8

*****
"என்ன ஆச்சு உடனே வர சொன்னிங்க?" என்றாள் ரஞ்சினி.

"எதுவுமில்லை இன்னைக்கு எங்க அப்பாவோட முதலாளி வீட்டுக்கு என்னை வர சொன்னார்." என்று அவளின் முகத்தை கூர்ந்து கவனித்தான்.

ரஞ்சனியின் முகத்தில் ஒரு கலவரம் குடி கொள்ள மேலும் தொடர்ந்தான்.

"அவங்க பொண்ணுக்கு கூடிய சீக்கிரம் கல்யாணம் நடக்க போகுதாம். அதுக்கு நம்பிக்கையான ஆள் கூட இருந்து பார்த்துக்கணும் அதனால நீ தான் வரணும்னு சொன்னார். நானும் சரின்னு சொல்லிட்டேன்." என்றான் அழுத்தமான பார்வையுடன்.

வியர்வை துளிகள் முகத்தில் அரும்ப படப்படப்பாய் அமர்ந்திருந்தாள் ரஞ்சினி.

"சரி நம்ம அய்யாக்கு இருக்கிறது ஒரே பொண்ணு தான். அவ்ளோ பெரிய மனுஷன் நம்மளை கூப்பிட்டு சொல்றார்னு நினைச்சு சந்தோஷமா இருந்தது. யாரு அய்யவோட பொண்ணா இருக்கும்னு நினைச்சு திரும்பி பார்த்தா உன்னை மாதிரியே ஒரு பொண்ணு போட்டோல இருந்தது. நம்மாளு மாதிரியே இருக்கேன்னு வெளியே வந்தா சந்தேகமே இல்லாம நீ தான் உங்க வீட்டு நாய்குட்டியோட விளையாடிட்டு இருந்த. அதான் உங்க வீட்டு நாய் குட்டின்னு நினைச்சு என் கூட விளையாடினியான்னு தெரியலையே எதுக்கும் நேர்லையே கேட்டுப்போம்னு வரசொன்னேன்." என்று கோபமும் நக்கலும் கலந்து கேட்டான் பாஸ்கரன்.

"இல்லப்பா நான் என்ன சொல்ல வரேன்னா..." என்று முடிப்பதற்குள்.

"எனக்கு தான் உன்னை தெரியாது. ஆனா நிச்சயமா உனக்கு என்னை பத்தி தெரியாதா? இல்ல தெரியாம தான் லவ் பண்ணியா? எப்படி இருந்தாலும் இனி நமக்குள்ள செட் ஆகாது. அதனால நாம பிரிஞ்சுரலாம். இனி உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது." என்று அவள் பதிலை கூட கேட்காமல் வேகமாய் வெளியேறினான்.

என்ன நடந்தது என்று புரியவே அவளுக்கு சில நிமிடங்கள் தேவை பட்டது.

இந்த குறுகிய நாளிலேயே அவளின் மேல் அளவு கடந்த அன்பை வைத்துவிட்டான். ஆனால் இன்றோ உண்மைகள் தெரிந்த பின் இது எங்கு போய் முடியும் என்று தெரியாமல்... இது தான் சரியான முடிவு என்று கூறிவிட்டு வந்திருந்தாலும் ஒரு நொடி நின்றாலும் தன் மனம் மாறிவிடும் என்று தைரியமாய் பேசியவனின் கண்கள் கலங்கியிருந்தது பாஸ்கரனுக்கு.

பாஸ்கருக்கு மீண்டும் மீண்டும் அழைத்து கொண்டே இருந்தாள் ரஞ்சினி.

அவனும் எடுக்காமல் இருந்தான்.

"என் கழுத்துல தாலின்னு ஒன்னு ஏறினா அத கட்றது நீயா மட்டும் தான் இருக்கணும். மனசுல உன்னை வச்சுக்கிட்டு வேற ஒருத்தனுக்கு கழுத்தையும் உடம்பையும் தர முடியாது. அப்படி ஒருவேளை நடந்தா என் பொனத்து மேல் தான் நடக்கும்." என்ற குறுஞ்செய்தி வர என்ன செய்வது தெரியாமல் திணறினான் பாஸ்கரன்.

பெங்களூருக்கு மாற்றல் வேண்டும் என்று உடனே விண்ணப்பிக்கவும் அதை செய்தியும் உடனே வந்து சேர்ந்தது ரஞ்சனிக்கு. இனி பொறுமையாய் இருந்து எந்த பலனும் இல்லை என்று தோன்றவும் மூன்றாவது நாள் அவன் அலுவலகம் வந்து நின்றாள்.

வரமுடியாது என்று மறுத்தும் விடாப்பிடியாக ரிஜிஸ்டர் ஆபிஸிற்கு அழைத்து வந்து, "இப்போ நீ தாஸ்க்லி கட்டலைன்னா பரவால்ல எந்த பிரச்சனையும் இல்லை நீ கிளம்பு. கண்டிப்பா சாக மாட்டேன். ஆனா இங்கிருந்து நான் எங்க வீட்டுக்கு போவேன்னு மட்டும் நினைக்காதே. நீங்க யாருமே கண்டு பிடிக்கமுடியாத தூரதுக்கு போயிடுவேன்." என்று அவனை பார்க்க எந்த பதிலும் கூறாமல் இருக்கவும் அமைதியாய் வெளியே  போக திரும்பினாள்.

சொன்னதை நிச்சயம் செய்பவள் என்று தெரியும் என்பதால் அவளை முழுவதும் இழக்க விரும்பாமல் பதிவு திருமணமும் செய்து கொண்டு வீட்டினரின் முன் வந்து நின்றனர்.

இவர்களை பார்த்ததும் அதிர்ந்த அவளின் தந்தையால் இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பெண்ணை கண்டபடி திட்டி இருவரையும் பிரிக்க பார்க்க கணவனுக்காக தந்தையை  எதிர்த்து பேச மகளை முழுவதுமாய் தலை முழுகிவிட்டார்.

நிச்சயம் நன்றாக வாழ்ந்து காட்டுவேன் என்று சபதமிட்டு யாரும் எங்களுக்கு தேவையில்லை என்று தன் தோழர்கள் இருவருடன் ஆரம்பித்திருந்த புது தொழிலை கவனிக்க சென்னைகே அழைத்து வந்துவிட்டாள்.

முதலில் அவளுடன் ஒன்றாமல் இருந்த பாஸ்கரனை தன் அன்பால் முழமையாக
ஆட்கொண்டு இனிமையாக வாழ தொடங்கினர்.

கருவுற்று அழகிய பெண் குழந்தையை பெற்றெடுக்க மகள் பிறந்த நேரம் தனியாக பாஸ்கரன் தொடங்கியிருந்த சிறு தொழிலில் நிறைய முன்னேற்றம் தொடர்ந்து வர இருவரின் கடின உழைப்பினால் ஆறேழு வருடங்களிலேயே செல்வம் பெருகி மகிழ்வுடன் நாட்கள் நகர்ந்தது.

அதன்பிறகு இரண்டாவதும் மகள் பிறக்க வீட்டில் ஒரே கொண்டாட்டம் தான்.

"அதுக்கு பிறகு தான் உனக்கே தெரியமே?" என்று தோழியிடம் கேட்க,"ஹ்ம் உங்க பேரண்ட்ஸ் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்டி. சரி எனக்கும் நேரமாகுது. நீ பத்திரமா இரு. எதாவதுன்னா போன் பண்ணு. நான் வரேன்." என்று தன் அலைபேசி எண்ணை தந்தபின் விடை பெற்று வெளியேறினாள் அவளின் தோழி.

அனைவரும் நினைப்பது போல் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவள் அல்ல மருதினி. அவளின் பெற்றோருக்கு ஆசையாய் ஆஸ்தியை சேர்க்க பிறந்த முதல் மகள். அவள் பிறந்த பிறகே தங்களின் பிஸ்னெஸ் பெரிய அளவில் வளர்ந்ததாக எப்பொழுதும் கூறி பெருமைப்பட்டு கொள்வர்.

அப்படி பட்ட வசதியான குடும்பத்தில் மூத்த மகளாக பிறந்து செல்வ செழிப்பில் திளைத்தவள் தான் மருதினி. இளைய மகள் மகிழினி. செல்வ செழிப்போடும் மிகுந்த செல்லத்தோடும் வளர்க்கப்பட்டவள்.

மருதினியின் கல்லூரி இரண்டாமாண்டில் நட்புடன் பழக ஆரம்பித்து பின் காதலாய் மாறியது தான் மருதினி- பிரபுவின் உறவு. பிரபுவும் நல்லவன் தான். அவனின் குணமும் அன்பான பேச்சும் மருதினியை கவர்ந்தது.

அவளின் போறாத காலம் மூன்றாம் ஆண்டு இறுதியில் இருக்கும் பொழுது நண்பர் ஒருவரின் வீட்டு திருமணத்திற்கு செல்ல தயாராகினர் அவளின் பெற்றோர்.

"டேட் ப்ளீஸ் போகாதிங்க. தடையாய் டேஸ் நாங்க எப்படி நீங்க ரெண்டு பேரும் இல்லாம இருப்போம்." என்று பூனைக்குட்டி போல் தந்தையின் பொன்னே சுற்றி கொண்டிருந்தாள் இளையமகள் மகிழினி.

"செல்லம்! உன்கூட அக்கா இருக்கா. உனக்கு என்ன வேணும்னாலும் செஞ்சு தருவா. இது ரொம்ப முக்கியமான மேரேஜ் டா. உனக்கு எக்ஸ்சாம் இல்லைன்னா உன்னையும் அக்காவையும் கூட்டிட்டு போய்ட்டு வரலாம்னு தான் பிளான். பட் வாட் டு டூ? உங்க ரெண்டு ரெண்டு பேரால வரமுடியலை. சோ வீ ஆர் கோயிங். சமத்தா இருக்கணும். அக்கா சொல் பேச்சு கேட்டு நடக்கணும். யூ ஆர் டேடி பிரின்ஸஸ் னா?" என்ற பாஸ்கரன் மகளின் அணைத்து நெற்றியில் ஒரு முத்தம் வைத்து புன்னகைத்தார்.

"போங்க டேட். நான் வேணாம்னு சொல்லியும் யூ ஆர் கோயிங். ஐ அம் நாட் கோயிங் டு டாக் வித் யூ அண்ட் மாம்." என்று முகத்தை தூக்கி வைத்து கொள்ளவும் மகளை சமாதானப்படுத்த மிகவும் ப்ரயத்தனப்பட்டனர் இருவரும்.

"மாம் யூ டோன்ட் ஜஸ்ட் வரி அபௌட் ஹெர். ஐ ல் டேக் கேர் ஆப் ஹெர்." என்று பெற்றோரின் கன்னத்தில் முத்தம் வைத்து வழியனுப்பியது தான் இருவரும் பெற்றோரை கடைசியாக பார்ப்பது என்று அறியாமல் போயினர்.

ஆனால் இங்கோ திருமணத்தில் பங்கேற்று முடித்துவிட்டு மகள்களை காணும் ஆவலில் அங்கு மேற்கொண்டு தங்காமல் அதிகாலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது தான் எதிரில் குடித்துவிட்டு லாரி ஒட்டி வந்தவன் இவர்கள் வாகனத்தின் மீது பலமாய் மோத அந்த இடத்திலேயே ஓட்டுனரோடு சேர்த்து மூவரின் உயிரும்  போய்விட்டது.

******

குழந்தை உறக்கத்திலிருந்து எழுந்து அழவும் பழைய நினைவுகளில் இருந்து மீண்டவள்.

இன்னும் சிறிது நேரம் அங்கே இருந்தவள் என்ன நடந்தாலும் உடனே வீட்டை விட்டு வெளியேறுவது தான் நல்லது என்று தைரியமாய் வீட்டுக்கு சென்றாள்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #family#love