19 நந்தகுமாரின் கோபம்
19 நந்தகுமாரின் கோபம்
தூரிகையை எப்படி காப்பது என்று எண்ணியபடி இருந்தான் ஓவியன். அவளுக்கு தெரியாமல் இதை அவன் செய்தாக வேண்டும். அவளுக்கு தெரிந்தால், நிச்சயம் பதட்டமடைவாள். பிரின்ஸ்க்கு ஃபோன் செய்தான் ஓவியன். ஆனால், அவனது அழைப்பை ஏற்கவில்லை பிரின்ஸ். அவன் ஏதாவது முக்கியமான வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று எண்ணினான் ஓவியன். இதைப் பற்றி எண்ணியபடியே அலுவலகம் வந்து சேர்ந்தான் ஓவியன். அதே நேரம், அவனுக்கு பிரின்ஸிடம் இருந்து அழைப்பு வந்தது.
"சொல்லு மச்சான்" என்றான் பிரின்ஸ்.
"நான் கொடுத்த நம்பர்ல இருந்து, ஏதாவது கால்ஸ் இல்லனா மெசேஜஸ் வந்துதா?"
"என்ன மச்சான் ஆச்சரியம்... யாரும் யாருக்கும் கால் பண்ணவே இல்ல. என்ன ஆச்சி இவங்களுக்கு எல்லாம்?"
"பயம் தான் காரணம்"
"ஓ..."
"அந்தக் கில்லர், எல்லாரும் அவனோட லிஸ்டில் இருக்கிறதா, அவங்களுக்கு மெசேஜ் அனுப்பி இருக்கணும்..."
"இன்ட்ரஸ்டிங்..."
"அப்படி சொல்லிட முடியாது. நம்ம எப்படியும் அவனை பிடிச்சாகணும். அதுக்கு என்ன செய்யணும்னு சொல்லு"
"உன்னோட ஹை அஃபிசியல்ஸ் கிட்ட பேசி, இஸ்ரோ (ISRO) கிட்ட ஹெல்ப் கேட்க சொல்லு. அந்த கொலைகாரன் சாட்டிலைட் ஃபோனை யூஸ் பண்றதா இருந்தா, அவங்களால ஈஸியா கண்டுபிடிச்சிட முடியும்"
"சரி"
"நானும், நீ எனக்கு அனுப்புன எல்லா நம்பரையும் ட்ராக் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன். நானும் அவனை லொகேட் பண்ண ட்ரை பண்றேன்"
"தேங்க்யூ பிரின்ஸ்"
அழைப்பை துண்டித்து விட்டு அலுவலகத்திற்குள் நுழைந்த போது, அவனுக்கு தூரிகையிடம் இருந்து அழைப்பு வந்தது"
"ஏசி சார், மேகாவோட ஹெல்த் ட்ரிங்க் காலியாயிடுச்சு. சாயங்காலம் நான் அவளை அழைச்சுக்கிட்டு கடைக்கு போயிட்டு வரட்டுமா?"
"நான் வீட்டுக்கு வந்தப்போ ஏன் நீங்க அதை என்கிட்ட சொல்லல?"
*நான் தான் எதையும் நினைக்கிற நிலையிலேயே இல்லையே* என்று மனதிற்குள் எண்ணினாள் தூரிகை.
"ஹலோ தூரிகை லைன்ல இருக்கீங்களா?"
"நீங்க கேசை பத்தி கேட்டதால, நான் அதைப் பத்தி சொல்ல மறந்துட்டேன்"
"நான் வீட்டுக்கு வந்து உங்களை கடைக்கு கூட்டிட்டு போறேன்"
"இன்னைக்கு லேட்டா வருவேன்னு சொன்னீங்களே..."
"ஆமாம் சொன்னேன். ஆனா, இதுவும் தானே முக்கியம்?"
"சரிங்க சார் , நான் வெயிட் பண்றேன்"
அவள் அழைப்பை துண்டித்தாள். முகத்தை சுருக்கியபடி தனது கைபேசியியை பார்த்தான் ஓவியன். இன்னும் ஏன் அவள் அவனை *சார்* என்று அழைத்துக் கொண்டிருக்கிறாள்?
மாலை
தான் கூறியபடியே, அன்று மாலை, தூரிகையையும், மேகாவையும் கடைக்கு அழைத்துச் சென்றான் ஓவியன். வாங்கிய பொருளுக்கு பணம் செலுத்த சென்றான் ஓவியன். அப்பொழுது தனக்கு ஏற்கனவே பரிச்சயமான ஒரு நபரை பார்த்து புன்னகைத்தாள் தூரிகை. அந்த நபர் நந்தகுமார்.
"வணக்கம் மேடம் எப்படி இருக்கீங்க?"
"நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?"
"நானும் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எதுவும் வாங்கலையா?" என்றான் அவள் வெறும் கையுடன் நின்றிருந்ததை பார்த்து.
"அவர் பே பண்ண போயிருக்காரு" என்றாள் ஓவியன் நின்றிருந்த திசையை காட்டி.
"ஓஹோ, நீங்க ஏசி சார் கூட வந்திருக்கீங்களா?"
"ஆமாம்"
"ஆங்... அவர் தான் ஏற்கனவே உங்களுக்கு சர்டிபிகேட் கிடைக்கக்கூட ஹெல்ப் பண்ணாரே..."
"நீங்க என்ன சொல்றீங்க?"
"நீங்க அன்னைக்கு தாலுக்கா ஆபீசுக்கு வந்த போது, சர்டிபிகேட் வாங்க உங்களுக்கு தேவையான ஹெல்பை செய்யச் சொல்லி என்கிட்ட அவர் தான் சொன்னாரு"
"அவரா சொன்னாரு?"
"ஆமாம் மேடம். சார் தான் சொன்னாரு"
மேகாவுக்கு சாக்லேட் வாங்கி கொடுத்துவிட்டு, அவர்கள் பக்கம் திரும்பிய ஓவியன், நந்தகுமார் தூரிகையுடன் நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவர்களை நோக்கி வந்தான்.
"அவங்களுக்கு நீங்க தான் சர்டிபிகேட் வாங்க ஹெல்ப் பண்ணிங்க என்கிற விஷயம் மேடம்க்கு தெரியாதா சார்?" என்றான் நந்தகுமார்.
தெரியாது என்று தலையசைத்தான் ஓவியன்.
"நீங்க தப்பா நினைச்சுக்கலைன்னா, நான் உங்களை ஒன்று கேட்கலாமா சார்?" என்றான் நந்தகுமார்.
நந்தகுமார் ஏதோ ஒரு *குட்டை* உடைக்க போகிறான் என்று புரிந்து போனது ஓவியனுக்கு.
"அன்னைக்கு நான் உங்களை கேட்டப்போ, அவங்க உங்க கேர்ள் ஃபிரண்ட் இல்லன்னு சொன்னீங்க. ஆனா இப்போ, நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வந்திருக்கீங்களே சார்..."
*இது எப்போது நடந்தது?* என்பது போல் ஓவியனை பார்த்தாள் தூரிகை.
"ஆமாம், அவங்க என்னோட கேர்ள் ஃப்ரெண்ட் இல்ல. என்னோட வைஃப்" என்றான் ஓவியன்.
"என்னது வைஃபா? நிஜமா தான் சொல்றீங்களா சார்?" என்றான் அதிர்ச்சியுடன்.
"இதுல அதிர்ச்சியாக என்ன இருக்கு?" என்றான் ஓவியன்.
"இல்ல... நீங்க பேச்சுலர்னு எல்லாருக்கும் தெரியும்... அதனால தான்..." என்று இழுத்தான் நந்தகுமார்.
"எங்களுக்கு நேத்து தான் கல்யாணம் ஆச்சு" என்றாள் துரிகை.
"நேத்து தானா? ஆனா உங்களுடைய கல்யாணத்தைப் பத்தி நீங்க யாருக்கும் எதுவுமே சொல்லல போல இருக்கே..."
"சொல்லுவோம்... ரொம்ப சீக்கிரமே..." என்றான் ஓவியன்.
"கங்கிராஜுலேஷன்ஸ் சார்..."
"தேங்க்யூ. நாங்க கிளம்பறோம்..."
"சரிங்க சார்"
ஓவியனும், தூரிகையும் மேகாவுடன் அங்கிருந்து கிளம்பினார்கள். அவர்களை கண்ணிமைக்காமல் பார்த்தபடி நின்றிருந்தான் நந்தகுமார். அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? முதல் முறை அவன் தூரிகையை சந்தித்த போது, அவளுக்கு தான் உதவும் விஷயம் கூட தெரிய வேண்டாம் என்று எண்ணினான் ஓவியன். ஆனால், இன்று அவர்கள் தம்பதிகளாகி விட்டார்கள். இது எப்படி நிகழ்ந்தது? எப்படி ஓவியன் தூரிகையை சம்மதிக்க செய்தான்? என்று யோசித்தபடி அவன் நின்றிருந்த போது, அவன் தோளை யாரோ தொடும் உணர்வுடன் பின்னால் திரும்பினான். கலர் காகிதத்தில் மடிக்கப்பட்ட பரிசு பொருளுடன் நின்றிருந்தான் அகிலன்.
"நீ இங்க என்ன பண்ற அகிலா?" என்றான் நந்தகுமார்.
"என் ஃபிரண்டோட கல்யாணத்துக்கு கிஃப்ட் வாங்க வந்தேன்"
"நீ இப்போ பரவாயில்லையா?"
"ம்ம்ம்"
"சாரி பா..."
"பரவாயில்லை விடு"
"என்ன இருந்தாலும், உன் பொண்டாட்டி அப்படி பண்ணியிருக்க கூடாது"
"அவளை மட்டும் குற்றம் சொல்ல கூடாது"
"என்ன சொல்ற நீ?"
"என் மேலயும் தப்பிருக்கு. நான் அவளுக்கு நேரம் ஒதுக்கி இருக்கணும். வேலை தான் முக்கியம்னு நான் அவளை பத்தி யோசிக்காம இருந்துட்டேன். நான் வேலை வேலைன்னு அலைஞ்சுகிட்டு இருந்த நேரத்துல அவ வழிக்கி விழுந்துட்டா"
"தப்பு செஞ்சது அவ. ஆனா நீ எப்படி உன் மேலயே பழி சுமத்திக்கிறேன்னு எனக்கு புரியல" என்றான் நந்தகுமார்.
"என்னை வேற என்ன செய்ய சொல்ற? எல்லாம் முடிஞ்சு போச்சு. நானே என் பொண்டாட்டி தப்பு செய்ய காரணமா இருந்துட்டேன். என்னோட நேரத்தை கொடுத்து, அவ எனக்கு எவ்வளவு முக்கியம்னு உணர வைக்க நான் தவறிட்டேன்"
"நீ சொல்றத என்னால ஏத்துக்க முடியாது. கல்யாணம்ங்கறது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு வாழ்கிற ஒரு உன்னதமான உறவுமுறை. புருஷனும் பொண்டாட்டியும் அடுத்தவருடைய சிரமங்களை புரிஞ்சி அனுசரிச்சி வாழனும். அதை விட்டுட்டு தங்களுடைய கீழ்த்தரமான செய்கைக்கு காரணம் தேடிக்கிட்டு இருக்க கூடாது. எப்படி அவங்களால உன்னை அவ்வளவு சுலபமாக ஏமாத்த முடிஞ்சது? நீ எவ்வளவு ஆழமா அவங்க மேல அன்பு வச்சிருந்த?"
"அதனால தான் அவளை என்னால் வெறுக்க முடியல"
"உன் பொண்டாட்டி ஒரு முட்டாள்.கையில இருந்த வைரத்தை தூக்கி போட்டுட்டு, கூழாங்கல்லுக்கு பின்னாடி போனவ"
"புருஷனுங்க எல்லாரும் ஒரு விஷயத்தை மனசுல வச்சுக்கணும் நந்தகுமார். பொண்டாட்டி கூட இருக்க முடியலன்னு சாக்கு சொல்றதை நிறுத்தணும்"
அவனைப் பார்க்க பாவமாக இருந்தது நந்தகுமாருக்கு.
"நம்ம வேணா நம்ம செய்ற வேலையில பிஸியா இருக்கலாம்... ஆனா, ஊர்ல இருக்கிற எல்லா ஆம்பளைங்களும் பிஸியா இருக்கிறது இல்ல. சின்ன சின்ன காரணத்தை சொல்லி, அவங்களை நம்ம தட்டி கழிக்கிற அதே நேரம், அடுத்தவன் பொண்டாட்டியை வலை வீசி பிடிக்க, தன்னுடைய மொத்த நாளையும் செலவு பண்ண மத்தவங்க தயாராக இருக்காங்க அப்படிங்கறதை மறந்துடக்கூடாது" என்றான் அகிலன் வருத்தத்துடன்.
"இந்த கேஸ் எந்த அளவுல இருக்கு?" என்றான் நந்தகுமார்.
"அது ஆமை வேகத்தில் தான் நகருது. ஓவியன் சார் கைக்கு இந்த கேஸ் போனப்போ நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா, கொலைக்கான காரணத்தை வெளியில சொல்லி, அவரு கொலைகாரனை உஷார் பண்ணிட்டாரு"
"யாரு இந்த கொலை எல்லாம் செஞ்சி இருப்பான்னு உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?" என்றான் நந்தகுமார்.
"ஓவியன் சாரும் அதையே தான் கேட்டாரு. ஆனா எனக்கு தான் ஒன்னும் பிடிப்பட மாட்டேங்குது"
"ஒருவேளை, உன் பொண்டாட்டியோட வாழ்க்கையில மனோகர் இல்லாம, வேற யாரோ ஒருத்தர் கூட இருந்திருக்கலாம்னு எனக்கு தோணுது"
"நீ என்ன சொல்ற?"
"வேற ஒரு ஆள் கூட அவளுக்கு தொடர்பு இருந்திருக்கும்னு நினைக்கிறேன். கட்டின புருஷனையே ஏமாத்துறவ மத்தவனை மட்டும் ஏமாத்த மாட்டாளா?
இப்படிப்பட்ட பொம்பளைங்க எல்லாம் உயிரோடவே இருக்கக் கூடாது" என்றான் நந்தகுமார் காட்டமாக.
"நான் கிளம்புறேன்" தன் வேதனையை மறைத்தபடி அங்கிருந்து சென்றான் அகிலன்.
"இது சீட்டிங்... எல்லாருக்கும் ஒரே ரூல் தான் இருக்கணும். சரி தானே மேகா?"
"சரி தான்" என்றாள் மேகா விஷயம் புரியாமல்.
"ஷ்ஷ்ஷ்..." என்றாள் தூரிகை.
"எங்களை மாதிரி அப்பாவிங்களை எல்லாம் அடக்கி ஒடுக்காதே..." என்றான் ஓவியன்.
"யாரு நீங்களா அப்பாவி?" என்ற தூரிகை, தன் தலையை இடவலமாய் ஆட்டினாள்.
"உங்க அத்தை வேற என்னவெல்லாம் செய்வாங்க?" என்றான் ஓவியன்.
"தூங்கும் போது ரொம்ப எட்டி உதைப்பாங்க" என்று கலகலவென சிரித்தாள் மேகா.
"நிஜமாவா...? என்னை நிறைய ஏமாத்தி இருக்காங்க போலயிருக்கு... உங்க அத்தை என்ன கல்யாணம் பண்ணிக்க நிறைய உண்மையை மறைச்சுட்டா" என்றான் ஓவியன் கிண்டலாக.
அதை கேட்ட தூரிகை வாயைப் பிளந்தாள்.
"ஆனா, அதைப் பத்தி எல்லாம் நான் எனக்கு கவலை இல்ல"
ஏன் கவலை இல்லை என்று தெரிந்து கொள்ள நின்றாள் தூரிகை. ஆனால் அதை முடிக்காமல் அப்படியே விட்டான் ஓவியன்.
"உங்களுக்கு ஏன் அதைப் பத்தி கவலை இல்ல?"
அவளை நோக்கி குனிந்த அவன்,
"இறுக்கமா கட்டி பிடிச்சுக்கிட்டு தூங்கும் போது, நீ எப்படி என்னை உதைக்க முடியும்?" என்றான்.
அதைக் கேட்ட தூரிகை, காணாத அதிர்ச்சி அடைந்தாள். அவள் மூக்கை லேசாய் தட்டி சிரித்தான் ஓவியன்.
"மாமா" என்று கூப்பிட்டாள் மேகா.
"என்னடா கண்ணா?"
"உங்களுக்கும் அத்தைக்கும் கல்யாணம் ஆயிடுச்சு இல்ல?"
"ஆமாம்"
"அப்புறம் ஏன் நீங்க மட்டும் தனியா தூங்குறீங்க? எங்க அம்மாவும் அப்பாவும் எப்பவும் ஒன்னா தான் தூங்குவாங்க தெரியுமா..."
"அப்படியா டா?" என்றான் சிரித்தபடி.
"ஆமாம் தானே அத்தை?" என்றாள் மேகா.
"அப்படியா அத்தை?" என்றான் ஓவியன் கிண்டலாய்.
"உங்களுக்கு நான் ஏதாவது சாப்பிட கொண்டு வரேன்" என்று அங்கிருந்து நழுவி சென்றாள் தூரிகை, ஓவியனை புன்னகையுடன் விட்டு.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top