Part 8

பாகம் 8

ஆதிகேசவன் தன் அறையின் வாசலில் நிற்பதை பார்த்து,  அவசரமாக கட்டிலை விட்டு கீழே இறங்கினாள்  யாழினி.

"நான் உள்ளே வரலாமாடா? " அன்பாக கேட்ட ஆதிகேசவனை  ஆச்சரியமாக பார்த்தாள் யாழினி.

"என்னோட ரூமுக்குள்ள வர நீங்க பர்மிஷன் கேட்க வேண்டிய அவசியமில்லைபா".

ஆதிகேசவன் சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தார்.

"இன்னும் நீ என் மேல கோவமா தான் இருக்கியா?"

"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லப்பா"

"எனக்கு தெரியும்டா. நான் செஞ்சது தப்புதான். ஆனா, நான் உன் நல்லதுக்காகத்தான் செஞ்சேன்."

"பரவாயில்லைபா. அதெல்லாம் விடுங்க. என்னால புரிஞ்சுக்க முடியுது."

"இல்லம்மா. நீ என்கிட்ட சொன்னது எதுவுமே தப்பு கிடையாது. அதனால தான் நான் ஒரு விஷயத்தை யோச்சிருக்கேன். நான் சொல்றத நிதானமா கேளு. உனக்கு பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன். உன்னோட விருப்பம் எதுவா இருந்தாலும்,  நீ என்கிட்ட தாராளமா சொல்லலாம்."

"சாரிப்பா. அன்னைக்கு நான் உன்கிட்ட அப்படி நடந்திருக்க கூடாது. நீங்க என்கிட்டே எதா இருந்தாலும் சொல்லலாம்."

"நீ சொன்ன மாதிரியே,  உன்னோட கடந்த காலத்தை உன்னோட கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தலாம்ங்குற முடிவுக்கு நான் வந்திருக்கேன். உனக்கு தெரியும்,  என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஈஸ்வர் பத்தி.  நாங்க ரெண்டு பேரும் பார்ட்னர் மட்டும் கிடையாது,  ரொம்ப நெருங்கின ஃபிரிண்ட்ஸ். அதேமாதிரி அவனோட பையன் கிரிஷும்,  நீயும்  ரொம்ப க்ளோஸ். நானும் ஈஸ்வரும்,  உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும் பேசி வைச்சிருந்தோம். ஆனா உன்னோட ஆக்சிடென்ட்டுக்கு அப்புறம் நாங்க அதை பற்றி யோசிக்கல. உன்னுடைய மனோநிலையை பற்றி யோசிச்சி நாங்க அதைத் நிறுத்தி வச்சிருந்தோம். ஆனா இப்ப உன்னை பாக்கும் போது,  எனக்கு எதையும் நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு தோணுது. எல்லாமே உன்னோட விருப்பம் தான். எந்த கட்டாயமும் கிடையாது. உனக்கு கிரிஷை  நிச்சயம் பிடிக்கும்."

யாழினி அவரை அதிர்ச்சியாக பார்த்தாள்.

"அப்பா,  நீங்க சீரியஸா தான் சொல்றீங்களா?  என்னுடைய மெடிகல் கண்டிஷன் என்னன்னு உங்களுக்கு தெரியாதா?"

அதிர்ச்சியாக கேட்டாள்  யாழினி.

"எனக்கு மட்டுமல்ல,  ஈஸ்வர் குடும்பத்துக்கும்,  உன்னோட மெடிகல் கண்டிஷன் நல்லாவே தெரியும். இதை பத்தி நான் ஏன் சொல்றேன்னா கிரிஷும்,  நீயும்,  நல்ல பிரண்ட்ஸ். அதனால,  உனக்கு,  உன்னோட நினைவு திரும்ப வந்தாலும் கூட,  உன்னோட வாழ்க்கைல எந்த பிரச்சினையும் ஏற்படாது. அதனால,  நீ அவனை தைரியமா கல்யாணம் பண்ணிக்கலாம். என்ன நம்பு டா. "

"சரிங்கப்பா. இதுல எந்த கட்டாயமும் இல்லை அப்படின்னு நீங்க சொல்றதால,  இதுக்கு நான் ஒத்துக்குறேன். நான் அவங்களை சந்திக்க சம்மதிக்கிறேன். "

ஆதி கேசவனின் முகத்தில் வெற்றிப் புன்னகை தாண்டவமாடியது.

*ஈஸ்வர் வில்லா*

"என்னது?  எனக்கும் யாழினிக்கும் கல்யாணமா?"  அதிர்ச்சியாக கேட்டான் கிரிஷ்.

"எதுக்கு இவ்ளோ அதிர்ச்சியாகுற?  நியாயமா பார்த்தா,  நீ சந்தோஷம் தான் படனும். ஏன்னா அபியை  பழி தீக்க,  உனக்கு அற்புதமான சந்தர்ப்பம் கிடைச்சிருக்கில்ல?"

"என்னமோ உங்களுக்கு இதுல எந்த லாபமும் இல்லாத மாதிரி பேசுறீங்க? நான் இந்த கல்யானதுக்கு ஒத்துக்க மாட்டேன்".

"உன்னோட விருப்பத்தை  யாரும் கேட்கல. இது என்னோட ஆர்டர்."

"அட் லீஸ்ட்,  இந்த ஒரு விஷயத்திலாவது ஜெயிலர் மாதிரி இல்லாம, ஒரு  அப்பா மாதிரி நடந்துக்க முயற்சி பண்ணுங்க. "

"நீ என்ன வேணா நெனச்சுக்கோ. ஜெயிலர்னு  சொல்லு, ஹிட்லர்னு  சொல்லு,  எனக்கு அதைப்பற்றி எல்லாம் கவலையில்லை. "

"அதானே,  என்னை பத்தி நீங்க எப்போ கவலை பட்டீங்க? "
வெறுப்புடன் சொன்னான் கிரிஷ்.

"நான் அவன் கிட்ட பேசி புரிய வைக்கிறேன்"

என்ற வாக்கியத்தை கேட்டு இருவரும் திரும்பிய போது அங்கு ஈஸ்வரின் மனைவி லலிதா,  புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்.

"அம்மா நீங்களுமா? " என்றான் கிரிஷ்.

"அப்பா எது செஞ்சாலும்,  உன்னோட நல்லதுக்காக தான் செய்வார். யாழினியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு".

"நல்ல காலம். நீயாவது புரிஞ்சுக்கிட்டியே. அவனுக்கு சொல்லி புரிய வை."
சொல்லிவிட்டு ஆஃபீசுக்கு கிளம்பி சென்றார் ஈஸ்வர்.

"என்னமா இப்படி பண்ணிட்டீங்க?  உங்களுக்கு தெரியாதா?  யாழினியும்..."

"அபியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க. எல்லாருக்கும் தெரியுமே. ஆனா இப்போ அவ அதையெல்லாம் புரிஞ்சுக்குற நிலைமையில இல்லை."
லலிதா உண்மை நிலையை கூறினார்.

"ஆனா,  அபி இதை நடக்க விடுவானு நீங்க நினைக்கிறீர்களா?  கல்யாணப் பேச்சு பேசினது தெரிஞ்சாலே அவன் என்னை கொன்னுடுவான். கல்யாணத்தை பத்தி யோசிக்க கூட முடியாதுமா."
புலம்பினான் கிரிஷ்.

" அவன் குத்தின குத்த, நீ இன்னும் மறக்கவே இல்லை போல இருக்கு? " கிண்டலாக சிரித்துக்கொண்டே கேட்டார் லலிதா.

"அம்மா இது கிண்டல் பண்ற நேரம் இல்லை. "

"நீ கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. இந்த தடவை அபியால உன்னை ஒண்ணுமே பண்ண முடியாது. ஏன்னா யாழினி உன் கூட இருக்க போறா. அவ முன்னாடி அவன் நல்ல படியா நடந்துக்கனும்னு தான் நினைப்பான்."
லலிதா அவனுக்கு தைரியம் தந்தார்.

"ஆனா அம்மா.... "

"அபி, யாழினியை எந்த அளவுக்கு நேசிக்கிறான்னு எனக்கு நல்லாவே தெரியும். அவன் உயிரை விட்டாலும் விடுவேனே தவிர யாழினிய விடமாட்டான்".

"அம்மா,  நீங்க என்னை ரொம்ப குழப்புறீங்க. உங்களுக்கு அபியை பற்றி எல்லாமே தெரிஞ்சுருக்கு. ஆனா,  நான் யாழினியை  கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறீங்க. எனக்கு ஒன்னுமே புரியல".

"நீ யாழினியை  கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னா,  ஆதிகேசவன் இந்த கல்யாணத்த நிறுத்திடுவார்னு நினைக்கிறாயா?  நிச்சயமா இல்லை. அவர் வேற ஏதாவது ஒரு மாப்பிள்ளையை  கண்டிப்பா தேடுவார். யாழினி மாதிரி ஒரு நல்ல பொண்ணு,  தப்பான ஒரு ஆள் கிட்ட மாட்டிக்க கூடாது. "

"நீங்க யாழினியை காப்பாத்தணும்னு நினைக்கிறது சரிதான். ஆனா, அபிகிட்ட இருந்து என்னை யார் காப்பாதுறது?"

அவன் சலித்துகொண்டான்.

"நீ இவ்வளவு பயந்தாங்கோலியா இருப்பேன்னு நான் நினைச்சு கூட பாக்கல டா." சிரித்துக் கொண்டே கூறினார்  லலிதா.

"என் நிலைமை உங்களுக்கு கிண்டலா இருக்காம்மா?  எந்த அம்மாவாவது இந்த  மாதிரி சிரிப்பாங்களா?"

"நீதான சொல்லுவ,  நான் ஒரு வித்தியாசமான அம்மான்னு. எனக்கு நல்லா தெரியும் இந்த நேரமே,  அபி,  இந்த விஷயத்தைப் பத்தி கண்டிப்பாக தெரிஞ்சிகிட்டுருப்பான்.
அவன் தன்னோட அடுத்த அடியை எடுத்து வைக்க ஆரம்பிச்சும்  இருப்பான். "

"அம்மா எனக்கு ஒரு சந்தேகம். உங்களுக்கு நான் பிள்ளையா,  இல்லை அபியா?  எப்போ, அவனை பத்தி பேசினாலும்,  ரொம்ப பெருமையா பேசுறீங்களே... அவன் என்னை  அடிச்சு ரத்தம் வர வச்சிருக்கான்,  மறந்துடாதிங்க."

"நீ இன்னும் வளரணும் கண்ணா. அது நடந்தது எவ்வளவோ வருஷத்துக்கு முன்னாடி. நீ இன்னும் அதையே நெனச்சுக்கிட்டு இருக்க. அதுவும் நீ கண்டிப்பா ஒத்துகிட்டே ஆகணும்,  அன்னிக்கு நடந்த விஷயத்துல,  தப்பு உன்னோடது தான்."

"சரி. அப்ப எதுக்காக அபியோட பாட்டி கிட்ட போய்,  நீங்க,  எனக்காக சண்டை போட்டீங்க?"

"அதுக்கு என்ன பண்றது?  பையனோட முகத்துல இரத்தத்தை பார்த்தால்,  எல்லா அம்மாவும் அப்படித்தான் பண்ணுவாங்க. எந்த அம்மாவும் அப்படித்தான் ரியாக்ட் பண்ண முடியும். அபியோட கோவத்துல நியாயம் இருக்கத்தானே செய்தது?  அவன்  மேல தப்பு நிச்சயமா இல்லை".

"மறுபடியும்,  நீங்க,  அவனை புகழ ஆரம்பிச்சுட்டீங்க. எதுக்குமா அவன் உங்களுக்கு அவ்வளவு ஸ்பெஷல்?  மறுபடியும் சொல்லாதீங்க,  சரியான நேரம் வரும்போது உனக்கு நானே சொல்லுவேன்னு."
செல்ல கோபத்தை கட்டினான் கிரிஷ்.

"நிச்சயமா,  சரியான நேரம் வரும்போது,  அவன் ஏன் ஸ்பெஷல்னு,  நான் உனக்கு சொல்லுவேன். ஒரு விஷயம் தெரியுமா?  ஒருவேளை,  அபி உன்னுடைய இடத்திலிருந்து இருந்திருந்தா, அவன் ஏன்  எனக்கு ஸ்பெஷல்னு, இந்த நேரம் அவனே கண்டு பிடித்திருப்பான். உன்னை மாதிரி இருந்திருக்க மாட்டான்." மேலும் கிண்டலடித்து விழுந்து விழுந்து சிரித்தார் லலிதா.

"நான் ஏன் கண்டு பிடிக்கலைன்னா,  எனக்கு எங்கம்மா மேல நம்பிக்கை இருக்கு,  அவங்க எங்கிட்ட ஏதாவது ஒரு விஷயத்தை மறைச்சா,  அதுக்கு நிச்சயமாக ஒரு சரியான காரணம் இருக்கும்னு நான் நினைச்சேன். அது தப்பா?" தலையைச் சொறிந்துகொண்டு அசடு வழிந்தான் கிரீஷ்.

"ரொம்ப ஸ்மார்ட்டான பதில் தான்" அவன் தோளை தட்டினார் லலிதா.

"சரி நம்ம பாயின்ட்டுக்கு வருவோம். உங்களுக்கு எல்லாமே தெரியும். ஆனாலும்,  நான் கல்யாணத்துக்கு ஆமான்னு சொல்லணும் நீங்க நினைக்கிறீர்களா?

"நீ என் நம்புறியா இல்லையா? "

"எல்லாறையும்விட அதிகமா நம்புறேன்"

"அப்ப நான் சொல்றதை கேளு"

"ஓகே மா.  ஒன்று மட்டும் நிச்சயம். நீங்க கண்டிப்பா என்னோட வாயை வெத்தலைய போடாமலே சிவக்க வைக்கப் போறீங்க."

மனத்தை விட்டு சிரித்தார் லலிதா.

*சாந்தி நிலையம்*

அபி ஏதோ நிலை புரியாதவனாய் தவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு என்ன காரணம் என்று சரியாக புரியவில்லை. அவன் மனதை ஏதோ செய்தது. அப்பொழுது அவனுக்கு அமரிடம் இருந்து ஃபோன் வந்தது.

"சொல்லு அமர்"

"அபி...."அமர் தயங்கினான்

"என்ன விஷயம் சொல்லு"

"எனக்கு எதுவும் சரியா தெரியல...."

"எதுவாக  இருந்தாலும் முதல்ல சொல்லித் தொலைடா" கத்தினான் அபி.

"எனக்கு கிடைத்த இன்ஃபர்மேஷன் படி,  ஆதியும், ஈஸ்வரும் ஏதோ பெருசா பிளான் பண்ற மாதிரி தெரியுது. அது என்னனு எனக்கு நிச்சயமா தெரியல. ஆனா அது பிசினஸி டீல் இல்ல. "

"ம்ம்ம்...  என்ன பண்ணலாம்?"

"ஒரே ஒரு எஸ் மட்டும் சொல்லு,  போதும். "

"எதுக்கு?"

"இந்த விஷயம் சம்பந்தமா,  எது வேணா செய்வதற்கான பர்மிஷன். அத நான் உன்னோட மேனேஜரா கேட்கல,  ஒரு பிரண்ட்டா கேக்குறேன்".

"ஓகே ஆகட்டும்"

"தேங்க்யூ அபி. இந்த விஷயத்தை நான் பாத்துக்குறேன். "

அபி அமருடைய போன் காலுக்கு பிறகு,  முழுவதுமாய் தனது நிம்மதியை தொலைத்தான். அப்படி என்ன ஆதியும், ஈஸ்வரும் சேர்ந்து பெரிதாக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்?  அது எதுவாக இருந்தாலும் சரி,  அவன் தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாரானான். லலிதா சொன்னதுபோல...

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top