22 தடயம்

22 தடயம்

இரவு உணவை முடித்து கொண்டு, டிவியை ஆன் செய்து கொண்டு அமர்ந்தாள் தூரிகை. இயல்பாய் அவள் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான் ஓவியன். திடுக்கிட்டு அவனை நோக்கி திரும்பினாள் தூரிகை. அவளது பார்வையை கண்டுகொள்ளாமல், தொலைக்காட்சி பெட்டியில் கண்களை பதித்துக் கொண்டு, தன் கரத்தால் அவளது தோள்களை சுற்றி வளைத்துக் கொண்டான் ஓவியன். அவன் கரங்களுக்குள் சங்கடத்துடன் நெளிந்தாள் தூரிகை. அவள் தோளை அழுத்தமாய் பற்றி கொண்டு, ஆழமாய் அவளை நோக்கினான் ஓவியன்.

"ரிலாக்ஸ்... எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற?" என்றான்.

"எந்த அளவுல இருக்கு?" என்றாள் தூரிகை.

"நீ எதை கேக்குற?"

"நீங்க, உங்க கேசை சுத்தமா மறந்துட்டீங்க போல தெரியுது...?"

"நிச்சயமா இல்ல" என்று சிரித்தான் ஓவியன்.

"ரொம்ப சாவகாசமா வீட்ல உட்கார்ந்து இருக்கீங்க...? உங்களுக்கு கொலைகாரனை பிடிக்கிற எண்ணம் இல்லையா?"

"பிடிக்கணும்... சந்தேகம் இல்லாம பிடிச்சே தீரனும்"

"நீங்க ஒரு விஷயத்தைப் பத்தி யோசிச்சி பார்த்தீங்களா?"

"எதைப் பத்தி?"

"நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி, என்னை அடிக்கடி அவன் மிரட்டிகிட்டே இருந்தான். ஆனா, கல்யாணத்துக்கு பிறகு, ஒரு தடவை கூட அவன் எனக்கு ஃபோன் செய்யவே இல்ல"

"ஆமாம், நானும் அதைப் பத்தி யோசிச்சேன்"

"ஒரு போலீஸ் ஆஃபீஸரோட ஒய்ஃப் கிட்ட அவனோட மிரட்டல் செல்லுபடி ஆகாதுன்னு அவனுக்கு புரிஞ்சுடுச்சு போல இருக்கு"

"இருக்கலாம்... ஆனா அதுக்காக, நம்ம ரொம்ப கேர்லெஸ்ஸா இருக்கக் கூடாது"

"உங்களுக்கு எந்த க்ளூவும் கிடைக்கவே இல்லையா?"

"உண்மையை சொல்லட்டுமா? இப்பல்லாம் என்னுடைய மூளை வேலை செய்யவே மாட்டேங்குது. முக்கியமா நம்ம கல்யாணத்துக்கு பிறகு..."

"வீட்ல இருக்கிறதை குறைச்சுக்கிட்டு, ஒழுங்கா ஸ்டேஷனுக்கு போங்க. உங்க மூளை சரியா வேலை செய்ய ஆரம்பிக்கும்"

"அதை நான் நாளையில் இருந்து செய்றேன்" என்றான் கள்ள சிரிப்புடன்.

"எனக்கு தூக்கம் வருது"

"இவ்வளவு சீக்கிரமாவா?"

"ஆமாம்"

"பொய்... என்கிட்ட இருந்து தப்பிக்க பார்க்காதே"

"நான் ஏன் தப்பிக்க பார்க்கணும்? நான் என்ன திருடியா?"

"ஆமாம்... என் இதயத்தை திருடின திருடி"

சோபாவை விட்டு எழுந்தாள் தூரிகை. அவள் அணிந்திருந்த இரவு உடையை இழுப்பது போல் உணர திரும்பி பார்த்தாள். அவளது இரவு உடையின் இடுப்பில் கட்டப்படும் கயிறு, ஓவியனின் கையில் இருந்தது.

"ஏசி சார்..."

அந்த கயிறை பிடித்து அவன் இழுக்க, அவள் அவன் மீது விழுந்தாள். அவளைஅணைத்துக் கொண்டு,

"ஏசி சார்னு கூப்பிடுறதை நிறுத்துன்னு சொன்னேன். இல்லனா அதுக்கான தண்டனை கிடைக்கும்" என்றான் அவள் இதழ்களில் தன் கண்களை ஓடவிட்டு.

"என்...னை... விடுங்க..."

"தூக்கம் வருதா?" என்றான்.

ஏராளமான எதிர்பார்ப்புகளை தேக்கி இருந்த அவன் கண்களை நோக்கினாள், மென்று விழுங்கியபடி.

"எனக்கு ஒன்னும் அப்படி தெரியலையே" என்றான்.

அவளை பிடித்திருந்த பிடியை அவன் தளர்த்த, அவனை விட்டு விலகி, மேகாவின் அறையை நோக்கிச் சென்றாள் தூரிகை. அவள் கதவை சாத்தி தாளிடும் முன், அந்த அறைக்குள் நுழைந்த ஓவியன், அவளைத் தன் கைகளுக்கும் சுவற்றிற்கும் இடையில் சிறை பிடித்தான்.

"என் கேள்விக்கு நீ பதில் சொல்லவே இல்லையே" என்றான் அவளது கூந்தலை ஒதுக்கி விட்டபடி.

"உங்க மூளை சரியா வேலை செய்யலைன்னு சொன்னீங்க... உங்க மனசுல நிறைய துஷ்ட எண்ணம் இருக்கு. அதனால தான் உங்க மூளை வேலை செய்யல" என்றாள் தலை குனிந்த படி.

"துஷ்ட எண்ணமா? என்ன அது?"

பதில் கூறாமல் கண்களை மூடி உதடு கடித்தாள்.

"உன் உதட்டை கடிச்சு, என்னோட துஷ்ட எண்ணத்தில் எண்ணையை ஊத்தாதே" என்றான்.

"உங்க மனசுல இருக்குற துஷ்ட எண்ணத்தை அடிச்சு துரத்துங்க எல்லாம் சரியாயிடும்"

"அது என்னால முடியாது. உன்னால தான் முடியும். நீ எனக்கு ஹெல்ப் பண்ணா அது ஓடிப் போயிடும்" என்றான் மேலும் அவளிடம் நெருங்கி வந்து.

சங்கடத்தில் தவித்தாள் தூரிகை.

"எனக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்லு"

கண்களை திறக்காமல் நின்றாள் துரிகை.

"என்னை உனக்கு பிடிச்சிருக்கா, இல்லையா?"

கண்களைத் திறந்து அவனை நோக்கினாள்.

"ஆமாம், இல்லை, ஏதாவது ஒன்னு சொல்லு... இல்லைன்னு சொன்னா நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்"

இல்லை என்று கூற முடியுமா? அவள் எப்படி இல்லை என்று கூற முடியும்? அவனை அவள் மணந்து கொண்டிருக்கிறாளே...

"இல்லையா?"

"இல்ல, நான் வந்து..."

"ஆமாவா?"

"ஆக்சுவலி..."

"சரி, நான் இல்லைனே எடுத்துக்கிறேன்"

"இல்ல, இல்ல..."

"ஆமாம்னு எடுத்துக்கட்டுமா?" என்றான் புன்னகையுடன்.

பெருமூச்சு விட்ட தூரிகை,

"ஆமாம்" என்றாள்.

"ஆமாம்னு சொன்னா, நான் உன்னை டிஸ்டர்ப் பண்றதை உன்னால தடுக்க முடியாது"

"என்ன செய்யப் போறீங்க?" என்றாள் தடுமாற்றத்துடன்.

"சொல்றதை விட, செஞ்சே காட்டிடுறேனே..."

அவள் எதிர்பாராத வண்ணம் அவளை தன் கையில் தூக்கிக் கொண்டான்.

"என்ன சொல்ற?"

"செஞ்சு... காட்ட... போறீங்களா...?" திணறினாள்.

"நம்ம வழக்கத்தை மாத்த வேண்டிய அவசியம் இல்ல" என்றான்.

"எந்த வழக்கம்?"

"முதல் இரவுக்கு பதில், முதல் பகல் வச்சுக்கலாம்னு முடிவு செஞ்சிருந்தோம் இல்ல? இப்போ அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்ல"

அவளை கட்டில் கிடத்திய ஓவியன்,

"என் மூளையை வேலை செய்ய விடாம அடைச்சுக்கிட்டு இருக்கிற பிளாக்ஸை ரிமுவ் பண்ண எனக்கு ஹெல்ப் பண்ணு. என் மைண்டை ரெஃப்ரெஷ் பண்ணு"

"நானா...?"

"உன்னை நான் தொடாம இருக்கிற வரைக்கும், அது ரெப்ஃரெஷ் ஆகாது" அவள் காதில் தன் உதடு படும்படி ரகசியம் கூறினான்.

அந்த சிறு ஸ்பரிசத்திலேயே அவள் உடல் சூடேறி போனது.

"ஏதாவது நடக்குதா?" என்றான் ரகசியமாய்.

"என்ன?"

"எனக்குள்ள என்னவெல்லாமோ நடக்குது... "

"இப்போ நான் என்ன செய்யணும்?"

"ஒன்னும் செய்ய வேண்டாம். என்னை தடுக்காம இருந்தா போதும்"

அவளது அதரங்களை பருகி, தங்கள் திருமண வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முதல் கட்டத்தில் நுழைந்தான் ஓவியன். ஓவியனுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள், தூரிகைகுள்ளும் நிகழ்த்துவங்கின. அந்த மாற்றம் தந்த சூட்டில், உள்ளும் புறமும் உருகத் துவங்கினாள் தூரிகை. ஏற்கனவே உருகி விட்டிருந்த மனிதனின் தோள்களை பற்றினாள். இருவரும் ஒரே நேரம் உருகினால் என்ன ஆவது? ஒன்று கலக்க வேண்டியது தானே...! அப்படித்தான் இருவரும் ஒருவருக்குள் ஒருவர் கலந்து போனார்கள்.

சில நொடிகளிலேயே தன்னை முழுமையாய் இழந்தாள் தூரிகை. தனது மென்மையான தொடுதல்களால் அவளை முழுமையாய் ஆண்டான் ஓவியன்.

முதல் முறையாய் அவனை *ஓவி* என்று அழைத்தாள் துரிகை, ஏற்கனவே உருகி ஓடிக் கொண்டிருந்தவனை காட்டாqற்று வெள்ளம் என மாற்றி.

தங்களுக்கிடையில் இருந்த அத்தனை தயக்கங்களையும் தடைகளையும் தகர்த்தெறிந்து, கணவன் மனைவி என்ற முழுமையான அந்தஸ்தை பெற்றார்கள் அவர்கள்.

அவள் கன்னத்தில் முத்தமிட்டு புன்னகைத்தான் ஓவியன்.

"என்னால நம்பவே முடியல... என் வாழ்க்கையில வந்து கொஞ்ச நாளே ஆன ஒருத்தர் கிட்ட நான் எப்படி என்னையே கொடுத்தேன்?" என்றாள் தூரிகை.

அதைக் கேட்டு சிரித்த ஓவியன்,

"என்னாலயும் நம்ப முடியல, நான் எப்படி ஒரு பொண்ணு கிட்ட இப்படி விழுந்துட்டேன்னு..."

"விழுந்துட்டீங்களா?"

"ரொம்ப மோசமா..."

"உங்க மூளையை அடைச்சிக்கிட்டு இருந்த அடைப்பு எல்லாம் விலகிடுச்சா?"

"அப்படித்தான் நினைக்கிறேன்... எப்படியோ ஒரு வழியா உன்னை நான் ஏமாத்திட்டேன்" என்றான் கிண்டலாய்.

அவனை ஓங்கி ஒரு குத்து குத்தினாள் தூரிகை.

"என்னை குத்தாதே... போலீஸ்காரனை அடிச்சா உள்ள தூக்கி போட்டுடுவாங்க... தெரியும் இல்ல?" என்றான் கிண்டலாய்.

"அப்படின்னா, என்னை ரேப் பண்ணதுக்காக உங்களையும் தான் அரெஸ்ட் பண்ணுவாங்க"

"ரேப்பா? நீ என்னோட வைஃப், டேமிட்..."

"அதே மாதிரி தான் இதுவும். நீங்க என்னோட ஹஸ்பண்ட். உங்களை அடிக்க எனக்கு ரைட்ஸ் இருக்கு"

"ஓ... பாவம் நானு... உன்னை ஒரு அப்பாவி குழந்தைன்னு நினைச்சேன்" என்றான் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு.

"உங்களை யார் அப்படி நினைக்கச் சொன்னா?"

"நான் தான் சொன்னேன் என் மூளையே வேலை செய்யலன்னு..."

"இப்போ கூடவா?"

"செம்ம ரெஃப்ரெஷிங்கா இருக்கு"

அவளை இழுத்து அணைத்துக் கொண்டு, போர்வையால் தங்களை போர்த்திக் கொண்டான் ஓவியன்.

மறுநாள் காலை

விடாமல் கண்ணீர் சிந்தி கொண்டிருந்தாள் தூரிகை. எவ்வளவு முயன்ற பொழுதும் அவளால் தன் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. வெங்காயத்தை வெட்டும் போதெல்லாம் அவள் இப்படித்தான் அழுகிறாள். ஓவியன் அவளை பின்னால் இருந்து அணைக்க, திடுக்கிட்டு, தன் கையில் இருந்த கத்தியை நழுவி விட்டாள்.

"ஹேய் ரிலாக்ஸ்..."

கீழே குனிந்து கத்தியை எடுத்தான் ஓவியன்.

"எப்ப பாத்தாலும் கத்தியை கீழே போடுறது உனக்கு ஹாபியா?" என்றான்.

அவன் கையில் இருந்த கத்தியை பிடுங்கி, மீண்டும் வெங்காயத்தை வெட்டத் துவங்கினாள் தூரிகை. ஆனால், தான் உதிர்த்த வார்த்தைகளால் துணுக்குற்றான் ஓவியன்.
*கத்தியை கீழ போடுறது* அவன் புத்தியில் ஏதோ உரைத்தது. அவன் கண்கள் விரிவடைந்தன.

"தூரி..." என்று அவன் கூச்சலிட, மீண்டும் கத்தியை தவறவிட்டாள் தூரிகை.

"என்ன?"

"பிடிச்சிட்டேன்..."

"என்ன பிடிச்சீங்க?"

"க்ளூ..."

"அப்படின்னா,  நிஜமாவே உங்க மூளையில் இருந்த அடைப்பு எல்லாம் நீங்கிடுச்சா?" என்றாள் நம்ப முடியாமல்.

அவளை தன்னை நோக்கி இழுத்து, இறுக்கமாய் அணைத்துக் கொண்டு,

"எஸ்..." என்றபடி அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

"நான் உடனே போகணும்"

"சாப்பிட்டு போங்க"

"சரி, நீ அப்படியே ஊட்டி விடு. கிளம்பி கிட்டே சாப்பிடுறேன்"

தன் அறைக்கு சென்றான் ஓவியன். தான் சமைத்து வைத்திருந்த இட்லியையும் சட்டினியையும் எடுத்துக்கொண்டு அவன் பின்னால் ஓடினாள் தூரிகை. அவன் உடைமாற்றி கிளம்ப, அவனுக்கு ஊட்டி விட்டபடி இருந்தாள்.

உடை மாற்றிய படியே கமிஷனருக்கு ஃபோன் செய்தான்.

"சொல்லுங்க ஓவியன்"

"சார் நீங்க ஒரு ஸர்ச் வாரண்ட் இஷ்ஷூ பண்ணனும்"

"ஸர்ச் வாரண்ட்டா?"

"ஆமாம் சார், எனக்கு ஒருத்தர் மேல ஸ்ட்ராங்கான டவுட் இருக்கு"

"ஓகே... நீங்க செய்யுங்க. ஆனா, நீங்க சந்தேகப்படுறது யாரை?"

"அகிலன்..."

"...."

"ஆமாம் சார்..."

"....."

"ஓகே சார்..."

"....."

"நான் இப்போவே வரேன் சார்"

அழைப்பை துண்டித்தான் ஓவியன்.

"அகிலன் யாரு?" என்றாள் தூரிகை.

"முதல்ல கொலையான சுபாஷினியோட ஹஸ்பெண்ட்"

"ஏன் நீங்க அவரை சந்தேகப்படுறீங்க?"

ஒரு நொடி திகைத்து நின்றான் ஓவியன். கொலையாளி அகிலன் தான் என்பது நிச்சயமாகும் வரை,  அவளிடம் அவன் காரணத்தை சொல்ல முடியாதே...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top