6

கோவிலை சுற்றி வந்தவள் அம்மனை பார்த்தபடி தூணில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

மடியில் குழந்தை உறங்கி கொண்டிருக்க, அவளின் கடந்த காலத்திற்குள் அனுமதி பெறாமல் நினைவலைகள் பின்னோக்கி சென்றன.

"ஹேய் மருதினி!" என்ற குரல் கேட்டதும் பயம் தொற்றி கொள்ள திரும்பி பார்த்தாள்.

"ஹாய்!" என்றாள் கல்லூரி தோழியை பார்த்து.

"எவ்ளோ நாளாச்சு உன்னை பார்த்து? எப்படி இருக்க?"

"ஹ்ம்ம் இருக்கேன். நீ எப்படி இருக்க?" என்றாள் மருதினி.

"படிச்சுட்டு இருக்கும்போதே உங்க பேரண்ட்ஸ் டெத் கேள்வி பட்டேன். பட் அதுக்கு பிறகு உன்னை பார்க்கவே இல்ல. லாஸ்ட் இயர் முடிக்கவும் இல்ல. எங்க போன மருதினி?" என்றாள் உண்மையான வருத்தத்தோடு.

"என்னென்னவோ நடந்துருச்சு உமா."

"ஹேய் உனக்கு மேரேஜ் ஆகிருச்சா சொல்லவே இல்லை.." என்றாள் மடியில் உறங்கும் குழந்தையை பார்த்து.

"ஹ்ம்ம். ஆகிருச்சு. அம்மாவும் அப்பாவும் லவ் மேரேஜ் தான். ரொம்ப அழகான காதல் வாழ்க்கை. அவங்க லைஃப் கேட்டு காதல் மேல ஒரு தீராத ஆசை... அவங்க வாழ்ந்ததை பார்த்து தப்பு கணக்கு போட்டுட்டேன். காதல் திருமணம்னு போய் இப்போ எப்படி எப்படியோ போகுது என் வாழ்க்கை."  என்றாள் வெறுமையாக.

"உங்க மம்மி  டேடி லவ் மேரேஜ்ஜா? சூப்பர்ல? உண்மையா எனக்கும் லவ் மேல அவ்ளோ இன்டெர்ஸ்ட் இல்ல... உண்மையாவா சொல்ற? உங்க அப்பா அம்மா அவ்ளோ ஹாப்பியா இருந்தார்களா? எனக்கும் அவங்களை பத்தி சொல்றியா?" அவள் வருத்தத்தை திசைமாற்ற கேட்டாள் உமா.

"ஹ்ம்ம்"

******

ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவள் அல்ல மருதினி. அவளின் பெற்றோருக்கு ஆசை மகள். அவள் பிறந்த பிறகே தங்களின் பிஸ்னெஸ் பெரிய அளவில் வளர்ந்ததாக கூறி பெருமைப்பட்டு கொள்வர்.

ரஞ்சினியும் பாஸ்கரனும் காதலித்து தங்களின் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

மிக பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் பணக்கார குடும்பத்தில் பிறந்து செல்வா செழிப்பில் செல்லமாய் வளர்ந்தவர்.

பாஸ்கரனோ ரஞ்சினி வீட்டில் வேலை செய்யும் சாதாரண டிரைவரின் மகன். படிப்பில் படு சுட்டி. தந்தையிடம் பணவசதி இல்லையே என்று வருந்தாமல் நன்கு படித்து நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்று மெரிட்டில் என்ஜினீயரிங் படிப்பை முடித்து நல்ல கம்பெனி ஒன்றில் கேம்பசிலேயே தேர்வாகி நல்ல வேலையில் இருப்பவர். மிகவும் எளிமை குணம் கொண்டவர். தந்தை பணிபுரியும் இடத்தில் மிகுந்த பணிவுடன் நடந்து கொள்பவர்.

இவரின் இந்த குணத்தால் இவருக்கே தெரியாமல் ரஞ்சினியின் மனதில் புகுந்துவிட அவரின் ஒவ்வொரு செயலையும் தீவிரமாய் ரசிக்க தொடங்கி அது ஒரு தலை காதலாய் மாறியது.

இதை எதையும் அறியாத பாஸ்கரன் எப்பொழுதும் போல் வீடு, வேலை, குடும்பம் என்று இருக்க, ஒரு நாள் தைரியத்தை வரவழைத்து கொண்டு பாஸ்கரனோடு பேசினார்.

முதலாளி வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என்று தெரியும். ஆனால் இதுவரை பார்த்ததும் இல்லை பேசியதும் இல்லை. அதனால் ரஞ்சனியை தெரிந்திருக்கவில்லை.

ரஞ்சனி அவரிடம் பேசியதும் வெளியிடத்தில் என்பதால்,

"ஹலோ!" என்றாள் ரஞ்சினி.

இன்று விடுமுறை என்பதால் அருகில் இருந்த பார்க்கில் அமர்ந்து புத்தகம் ஒன்றை படித்து கொண்டிருந்தான் பாஸ்கர்.

தன்னை சுற்றி ஒருமுறை பார்த்தவன், "என்னய்யா கூப்பிட்டிங்க?" என்றான்.

'ஆமாம்.' என்பது போல் தலையாட்டினாள் ரஞ்சனி.

"சொல்லுங்க." என்றான் அவளை பார்த்துக்கொண்டே.

"இல்ல உங்களுக்கு ஆட்சேபனை இல்லன்னா நான் இங்கே உட்காரலாமா?" என்றதும் அருகில் இருந்த பெஞ்சுகளில் எல்லாம் ஆட்கள் அமர்ந்திருப்பதை பார்த்து, "ஒய் நாட் சியூர். உட்காருங்க." என்று தள்ளி இடம்விட்டு அமர்ந்து மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்து போனான்.

அவனின் அருகினில் நெஞ்சம் படபடக்க அமர்ந்தவள் போனை பார்த்துக் கொண்டிருப்பது போல் இருந்தாலும் பாஸ்கரை தான் ஓரவிழியால் பார்த்து கொண்டிருந்தாள்.

"நீங்க இந்த ஏரியாவா பார்த்ததில்லையே?" ரஞ்சனி கேட்டதும், அவளை உற்று பார்த்தவன், "ஆமா இங்க பக்கத்துல தான் எங்க வீடு. நான் எப்போவாது பிரீ டைம் மட்டும் தான் வருவேன்." என்று முடித்து கொண்டு மீண்டும் புத்தகத்தில் முழுக.

வேறு எப்படி பேசுவது என்று தெரியவில்லை ரஞ்சனிக்கு.

"ரஞ்சு" அருகில் குரல் கேட்கவும் திடுக்கிட்டு திரும்ப, நல்லவேளையாக அங்கே அவளின் தோழி நின்றிருந்தாள்.

"ஹாய் டி வா" என்றாள் ரஞ்சனி.

தோழி அமர்வதற்கு பாஸ்கரன் அருகில் தள்ளி அமர்ந்து தோழியை அமர வைத்தாள்.

"என்னடி உங்க வீட்ல அவ்ளோ பெரிய தோட்டம் வச்சுட்டு இங்க வந்துருக்க?" என்றாள் தோழி.

"ஆமாடி இருக்கு. அங்க நடந்து போர் அடிச்சுருச்சு. இங்க இவ்ளோ பேர் இருக்காங்க. இங்க நடக்கனும்னு ஆசையா இருந்தது அதான் வந்தேன்." என்றாள்.

"உங்க அப்பாக்கு தெரியுமா?"

"ஏண்டி நான் நல்லா  மூட்ல இருக்கேன். நீ வேற..." என்றாள் ரஞ்சினி.

"என்னடி உன் மேல உயிரையே வச்சுருக்கார் உன் அப்பா. அப்புறம் என்ன?"

"ஹ்ம்ம்.. போடி... தங்க கூண்டுல இருக்க கிளி கதை தான் என்னோடது. பிரியா இருக்க முடியாது." ரஞ்சினி.

"சரி டி. எனக்கு நேரமாச்சு நான் கிளம்புறேன். நீயும் சீக்கிரம் கிளம்பிடு. வீட்ல தேட போறாங்க." என்று சென்றுவிட்டாள் தோழி.

இவர்களின் உரையாடலை கேட்டு கொண்டிருந்த பாஸ்கருக்கு ரஞ்சினி புதிதாய் தெரிந்தாள். இருந்தும் தன் வேலையை தொடர்ந்தான்.

அவனை ஒருமுறை பார்த்துவிட்டு செருப்பை கழட்டிவிட்டு அருகிலேயே வெறும் காலில் நடந்தாள் ரஞ்சினி.

வீட்டில் இருப்பது போல் புல் செடிகள் இல்லாததால் முள் ஒன்று குத்தியது.

"அஹ்ஹ்..." என்று நொண்டி கொண்டே வந்து அமர, "என்னங்க பார்த்து நடக்க கூடாதா? உங்க வீட்லயே நடந்துருக்கலாம்ல?  என்றான் பாஸ்கர்.

எதுவும் பேசாமல் அவனை பார்த்துவிட்டு காலை மடியில் வைத்து முல்லை எடுத்து போட்டாள்.

"எப்பவும் பிரிட்ஜ் குள்ளவே இருந்தா எப்படி வெளி உலகம் தெரிஞ்சுகிறது?" என்றாள் மெலிதாய் புன்னகைத்து.

"அதுவும் சரி தான்." என்று புன்னகைத்தான் பாஸ்கர்.

"ஐ ஆம் ரஞ்சினி." என்றாள்.

"நான் பாஸ்கர்." என்றான்.

'எனக்கு தெரியும் டா.' என்றாள் உள்ளுக்குள்.

இருவரும் தங்களை பற்றி அறிமுகப்படுத்தி கொண்டு சிறிதாய் பேச தொடங்கினர்.

புதிதாய் ஒரு நட்பு அழகாய் உருவாகி பிரிந்தனர்.

மறுநாளும் ரஞ்சனியை காண பாஸ்கரும் பாஸ்கரை பார்க்க ரஞ்சினியும் பார்க்கிற்கு வந்தனர்.

மீண்டும் ஒரு சந்திப்பு சிறிய உரையாடல் என இனிமையாய் கழிய, இருவரும் தினமும் இதே இடத்தில் சந்திப்பதென முடிவு செய்து கிளம்பினர்.

அவளும் தன் தந்தையின் பெயரை கூறவில்லை. இவனும் கேட்கவில்லை. இவ்வளவு பணக்கார வீட்டு பெண் என்று அவனும் நினைத்திருக்கவில்லை.

இருவரும் அடிக்கடி சந்தித்து பேச தொடங்கி அழகான காதல் மலரவும் தொடங்கியது.

யார் முதலில் சொல்வதென இருவரும் வெறும் பேச்சுகளில் நேரத்தை கடத்தினர். செல்ல சண்டைகளும் கேலி பேச்சுகளும் இருவரின் உரையாடலில் நிறைந்திருக்க இருவரின் மனமும் ஆர்பரித்தது.

எப்பொழுதும் போல் ரஞ்சனியே தன் மனதில் இருப்பதை கூறினாள்.

யார் சொல்வது என காத்திருந்தவனுக்கு அவளின் வார்த்தைகள் உற்சாகம் தந்து மகிழ்ச்சி பொங்க ஏற்றும் கொண்டான்.

இருவரின் அலைபேசி எண்களும் பரிமாறபட காதல் தூதுவன் கைபேசியானான்.

நாட்களும் அதன் போக்கில் அழகாய் நகர, ஒரு நாள் இருவரும் எதிர்பார்க்காதது நடந்தது.

"பாஸ்கரா! நம்ம அய்யா உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு. வீட்டு பக்கம் வர சொல்லு பார்க்கணும்னு சொன்னாரு பா." என்றார் பாஸ்கரனின் தந்தை.

"சரி பா. நாளைக்கு காலைல வேலைக்கு போகும் முன்ன போய் பார்த்துட்டு போறேன்." என்றான் பாஸ்கரன்.

மறுநாள் தன் வாழ்க்கையை புரட்டி போடப்போகும் நாள் என்று அறியாமல் எப்பொழுதும் போல் கிளம்பி சென்றான்.

வீட்டிற்குள் செல்லாமல் வாசலில் நின்று, "அய்யா" என்றதும்,

உள்ளே இருந்து எட்டி பார்த்த பெரியவர், "வா ப்பா உள்ள வா." என்றார்.

தயங்கியபடி உள்ளே சென்றவன், "வணக்கம் அய்யா! நீங்க வர சொன்னதா அப்பா சொன்னாங்க." என்றான் பவ்யமாய்.

மெல்ல புன்னகைத்து, "ஆமா பா. படிப்பை முடிச்சுட்டு வேலைக்கு போறேன்னு அப்பா சொன்னாரு. வேலை எல்லாம் நல்லா இருக்கா? பிடிச்சிருக்கா? பிடிக்கலைன்னா சொல்லு வேற இடத்துல நல்ல வேலையா சொல்றேன்." என்றார்.

"இல்லைங்க அய்யா. இப்போ போற வேலையே எனக்கு பிடிச்சு இருக்குயா. ரொம்ப நன்றிங்க." என்றான்.

"சரிப்பா. நம்ம பாப்பாக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணிருக்கோம். கூடிய சீக்கிரம் நம்ம வீட்ல நல்ல விசேஷம் நடக்க போகுது. அப்போ கூட மாட முடிஞ்ச வந்து உதவி செய். நம்பிக்கையானவங்க இருந்தா எனக்கும் அப்போ நிம்மதியா இருக்கும்." என்றார்.

"சரிங்கயா கண்டிப்பா வரேனுங்க." என்றான் பாஸ்கரன்.

"சரிப்பா. சாப்பிட்டு போ." என்றார்.

"இல்லைங்கய்யா. வீடலையே சாப்பிட்டு வந்துட்டேன். வேலைக்கு போகணும். வரேங்க." என்று விடைபெற்று திரும்ப அங்கே அவர்களின் குடும்ப படத்தில் அழகாய் சிரித்து கொண்டிருந்தாள் ரஞ்சனி. அதை பார்த்ததும் மிகுந்த அதிர்ச்சியுடன் திகைத்து நிற்க, "என்னப்பா ஏதாவது வேணுமா?" என்றார்.

"இல்லைங்க வரேன்." என்று உள்ளுக்குள் கொதித்து வெளியே வந்தான்.

'அப்பா அவர் முதலாளிக்கு ஒரு பொண்ணு ஒரு பையன்னு தானே சொன்னார். அப்போ ரஞ்சினி தான் அவர் பொண்ணா? அப்போ தான், யாருன்னு ஏன் என்கிட்ட சொல்லலை. என்னை யாருன்னு தெரிஞ்சு தான் காதலிச்சுருக்காளா?' என்று குழம்பியபடி அவர்கள் வீட்டின் கேட்டருகே சென்றவன் ஒரு நொடி நின்று திரும்பி பார்க்கவும் அங்கே இவன் வந்தது தெரியாமல் நாய் குட்டியுடன் மகிழ்ச்சியாய் ரஞ்சினி விளையாடி கொண்டிருக்க, என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவள் தன்னை ஏமாற்றிவிட்டாளா என்று ஒரு பக்கம் கோபத்துடன் வெளியேறினான் பாஸ்கரன்.

"எங்க இருக்க?" என்றான் அமைதியாய்.

"என்ன பாஸ் காலைலயே போன் பண்ணிருக்க? ரொம்ப என் ஞாபகமோ?" என்றாள் குறும்பாய்.

"ஆமா ரொம்ப... உடனே உன்னை பார்க்கணும்... உன் காலேஜ் பக்கத்துல இருக்க காபி ஷாப்கு வா." என்று அவள் பதிலை கூட கேட்காமல் வைத்துவிட்டான்.

'என்னாச்சு இவனுக்கு? ஏற்கனவே அளந்து தான் பேசுவான்... இப்போ ரொம்ப அளந்து பேசுறானே? என்னன்னு தெரியலையே?' என்று யோசித்து யோசித்து ஒன்றும் புரியாமல் வேகமாய் கிளம்பி கல்லூரி வந்து சேர்ந்தாள் ரஞ்சின

 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #family#love