14 முடிவு
14 முடிவு
ஓவியனும் தூரிகையும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட முருகன், அதிசயித்துப் போனான். அவர்கள் இருவருமே இந்த வழக்கில் தொடர்புடையவர்கள். அதை ஓவியனே இந்தப் பெண்ணிடம் வெளிப்படையாய் ஒப்புக்கொண்டு விட்டான். யார் இந்த பெண்? எதற்காக தன் அக்காவின் கதையை இந்த பெண்ணிடம் ஒப்பித்துக் கொண்டிருக்கிறான்? அதை அவன் தன்னிடம் கூட கூறியதில்லையே...! மேலும் முருகனுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், அந்த பெண்ணை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அல்லவா கேட்டான் ஓவியன்...! தன் அக்காவின் குழந்தையை பார்த்துக் கொள்ள ஓவியனுக்கு ஒரு ஆள் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை தான். ஆனால், ஓவியன் நினைத்தால், அதை பல வழிகளில் செய்ய முடியும். அப்படி இருக்கும் போது, இதை காரணம் காட்டி, சமைக்க கூட தெரியாத ஒரு பெண்ணை அவன் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான்? உண்மையிலேயே அந்த பெண்ணை ஓவியன் காதலிக்கிறானா? அல்லது இந்த வழக்குக்காக தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறானா?
"நான் வீட்டுக்கு போகணும். மேகா வந்துடுவா" என்றாள் தூரிகை.
"சரி, நான் உங்களை ட்ராப் பண்றேன்" என்றான் ஓவியன்.
"பரவாயில்ல, சார், இருக்கட்டும். நான் ஆட்டோவில் போறேன்"
"நெஜமாத் தான் சொல்றீங்களா?"
"ஆமாம்"
"சரி, எனக்கும் கமிஷனர் ஆஃபீஸ் போக வேண்டிய வேலை இருக்கு" என்றான் ஓவியன்.
அங்கிருந்து கிளம்பினாள் தூரிகை. ஓவியனும் ஆணையர் அலுவலகம் நோக்கி கிளம்பினான். அவனைப் பார்த்தவுடன் நிமிர்ந்து அமர்ந்தார் ஆணையர். அவருக்கு திருத்தமான ஒரு சல்யூட் வைத்தான் ஓவியன்.
"எனி ப்ராக்ரஸ்?" என்றார் ஆணையர்.
"எஸ் சார்... இந்த கொலைகளுக்கு எல்லாம் என்ன காரணம்னு கண்டுபிடிச்சிட்டேன் சார்"
"அப்படியா? என்ன காரணம்?"
"எக்ஸ்ட்ரா மேரிட்டல் அஃபையர் சார்... கொலையான எல்லா பொம்பளைங்களுக்கும் வேற ஒருத்தர் கூட கள்ளத்தொடர்பு இருந்திருக்கு"
"அதை நிரூபிக்க ப்ரூஃப் இருக்கா?"
"இருக்கு சார்... அவங்களோட சாட்டிங் ஹிஸ்டரி தான் ப்ரூஃப்"
"சரி, அடுத்தது என்ன செய்யப் போறீங்க?"
"இந்த கேஸை பத்தி நீங்க மீடியாவுக்கு தெரியப்படுத்தணும் சார்"
"மீடியாவுக்கா? ஏன்?"
"அப்போ தான் சார் இந்த கேஸ் அடுத்த கட்டத்துக்கு நகரும். அதுக்கு மேல, என்னால இப்போதைக்கு வேற எதுவும் சொல்ல முடியாது சார்"
"சரி... அதை நான் அஃபீசியல்லா டிக்ளேர் பண்றேன்..."
"தேங்க்யூ சார்"
திருப்திகரமான புன்னகையுடன் அங்கிருந்து நடந்தான் ஓவியன்.
........
ஓவியனுக்கு, பிரின்ஸ் இடமிருந்து ஒரு பார்சல் கூரியரில் வந்தது. அதைப் பிரித்துப் பார்த்தான் ஓவியன். அதில் ஒரு எலக்ட்ரானிக் சாதனம் இருந்தது. அதன் கூடவே ஒரு கடிதமும் இருந்தது.
*மச்சான், இது *கவுன்ட்டர் இஎம்பி டிவைஸ்.*
ஓவியனுக்கு ஆச்சரியமாய் போனது. அது ஒரு *எலெக்ட்ரோ மேக்னெடிக் பல்ஸ்* என்பது அவனுக்கு புரிந்தது.
*இது சாதாரண இஎம்பி டிவைஸ் மாதிரி இல்ல. இது *கவுன்ட்டர்* இஎம்பி டிவைஸ். இந்த கேசை பொறுத்தவரைக்கும், எப்பவெல்லாம் கொலை நடந்திருக்கோ, அப்போவெல்லாம், கொலைகாரன் இஎம்பி டிவைஸை யூஸ் பண்ணி, சுத்து வட்டாரத்துல இருக்கிற எல்லா எலக்ட்ரானிக் டிவைஸையும் வேலை செய்யாமல் தடுத்திருக்கான். ஒருவேளை, அவன் உன்னை உன் வீட்ல அட்டாக் பண்ண நினைச்சா, அதையே தான் செய்வான். அப்போ, உன் வீட்டில் இருக்கிற சிசிடிவி கேமரா, ஃபோன் எதுவும் வேலை செய்யாது. நான் இப்ப உனக்கு அனுப்பி இருக்கிற இந்த டிவைஸை நீ உன் வீட்டு கதவுல ஃபிக்ஸ் பண்ணிட்டா, அவனால அதை செய்ய முடியாது. உன் வீட்டில் இருக்கிற எல்லா டிவைசும் வழக்கம் போல வேலை செய்யும். அதை வச்சு நீ அவனை பிடிச்சிடலாம். அவன் வருவானா இல்லையான்னு எனக்கு தெரியல. நீ சேஃபா இருக்கணும். அவ்வளவு தான் எனக்கு வேணும். நம்ம ஏன் ரிஸ்க் எடுக்கணும்? என்கிட்ட ஃபோன்ல எதுவும் பேசாத. நம்மளை அவன் டிராக் பண்ணிக்கிட்டு இருக்கான். இந்த டிவைஸ் உன் வீட்டில இருக்கிற விஷயம் அவனுக்கு தெரிஞ்சுட்டா, நமக்கு இதனால எந்த பிரயோஜனமும் இல்லாம போயிடும். சரி உன்னோட ப்ரொபோசல் என்ன ஆச்சு?* என்று அந்த கடிதத்தை முடித்திருந்தான் பிரின்ஸ்.
*நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம்* என்று மனதிற்குள் நினைத்த ஓவியன்,
"இன்ட்ரஸ்டிங் கய்" என்று கூறிக்கொண்டான்.
.......
மேகாவுக்கு கொடுப்பதற்காக, கடையிலிருந்து வாங்கி வந்த ரொட்டியில் ஜாம் தடவிக் கொண்டிருந்தாள் தூரிகை. அப்பொழுது அவளுடைய கைபேசி மணி அடிக்க துவங்கியது. அதை பார்த்த அவளது முகம், வெளிறிப் போனது. நீண்ட மூச்சை இழுத்து, அந்த *பிரைவேட் நம்பரில்* இருந்து வந்த அழைப்பை ஏற்றாள் தூரிகை. பேசியபடி ஓவியனின் வீட்டை நோக்கி நடந்தாள்.
"நீ ஓவியனை கல்யாணம் பண்ணிக்க போறியா?"
ஓவியனின் வீட்டுக் கதவு திறந்து இருந்ததால், ஓவியனை தேடியபடி உள்ளே நுழைந்தாள் தூரிகை. யாருக்கோ கைப்பேசியில் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த ஓவியன், அவளை பார்த்ததும், தன் கைபேசியை காதிலிருந்து கீழே இறக்கினான்.
தன் கைபேசியின் திரையை அவன் பக்கம் திருப்பி, அவனை பார்க்கச் செய்த தூரிகை, கைபேசியின் ஸ்பீக்கரை ஆன் செய்தாள். உடனே, மறுப்புறம் அழைப்பு துண்டிக்கப்படும் சத்தம் கேட்டது.
"கால் டிஸ் கனெக்ட் ஆயிடுச்சு" என்றாள் தூரிகை.
"அவன் என்ன சொன்னான்?"
"நம்ம கல்யாணத்தை பத்தி கேட்டான்"
"அவனுக்கு அதைப் பத்தி எப்படி தெரிஞ்சது? நம்ம தான் அதைப் பத்தி ஃபோன்ல எதுவுமே பேசலையே?"
"அவன் நம்மளை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்" என்றாள் தூரிகை.
சற்று நேரம் யோசித்த ஓவியன், தூரிகையின் வீட்டை நோக்கி நடந்தான். அவனைப் பின்தொடர்ந்தாள் தூரிகை. ஓவியனை பார்த்து பளிச்சென்று புன்னகைத்தாள் மேகா. அவளை தன் கையில் தூக்கிக் கொண்ட ஓவியன்,
"உங்க ரெண்டு பேரோட திங்ஸையும் பேக் பண்ணிக்கோங்க" என்றான் தூரிகையிடம்.
"எதுக்கு?"
"நீங்க ரெண்டு பேரும் இங்க தனியா இருக்க வேண்டாம். என் கூட வாங்க"
"எங்களை எங்க அனுப்ப போறீங்க?"
"எங்கேயும் அனுப்ப போறதில்ல. என் வீட்டுக்கு தான் கூட்டிக்கிட்டு போறேன்"
"நான் எப்படி உங்க வீட்டில தங்குறது? அது நல்லா இருக்காது" என்றாள் பட்டென்று.
"தங்கினா என்ன? அந்த கொலைகாரன் உங்களை தாக்க முயற்சி பண்ண என்ன செய்றது? யார் உங்களை காப்பாத்துவா?"
"இல்ல. என்னால உங்க வீட்டுக்கு வர முடியாது"
"சரி, அப்படின்னா நீங்க இங்கேயே இருங்க. நான் மேகாவை கூட்டிக்கிட்டு போறேன்"
மேகாவுடன் நடந்தான் ஓவியன். அவனுக்கு முன்னாள் வந்த தூரிகை, அவனை வழிமறித்தாள்.
"நில்லுங்க"
"நீங்க வரிங்களா, இல்லையா?"
"நான் வர முடியாது. புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க"
"இது தான் உங்க முடிவா?"
"ஆமாம்" என்று மேகாவை அவன் கையில் இருந்து பறித்துக் கொண்டாள்.
"ஓகே ஃபைன்" என்று கதவை சாத்தி தாளிட்டு விட்டு, சோபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.
"நீங்க என் வீட்டுக்கு வரலைனா பரவாயில்ல... நான் இங்க இருக்கேன்"
"ஐயா... ஜாலி..." என்று குதித்தாள் மேகா.
"கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம ரெண்டு பேரும் எப்படி ஒண்ணா இருக்க முடியும்? கூடாது...."
"சரி, அப்படின்னா வாங்க போகலாம்"
"எங்க?"
"கல்யாணம் பண்ணிக்க"
"என்ன்னனது?" என்றாள் அதிர்ச்சியுடன்.
"நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி என் கூட என் வீட்ல இருக்க மாட்டிங்க. அப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் வாங்க..."
"உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?"
"இல்ல... உங்களால தான் எனக்கு பைத்தியம் பிடிக்குது"
"கல்யாணத்தைப் பத்தி எதுவுமே தெரியாத குழந்தை மாதிரி நடந்துக்கிறீங்க"
"அப்படியா? கல்யாணம்னா என்ன அர்த்தம்ன்னு எனக்கு தெரியலையா? கல்யாணம் என்கிற பேர்ல, ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்திக்கிட்டு, இந்த மனுஷங்க செய்ற ஏமாத்து வேலையை பாக்குறப்போ, கல்யாணத்து மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு எனக்கு..." என்றான் ஓவியன்.
"ஆனா அதுக்காக, இந்த சோஷியல் செட்டப்பை நம்மாள மாத்த முடியாது"
"நான் எப்போ அதை உங்களை மாத்த சொன்னேன்? நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தான் சொல்றேன். நீங்க தான் ரெடியா இல்ல"
"ஏன்னா, இவ்வளவு அவசர அடியில முடிவு பண்ற விஷயம் இல்ல கல்யாணம்"
"உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?" என்ற ஓவியனின் கேள்விக்கு பதில் சொல்ல திணறினாள் தூரிகை.
"இல்ல... அப்படி இல்ல..."
"வேற என்ன? என் கூட வேலை செய்கிறவங்களுக்கு கூட எனக்கு ஒரு அக்கா இருக்கிறது தெரியாது. ஆனா அவங்களை பத்தின எல்லா விஷயத்தையும் நான் உங்ககிட்ட சொல்லியிருக்கேன். உங்ககிட்ட மட்டும் தான் சொல்லி இருக்கேன். ஏன்னா, உங்களை நான் நம்புறேன். அந்த நம்பிக்கை என் மேல ஏன் உங்களுக்கு இல்ல? உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தானே என்னுடைய வீட்டுக்கு வர சொல்றேன்? நீங்க ஏன் அதை புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க?"
அமைதியானாள் தூரிகை.
"சரி... உங்க இஷ்டம் போல செய்யுங்க" என்று நடந்தான் ஓவியன்.
"ஏசி சார், ஒரு நிமிஷம்"
*என்ன?* என்பது போல் திரும்பி அவளைப் பார்த்தான் ஓவியன்.
"நாங்க வறோம்" என்றாள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு.
நிம்மதி பெருமூச்சு விட்டான் ஓவியன்.
"நம்ம ஒண்ணா இருக்க போறோமா?"
என்றாள் மேகா.
ஆமாம் என்று தலையசைத்தான் ஓவியன்.
"ஐயா ஜாலியா இருக்கும்" என்றாள் மேகா குதூகலமாய்.
"உங்க அத்தையை சீக்கிரமா கூட்டிட்டு போகணும். இல்லனா, அவங்க மனசு மாறிடுவாங்க" என்று முனுமுனுத்தான் ஓவியன்.
தங்கள் துணிமணிகளை ஒரு பையில் எடுத்துக் கொண்டு வந்த தூரிகை,
"அது வந்து..." என்று தயங்கி நின்றாள்.
"நீங்க என்ன சொல்றதா இருந்தாலும், என் வீட்டுக்கு வந்து சொல்லுங்க" என்ற ஓவியன்,
அவள் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தான். அந்த நிமிடத்தில் இருந்து அவர்களது இருப்பிடமாக போகும் அந்த வீடு, அவர்களை வரவேற்றது.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top