34 இறுதிப் பகுதி
36 இறுதிப் பகுதி
"குற்றவாளி எவ்வளவு தான் திறமைசாலியா இருந்தாலும், ஏதாவது ஒரு தடயத்தை தன்னை அறியாமல் விட்டுட்டு போவான். அதே மாதிரி தான் இங்கேயும்" புன்முறுவல் பூத்தான் ஓவியன்.
ஒன்றும் புரியாமல் விழித்தான் முருகன்.
"நான் கோழிக்கோட்டுக்கு போறேன்"
"எப்ப சார்?"
"கிளம்பிட்டேன்"
"நானும் வரலாமா சார்?
"தாராளமா"
விமான நிலையத்தை நோக்கி ஜிப்பை செலுத்த துவங்கினான் முருகன். தான் அறிந்த ஒரு டிராவல் ஏஜென்டின் மூலமாக பயண சீட்டுகளை ஏற்பாடு செய்தான் ஓவியன்.
அவர்கள் இருவரும் விமானத்தில் ஏறி அமர்ந்தார்கள்.
"நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா சார்?" என்றான் முருகன்
"கேளுங்க"
"எல்லா குற்றவாளிகளும் ஏதாவது ஒரு தடயத்தை விடுவாங்கன்னு சொன்னீங்க. எட்வின் அப்படி என்ன தடயத்தை சார் விட்டுட்டு போனான்?"
"கோழிக்கோடு"
"கோழிக்கோடா? அதுல என்ன சார் தடயம் இருக்கு?"
"என்னுடைய யூகம் சரியா இருந்தா, எட்வின் இந்தியாவிலேயே இல்ல. அவன் ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு போயிருக்கணும்"
"ஆனா, அவன் இந்தியாவில் இருக்கிற எல்லா சர்ச்சையும் விசிட் பண்ண போறதா சொன்னானே சார்?"
"எட்வின் சொல்றதெல்லாம் உண்மையா தான் இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லையே...! அவன் நம்மை திசை திருப்பி விட்டிருக்கான். கோழிக்கோடு ரொம்ப பெரிய சிட்டி கிடையாது. ஆனா அங்க இன்டர்நேஷனல் ஏர்போர்ட் இருக்கு. ரொம்ப சமீபத்துல தான் அந்த ஏர்போர்ட்டுக்கு இன்டர்நேஷனல் அந்தஸ்து கிடைச்சது. அதனால, யாரும் அவன் அங்கயிருந்து வெளிநாட்டுக்கு போயிருப்பான்னு எதிர்பார்க்க மாட்டாங்க. அதனால தான் அவன் அங்கிருந்து நமக்கு தைரியமா கால் பண்ணான். வெளிநாட்டுக்கு போறதுக்காக தான் அவன் தன்னோட வீட்டை வித்திருக்கணும். அகோரமூர்த்தியை கொல்றதுக்கு முன்னாடி, வேண்டிய டைம் எடுத்துக்கிட்டு அவன் அதை நிதானமா செஞ்சிருக்கான்"
"இது தான் உங்க சந்தேகம்னா, இதை நம்ம சென்னையில இருந்தே விசாரிச்சிருக்கலாமே சார்..."
"அதனால எந்த பிரயோஜனமும் இருக்காது"
"ஏன் சார்?"
"அவன் தன்னோட உண்மையான பெயரை வைச்சி நிச்சயம் டிக்கெட் எடுத்திருக்க மாட்டான். ஏன்னா, அவனோட பாஸ்போர்ட், அவன் ஆதார் கார்டோட கனெக்ட் ஆகி இருக்கும். அந்த ஆதார் கார்டை அவன் யூஸ் பண்ணி இருந்தா, நிச்சயம் அவன் மாட்டிக்குவான். அதனால, நம்ம நேர்ல போய், அவனுடைய போட்டோவை பாத்தா மட்டும் தான் நம்மளால நிச்சயமா சொல்ல முடியும்"
முருகனுடைய ஆர்வம் அதிகமானது, ஓவியனின் யூகம் சரியா இல்லையா என்று தெரிந்து கொள்ள.
கோழிக்கோடு சென்று இறங்கிய அவர்கள், நேராக சர்வதேச விமான நிலையத்தின் என்கொயரி பகுதிக்கு சென்றார்கள். முப்பத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் அனைவருக்கும் பொறுமையுடன் பதில் அளித்துக் கொண்டிருந்தார்.
"ஐ அம் ஏசிபி ஓவியன் ஃப்ரம் சென்னை"
"வாட் கேன் ஐ டூ ஃபார் யூ சார்?"
"ஏதாவது இன்டர்நேஷனல் ஃபிளைட், இந்த ஏர்போர்ட்ல இருந்து இன்னைக்கு கிளம்பி போயிருக்கா?"
"ஆமாம் சார், ஒரு சிங்கப்பூர் ஃப்ளைட் 1:25 க்கு கிளம்பி இருக்கு"
"அந்த பேசஞ்சர்ஸ் லிஸ்ட்டை பார்க்கலாமா?"
"ஷூயூர் சார்"
கணினியின் திறையை ஓவியனின் பக்கம் திருப்பி, அதில் இருந்த பயணிகளின் புகைப்படத்துடன் கூடிய பட்டியலை அவனிடம் காட்டினான்.
அதை கவனமாய் ஆராய்ந்த ஓவியனின் கண்கள் விரிவடைந்தன. அந்த பட்டியலில், ஸ்ரீராம் என்ற பெயரில் தாடியுடன் காட்சி அளித்தான் எட்வின். அந்த பட்டியலில் எட்வினின் மகனின் புகைப்படமும் இருந்தது. அதை கண்ட முருகன் வாயை பிளந்து கொண்டு நின்றான்.
"தேங்க்யூ"
இருவரும் சர்வதேச விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார்கள்.
"நீங்க நினைச்சது சரி சார். எட்வின் தன் பையனோட சிங்கப்பூருக்கு போயிருக்கான். அவன் மகனை யாருக்கும் தத்து கொடுக்கல சார்"
"ம்ம்"
"இப்ப நீங்க என்ன சார் செய்ய போறீங்க?"
"நம்ம டிபார்ட்மெண்ட் என்ன செய்துன்னு பார்க்கலாம்."
"அப்படின்னா நீங்க எட்வின் பத்தி கமிஷனர் கிட்ட சொல்ல போறதில்லையா சார்?"
"நீங்க என்ன நினைக்கிறீங்க?"
"சொல்லாதீங்க சார்"
"என்னை இந்த கேஸ்ல இருந்து கமிஷனர் ரிலீவ் பண்ணிட்டா நிச்சயம் சொல்ல மாட்டேன்"
"ஓகே சார்"
அவர்கள் இருவரும் சென்னை திரும்பினார்கள்.
ஓவியனை பார்த்த மேகா அவனை நோக்கி ஓடினாள்,
"அப்பா..." என்று கத்தியபடி.
சமையலறையில் இருந்த தூரிகை, அங்கிருந்து எட்டிப் பார்த்து புன்னகை புரிந்தாள்.
"ஃபியூ மினிட்ஸ் டா செல்லம் அப்பா குளிச்சிட்டு வந்துடறேன்"
"ஓகே"
"உன் தம்பி என்ன செய்றான்?"
"அந்த தூங்கு மூஞ்சி தூங்கிக்கிட்டே இருக்கான்" என்று சில்லறை காசை சிதறவிட்டது போல் சிரித்தாள்.
சிரித்தபடி குளியலறை நோக்கி நடந்தான் ஓவியன். சற்று நேரத்தில் தலையை துவட்டியபடி வெளியே வந்தவன், நேராக சமையலறை நோக்கி சென்றான்.
"எனக்கு சாப்பிட ஏதாவது கொடு. ரொம்ப பசிக்குது"
"வெய்ட்"
மேகாவுக்காக சுட்ட தோசையையும், தக்காளி தொக்கையும் ஒரு தட்டில் வைத்து அவனிடம் நீட்டினாள்.
"தேங்க்யூ"
இன்னொரு தட்டில் மேகாவுக்கு தோசையை எடுத்துக்கொண்டு, அவளும் வந்து ஓவியனுடன் அமர்ந்தாள்.
அப்பொழுது, ஆணையரிடமிருந்து ஓவியனுக்கு அழைப்பு வந்தது. அதை ஏற்ற ஓவியன்,
"எஸ் சார்" என்றான்.
"நீங்க உங்க முடிவை ரீகன்ஸிடர் பண்ணிங்களா?"
"அதுல கன்சிடர் பண்ண எதுவுமே இல்ல சார். ப்ளீஸ், என்னை ரிலீவ் பண்ணிடுங்க"
"ஓகே, உங்களுடைய கம்ப்ளீட் இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்டை சப்மிட் பண்ணுங்க"
"ஓகே சார்"
அழைப்பை துண்டித்த ஓவியன், அவனைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த தூரிகையை பார்த்து,
"மனசுக்கும், புத்திக்கும் நடுவுல வேலை செய்றது ரொம்ப கஷ்டமான விஷயம்" என்றான்.
"புரியுது"
"கிரிமினல்களை டீல் பண்றது ரொம்ப ஈஸியான விஷயம். ஆனா இந்த கேஸ், ரொம்ப உணர்வு பூர்வமானது. சட்டத்துக்கும், காரணத்துக்கும் நடுவுல நான் பல தடவை போராட வேண்டி இருந்தது. குற்றவாளியோட இடத்துல என்னை நிறுத்தி இதுக்கு முன்னாடி நான் யோசிச்சதே இல்ல. ஆனா இந்த கேஸ்ல என்னால் அப்படி செய்யாம இருக்க முடியல"
"எப்படியோ, நீங்க தான் இந்த கேஸ்ல இருந்து ரிலீஸ் ஆகிட்டீங்களே... இனிமே ரிலாக்ஸா இருங்க"
அப்பொழுது உள்ளறையில் இருந்து முகில் சினுங்கும் சத்தம் கேட்டது. மேகா தான் முதலில் ஓடியவள். கையை கழுவிக்கொண்டு சென்று அவனை தூக்கிக் கொண்ட தூரிகை, பால் பாட்டிலை எடுத்து அவனது பசியாற்றினாள்.
சாப்பிட்டு முடித்து விட்ட ஓவியன், அவளிடமிருந்து முகிலை பெற்றுக் கொண்டு,
"நீ போய் சாப்பிடு" என்றான்.
தூரிகை மீண்டும் சாப்பிட சென்றாள்.
அப்பொழுது ஓவியனுக்கு முருகன் ஃபோன் செய்தான்.
"சொல்லுங்க முருகன்"
"எட்வினோட நேரம் நல்லாயிருக்கு சார். உங்களை இந்த கேஸ்ல இருந்து ரிலீவ் பண்ணிட்டாங்க"
"ஆமாம்" என்று புன்னகைத்தான் ஓவியன்.
"நம்ம கோழிக்கோடுக்கு போனதை கூட உங்க ரிப்போர்ட்ல இன்க்லூட் பண்ண போறீங்களா சார்?"
"இல்ல. நான் அப்படி செய்யப்போறதில்ல. இதுக்கு அப்புறம் இந்த கேஸை எடுத்துக்கிற ஆஃபிஸர் அதை கண்டுபிடிக்கட்டும்"
"எனக்கென்னமோ அவங்க அதை கண்டுபிடிப்பாங்கன்னு தோணல சார்"
"அவங்க கண்டுபிடிக்கலைன்னா நீங்க அவங்களுக்கு ஹிண்ட கொடுங்க"
"நான் ஏன் சார் செய்யணும்?"
"செய்யப் போறது இல்லையா?"
"நானும் இந்த கேஸ்ல இருந்து ரிலீவாகிறேன் சார்"
"ஆனால் ஏன்?"
"எனக்கும் எமோஷன்ஸ் இருக்கு சார். நான் நேரடியா பாதிக்கப்படலைனாலும் என்னாலயும் வலியை உணர முடியும் சார்"
"ம்ம்"
"பை சார்"
"பை"
அழைப்பை துண்டித்த ஓவியன், முகில் மீது தன் கவனத்தை திருப்பினான். அவன் பாலை குடித்து முடித்தவுடன் பாட்டிலை எடுத்து ஓரமாய் வைத்தான்.
சாப்பிட்டு முடித்து வந்த தூரிகை, அவனிடமிருந்து முகிலை பெற்றுக் கொண்டு, அவனை தோளில் போட்டு, அவன் முதுகை லேசாய் வருடி கொடுத்தாள்.
"நான் நியூஸ் பார்த்தேன். அகோரமூர்த்தியோட சாவு ரொம்ப கொடூரமானது" என்றாள்.
ஆம் என்ற தலையசைத்தான் ஓவியன்.
"அப்படிப்பட்ட மோசமான சாவிலிருந்து எங்க அண்ணனை எங்க அண்ணி காப்பாத்திட்டாங்க"
"ஏன் தேவையில்லாததை எல்லாம் யோசிக்கிற?"
"அதுக்கு வாய்ப்பில்லைன்னு நீங்க சொல்லுவீங்களா?"
"சொல்ல முடியாது தான்..."
"அகோரமூர்த்தியோட சாவை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?"
"என்னை பொறுத்த வரைக்கும், அவனுக்கு கிடைச்ச சாவை விட அவன் ரொம்ப கொடூரமானவன். இதயம் இல்லாதவன்... மத்தவங்களோட இதயத்தை உடைக்க தயங்காதவன். ரெண்டு சந்தோஷமான குடும்பத்தையும், அவங்களுடைய நம்பிக்கையையும் உடைச்சவன். எல்லாத்துக்கும் மேல, தான் செஞ்ச தப்புக்கு கொஞ்சம் கூட வருத்தமே படாதவன். அதனால, அவன் பரிதாபத்துக்கு தகுதி இல்லாதவன். இதுல ஒரு நல்ல விஷயம் என்னென்ன, அவங்க வைஃப்க்கு அவனுடைய உண்மையான முகம் தெரிஞ்சது தான். ஒருவேளை அவங்களுக்கு தெரியாம இருந்திருந்தா, அவன மாதிரி ஒரு அயோக்கியனுக்காக வாழ்நாளெல்லாம் அவங்க அழுதுகிட்டே இருந்திருப்பாங்க... தன்னோட தன்னம்பிக்கையையும் மொத்தமா இழுந்திருப்பாங்க..."
"நீங்க சொல்றது சரிதான். அகோரமூர்த்தி மாதிரி ஒரு மோசமான ஆள், தூய்மையான கண்ணீருக்கு தகுதி இல்லாதவன். யாரையுமே கண்மூடித்தனமா நம்பறதுக்கு முன்னாடி, நிதர்சனத்தை பொம்பளைங்க புரிஞ்சிக்கணும். தான் பிடிபட்டுட கூடாது அப்படிங்கிறதுக்காகவே, நிறைய ஆம்பளைங்க நல்லவங்க மாதிரி நடிச்சுக்கிட்டு இருக்காங்க. நம்பிக்கை உடையும் போது ஏற்படுற பின் விளைவுகளை பத்தி யாருமே யோசிக்கிறது இல்ல"
ஓவியன் அவளை அன்பாய் பார்த்து, தன்னிடம் வருமாறு சைகை செய்ய அவன் அருகில் சென்று அமர்ந்த தூரிகையின் தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டு தன் தோளில் சாய்ந்து கொள்ளச் செய்தான். உள்ளறையிலிருந்து வெளியே வந்த மேகா, அவர்களை நோக்கி ஓடிச் சென்று,
"என்னையும் கட்டிப்பிடிச்சுக்கோங்க" என்றாள்.
சோபாவில் தாவி ஏறிய அவளை தங்களுடன் அணைத்துக் கொண்டான் ஓவியன்.
"இந்த கேஸ் என் வாழ்க்கையில மறக்க முடியாத ஒன்னு. நம்மை எல்லாரையும் இந்த கேஸ் தான் ஒன்னு சேத்திருக்கு. எனக்கு ஒரு அழகான குடும்பத்தை கொடுத்திருக்கு" என்றான்.
அவன் கூறியதை ஆமோதித்தாள் தூரிகை.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு
எட்டு மாத குழந்தையை தன் வயிற்றில் தாங்கிக் கொண்டிருந்த தூரிகை, தன் கால் நகத்தை வெட்ட முயன்று கொண்டிருந்தாள். ஆனால் அது அவ்வளவு சுலபமாய் முடியவில்லை. அவள் கையில் இருந்து நகை வெட்டியை பிடுங்கிய ஓவியன் அவள் எதிரில் அமர்ந்து, அவள் காலை எடுத்து தன் தொடையின் மீது வைத்து, அவள் கால் நகங்களை வெட்டத் துவங்கினான்.
"ஏசிபி சார், நான் செஞ்சிகிறேன் விடுங்க"
"நீ எவ்வளவு அழகா செஞ்சேன்னு தான் நான் பார்த்தேனே..."
அவள் கால் நகங்களை அவன் வெட்டி முடிக்கும் வரை காத்திருந்த முகில், அவனை நோக்கி ஓடிச் சென்று, அவன் எதிரில் அமர்ந்து தன் கால்களை அவன் தொடையில் வைத்தான்.
"ஏசிபி சார், என் கால் நகத்தையும் வெட்டி விடுங்க" என்றான்.
"முகில், உனக்கு நான் வெட்டி விடுறேன்" என்றாள் மேகா.
"வேண்டாம் கா, ஏசிபி சார் செய்வாரு. ஆமாம் தானே பா?"
"உன்னால இந்த பொடியன்னும் என்னை ஏசிபின்னு கூப்பிடுறான். நான் டெபுடி கமிஷனரா ப்ரமோஷன் வாங்கி ஒன்றரை வருஷம் ஆகுது. ஆனா இந்த வீட்ல மட்டும் எனக்கு இன்னும் ப்ரோமோஷனே கிடைக்கல. இன்னும் ஏசிபியாவே இருக்கேன்" என்று சிரித்த ஓவியன்,
"ஏசிபியோட உண்மையான அர்த்தம் அவங்களுக்கு தெரியாத வரைக்கும் ஓகே தான்" என்றான்.
அப்பொழுது ஓவியனிடம் ஓடிவந்த மேகா அவனிடம் ஒரு நோட் பேடை நீட்டினாள். அதை வாங்கி பார்த்த ஓவியன்,
"போச்சி எல்லாம் போச்சி" என்றான்.
"ஏன்? என்ன ஆச்சு?" என்றாள் தூரிகை.
"அவளுக்கு உண்மையான அர்த்தம் தெரிஞ்சு போச்சு" என்றான்.
தன் கையில் இருந்த நோட் பேடை அவளை நோக்கி திருப்பிய ஓவியன், கிண்டலாய் சிரிக்க, உதடு கடித்த கண்களை மூடிக்கொண்டாள் தூரிகை. அந்த நோட்பேட் அவளுடையது, முதல் நாள் இரவு ஓவியனுக்காக காத்திருந்த போது அதில் அவள் எழுதி வைத்திருந்தாள்,* ACP- அழகான க்யூட் போலீஸ்* என்று.
"மேகு, நீ அத பார்த்து இருக்க கூடாது"
"ஆனா, நான் பாத்துட்டேனே... " என்று அவள் கைதட்டி சிரிக்க, முகிலும் அவளுடன் இணைந்து கொண்டான், அவனுக்கு அதற்கு அர்த்தம் தெரியாத போதும்...
அவள் உதடு சுழித்து ஓவியனை பார்க்க,
"உண்மையை ரொம்ப நாளைக்கு மறைக்க முடியாது" என்று சிரித்த அவன்,
"நீ ஒருத்தி தான் என்னோட க்யூட்நெஸ்ஸை பார்க்கிறவ... என் பெயரை கேட்டாலே கிரிமினல்ஸ் எல்லாம் நடுங்குரானுங்க" என்றான்.
"நான் ஒன்னும் கிரிமினல் இல்லையே" கிண்டலாக சிரித்த தூரிகை,
"அது சரி, என்னோட டெலிவரி டைம்ல எப்படி இவங்களை நீங்க சமாளிக்க போறிங்க?" என்றாள்.
"உனக்கு பாக்கத்து பெட்டை புக் பண்ணி, நாங்க அங்கேயே வந்து செட்டில் ஆயிட போறோம்"
"அடப்பாவிங்களா, ஹாஸ்பிடல்ல கூட என்னை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா?" என்று அவள் சிரிக்க,
"வாய்ப்பில்ல ராஜா..." என்று ஓவியனும் சிரித்தான்.
அப்பொழுது, ஓவியனுக்கு ஒரு அழைப்பு வர, அந்த அழைப்பை ஏற்றான். அந்த அழைப்பு முருகனிடம் இருந்து வந்தது.
"கங்கிராஜுலேஷன்ஸ் முருகன். ப்ரோமோஷன் ஆயிட்டீங்க போல இருக்கு..."
"ஆமாம் சார். உங்க ஆஃபீஸ்ல தான் இன்னைக்கு ஜாயின் பண்ணி இருக்கேன்"
"எனக்கு தெரியும்..."
"சார், நீங்க உடனே கலெக்டர் ஆபீஸ்க்கு வரணும்"
"ஏன், என்ன ஆச்சு?" கேட்டபடி தன் சட்டையை எடுத்து மாட்ட துவங்கினான் ஓவியன்.
"ஒரு ஆளு தன் மேல மண்ணெண்ணையை ஊத்திக்கிட்டு கலெக்டரை மிரட்டுகிறான் சார்"
"என்ன டிமாண்ட்?"
"அவங்க அம்மா ஒரு கேன்சர் பேஷண்ட்டாம் சார். அவனோட வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற செல்ஃபோன் டவர், அவங்க அம்மாவுக்கு அதிகமான பாதிப்பை உண்டு பண்ணும்னு அதை அங்கிருந்து எடுக்க சொல்லி போராடிகிட்டு இருக்கான் சார்"
சலிப்புடன் பெருமூச்சு விட்டான் ஓவியன். மீண்டும், மனதிற்கும், புத்திக்குமான ஒரு போராட்டம்....! ஆட்சியர் அலுவலகம் நோக்கி தன் பயணத்தை துவங்கினான் ஓவியன். அவனுடைய போராட்டதிற்கு முடிவே இல்லை என்று எண்ணிக்கொண்டு.
முடிந்தது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top