part18

பாகம் 18

"ஒரு பெரிய ட்ரீட் கொடுக்க தயாரா இரு. இந்த டீல் நிச்சயமா நமக்கு தான். நான் அதற்கான எல்லா ஏற்பாட்டையும் செஞ்சுட்டேன். இல்லனா இந்த டீலுக்கு தேவையான அத்தனை பொருளையும்,  முன்னாடியே,  அட்வான்ஸா ஆர்டர் பண்ணி இருப்பேனா?" பெரிதாய் சாதித்து விட்டது போல ஈஸ்வர் சிரித்தார்.

போனை துண்டித்து திரும்பியவரை பார்த்து,

"ஆனா அப்பா,  எல்லாத்தையும் முன்னாடியே அட்வான்ஸா புக் பண்ணி வைக்கிறது கொஞ்சம் ஓவர் கான்ஃபிடன்ஸா தெரியல?  ஒருவேளை நமக்கு இந்த டீல் கிடைக்காம போச்சுன்னா என்ன செய்வீங்க?" என்றான் கிரிஷ்.

"நீ ரொம்ப சின்ன பையன். உனக்கு இதெல்லாம் புரியாது. உன்னோட வயசு என்னுடைய அனுபவம். மறந்துடாத"

"ஆனா,  இந்த பேஷன் உலகத்தோட கிங் நீங்க இல்லை, உங்களை விட ரொம்ப அனுபவம் குறைந்த அபிமன்யு" என்றான்.

"இன்னைல இருந்து நான் தான் ராஜாவாக  போறேன்.  பார்த்துக்கோ." என்றார் கடுப்பாக.

"அது சரி. ஆனா,  எல்லாத்தையும் ஏன் அட்வான்ஸா புக் பண்ணி வச்சிருக்கீங்கனு எனக்கு ஒரே ஒரு சரியான காரணத்தை கொடுக்க முடியுமா உங்களால? "

"நாளைக்கு சென்ட்ரல் கவர்மெண்ட் பட்ஜெட் டிக்லர் பண்ண போறாங்க. தெரியுமா? "

"அதுதான் எல்லாருக்கும் தெரியுமே"

"ஃபேப்ரிக் மெட்டீரியலோட வரி தாறுமாறாக ஏற போகுது. அதனால நான் எல்லாத்தையும் அட்வான்ஸா புக் பண்ணி வச்சிருக்கேன்".

கிரீஷின் கன்னங்களைத் தட்டி கொடுத்து,  மிடுக்காக கான்பரன்ஸ் ஹால்லின்  உள்ளே நுழைந்தார். பேஷன் உலகின் பெரும் புள்ளிகள்,  இன்று வெளியாகப்போகும் முடிவுக்காக அங்கு காத்திருந்தார்கள்.

ஈஸ்வரின் முகம் கருத்துப் போனது,  அபிமன்யு தனது மேனேஜர் அமருடன், அவனை நோக்கி,  ஒரு கள்ள சிரிப்பு சிரித்துக் கொண்டு,  அவனுடைய இருக்கையில் வந்து அமர்ந்த போது.

"அபிமன்யு இந்த டீல்குள்ள வரமாட்டான்னு சொன்னீங்க? "

என்று கிரீஷ் கேள்வி கேட்ட,  பதிலளிக்காமல் நின்றிருந்தார் ஈஸ்வர். அந்த கேள்விக்கு தனக்கே விடை தெரியாத போது,  அவர் பதில் சொல்வது சாத்தியம் இல்லை தானே?

அபிமன்யுவின் குத்திட்ட பார்வை தன்  மீது  குவிந்திருந்தபோது ஈஸ்வருக்கு வேர்த்துக் கொட்டியது. ஆதிகேசவன் மீது இருந்த மரியாதையின் நிமித்தம்,  அபிமன்யு எப்போதுமே அவர்களுடைய வழியில் குறுக்கிட்டது இல்லை. அவர்களுக்கிடையில் நடப்பது எதுவாக இருந்தாலும்,  அவன் விலகியே இருந்தான். ஆனால் இன்று,  ஒன்றைத்தவிர வேறு எதைப்பற்றியும் கவலை படக் கூடிய நிலையில் அபிமன்யு இல்லை. அவன் இருக்கும் இந்த சூழ்நிலையில்,  எந்த நியாய தர்மத்தை பற்றியும் சிந்திக்க அவன் தயாராக இல்லை. அவனுடைய ஒரே டார்கெட்... யாழினி.

முடிவு வெளியானது. ஈஸ்வர் எதிர்பாராதவிதமாக,  அபிமன்யு வெற்றி பெற்றிருந்தான். எல்லாவற்றிற்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவன் மிகக் குறைந்த தொகையை கோட் செய்திருந்தான். யாரும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு குறைந்த தொகையாக அது இருந்தது. நிச்சயம் அபிமன்யுவிற்கு அதில் எந்த லாபமும் இருக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து,  அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள். ஃபேஷன் உலகின் முடிசூடா மன்னனாக வலம் வரும் அபிமன்யு,  இப்படி ஒரு டீலை ஏன் எடுத்தான் என்பது அவர்களுக்கு புரியவில்லை.

ஒருவருக்கு ஒருவர் கிசுகிசுத்துக் கொண்டும் முணுமுணுத்துக் கொண்டும் அந்த ஹாலை விட்டு கலைய ஆரம்பித்தார்கள்.

ஈஸ்வர் வலிய சென்று அபிமன்யுவின் முன் நின்றான்.

"நான் உன்னை  ரொம்ப புத்திசாலினு நெனச்சேன். ஆனா,  எந்த புத்திசாலி நஷ்டத்தை கொடுக்கக்கூடிய ஒரு குறைந்த தொகையை கோட் செய்வான்? " என்றான்.

" வெற்றி அப்படிங்கறது,  ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். அதே மாதிரி தான் நஷ்டமும். ஒருத்தருக்கு நஷ்டம் கொடுக்கிறது, அடுத்தவனுக்கும்  நஷ்டத்தை தான் கொடுக்கணும்னு அவசியமில்ல. எனக்கு என்ன தேவையோ,  அது எனக்கு கிடைச்சாச்சு. என்னோட அணுகுமுறை வித்தியாசமா இருக்கலாம். ஆனா,  நிச்சயமா நான் எதையும் இழக்கமாட்டேன். என்னை  இங்க பார்த்தபோதே,  நீங்க அதை புரிஞ்சிருக்கணும். என்னோட டார்கெட் இந்த டீல் இல்ல. உங்களை இந்த டீலை எடுக்க விடாமல் தடுக்கிறது தான்"

சாதாரணமாக கூறினான் அபி.

"நீ ரொம்ப தப்பு பண்ணிட்ட அபிமன்யு. என்னுடைய அனுபவத்தை பத்தி உனக்கு தெரியாது"

"ஆமா ஆமா...  டில் உங்களுக்குனு முடிவாகாத முன்னாடியே,  எல்லாத்தையும் அட்வான்ஸா  புக் பண்ணி வச்சிருகும் போதே தெரியுது,  நீங்க எப்படிப்பட்ட அனுபவசாலினு"

"போதும் நிறுத்து. நீ எடுத்துவச்ச  அடி ரொம்ப தப்பானது"

"தப்பான அடிகளை,  தப்பான அடிகள் மூலமாகத்தான் சரி செய்ய முடியும். நான் எப்பவுமே உங்க வழியில் குறுக்கிட்டது கிடையாது. ஒருவேளை நீங்க என் சொத்தை பறிச்சிருந்தா கூட,  அதை பத்தி கவலை பட்டிருக்க மாட்டேன். ஆனா நீங்க என்னோட லைப் டைம் டீல்ல  கை வச்சுட்டீங்க"

அவன் அங்கிருந்து கிளம்ப இரண்டு அடிகள் எடுத்து வைத்து,  மறுபடியும் தன்னுடைய முந்தைய இடத்திற்கே வந்து நின்றான்.

"ஒரு விஷயம் சொல்லணும். நீங்க உங்களுடைய ஆட்களை கண்மூடித்தனமாக நம்பியிருக்கக் கூடாது. ஏன்னா,  அவங்க உங்ககிட்ட கொடுத்த இன்பர்மேஷன்ஸ் எல்லாமே நான் உங்களுக்கு கொடுக்க சொன்னது. ஃபேப்ரிக் மெட்டீரியல் டாக்ஸ் அதிகமாகும்ன்னு சொன்னது உண்மை இல்லை. உண்மைய சொல்லப் போனா,  இந்த பட்ஜெட்டில் அதெல்லாம் ரொம்ப கம்மியாக போகுது. ஸோ,  டெக்னிக்கலி,   இந்த டீல் எனக்கு சக்சஸ் தான். உங்களுடைய நாட்களை என்ன ஆரம்பிச்சுடுங்க. உங்கள நான் நிச்சயம் பிச்சை எடுக்க வைக்காம விடமாட்டேன்".

அபிமன்யுவின் கடைசி வரிகள் கிரீஷை விக்கச் செய்தன. தன்னுடைய அப்பாவை பிச்சை எடுக்கும் நிலையில் கற்பனை செய்த போது...

"உங்க அப்பாவ  இப்படி எல்லாம் நினைச்சு பார்க்க கூடாது" என்று அவன் அருகில் நின்றிருந்த அமர் சீரியஸாக சொல்ல,

நான் மனசுல நெனச்சது உனக்கு எப்படி தெரியும் என்ற தொனியில், அமரை அதிர்ச்சி பார்வை பார்த்தான் கிரிஷ்.

களுக் என்று ஒரு சிரிப்பை உதிர்த்து அபிமன்யுவை பின்தொடர்ந்தான் அமர்.

*சாந்தி நிலையம்*

நீச்சல் குளத்தின்  தெளிந்த நீரில்,  தனது பார்வையை ஓட்டிக் கொண்டிருந்த,  அபிமன்யூ நினைத்தான்,  எப்போது தன்னுடைய வாழ்க்கையும் இதுபோல தெள்ளத்தெளிவாக மாறும் என்று. அப்போது அஞ்சலி அங்கு வந்தாள்.

"சின்னா நாளைக்கு... "
அவள் முடிக்கும் முன் தொடர்ந்தான் அபி

"யாழ்ழ்னியோட பர்த்டே... "

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. அவ எல்லா வருஷமும் வர்றது போலவே இந்த வருஷம் நம்ம வீட்டுக்கு வருவானு  நீ நினைக்கிறாயா? "

"நிச்சயமா வருவானு  நினைக்கிறேன் கா"

நம்பிக்கையுடன் சொன்னான் அபி.

"அவளுக்கு பிரச்சினை ஏற்பட்றா மாதிரி எதுவும் செஞ்சிடாத,  சின்னா"

"என் மேல நம்பிக்கை இல்லையா கா?"

"நிச்சயமா இல்ல. நான் என் தம்பிய நம்புவேன். ஆனா,  நிச்சயமா யாழினியோட மாமாவ நம்பவே மாட்டேன்."
களுக்கென்று அஞ்சலி சிரிக்க,  அபிமன்யு தனது கண்களை சுழல விட்டான்.

"என்ன பத்தி தான் உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கே,  அப்புறம் எதுக்கு வந்து எனக்கு அட்வைஸ் பண்றீங்க? " என்று சிரித்தான் அபி.

"நீ ஏதாவது செய்றியா,  இல்லையான்னு,  கன்ஃபார்மா தெரிஞ்சுக்கறதுக்கு தான் வந்தேன். ஒருவேளை நீ எதுவுமே செய்யாம,  எந்த முயற்சியும் எடுக்காம இருந்துட்டா என்ன பண்றது?  அதுக்கு தான். "

அவள் சொன்னதைக் கேட்டு வாய் விட்டு சிரித்தான் அபி.

"முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும்,  சின்னா. அப்பதான் ஏதாவது கண்டிப்பா கிளிக் ஆகும். "

"ரொம்ப நல்ல அக்கா,  ரொம்ப நல்ல தம்பி". என்றான் அங்கு வந்த ஷாம் சிரித்துக்கொண்டே.

அஞ்சலி பல்லைக் காட்டிக் கொண்டு தலையை சொறிந்தாள்.

"கண்டிப்பா,  எங்க அக்கா இந்த மாதிரி இல்லைப்பா. அவங்க ஒரு கிரிமினல் லாயர் கூட சேர்ந்து தான் இப்படி ஆயிட்டாங்க" என்று ஷியாமுக்கு   கவுண்டர் கொடுத்தான் அபி.

"பாரு,  உன் தம்பி சான்ஸ் கிடைச்சா என்னை  கலாய்க்காம இருக்க மாட்டேங்குறான்". என்றான் ஷ்யாம்.

"ஏன்னா,  அவன் என் தம்பி" என்று அவன் தோளில் கையைப் போட்டுக் கொண்டு சொன்னாள் அஞ்சலி.

"ரொம்ப நாளைக்கப்புறம் நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு சந்தோஷமா சிரிக்குறதையும்,  கிண்டலடிப்பதையும் பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? "என்று உணர்ச்சிவசப்பட்டான் ஷாம்.

அக்கா தம்பி இருவரும் ஒருவரை ஒருவர் சினேகமாக பார்த்துக் கொண்டனர்.

"எனக்கு உங்களோட உதவி வேணும்,  மாமா" என்றான் அபி.

"தயாரா இருக்கேன்" என்றான் ஷ்யாம்.

அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கிக் கூறினான் அபி.

"ஆனால் இவ்வளவு சீக்கிரம் ஏன்?" என்றான் ஷ்யாம்

"சரியான நேரத்திற்காக நான் காத்திருக்க முடியாது,  மாமா. ஏன்னா,  எது,  எப்ப நடக்கும்னு சொல்ல முடியாது. எந்த நேரமும் நான் தயாரா இருக்கணும்னு நினைக்கிறேன்". என்றான்

அபி சொல்வது சரிதான். அவன் எப்போதுமே முன்னெச்சரிக்கையுடன் செயல்படுபவன் என்பது ஷாமுக்கு தெரியாததல்ல.

"வேலை முடிஞ்சுதுனு நினைச்சுக்கோ". என்றான் ஷ்யாம்

*ஆதிகேசவன் இல்லம்*

யாழினி, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளுடைய ரூமில் இருந்த லேண்ட் லைன் போன் சத்தமிட ஆரம்பித்தது. தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தாள் யாழினி. அவளுக்கு நிலைமை புரிய சிறிது நேரம் எடுத்தது. போனை எடுத்தவள் தூக்கக்கலக்கத்தில், 

"ஹலோ" என்றாள்.

"யாழ்ழ்னி... "

"அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது,  அபியின் குரலை கேட்ட போது.

"மாம்ஸ்ஸ்...  எதுக்கு இந்த நேரத்துல போன் பண்றீங்க?   எதுவும் பிரச்சினை இல்லையே" என்றாள்.

"யாராவது என்னை பாக்குறதுக்கு முன்னாடி,  நீ உன் ரூம் ஜன்னல் கதவைத் திறந்துடினா,  எந்த பிரச்சனையும் இல்லை". என்றான்

"என்ன?  என்று  கேட்டாள் யாழினி,  புரியாமல்.

"உன் ரூம் ஜன்னல் கதவை திற"

ஜன்னல் கதவை ஓடிச்சென்று திறந்தவள்,  அதிர்ச்சியில் உறைந்தாள்,  அபிமன்யுவை எதிரில் கண்டபோது. அபிமன்யு உள்ளே எகிரி குதித்தபோது,  அவள் வாயைப் பிளந்தாள்.

"இந்த அர்த்த ராத்திரியில் நீங்க,  இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? "

கடிகாரத்தை பார்தவன்,  மணி சரியாக பன்னிரண்டை தொட்ட போது, தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு டப்பாவை எடுத்து,   அதை யாழினியிடம் நீட்டிக்கொண்டு,

" ஹாப்பி பர்த்டே" என்றான்.

யாழினியால் நம்பவே முடியவில்லை. பிறந்தநாள் வாழ்த்தை கூறுவதற்காக,  ஒருவன் இவ்வளவு தூரம் துணிவான் என்று. அதே அவநம்பிக்கையுடன் அவனைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த போது,  அபி அவள் கன்னத்தில் லேசாகத் தட்டி,

"என்ன யோசிக்கிற? " என்றான்

"அம்மா சொன்னாங்க இன்னைக்கு என்னோட பிறந்த நாள்னு.  நான்தான் மறந்து போயிட்டேன்."

அபி கொடுத்த சிறிய டப்பாவை திறந்தபோது,  அதில் ஒரு செயின்,  ஹார்டின் பெண்டண்ட்டுடன்  இருந்தது.

"வாவ்... இது ரொம்ப அழகா இருக்கு" என்றாள்

"உனக்கு பிடிச்சிருக்கா? "

"ரொம்பப..."

சற்றே நிறுத்தி அவள் தொடர்ந்தாள்...

"இந்த மாதிரி தான் எனக்கு எப்பவுமே பர்த்டே கிஃப்ட் கொடுக்கிற வழக்கமா? "

"இந்த மாதிரி,  நான் உனக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்கிறது,  இதுதான் முதல் தடவை. ஏன்னா,  உன்னோட ஒவ்வொரு பிறந்த நாளுக்கும்,  நீ சாந்தி நிலையத்தில் தான் இருப்ப."

"பர்த்டே விஷ் பண்றதுக்காக,  யாராவது இவ்வளவு ரிஸ்க் எடுப்பாங்களா?"  என்று விழிவிரிய கேட்டாள்  யாழினி.

"மத்தவங்கள பத்தி எனக்கு தெரியாது. ஆனா,  நான் இப்படித்தான். அதுவும்,  இதுல எதுவும் பெருசா ரிஸ்க் இருக்குறா மாதிரி எனக்கு தெரியல." என்று கூலாக சொன்னான் அபி.

"இந்த மாதிரியான ஸ்டன்ட் எல்லாம் நான் சினிமாவில் மட்டும் தான் பாத்திருக்கேன். இப்படி சினிமா ஹீரோ மாதிரி வந்து பர்த்டே விஷஸ் சொல்லுவீங்கன்னு,  நான் கனவுல கூட நினைச்சு பார்க்கலை" என்று சிரித்தாள் யாழினி.

களுக்கென்று சிரித்தவன்,

"சரி நீ உன் தூக்கத்த கண்டின்யு பண்ணு."

என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தவனை,  கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினாள்  யாழினி.

"என்ன? " என்பது போல அவளை பார்த்தான் அபி

"தேங்க்யூ.... தேங்க்யூ ஃபார் எவரிதிங்"  என்றாள்.

தனக்குள் பொங்கி எழுந்த உணர்வுகளை கட்டுபடுத்தி,  அவள் கையில் இருந்த செயினை எடுத்தவன்,  அவளுடைய கண்களைப் பார்த்தபடி,  அவள் கழுத்தில் அணிவித்து,  அவள் நெற்றியில் தன் இதழ் பதித்தான்,  யாழினியை அதிர்ச்சி கடலில் அமிழ்த்தி.

"பை"

என்று தன் உதட்டோர புன்னகையுடன் கூறிவிட்டு,  யாழினியை கட்டுக்கடங்காத இதயத்துடிப்புடன் விட்டுச் சென்றான் அபிமன்யு.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top