part9

பாகம்-9

ஏபி ஃபேஷன்ஸ்

"அபிமன்யு மேனேஜிங் டைரக்டர்" என்று பொறிக்கப்பட்டுள்ள அறைக்குள் நுழைகிறோம். ஏபி ஃபேஷன்சின் மேனேஜிங் டைரக்டரான அபி,  கண்ணை மூடி,  தனது நாற்காலியில் சாய்ந்தபடி உட்கார்ந்திருக்கிறான். அவனுக்கு எந்த வேலையும் ஓடவில்லை,  இன்று மட்டுமல்ல இப்போதெல்லாம் அவனுக்கு அப்படித்தான் இருக்கிறது. அவன்,  யாழினியுடன் கழித்த இனிமையான நாட்களை நினைத்துப் பார்ப்பதில்,  சந்தோஷபட்டு கொண்டிருக்கிறான். இப்போதும் அப்படித்தான்.

*சில மாதங்களுக்கு முன்பு*

* ஏபி ஃபேஷன்ஸ்*

" மாம்ஸ்,  என்கூட ஷாப்பிங் வா"
யாழினி,  அபியை நச்சரித்தாள்.

"தயவு செய்து என்னை ஷாப்பிங் மட்டும் கூப்பிடாதே. உனக்கு என்ன வேணும்ன்னு சொல்லு,  ஆன்லைன்ல வாங்கி கொடுக்கிறேன். "

"நாளைக்கு என்ன நாள்னு, நீ மறந்து போயிட்டியா?  நாளைக்கு ரக்ஷாபந்தன். அக்காவுக்கு ஏதாவது வாங்கிட்டு வரலாம். வா போலாம்." விடாமல் தொணதொணத்தாள்.

"எனக்கு ஞாபகம் இருக்கு. ஆனா,  எனக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு,  இன்னும் பத்து நிமிஷத்துல".

"அது என்ன புதுசா?  எப்ப பாத்தாலும் மீட்டிங்கு... வீடியோ கான்பரன்ஸ்.... கடைசியா கேக்கறேன் வரியா இல்லையா? "

அபி பெருமூச்சுவிட்டான்.

"சரி வறேன். பத்து நிமிஷம் வெயிட் பண்ணு"

"மாம்ஸ்னா மாம்ஸ் தான்"
அவள் வெற்றி சிரிப்பு சிரித்தாள்.

அவர்கள் இருவரும் மிகப்பெரிய ஷாப்பிங் மாலை வந்தடைந்தனர்.

யாழினி,  அஞ்சலிக்காக  வைரத்தாலான அழகான மோதிரத்தை தேர்ந்தெடுத்தாள். சந்தேகமில்லாமல் அபிக்கும் அது பிடித்திருந்தது.

"யாழினி,  இங்க பாரு,  இந்த முத்து ப்ரேஸ்லெட் எவ்ளோ அழகா இருக்கு. இத நீ  எடுத்துக்கோ".

"எனக்கு இது வேண்டாம் பா"

"ஏன்? "

"இது ரக்ஷபந்தன் ஷாப்பிங். நான் இன்னைக்கு எதுவும் வாங்கிக்க  மாட்டேன்."

"ஏய் லூசு,  நம்மளோட ரிலேஷன்ஷிப்ப  யாராலயும் மாத்த முடியாது. ரக்ஷாபந்தன் நாளைக்கு தான். இன்னிக்கு இத நீ  போட்டுக்கோ. கையை நீட்டு. "

அவள் கையில் பாந்தமாக அணிவித்தான்.

"பிடிச்சிருக்கா? "

"செம சூப்பர். ரொம்ப பிடிச்சிருக்கு. "

அப்போது,  அவர்கள் யாழினி என யாரோ கூப்பிடுவதை  கேட்டார்கள்.  திரும்பி பார்த்த யாழினிக்கு ஆச்சரியம். அவளுடைய பால்ய சினேகிதன் ரமேஷ் நின்றிருந்தான்.

"எப்படி இருக்க சகோ? "
அவர்களை நெருங்கி வந்தான் ரமேஷ்.

"எனக்கு என்ன குறை?  இந்த வெள்ளைக்கார துரை என்கூட இருக்கும்போது?" களுக்கென்று சிரித்தாள் யாழினி.

"எப்படி இருக்கீங்க அபி? "
என்றவனுக்கு

"நான் நல்லா இருக்கேன்"
என்று பதில் தந்தான் அபி.

ரமேஷும் யாழினியும் சிறுவயது முதல் ஒன்றாகப் படித்தவர்கள். யாழினியிடம் ஒரு ஆண்மகன் பேசுவதைப் பற்றி அபி கவலைபடவில்லை என்றால், அது ரமேஷ் மட்டும்தான். ஏனென்றால், ஒவ்வொரு ரக்ஷாபந்தன் அன்றும் யாழினி,  அவனுக்கு கையில் ராக்கி கட்டி விடுவாள் என்பது அவனுக்கு தெரியும். ரமேஷ் யாழினியை தன் உடன்பிறவா சகோதரியாக நினைத்திருந்தான்.

"வாவ்... எவ்வளவு நாளாச்சு உன்னை பாத்து?  மூணு வருஷத்துக்கு அப்புறம் உன்னை  பாக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? "

"ஆமா,  ஸ்கூல் முடிச்சதுக்கப்புறமா நான் மேல் படிப்புக்காக  ஃபாரின் போயிட்டேன். ஆனா,  சரியா ரக்ஷா பந்தனுக்கு முதல் நாள் உன் முன்னாடி வந்து நின்னுடேன் பாத்தியா? "

" சோ ஸ்வீட் ஆஃப் யூ,  ரமேஷ்"

"எங்க என்னோட ராக்கி? "

அவள் பக்கத்தில் இருந்த கடைக்கு ஓடி சென்று ஒரு ராக்கியுடன் திரும்பி வந்தாள். அதை ரமேஷின் கையில் கட்டி விடவும்,  மூவரும் அருகில் இருந்த காபி ஷாப்பில் நுழைந்தனர். அவ்வளவுதான்,  யாழினி தனது பள்ளிப்பருவ நினைவுகளையெல்லாம்  பகிர்ந்து கொள்ள தொடங்கிவிட்டாள். வெகுநாள் சந்திக்காமல் இருந்த தனது அன்பு நண்பனும் சகோதரனுமான ரமேஷை  பார்த்தவுடன், அவள்  அபி இருந்ததை மறந்துவிட்டாள்.  அவன் தன்னைப் பார்த்துக் கொண்டும்,  பொருமி கொண்டும் இருப்பதை கூட அவள் கவனிக்கவில்லை.

சாண்ட்விச்சை சாப்பிட்டு விட்டு கை கழுவ சென்று,  திரும்பி வந்தவள்,  அபியை காணாமல் குழப்பமானாள். பக்கத்தில் எங்காவது நின்று கொண்டு,  அவன் போனில் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்து,  இங்குமங்குமாக தேடிப்பார்த்தாள். ஆனால் அபி எங்கும் காணப்படவில்லை.

"அபி ஆஃபீசுக்கு கிளம்பி போயிட்டார்.  உன்னை, வீட்ல ட்ராப் பண்ணிட சொன்னார்".
என்ற ரமேஷை விழிவிரிய பார்த்தாள்.

"என்னது... ஆஃபிசுக்கு போய்ட்டாரா?  எப்போ? ஏன்? "

" தெரியல. என்கிட்ட உன்னை  ட்ராப் பண்ணிட சொன்னாரு"

யாழினிக்கு யாரோ அறைந்தது போல இருந்தது. ஏனென்றால் அபி,  எப்போதும் இப்படி செய்தது கிடையாது. அவளிடம் சொல்லாமல் அவன் எப்போதும் விட்டு சென்றதும் கிடையாது. அவன்,  அங்கிருந்து ஏன்  சென்றான் என்று யூகிப்பது ஒன்றும் பெரிய பிரமாதமாக இருக்க வில்லை. அவள் உடனடியாக அவனுக்கு போன் செய்ய,  அபியும் அதை உடனடியாக எடுத்தான்.

"மாம்ஸ்ஸ்... " தயக்கத்துடன் கூறினாள்.

"தேங்க் காட். இப்பவாவது நான் ஒருத்தன் இருக்கேன்னு உனக்கு ஞாபகம் வந்துச்சே ".

" மாம்ஸ் ப்ளீஸ்... "

அவள் மேலே எதுவும் பேசுவதற்கு முன்பு,  அபி அவளுடைய பேச்சை வெட்டினான்.

"போதும் நிறுத்து யாழ்ழ்னி. இதுக்கப்புறம் ஒரு வார்த்தை கூட பேசாத. உனக்கு தெரியுமா நான் எவ்வளவு முக்கியமான மீட்டிங்க  விட்டுட்டு உன் பின்னாடி வந்தேன்னு?  ஆனால் நீ..?  நான் இருக்கிறது கூட உனக்கு ஞாபகம் இல்ல. உன் ஃபிரண்டை பார்த்ததும்  என்னை  மறந்துட்டு அவ்ளோ சந்தோஷமா பேசிட்டு இருக்க. அவன்கிட்ட உன்னால அப்பறம் பேச முடியாதா?  உங்க வீட்டுக்கு வரசொல்ல முடியாதா?   என்னை நீ அவாய்ட் பண்ணா,  நான் எப்படி ஃபீல் பண்ணுவேன்னு  உனக்கு  தெரியாது?  நான் உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும் தான் எல்லாத்தையும் விட்டு வந்தேன். எனக்கு தெரியல நீ என்னை புரிஞ்சுகுவியானு. "

அவன் கோபமாக போனை துண்டித்தான். யாழினி மறுபடியும் போன் செய்ய முயற்சித்த போது,  அவனுடைய போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்தது. அவள் அங்கிருந்து நேரடியாக அவனுடைய ஆஃபீசுக்கு சென்று அவனை சமாதானப்படுத்த முயன்ற போது,  அவன் மீட்டிங்கில் இருப்பதாக தெரியவந்தது. ஏற்கனவே மிகவும் தாமதமாகி விட்டதால்,  அங்கு இருப்பதில் எந்த பிரயோஜனமும் இருப்பதாக தெரியவில்லை.அவள் வீடு திரும்பிய பின்னும்,  மறுபடியும் மறுபடியும் அவனுடைய போனுக்கு தொடர்பு  கொள்ள முயன்றுகொண்டிருந்தாள்.  ஆனால் அந்த நாள் முழுவதுமே அவன் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது. யாழினிக்கு அவனை பற்றி நன்றாகவே தெரியும். அவனுடைய பொஸஸிவ்னஸ்  பற்றியும் தெரியும். இந்தமுறை தவறு அவளுடையதுதான். அவள் அவ்வாறு செய்திருக்கக்கூடாது. ரமேஷை  நாளை வீட்டிற்கு வரும்படி கூட அவளால் கூறியிருக்க முடியும் தான். அவனை வெகு நாட்கள் கழித்து பார்த்த சந்தோஷத்தில் அவள் நிதர்சனத்தை மறந்துதான் போனாள்.  பிழை ஏற்பட்டாகிவிட்டது. சரி படுத்த வேண்டியது அவருடைய பொறுப்பு.

மறுநாள்

அன்று ரக்ஷாபந்தன். அஞ்சலிக்கு,  தானும் யாழினியும் வாங்கி வைத்திருந்த வைர மோதிரத்தை பரிசாக அளிக்க,  அபி,  மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தான். அவனுடைய கால்கள் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க மறுத்து,  ஒரே இடத்தில் ஊன்றி நின்றது. அவனுக்கு பிடித்தமான சிகப்பு நிறத்தில் புடவை அணிந்து,  யாழினி ஒய்யாரமாய் நின்றிருந்தாள். அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே,  முதல் பந்தில் கிளீன் போல்ட் ஆனான்,  அபி. அவன் அவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்த கோபம்,  ஜன்னல் வழியாக,  சிட்டாய் பறந்து சென்றது. ஆனால்,  அவள் அவனை திரும்பி கூட பார்க்கவில்லை. அவள் ஏன் அப்படி செய்து கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்து,  அவன் உள்ளூர முறுவலித்துக்கொண்டான்.  அவள் வருத்தத்தில்  இருக்கிறாள் என்பது அவனுக்கு தெரியும். நேற்று முழுவதும் போனை எடுக்காததால், அவள் அவன் மீது கோபமாக இருக்கிறாள் என்பதும்  அவனுக்கு தெரியும். அஞ்சலி, அவனுக்கு ராக்கி கட்டும் வரை பொறுத்திருந்தான்.  மற்றவர்களுக்கும் புரிந்தது இவர்களுக்கிடையில் ஏதோ ஓடிக்கொண்டிருக்கிறது என்று. ஆனால்,  அவர்களுக்கு தெரியும்,  இது அவர்களுக்குள் சகஜம்,  சீக்கிரமாகவே சரியாகிவிடும் என்று. அதனால் அவர்கள் அலட்டிக் கொள்ளாமல் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அஞ்சலி ராக்கியை கட்டி முடித்தவுடன் அபி யாழினியை நெருங்கி வர,  அவள் அவனைப் பார்த்தவள் போல திரும்பி நடக்கத் துவங்கினாள்.  அவள் கையை பிடித்து தன்னுடைய அறைக்கு இழுத்துச் சென்றான் அபி.

"என் கையை விடு." அவன் கையை உதறினாள்
யாழினி. ஆனால்,  அதெல்லாம் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

"அக்கா என்ன காப்பாத்துங்க. மாமா...நான் கத்தறது உங்க காதுலே விழலயா?  எல்லாரும் செவிடா போயிட்டீங்களா?  பாருங்க,  இந்த வெள்ளக்கார துரை என்ன இழுத்துட்டு போறான். என்ன காப்பாத்துங்க".

எல்லோருமே ஏதோ முக்கியமான வேலையை செய்து கொண்டிருப்பது போல பாசாங்கு செய்து,  அவர்கள் காதுகளில் விழாதது போலவே நடந்துகொண்டார்கள்.

தன் அறைக்கு வந்து கதவை சாத்திக்கொண்டான்,  அபி.  நாற்காலியில் அமர்ந்தவன், அவளையும் தன் மடியில் அமர்த்திக்கொண்டு,  கெட்டியாக பிடுத்துக்கொண்டான். அவன் பிடியிலிருந்து வெளிவர யாழினி முடிந்தவரை போராடினாள்.  ஆனால் அவனுடைய பிடி மேலும் மேலும் இறுக்கிக் கொண்டு சென்றது.

"யாழ்ழ்னி" அவன் அமைதியாக,  அவள் பெயர் சொல்லி அழைத்தான். ஆனால் அவள் அதைக் கண்டு கொள்ளாமல்,  தனது போராட்டத்தை தொடர்ந்தாள்.

"நீ பசங்கு பண்ணது போதும். எனக்கு உன்னை பத்தி தெரியும்."

யாழினி,  தன்னுடைய போராட்டத்தை நிறுத்திவிட்டு,  கண்ணீர் ததும்பும் விழிகளுடன் அவனைப் பார்த்தாள். அடுத்த நொடி அவன் கழுத்தை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

"ஐம் சாரி.  நான்அந்த மாதிரி செஞ்சிருக்கக் கூடாது. நான் உன்னை  ஹர்ட் பண்ணிட்டேன். ஆனா,  உன்னை அவாய்ட்  பண்ணனும்னு செய்யல"

அபிக்கு அந்தப் பெண்ணைப் பார்க்க பாவமாய் இருந்தது. அவன் தன்னை அவள் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு அவள் கண்ணீரைத் துடைத்தான்.

யாழினி, அவன் கண்ணத்தில் அறைந்தாள்.

"இப்படி  சண்டை போடுறது எனக்கு சுத்தமா பிடிக்கல" என்றாள்.

"எனக்கு மட்டும் ரொம்ப பிடிச்சிருக்குனு நினைக்கிறாயா? அவள் முகத்தில் விழுந்த குழல் கற்றையை ஒதுக்கிக் கொண்டு கூறினான்.

"அப்ப எதுக்கு உன்னோட மொபலை  சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்ச? "

"உன்னை  ஹர்ட் பண்ண வேண்டாம்னு தான். உனக்கு தெரியாதா என்னோட கோபத்தை பற்றி?  எனக்கு கோவம் வந்தா,  என்னோட நாக்கை  என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது. அதனால்தான் மொபைலை  சுவிட்ச் ஆஃப் பண்ணி வெச்சேன்".

"உனக்கு தெரியுமா,  நான் எவ்ளோ நேரமா உன்னுடைய நம்பருக்கு ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தேன்னு?  எனக்கு செத்துடலாம் போல இருந்துச்சு. "

"வாய மூடு. இன்னொரு தடவை அப்படி சொன்ன,  என்ன பண்ணுவேணணு எனக்கு தெரியாது. உன்னோட வாழ்க்கை,  என்னோடது. அதை முடிச்சிகிறத பத்தி பேசுறதுக்கு உனக்கு எந்த உரிமையும் இல்லை."

"அப்படின்னா நீ எனக்கு பிராமிஸ் பண்ணு.  எவ்ளோ கோவம் இருந்தாலும் நீ என்கிட்ட பேசுவேன்னு எனக்கு பிராமிஸ் பண்ணு. "

"ஐ ப்ராமிஸ். எந்த சூழ்நிலையிலும்,  நான் உங்கிட்ட பேசறத யாருமே தடுக்கமுடியாது.போதுமா?"

"போதும்"

அவள் மறுபடி அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கண்ணத்தோடு கண்ணம் உரசினாள்.

  "நாம கீழ போகலாமா? " -அபி மென்று விழுங்கினான்.

" வேண்டாம்"

"எல்லாரும் நமக்காக காத்துகிட்டிருக்காங்க"

"இருக்கட்டும். இப்படி இருக்குறது எனக்கு பிடிச்சிருக்கு."
இன்னும் நெருக்கி கொண்டாள்.

"ஆனா,  எனக்குள்ள என்னமோ செய்யுது" அவன் ரகசியம் உரைத்தான்.

"என்ன செய்யுது?"

"விளக்கமா சொல்லனுமா?"

"சொல்ல முடியலைன்னா,  பிரக்டிக்காலா செஞ்சிகாட்டலாம்"

"என்னை  பலவீன படுத்தாத".

அவன் கழுத்தை விடுவித்து,  கண்ணம் பற்றி, எதிர்பாரத வண்ணம்,  அவன் இதழ் மீது இதழ் ஒற்றினாள். அவளை வளைந்திருந்த அவனது கரம்,  வலுவிழந்தது. அவனிடமிருந்து தன்னை விடுவித்துகொண்டு,  அவன் அறையை விட்டு வெளியேறினாள்,  பலவீனமானது அவன் மட்டுமல்ல என்று குறிப்பால் உணர்த்தி.

தொடரும்....

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top