Part12
பாகம் 12
"உங்களுக்கு ரெட் கலர்னா ரொம்ப பிடிக்குமா? "
யாழினி அவனைக் கேட்ட போது கண்களை இறுக மூடிக் கொண்டான். எப்போதும் போல, அவன் பகல் கனவு காணவில்லை. அவள் உண்மையாகவே அவன் முன் நிற்கிறாள். அதை அறியாமல் எல்லாவற்றையும் உளறிக்கொட்டிய, தன் முட்டாள்தனத்தை தானே நொந்து கொண்டான் அபி.
சுதாரித்துக் கொண்டவனாய், சிரிப்புடன் திரும்பினான்.
"எனக்கு ரெட்னா ரொம்ப பிடிக்கும்" என்றான் இயல்பாக.
"நம்ம ரெண்டு பேரும் ரொம்ப குளோஸ்ஸா? "
என்றவளுக்கு, ஆமாம் என்று தலையசைத்தான் அபி.
" எனக்கு அது தெரியுமே... இங்க பாருங்க".
அவள் தான்னுடைய ஃபோனை அவனிடம் காட்டினாள். முகத்தில் ஒரு புன்னகையோடு, அபியின் முகம் ஒளிர்ந்தது. அவனுக்கு சந்தோஷத்தில் துள்ளி குதிக்க வேண்டும் என்று தோன்றியது.
"இதை நீ ஓபன் பண்ணி, செக் பண்ணி பாத்தியா? " என்றான்.
"எத செக் பண்ண சொல்றீங்க? "
"இதுல நீ எதையுமே பார்க்கலையா? "
"எதையுமேனா? "
"போட்டோஸ், ஃபைல்ஸ் ஏதாவது....? "
"ஆனா, அதுல எதுவுமே இல்லையே"
அபி அவள் கையில் இருந்து ஃபோனை பிடுங்காத குறையாக வாங்கி, ஆராய்ந்து பார்த்ததில் அதில் எதுவுமே இல்லை... அவனுடைய ஏமாற்றத்திற்கும் அளவில்லை...
"இந்த ஃபோன் உனக்கு எங்கே கிடைச்சது? "
"அப்பாவோட பீரோவில் இருந்து எடுத்தேன்"
அவன், அவளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு திரும்பி, தன்னுடைய பற்களை நறநறவென்று கடித்தான். கடைசியாக அவனுக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் தூள் தூளானது.
அப்போது அங்கு வந்த அஞ்சலி,
"யாழினி, நீ எப்போ வந்த? நீ வந்ததை நான் பார்க்கவே இல்லையே?"
என்றாள்.
"ஆமாக்கா, நான் வந்தபோது வீட்ல யாருமே இல்ல. அதனால தான் தேடிக்கிட்டு வந்தேன். பார்த்தா இவரு அப்பதான் தூங்கி எழுந்தார். "
அஞ்சலி, அபியின் கையிலிருந்த, யாழினியின் ஃபோனை பார்த்து முகம் மலர்ந்தாள்.
"உன்னோட ஃபோன் கிடைச்சிருச்சா? "
"ஆமாக்கா, அப்பாவின் பீரோவில் இருந்து எடுத்தேன்."
அஞ்சலியின் முகம் மாறிப் போனது. அபியின் முகத்தை பார்த்த மாத்திரத்திலேயே அவளுக்கு புரிந்து போனது என்ன நிகழ்ந்திருக்கும் என்பது.
"சின்ன்ன்னா.... "
மெதுவாக அவன் தோளை தொட்டாள்.
"இது, வெறும் ஃபோன் தான்கா... வேற எதுவும் இல்லை"
"வேற எதுவுமே இல்லனா என்ன அர்த்தம்? " கேட்டாள் யாழினி.
"அக்கா, நீங்க அவள கூட்டிகிட்டு போங்க. நான் குளிச்சிட்டு வறேன். நீ இந்த ஃபோனை எடுத்த இடத்துலயே திரும்ப வச்சிடு" என்றான் யாழினியிடம் அபி.
"ஆனா ஏன்? "
"இல்லன்னா உங்க அப்பா ரொம்ப வருத்தப்படுவார்" ஊன்றிய பார்வையுடன் சொன்னான்.
"ஓ... ஓகே ஓகே".
அஞ்சலி, யாழினியுடன் வெளியேறினாள்.
*வரவேற்பறை*
"இன்னிக்கு சண்டேங்கறதுனால, நீங்க எல்லாரும் வீட்ல இருப்பீங்கன்னு தெரியும். அதனாலதான் உங்க கூட சேர்ந்து, ஏழு கல் விளையாட வந்தேன்".
ஒவ்வொருவரும், ஒருவர் முகத்தை ஒருவர் விசித்திரமாக பார்த்துக் கொண்டார்கள்.
"இது நல்ல ஐடியாவா இருக்கே. நாங்களும், சாப்பிட்டு வீட்ல உக்காந்து, போரடிச்சி, போயிருக்கோம். வாங்க விளையாடலாம். "
என்று உற்சாகமாக சொன்னான் நந்தா.
"ஓகே நானும் ரெடி" என்றாள் லாவண்யா.
"ஆனா, நீ புடவை கட்டிட்டு எப்படி விளையாடுவே?" என யாழினியை பார்த்து கேள்வி எழுப்பினாள் அஞ்சலி.
"பரவால்லகா. அது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை".
மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தான் அபி, அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு.
"என்ன விளையாட போறீங்க?"
"போறீங்க இல்ல... போறோம்... "
என்றான் அஜய்.
"என்ன? " விசித்திரமாய் பார்த்தான் அபி.
"நம்ம கூட சேர்ந்து, ஏழுகல் விளையாட வந்திருக்கா யாழினி". என்றான் அஜய்.
"என்னது, ஏழு கல்லா?" முகத்தை சுருக்கினான் அபி.
"மச்சானுக்கு விளையாட இன்ட்ரஸ்ட் இல்ல போலருக்கு."
என்று சீண்டினான் ஷாம்.
"நான் எந்த டீம்? " புன்னகை புரிந்தான் அபி.
"வாவ்... இது உண்மையாவே செம ஜாலியா இருக்க போகுது. பெண்கள் டீம், ஆண்கள் டீம், எப்படி ஐடியா? " என்றான் நந்தா.
"சுத்த மோசம். டீம்னு இருந்தா, சமமா இருக்கணும். பொம்பளைங்களுக்கு எதிரா ஆம்பளைங்க எப்படி விளையாடுறது? " கேட்டான் அபி.
"ஒன்னும் பிரச்சனை இல்ல. நாங்க விளையாடுவோம்." என்றாள் யாழினி.
"ஆமாம் ஒன்னும் பிரச்சனை இல்லை." அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
அபியை சற்று தூரமாக தள்ளி கொண்டு சென்றான் நந்தா. அவனுடைய காதில் ரகசியம் உரைத்தான்.
"தயவுசெய்து, காரியத்தை கெடுத்துடாத. இந்த மாதிரி ஒரு சான்ஸ், என் பொண்டாட்டிய அடிக்க மறுபடி கிடைக்காது." என்றான்.
"கொஞ்சம் கூட வெக்கமே இல்லயா உனக்கு? பொம்பளைய போயி அடிக்கிறேன்னு சொல்ற? "
அவனை முறைதான் அபி.
"அவங்களே ஒத்துக்கிட்டாங்க, உனக்கு என்ன பிரச்சனை? "
"வாங்க விளையாடலாம்"
அழைத்தாள் யாழினி.
"நெஜமாத்தான் சொல்றியா? உனக்கு ஓகேவா? "என்றான் அபி
"ஆமா, எங்களுக்கு ஓகே.
பெண்கள் அணி தயார்.
நந்தாவின் திட்டத்தின்படி, அதிக அடிகளை பெற்றது லாவண்யா தான். ஆனால் எதிர்பாராத திருப்பமாக, அவளிடமிருந்து நந்தாவும் சரியான அடி வாங்கினான்.
ஆறு கற்களை அடுக்கிய பின்பு, கடைசிக் கல்லை வைத்து ஆட்டத்தை முடிக்கும் வாய்ப்பு யாழினிக்கு கிடைத்தது. அவள், வைப்பதற்கு முனைந்த போது, எதிர்பாராத விதமாக அவளுக்கு விழ இருந்த அடியில் இருந்து காப்பாற்றி, அந்த அடியை தனது முதுகில் வாங்கிக்கொண்டான் அபி.
"யாழ்ழ்னி சீக்கிரம் முடி" என்று கத்தவும் செய்தவனை, அனைவரும் ஒரு விசித்திர ஜந்துவை போல் பார்த்தார்கள்.
யாழினி ஆட்டத்தை முடித்துவிட்டாள்.
"அவன் எந்த டீம்னு மறந்துட்டானு நினைக்கிறேன்". என்றான் நந்தா.
"இது கூதல் ஆட்டம். சேம் சைட் கோல்". என்றான் அஜய்.
"விடுங்கப்பா, அவன பத்தி நமக்கு தெரியாதா? என்னமோ இதெல்லாம் எதிர்பார்க்காத மாதிரி, நீங்க எல்லாரும் சேர்ந்து சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க?" என்று அபிக்கு வக்காலத்து வாங்கினான் ஷாம்.
"அதானே? யாழினிய, சின்னா தோக்க விடுவானா? என்ன சின்னா... நான் சொல்றது சரிதானே? " வழக்கம்போல் அவனை சீண்டினாள் அஞ்சலி.
"அக்கா, போதும் ப்ளீஸ்.. "
"தேங்க்யூ சோ மச். எப்பவுமே, இப்படிதான் எனக்கு ஹெல்ப் பண்ணுவீங்களா? " ஆவலாய் கேட்டாள் யாழினி.
"இல்ல. நான் இப்படி செய்றது இது தான் முதல் தடவை. ஏன்னா, நாம ஆப்போசிட் டீம்ல எப்பவும் விளையாடியது கிடையாது. "
அப்போது அபியின் போன் ஒலித்தது. பேசத் துவங்கிய சில நொடிகளிலேயே அவனின் முகம் வெளிறிப் போனது. அவனுடைய திடீர் மாற்றம் அங்கு இருந்த ஒவ்வொருவரையும் பதற்றமடைய செய்தது.
அதேநேரம் கோவிலுக்கு சென்றிருந்த பாட்டி, வீட்டிற்குள் நுழைந்தார்.
"அட யாழினி கண்ணு, நீ இங்கேயா? அதுவும் புடவை கட்டிகிட்டு ரொம்ப அழகா இருக்கியே.. "
"அவ கல்யாணத்துக்காக தயாராயிகிட்டிருக்கா, பாட்டி"
பல்லைக் கடித்துக் கொண்டு கோபமாக கூறினான் அபி.
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி. ஆனா உங்களுக்கு எப்படி தெரியும், எனக்கு கல்யாணம் ஆகப் போகுதுன்னு?"
அவளுடைய பதில் அங்கிருந்த ஒவ்வொருவரையும் அடியோடு புரட்டிப் போட்டது.
"என்னது? கல்யாணமா? என்ன சொல்ற நீ." அதிர்ச்சியாய் கேட்டாள் அஞ்சலி.
"அவளுக்கு, கிரீஷோட கல்யாணம் பேசியிருக்காங்கக்கா" என்றான் அபி.
"அம்மா சொன்னாங்களா? நேத்து தான் அவங்க எங்க வீட்டுக்கு வந்து கல்யாணத்த பத்தி பேசிட்டு போனாங்க".
என்றுமில்லாத கோபத்துடன், அவளை எப்போது வேண்டுமானாலும் விழுங்கி விடும் தோற்றத்துடன் நின்றிருந்தான் அபி.
"நீ ஒத்துகிட்டியாமா? " ஷாம் பதற்றத்துடன் கேட்டான்.
"இல்லை. இன்னும் ஒத்துக்கல. அவங்ககிட்ட நான் கொஞ்சம் டைம் கேட்டிருக்கேன். அவங்க ஒத்துகிட்டாங்க. ஆனா, எனக்கு கிரிஷை ரொம்ப பிடிச்சிருக்கு".
அபிக்கு, கிரிஷின் முகத்தில் விடாமல் குத்த வேண்டும் போல் தோன்றியது.
சற்று நேரத்திற்கு முன் கலகலப்பாக இருந்த இல்லம், இப்போது மயானம் போல் காட்சியளித்தது. ஈஸ்வருக்கு ஆதிகேசவனுடனிருக்கும் நட்பு பற்றி அவர்கள் அறியாததல்ல. அவர்களுடைய பதற்றமெல்லாம் அபியை பற்றித்தான். அவன் கோபத்தில் ஏதும் செய்து விடாமல் இருக்க வேண்டும். அவனுடைய முகத்தை பார்க்கும் போது, அவனிடம் பேச வேண்டும் என்ற தைரியம் கூட யாருக்கும் ஏற்படவில்லை.
"இத பத்தி நீ ஏன் முன்னாடியே சொல்லலை?" பல்லை கடித்துக் கொண்டு கேட்டான் அபி.
"அது ஒரு பெரிய விஷயமா என்ன? " என்று தோளை குலுக்கினாள் யாழினி.
"ஆமா, அது முக்கியம்தான். "
அபியின் கோபத்தை பார்த்து மிரண்டு போனாள் யாழினி. முதல் முறை அவனை அவள் அப்படி பார்கிறாள். அவள் ஏதும் அறியாதவளாய் குழப்பத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டு நின்றாள். ஷாம், அபியின் தோளை அழுந்தப் பற்றி, அவனுக்கு கண்ணால் சமிக்ஞை செய்தான், அவளுடைய முகத்தை பார்க்க சொல்லி. அபி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
"நீ எப்படி இதுக்கு ஒத்துகிட்ட? கடந்த காலத்தை பத்தி உனக்கு எதுவுமே நிச்சயமாக தெரியாதப்போ, எப்படி சம்மதிச்ச? இது உனக்கு பைத்தியக்கார தனமா தெரியலையா?" தன் கோவத்தை கட்டுபடுத்திக் கொண்டு கேட்டான் அபி.
"நான் இன்னும் ஒத்துக்கல. ஆனா, அவங்க குடும்பத்தை சந்திசதுல என்ன தப்பு இருக்குனு எனக்கு தெரியல"
"நான் உனக்கு மொபைல் வாங்கி கொடுறேன்னு சொன்னப்ப, அதுக்கு அவ்வளவு விளக்கம் கொடுத்த... இப்ப கல்யாணம் பண்ணிக்கிறது உனக்கு சாதாரணமா இருக்கா? இது பைத்தியக்கார தனம் இல்லையா?"
"நான், எங்க அப்பா மனச கஷ்டப்படுத்த வேண்டாம்னு தான் அப்படி செஞ்சேன்".
அதை கேட்டு மென்று முழுங்கினான் அபி.
"யாழினிகண்ணு, இது விளையாட்டு இல்லடா. உன்னோட வாழ்க்கை. நீ நம்புரியோ, இல்லையோ, எங்களுக்கு உன் மேல ரொம்ப அக்கறை இருக்கு" என்றார் பாட்டி.
"எனக்கு தெரியும் பாட்டி. அம்மாவும் இதையே தான் சொன்னாங்க".
"அத்தை என்ன சொன்னாங்க" ஆவலாய் கேட்டாள் அஞ்சலி.
"அவங்களுக்கும் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. அதை அவங்க வெளிப்படையாக சொல்லல, ஆனா அவங்களுக்கு பிடிக்கலனு எனக்கு தெரியும். "
அவளுடைய அந்த பதில் அவர்களுக்கு மிகுந்த ஆறுதலை அளித்தது. மஹாவை பற்றி அவர்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. அபியின் இடத்தில், அவள் வேறு யாரையுமே வைத்து பார்க்க விரும்ப மாட்டாள் என்பதை அவர்கள் தெரிந்து தான் இருந்தார்கள்.
"எனக்கு முக்கியமான வேலை இருக்கு. நான் கொஞ்சம் வெளியில போகணும். " என்றான் அபி.
அவர்களுக்கு தெரியும் அவன் எந்த வேலையைப் பற்றிக் கூறுகிறான் என்று. அனைவரும் பதட்டமானார்கள்.
"என்னை வீட்ல விட முடியுமா?
என்று கேட்ட யாழினி பார்த்து தலையசைத்தான் அபி. அனைவரிடமிருந்தும் விடைப் பெற்றுக் கொண்டு அபியை பின் தொடர்ந்தாள் யாழினி.
தொடரும்....
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top