Prologue

முன்னுரை

இருபத்தி எட்டு வயது மதிக்கதக்க வாலிபன் ஒருவன், காருக்குள் அமர்ந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட வீட்டை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறான். இருள் சூழ்ந்த அந்த இரவில், மின்சாரம் கூட துண்டிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், அவன் அப்படி என்ன பார்க்கிறான்? வானம் மின்னிக்கொண்டிருக்கிறது. சட்டென, அவனது முகம் பளிச்சிடுகிறது... என்னவோ, அந்த கட்சியை கானவே அவன் பிறப்பெடுத்தது போல மகிழ்ச்சி கொள்கிறான். என்னால் கூற முடியவில்லை... அதிகமான பிரகாசம் கொண்டது மின்னலா அல்லது அவன் முகமா? அவன் சந்தோஷதிற்கு என்ன காரணம்? அவன் பார்க்கும் திசையில் யார் இருக்கிறார்கள்?

அதோ அந்த வீட்டு பால்கனியில் ஒரு பெண், மழையில் குழந்தை போல விளையாடுகிறாள். அவனுக்கு அவள் வருவாள் என தெரியுமா?

அந்த வீட்டின் சுவரில் பதித்திருக்கும் சலவை கல்லில் ஏதோ எழுதி உள்ளது. இருட்டில் சரியாக பார்க்க முடியவில்லை. இதோ மின்னல் மின்னுகிறது. "ஆதிகேசவன்" என்று பொறிக்கப்பட்ட பெயருடன் ஜொலிக்கிறது அந்த சலவைக்கல்.

துள்ளி விளையாடிக் கொண்டிருந்த அந்த பெண், சட்டென நின்றுவிட்டாள். அவள் எதையோ தேடுகிறாள். அவனின் பார்வை அவளின் உள்ளுணர்வை தாக்கி விட்டதா என்ன? அவளுக்கு உதவும் விதமாக, எல்லா தெரு விளக்குகளும் பளிச்சிடுகின்றன. துண்டிக்கப்பட்டுருந்த மின்சாரம் உயிர் பெற்றுவிட்டது. எதிரில் நிற்கும் கார், அவளின் கவனத்தை ஈர்கின்றது. அதில் அமர்ந்திருக்கும் வாலிபன் காரை கிளப்பிக்கொண்டு சென்றுவிடுகிறான். அவள், அவனை பார்த்து விட வேண்டாம் என்று நினைக்கிறானோ? அவள் அவனை பார்க்கவில்லை தான். ஆனால், அவனால் அவன் காரின் தனித்துவமான எண்ணை மறைக்க முடியவில்லை. TN 04 Y 1000.

நாற்பது வயது மதிக்க தக்க பெண்மணி ஒருவர், மழையில் விளையாடும் பெண்ணை குறுநகையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். அந்த பெண் விளையாடுவதை நிறுத்திவிட்டு, அந்த பெண்மணியை நோக்கி ஓடுகிறாள்.

"அம்மா... நான் மழையில் விளையாடினா என் மேல கோவப்படுவீங்கனு நினைச்சேன், ஆனா, நீங்கள சிரிக்கிறீங்களே? என் மேல உங்களுக்கு கோவமில்லையா?"

" நீ வழக்கமாக செய்யுறது தான். உனக்கு மழையில் நனையறதுது பிடிக்கும்"

"அப்படியா? "

" மழயில் ஐஸ்கிரீம் கூட சாப்பிடுவ"

" அப்படின்னா அடுத்த முறை மழை பெய்யும் போது எனக்கு ஐஸ்கிரீம் வாங்கி தரிங்களா? "

"நிச்சயம் வாங்கிதரேன். இப்போ நனஞ்சது போதும். வா போகலாம் "

அவர்கள் உள்ளே சென்றுவிட்டார்கள்.
.....

அந்த கார் வாலிபன், நடு ரோட்டில் நின்றுகொண்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறான். அவன் கண்ணிலிருந்து வரும் கண்ணீரை மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதற்காக இருக்குமோ? அவனுக்கு தெரியும், அழுவதற்கு இது போன்ற ஒரு தருணம் கிடைக்க போவதில்லை. ஏனென்றால், அவன் அழுவது யாருக்கும் தெரியாது, பார்த்தாலும் நம்பமாட்டார்கள்.

அவன் அனைவராலும் அறியப்பட்ட, இந்தியாவின் புகழ் பெற்ற பேஷன் டிசைனிங் கம்பெனியின் CEO அபிமன்யு. அவனுடைய ஆணித்தரமான பார்வை, அவனுடைய கோவத்தை பறைசாற்றுகிறது. ஆனால் யார் மீது அவனுக்கு கோவம்?

கதைக்குள் நுழைவோம்...



Bạn đang đọc truyện trên: AzTruyen.Top