போது அழைத்திருக்கிறார்கள். பாரப்போம் என்ன தான் நடக்குது என்று," என்று தந்தை நம்பிக்கை வார்த்தைகளை கூறினார்
சிந்தித்து பார்த்தேன்,
"சரி அப்பா. இனி ஒருநாளும் தோல்வியை கண்டு துவண்டு விட மாட்டேன். எதிர்த்து நின்று வெற்றி காண்பேன்,"
சற்று நேரத்தில் கல்லூரியை சென்றடைந்தோம்.
அங்கு பதினைந்து பேர் நேர்காணலுக்கு வந்திருந்தனர்.
நேர்காணலிலுள்ள எல்லாச் சுற்றுகளிலும் வெற்றி பெற்றேன். என் மனதில் வேலை நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிக்கையிருந்தது.
பின்னர், தேர்வு செய்யப்பட்ட மூவரையும் கல்லூரி முதல்வர் அழைத்து அப்பாய்ண்ட்மண்ட் கடிதம் கொடுத்துவிட்டு "வெற்றி பெற்ற உங்கள் மூவருக்கும் என் வாழ்த்துக்கள். நீங்கள் மூவரும் நாளைக்கே வேலைக்கு சேரலாம்," என்றார்.
என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதுவே என் கனவு. இப்போதே என் பெற்றோரை சந்தித்து என் மகிழ்ச்சியை பகிர விரும்பினேன்.
அங்கிருந்து, வெளியில் நின்று கொண்டிருந்த என் தந்தையை நோக்கி விரைவாக நடந்தேன்.
"அப்பா, எனக்கு வேலை கிடைச்சாச்சு பா," என்று சந்தோசத்தில் குதித்தேன். என் கண்களின் ஓரம் கண்ணீர் துளிகளும் எட்டிப்பார்த்தது.
"ஆசிரியர் பணியில் வெற்றி காண தந்தையின் வாழ்த்துக்கள் மகளே," என் தந்தையின் மகிழ்ச்சி அவரின் கண்களில் தெரிந்தது.
வீட்டுக்கு இனிப்போடு வந்தோம். அம்மா பார்த்த உடனே கண்டுப்பிடித்து விட்டார்.அம்மாவுக்கு இனிப்பு ஊட்டினோம். என் வாழ்கையின் மகிழ்ச்சியான நாள்.
மறுநாள் காலை
என் கனவான ஆசிரியர் பணிக்கு நிறைவாக சென்றேன். நான் நினைத்து போல அங்கு எனக்கு மனநிறைவாக இருந்தது. சொந்த முயற்சியில் வெற்றி கண்டது மகிழ்ச்சியை அள்ளிக் கொடுத்தது.
நான் வேலைக்கு சேர்ந்து விட்டேன். என்னைபோல் வேலைத் தேடி எத்தனையோபேர் துவண்டிருப்பீர்கள். உங்கள் முயற்சியை கைவிடாமல் போராடுங்கள் நிச்சயம் வெற்றி உங்கள் அருகில். என் வாழ்த்துக்கள்.
முற்றும்
வணக்கம்
**********************************************
அன்பான நண்பர்களே!
எனக்கு தெரிந்த சில அனுபவங்களை பகிர்ந்துள்ளேன் இதைப்போல் எண்ணற்ற காரணங்களால் நமக்கு கிடைக்கவிருக்கும் வேலை கிடைக்காமல் தள்ளிப்போகும் இதற்கு காரணமான யாரேனும் ஒருவர் மனம் திருந்தினாலும் அது மகிழ்ச்சியே!
சொந்த முயற்சியில் வேலை பார்க்கும் அல்லது வேலை தேடிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இக்கதை சமர்ப்பணம்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top