Part21

பாகம்-21
ஆதிகேசவனயும்,  ஈஸ்வரையும் தனது அடுத்தடுத்த திட்டங்களால் நிலைகுலைய செய்து கொண்டிருந்தான் அபிமன்யு. ஒருவேளை அவன் அவர்கள் முன்னால் வந்தால்,  அவர்கள் அவனை கொன்றுவிடுமளவிற்கு, கோபத்தில் இருந்தார்கள்.

கிரிஷ் அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான்,  அவர்களாக ஆரம்பிக்கட்டும் என்று.

"இதுக்கு மேல என்னால பொறுத்துக்க முடியாது. நம்மளுடைய ஒவ்வொரு ஷேர் ஹோல்டர்சும்,  நம்ம கையிலிருந்து,  நழுவிகிட்டே இருக்காங்க" ஈஸ்வர் கோபம் கொப்பளிக்க சொன்னார்.

"நம்மள விட்டுப் போகனும்னு நினைக்கிறவங்கல,  நம்ம எப்படி தடுத்து நிறுத்த முடியும்?  அதுவும் எல்லாருமே,  மூழ்கும் கப்பலில் இருந்து தங்களை காப்பாத்திக் தான நினைப்பாங்க?  உன்னுடைய ஒரே ஒரு தப்பான முடிவால நமக்கு இவ்வளவு பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கு. இப்ப நம்மள விட்டு போனவங்க எல்லாருமே,  சின்ன ஷேர் ஹோல்டர்ஸ் தான். ஒருவேளை,  நம்ம கிட்ட இருந்து மற்ற பெரிய ஷேர் ஹோல்டர்ஸும் போயிட்டா,  நம்முடைய நிலைமை என்னாகும்?  கடவுளால் கூட, நம்மள காப்பாத்த முடியாது" என்று மனம் வெதும்பினார் ஆதிகேசவன்.

"அவங்க யாரும்,  நிச்சயமா நம்மள விட்டுப் போக மாட்டாங்க. அவங்க எல்லாம் ஆரம்பத்திலிருந்தே நம்ம கூட இருக்கிறவங்க. நான் அவங்கள ரொம்ப நம்புறேன்"

அந்த நேரம் பார்த்து ஆதிகேசவனுக்கு,  ஒரு போன் கால் வந்தது. செய்தியைக் கேட்டு அவர் முகம் கலை இழந்தது. அவர் கையிலிருந்த போன் தானாக நழுவிக் கீழே விழுந்தது. அருகில் இருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தார் ஆதிகேசவன். ஈஸ்வரும்,  கிரிஷும் அவரைப் பார்த்து பதட்டம் அடைந்தார்கள்.

"என்ன ஆச்சி ஆதி? " என்றார் ஈஸ்வர்.

"நம்ம கம்பெனியோட 15 சதவிகித ஷேர்ஸ் வெச்சிருந்த நாராயணனும்,  நம்ம கிட்ட இருந்து விலகிப் போயிட்டாரு"

"என்னது? " என்று அதிர்ந்தான் கிரீஷ்.

"அவனுடைய எல்லா ஷேரையும்,  அபிமன்யு மூன்று பங்கு விலை கொடுத்து வாங்கிட்டானாம். அவன் நம்மள நடு தெருவுல நிக்க வைக்காம விடமாட்டான். எனக்கு தெரியல,  எந்த அளவுக்கு சுரேஷை நம்ப முடியும்னு"

"இல்ல ஆதி,  அவன் நம்மளோட விஸ்வாசி,  அவன் நம்மள விட்டு நிச்சயம் போக மாட்டான்"

"நாராயணனுக்கும் நீங்க இத தான் சொன்னிங்க" என்ற கிரீஷை எரித்து விடுபவன் போல பார்த்தார் ஈஸ்வர்.

"என்னை  முறைக்கிறத நிறுத்துங்க. நம்மளை இனிமே யாராலும் காப்பாத்த முடியாது. நம்ம தோல்விய ஒத்துகிட்டு தான் ஆகணும். ஆனா ஒரு விஷயம் எனக்கு புரியல. எப்படி நீங்க இவ்வளவு கேர்லெஸ்ஸா இருந்தீங்க? எப்படி இவ்வளவு நாளா மத்தவங்க கிட்ட இருந்து ஷேர்ஸ வாங்கி உங்கள பலப்படுத்திக்கனும்னு நீங்க நினைக்காம விட்டீங்க? அபிமன்யு உங்க முதுகுக்கு பின்னாடி என்ன செஞ்சுகிட்டு இருக்கான்னு கூட எப்படிங்க கவனிக்காம இருந்திங்க?"

"உன்னோட அப்பாவை மாதிரியே,  அவங்களும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து என் கூட இருக்கிறவங்க. அப்படி இருக்கும்போது,  எப்படி அவங்க கிட்ட இருந்து,  ஷேர்ஸை திரும்பி கொடுங்கனு நான் கேட்க முடியும்?  நான்,  அவங்கள,  என்னோட கம்பெனியின் பாகமா நெனச்சேன். அதனால தான் எல்லாரையுமே அவங்களுடைய ஷேர்சோட இருக்க விட்டேன்"என்றார் ஆதி.

"ஆனா,  அவங்க எல்லாரும் நம்மள முதுகில் குத்திட்டாங்க." என்று கடுபடித்தார் ஈஸ்வர்.

"இதுக்கு பேரு தான் வியாபார உத்தி. எந்த ஒரு புத்திசாலி பிசினஸ் மேனும் அதைத்தான் செய்வான். நீங்களா இருந்தா கூட.... மூன்று பங்கு லாபத்தை இழக்க யாருக்கு  மனசு வரும்?" என்றான் க்ரிஷ்.

"அபிமன்யு, சுதாகரிக்க நமக்கு  நேரமே கொடுக்கல. எல்லாத்தையும் பக்காவா ப்ளான் பண்ணி,  ஒரே மணி நேரத்தில் எல்லாத்தையுமே முடிச்சிட்டான். அதனாலதான், 
அவனுடைய நடவடிக்கைகளை நம்மளால கண்டுபிடிக்க முடியல.  ஒருவேளை சுரேஷும் அவனுடைய ஷேர்ஸை,  அபிமன்யுவிற்கு கொடுத்துட்டா,  இந்த கம்பெனியோட அடுத்த சிஈஓ அபிமன்யு தான்" என்று பதட்டமாக சொன்னார் ஆதி.

"அது நிச்சயமா நடக்காது. நான் நடக்கவும் விட மாட்டேன்" என்று கடுகடுத்தார் ஈஸ்வர்.

"நம்மளுடைய பலத்த நாம இழந்துகிட்டு இருக்கோம்னு புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. இதோட அபிமன்யூ நிறுத்திடுவான்னு நான் நினைக்கல. நாம இன்னும் பல அடிகள் வாங்க தயாரா இருக்கணும்". என்றான் கிரீஷ்.

"இன்னும் எத்தனை நாளைக்குத்தான்,  யாழினியுடைய சம்மதத்துக்காக நம்ம காத்திருக்கிறது?  நம்ம சீக்கிரமா இந்த கல்யாணத்தை முடிச்சாகணும்" என்றார் ஈஸ்வர்.

"இப்ப எதுக்கு நீ சம்பந்தமில்லாம பேசுற? " என்றார் ஆதி

"யாழினியை அடுத்தவனுடைய மனைவியா பார்க்கிற வரைக்கும் அபிமன்யு ஓய மாட்டான். அதனால தான் சொல்றேன், நம்ம சீக்கிரமா இந்த கல்யாணத்தை  முடிச்சாகனும்".

"என்னால யாழினிக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. எனக்கு என் நஷ்டத்தை  பற்றி கவலை இல்லை. ஆனா என் பொண்ணு எனக்கு முக்கியம். அவ ஏற்கனவே நிறைய பிரச்சனைகளை சந்திசிட்டா. தயவுசெய்து,  அவளுக்கு அழுத்தம் கொடுக்க சொல்லி என வற்புறுத்தாத".

"யார் உன்னை அழுத்தம் கொடுக்க சொன்னது?  அன்பா பேசி,  உன் பொண்ணை சரின்னு ஒரு வார்த்தை சொல்ல வைக்க முடியாதா?"

"நான் முயற்சி பண்ணி பார்கிறேன். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் அவளுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடிய எதையும் நான் செய்யமாட்டேன்"

"நீ முயற்சி செய்வதை நிறுத்தாத. அவ நிச்சயம் சரின்னு சொல்லுவா".

ஈஸ்வர் சொன்னதை போல் அதை அவ்வளவு சுலபமாக செய்ய முடியாது என்பதை அறிந்திருந்தார் ஆதிகேசவன்.

*ஏ பி ஃபேஷன்ஸ்*

அமர்,  உட்கார முடியாமல் இங்குமங்கும் பரிதவித்துக் கொண்டிருப்பதை அபிமன்யு கான்ஃபரன்ஸ் ஹாலில் இருந்து பார்த்தான். அவன் தனக்காக தான் காத்திருக்கிறான் என்பது அபிமன்யுவிற்கு தெரியும். கான்பரன்ஸ் ஹாலின் கண்ணாடி கதவின் வழியாக,  அமரை சிறிது காத்திருக்கும்படி சமிஞ்ஞை செய்தான்  அபிமன்யு. சில நிமிடங்களில்  தனது கான்பரன்ஸை முடித்துக் கொண்டு வெளியில் வந்த அபிமன்யு,  அமர் தனது அறையின் வாசலில் அவனுக்காக காத்திருப்பதை கண்டான். அவன் உள்ளுணர்வின் படி,  அது நல்லதாக படவில்லை. அவனை நோக்கி ஓடியவன்,

"என்ன? " என்று கேட்க, 

அபிமன்யுவை அவன் கேபினுக்குள் இழுத்துச் சென்று கதவை சாத்தினான் அமர். அது அவனை மேலும் ஆச்சரியப்படுத்தியது.

"என்ன விஷயம் அமர்? "

"அபி,  நீ கிரிஷ பத்தி சந்தேகப்பட்டது சரிதான். அவன் நம்ம நினைக்கிற மாதிரி இல்ல"

"என்ன சொல்ற? "

"அவன் யாழினிகிட்ட  டபுள் கேம் ஆடிக்கிட்டு இருக்கான்"

"டபுள் கேம் ஆ?  என்ன சொல்ற?"

"இங்க பாரு"

அவன் அபியிடம் ஒரு போட்டோவை காட்டினான்.

"யார் இந்த பொண்ணு? "

"இவ பேரு ரோஹினி"

"சரி. அதனால? "

"இவ க்ரிஷோட கேர்ள் ஃப்ரெண்ட். அவங்க ரெண்டு பேருக்கும் சில வருஷமா ரிலேஷன்ஷிப் போயிட்டு இருக்கு"

தனது கையில் இருந்த ஃபைலை,  கோவமாய் விட்டெறிந்தான் அபிமன்யு.
"எவ்வளவு தைரியம் அவனுக்கு?  இந்த பொண்ண பத்தி எல்லா டீடைல்ஸ்ஸும உடனடியா வேணும்."

"அதுக்கான பிராசஸ் போய்கிட்டு இருக்கு. ஆனா என்னால புரிஞ்சுக்க முடியல,  நீ எப்படி அவன் மேல சந்தேகப்பட்ட?  அவன் மேல ஒரு கண்ணு வைனு  சொன்னப்ப எனக்கு ஒன்றுமே புரியல
. அவன் இப்படிப்பட்ட வேலை செஞ்சுக்கிட்டு இருப்பான்னு  நான் யோசிக்கவே இல்லை".

"உண்மைய சொன்னா, இதை நானும் எதிர் பார்க்கல. நான் அவன் வேற ஏதாவது ஒரு விஷயத்துல  மாட்டுவானு தான் நினைச்சேன்".

கட்டுக்கடங்காத கோபத்துடன் சொன்னான். ஒருவேளை அவன் கிரிஷை,  எதிரில் கண்டால் எத்தனை துண்டுகளாக அவனை வெட்டுவான் என்று சொல்வதற்கில்லை.

"நாம  அடுத்து என்ன செய்ய போறோம்?"

"டேக் யுவர் சீட்" என்றான் அபி.

அமர் செய்ய வேண்டியது என்ன என்பதை அபிமன்யு விவரித்தான்.

"எல்லாத்தையும் சரியான நேரத்தில் நான் செய்வேன்"

"எதுவும் தப்பா போய்டக்கூடாது" என எச்சரிக்கும் தொனியில் சொன்னான் அபிமன்யு.

"நிச்சயம் போகாது" என்று நம்பிக்கையூட்டினான் அமர்.

இந்த சூழ்நிலையை எப்படி கையாள வேண்டும் என்பதை அறிந்திருந்தான் அபிமன்யு. இந்த முறை அவன் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். தகுந்த சாட்சியங்களும்,  சான்றுகளுடனும், அவன் இதை நிரூபித்தாக வேண்டும். அவனுடைய யோசனை, தடுத்து நிறுத்தப்பட்டது,  அவன் அறையின் கதவை யாரோ தட்டியபோது. அமர் ஓடி சென்று கதவை திறந்து யாழினி நிற்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தான்.

"ஹாய் அமர்" என்றாள் வழக்கமான சிரிப்புடன்.

"ஹாய்" என்ற அமரின் பார்வை,  அபியின் பக்கமாகத் திரும்பியது.

"எனக்கு வேலை இருக்கு. நான் கிளம்புறேன்" எனக்கூறி அவன் அறையை விட்டுச் சென்றான் அமர்.

யாழினி, அறையின் உள்ளே பிரவேசித்த போது,  அவனுடைய பேச்சு முற்றிலும் தடை பட்டு போனது,  அவள் உடுத்தியிருந்த சிகப்பு சேலையில்.

"ஹாய் மாம்ஸ்" என்று மயக்கும் சிரிப்பு சிரித்தாள் யாழினி.

இந்த எதிர்பாராத சந்திப்பிற்கு தயாராய் இல்லாத அபிமன்யு,  பேச்சிழந்து நின்றான்.

"நான் பேசறது காதுல விழலியா?"

என்று தன் கையை அவன் முகத்தின் முன் அசைத்தாள்  யாழினி.

"அது... வந்து..." என்று வார்த்தைகளை தேடினான் அபிமன்யு.

"இந்த கலர் உங்க மேல இப்படி ஒரு மேஜிக் செய்யயும்னு நான்  நினைச்சு கூட பாக்கல" என்று உதடு கடித்து சிரித்தாள் யாழினி.

முதலில் சற்றே தடுமாறினாலும் தன்னை சமாளித்துக் கொண்டான் அபிமன்யு.

"எல்லா சிவப்பும் என் மேல மேஜிக் செஞ்சிட முடியாது. அது உன் மேல இருக்கும் போது மட்டும் தான் அதை சாதிக்க முடியும்".

அவனுடைய பதில் யாழினியை,  அவனையே உற்றுப் பார்க்க வைத்தது.

"நான் உங்ககிட்ட ஒன்னு கேக்க தான் இங்க வந்தேன்"

"நீ என்கிட்ட எதையும் கேட்கலாம்"

"சத்தியமா...?"

"என்னோட ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் தான்"

"எனக்கு ஒரு அழகான ஸாரிய,  நீங்க டிசைன் பண்ணி கொடுக்கணும்"

"ஷ்யூர்... பட் என்ன பர்பஸ்?"

"வேற எதுக்கு?  கல்யாணத்துக்கு தான்"

"யாரோட கல்யாணம்?"

"என்னோட கல்யாணத்துக்கு தான்?"

சட்டென கோபமாக மாறிய அபியின் முகம்,  யாழினியை ஆட்டம் காணச் செய்தது. தன் இரையின் மேல் பாய காத்திருக்கும் மிருகத்தைப் போல் மாறியது அவனது முகம். அவன்,  உற்றுநோக்கும் பார்வையுடன் தன்னை நோக்கி அடியெடுத்து வைப்பதைக் கண்டு மேலும் நடுக்கம் கொண்டாள்  யாழினி. ரத்தம் தோய்ந்த அவனது கண்களைப் பார்க்கவே அவளுக்கு பயமாக இருந்தது. பின்னோக்கி நகர்ந்து, சுவற்றில் சாய்ந்தவளை,  அவளது இரண்டு பக்கங்களிலும்,  கைகளால் மறைத்து கொண்டு அவளை நகர விடாமல் நிறுத்தி வைத்தான், அபி. அவளை கொலைகார பார்வை பார்த்துக் கொண்டு நின்ற அவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் நின்றதுதான் சங்கடத்தின் உச்சகட்டம். அவளுடைய ஒவ்வொரு ரத்த செல்லிலும் நடுக்கத்தை உணர்ந்தாள் அவள். அவனுடைய பார்வையை சந்திக்க இயலாதவளாய், சிரம் தாழ்த்தினாள் யாழினி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top