part 3
மகாவும், யாழினியும் சாந்திவனம் செல்ல தயார். அழகு பதுமையாய் ஜொலித்த, யாழினியை பார்த்த மாத்திரத்தில், சமையலறைக்கு ஓடிச் சென்று, பிடி அளவு உப்பை அள்ளி வந்து, யாழினிக்கு சுற்றிப் போட்டார், மஹா.
"இது கண்திருஷ்டிகாககத் தானே" யாழினி உதடு கடித்து சிரித்தாள்.
மஹாவும் சிரித்தபடி தலையசைத்தாள்.
"போகலாமா?" என்று கேட்ட மஹாவின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் யாழினி.
"ஏன்னே தெரியலம்மா, எனக்கு நெர்வஸா இருக்கு."
தன்னுடைய தயக்கத்தை வெளியிட்டாள் யாழினி.
"நான் தான் உன் கூட இருக்கேனே. உனக்கு அவங்களை நிச்சயம் பிடிக்கும் பாரேன்."
மஹா தைரியம் அளித்து அழைத்துச் சென்றார்.
*சாந்தி நிலையம்*
நேரம் நெருங்க நெருங்க சாந்தி நிலையம் சூடுடேறிக் கொண்டிருந்தது. யாருக்கும் உட்கார பிடிக்காமல், இங்கும் அங்குமாக திரிந்து கொண்டிருந்தார்கள்.
அபி மட்டும், வரவேற்பறையில் இல்லை. எல்லோரையும் விட அவனே அதிக பதட்டத்துடன் இருந்தான். ஆனால், இது அவனுக்கு நல்லதல்ல. அவன், கையும் களவுமாக பிடிபட வாய்ப்புள்ளது. அவன் தன்னை அசுவாசப்படுத்திக் கொள்ளத் தான் வேண்டும்.
அழைப்பு மணியின் ஓசை, அவன் இதய துடிப்பை பன்மடங்காக்கியது. அவன் இப்போது கீழேதளம் சென்றாக வேண்டும். ஒரு நொடியையும் அவனால் வீணாக்க முடியாது. நீண்ட பெருமூச்சை வெளியிட்டு, அவன் கீழ்தளம் நோக்கி விரைந்தான்.
அஞ்சலி ஓடோடி சென்று கதவை திறந்தாள். மனதிற்கினிய காட்சி அவள் கண் முன் விரிந்தது. நேர்த்தியான சுடிதாரில், மிக அழகாய் மஹாவுடன் நின்று கொண்டிருந்தாள் யாழினி. அடுத்த நொடி அஞ்சலி, கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன், யாழினியை ஆரத்தழுவிக் கொண்டாள். யாழினி அவளின் அணைப்பில் சற்று தடுமாறித்தான் போனாள். அவள் இது போன்ற ஒரு வெதுவெதுப்பான வரவேற்பை எதிர்பார்த்திருக்கவில்லை. அஞ்சலி தன்னை விடுவித்துக் கொண்டாள்.
"எப்படி இருக்க?" அஞ்சலி அன்பாக அவள் கண்ணம் தொட்டாள்.
"நான் நல்லா இருக்கேன். நீங்க?" பதில் கேள்வி கேட்டாள் யாழினி
"நான் நல்லா இருக்கேன். என் பேர் அஞ்சலி. உன்னோட அம்மா எனக்கு அத்தை."
"ஐம் சாரி. எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல. நீங்க யாருன்னு என்னால புரிஞ்சுக்க முடியல. ஐம் ரியலி சாரி." யாழின் குரலில் வருத்தம் தெரிந்தது.
"எனக்கு தெரியும். நீ எங்கள்ல ஒருத்தி. எங்களை விட உன்னை யாரால நல்லா புரிஞ்சுக்க முடியும்?"
அஞ்சலியின் இதமான பதிலிலிருந்து மீலும் முன், புயலால் தாக்கப்பட்டது போல உணர்ந்தாள் யாழினி.
லாவண்யா, பிரியா, நந்தா மூவரும் ஒன்று சேர அவளை கட்டி அணைத்தால் என்னவாவதாம்?
"எல்லோரும் சேர்ந்து அவளை ஜூஸ் பிழிஞ்சிடுவீங்க போல இருக்கே. அவ இப்படியே பயந்து ஓடிட போறா." அஞ்சலி களுக்கென்று சிரித்தாள்.
"ஹாய், நான் லாவண்யா. இது என் ஹஸ்பண்ட் நந்தகுமார்."
இதமாய் அவளை கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள், லாவண்யா.
எதிர்பாராத அந்த முத்தம் யாழினியை வெட்கமடையச் செய்தது.
"மை காட், யாழினி... வெட்கப்படறியா? கடவுளே, என்னால நம்பவே முடியல."
சிரித்த லாவண்யாவின் தோளை லேசாகத் தட்டினாள் பிரியா.
"சும்மா அவள டீஸ் பண்ணாத. ஹாய், நான் பிரியா."
தன்னை இயல்பாய் அறிமுகப் படுத்திக் கொண்டாள் பிரியா.
"ஹாய்" என்றாள் யாழினி.
அதேநேரம்...
"முதல்ல, அவள உள்ள வரவிடுங்க மத்ததை அப்புறம் பேசலாம்" அபி படிக்கட்டில் நின்றவாறு கூறினான். அவனது பார்வை யாழினியின் மீது தான் இருந்தது என்று சொல்ல தேவையில்லை.
கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத ஒரு உணர்வு... அஞ்சலியும், லாவண்யாவும் கட்டி அணைத்த போது ஏற்படாத ஒரு உணர்வு... முதன் முறையாக யாழினியின் மனதில் தோன்றியது. முதன்முறையாக, ரொம்பப் பழகிய யாரோ ஒருவர் முன் தான் நிற்பதாக உணர்ந்தாள் யாழினி.
"அபி, நீ வீட்ல தான் இருக்கியா? நீ ஆபீசுக்கு லீவு போட்டுடு வீட்டில் இருக்கிறத பார்க்கும்.போது எனக்கு ஆச்சரியமா இருக்கு." மகா அவனுக்கு வேலை மேல் இருக்கும் ஆர்வத்தை கோடிட்டுக் காட்டினார்.
"அதெப்படி? அவனோட பெஸ்ட்டி யாழினி வரும் போது அவன் எப்படி வேலைக்கு போவான்? எல்லா மீட்டிங்கையும் கேன்சல் பண்ணிட்டான்." பாட்டி, ஒரு படி மேலே சென்று, வேலையை விடவும் அவனுக்கு யாழினி முக்கியம் என்பதை கோடிட்டுக் காட்டினார்.
"யாழினி, இவங்க அஞ்சலி, அபிமன்யுவோட அம்மா பாட்டி."
பாட்டியை அறிமுகப்படுத்தினார் மகா. பாட்டியின் ஆசிர்வாதம் பெற, பாதம் தொட குனிந்தாள் யாழினி, ஆனால் பாட்டி அவளை தடுத்து நிறுத்தினார்.
"நீ வந்ததே எனக்கு போதும். வேற எதுவும் எனக்கு வேணாம்டா கண்ணு" பாட்டி அவளை உச்சி முகர்ந்தார்.
அபியின் முழு கவனமும் யாழினின் மீது மட்டுமே குவிந்திருந்தது.
"நம்மளோட விவிஐபி வந்தாச்சு. கேக் கட் பண்ணலாமா" அஜெய் அழைப்பு விடுத்தான்.
"அவன் கவலை அவனுக்கு. அவன் பொண்டாட்டிக்கு கேக்கை ஊட்டிவிட, எப்படி பறக்கறான் பாரு" நந்தா கிண்டலடித்தான்.
ப்ரியா, நந்தாவின் தோளில் பொய்க்கோபத்துடன் தட்டினாள்.
"உண்மைய தானே சொன்னேன் அண்ணி?" நந்தா கேட்க மெலிதாய் சிரித்தாள் பிரியா.
இது எல்லாவற்றையும் ஒரு புன்னகையோடு ரசித்துக் கொண்டிருந்தாள் யாழினி. இது எல்லாமே அவளுக்கு புதிதாக இருந்தது. பறப்பது போல... மிதப்பது போல... அவள் ஒவ்வொன்றையும் வித்தியாசமாக உணர்ந்தாள். அதே நேரம், யாரோ அவளை உற்று நோக்குவது போல... அது யார் என்பதை அறிய அவள் பக்கவாட்டில் திரும்பிய போது, சட்டென தன் பார்வையை வேறு பக்கமாக திருப்பிக் கொண்டான் அபி. மனதில் ஒரு அழுத்தமான கேள்வி எழுந்தது அவளுக்கு. பாட்டி சொன்னார்கள் அபியும் நானும் பெஸ்ட் ஃபிரண்ட் என்று. ஆனால், அவன் மற்றவரைப் போல என்னை வரவேற்கவும் இல்லை, பேசவும் இல்லையே.
அவளுடைய மன ஓட்டத்தை புரிந்தவனாய் அவளை நெருங்கி வந்தான் அபி.
"யாழ்ழ்னி"
அவன் அவள் பெயரை உச்சரித்த விதமே ஒருவித மயக்கத்தை தந்தது. என்றுமில்லாமல், அவள் பெயர் மிக இனிமையாய் இருப்பதாக தோன்றியது. எல்லோராலும் சாதாரணமாக உச்சரிக்கப்படும் ஒரு பெயர், ஒரே ஒருவரால் மட்டும் இவ்வளவு அழகாக கையாளப்பட முடியுமா? அவள் அவனை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"யாழ்ழ்னி" மறுபடியும் அதே விளைவை ஏற்படுத்தியது அவனுடைய உதட்டிலிருந்து வெளிவந்த அவளது பெயர்.
"இவன் என்னோட தம்பி அபிமன்யு. உன்னோட பெஸ்ட்டி."
என்று கூறிய அஞ்சலியை நோக்கிப் புன்னகை புரிந்தாள் யாழினி.
"ஐ அம் சாரி எனக்கு... "
"நீ சாரி சொல்ல வேண்டிய அவசியமில்லை, யாழ்ழ்னி..."
அவள் பெயரைக் கேட்டு அவள் கரம் அவளை அறியாமலே அவள் துப்பட்டாவை இறுகப்பற்றியது.
"சரி வாங்க கேக் கட் பண்ணலாம்" அஞ்சலி அனைவரையும் அழைத்தாள்.
அஜெய்யும், பிரியாவும் கேக்கை வெட்டியது தான் தாமதம், ஆளாளுக்கு யாழினிக்கு ஊட்டிவிட துவங்கிவிட்டனர். எதோ இன்றோடு உலகமே முடிந்து விடப் போவது போல, அவர்கள் அவளை உபசரித்துக் கொண்டிருந்தார்கள். யாழினிக்கு நேரம் போனதே தெரியவில்லை. அவளுக்கு, தான் ஒரு புதியவள் என்ற எண்ணமே ஏற்படவில்லை. ஒருவர் மாற்றி ஒருவர், அவளை இங்கும் அங்கும் இழுத்துக் கொண்டு சென்று எதையாவது காட்டி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். இன்று இல்லாவிட்டால் என்றுமே இல்லை என்பது போல.
அத்தனை கலாட்டாக்களுக்கும் இடையில், அவள் மனதில் ஒன்று மட்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. மஹாவின் வார்த்தைகள் தான் அவை. "உன் கண்ணை மட்டுமல்ல, மனதையும் திறந்து வை, பேசாத பல விஷயங்களை நீ புரிந்துகொள்வாய்" யாழினி அதைத் தான் செய்து கொண்டிருந்தாள். அஞ்சலி அவளை பக்கவாட்டில் அனைத்து ஒரு செல்ஃபி எடுக்க முயல, அத்தனை பேரும் அவர்களை நெருக்கிக் கொண்டு போஸ் கொடுத்தனர்.
"நான் இந்த போட்டோவை உனக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று உற்சாகமாகச் சொன்ன அஞ்சலியிடம்,
"என்கிட்ட ஃபோன் இல்லையே" சோகமாக சொன்னாள் யாழினி.
"அஞ்சலி அக்காகிட்ட இருக்குற ஃபோன் மாதிரி, உனக்கும் ஒரு ஃபோனை அபுன்ஸ் வாங்கி கொடுத்திருந்தான். அவன் எது வாங்கினாலும் ரெண்டா தான் சேர்த்து வாங்குவான்." சீரியஸ்ஸாக சொன்னான் நந்தா.
"அபுன்சா? அது யாரு?" யாழினி கேட்க, நந்துவை முறைதான் அபி.
"நான் அபியை எப்பவுமே அப்படித் தான் கூப்பிடுவேன்"
தன்னை முறைத்து கொண்டிருந்த அபியை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான் நந்து.
நம்ப முடியாத பார்வையை பார்த்த யாழினிக்கு, கதகதப்பான ஒரு புன்னகையை பரிசளித்தான் அபி.
"ஆமாம். அபி எது வாங்கினாலும், உனக்கும் எனக்கும் சேர்த்து தான் வாங்குவான்". அஞ்சலி கூறிய போது, அவள் கையில் இருந்த ஃபோனின் மீது யாழினியின் பார்வை விழுந்தது.
"ஒருவேளை நீ அதை எங்கயாவது மறந்து வச்சிருக்கலாம்" அஜய் கூறினான்.
யாழினியின் முகம், அவள், எதையோ தீவிரமாக யோசிப்பதை உறுதி கூடியது.
ஐபோன் வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு, அபி எனக்கு நெருக்கமானவனா? அதுவும் தன் அக்காவிற்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை எனக்கும் கொடுப்பானா? அவன் எனக்கு அவ்வளவு நெருக்கமானவன் என்றால் அவன் ஏன் விலகியே நிற்கிறான்?
"நான் வீட்ல தேடிப்பாக்குறேன். நீங்க அந்த போட்டோவ அம்மாவுக்கு அனுப்பிடுங்க" அஞ்சலியிடம் கூறினாள் யாழினி.
"நேரமாயிடுச்சு வாங்க எல்லாரும் சாப்பிடலாம். சாப்பிட்டு முடிச்சதுக்கப்புறம் பேசிக்கலாம்" பாட்டி எல்லோரையும் சாப்பிட அழைத்தார்.
அனைவரும் டைனிங் ஹாலில் கூடினார்கள். அபி, யாழினிக்கு நேர் எதிரில் அமர்ந்து கொண்டான். அங்கு பரிமாறப்பட்ட அத்தனை உணவு வகைகளும், அவளுக்கு பிடித்ததாக இருந்தன. கடந்த இரு மாதத்தில் இவைகளை அவள் விரும்பி சாப்பிட்டிருந்தாள்.
"எல்லாமே உனக்கு பிடிச்ச சாப்பாடு தான், யாழினி. கூச்சப்படாம சாப்பிடணும்." அஞ்சலி அன்பு கட்டளையிட்டாள்.
அபி கண்ணால் ஏதோ சமிக்ஞை செய்தான்.
"ராமு அண்ணா, சீக்கிரம் அத எடுத்துட்டு வாங்க." அஞ்சலி வேலைக்காரரிடம் கோரினாள்.
மஸ்கொட் அல்வாவை பார்த்தவுடன் யாழினியின் கண்கள் விரிந்தன.
"அட, அல்வாவா?" அவள் ஆர்வமாக வாங்கி கொண்டாள்.
அபி உள்ளூர சிரித்துக்கொண்டான். யாழினி மாறவில்லை.
இதற்கிடையில்...
நேற்று ஆதி கேசவனுக்கும், யாழினிக்கும் நடந்த, அத்தனை விவாதத்தையும், பாட்டியிடம் சொல்லி மகிழ்ந்தார் மஹா. பாட்டின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.
ஒவ்வொருவரும், ஏதோ ஒரு விஷயத்தை யாழினியிடம் பகிர்ந்துகொண்டார்கள். அவர்கள் பகிர்ந்து கொண்ட அத்தனை விஷயங்களும், அபியையும், யாழினியையும் சுற்றி சுற்றி வந்து, அவர்களிடமே முடிந்தன. அபி எதற்குமே பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அனைத்திற்கும் ஒரு சிறு புன்னகையை மட்டுமே பதிலாக தந்தான்.
இவர்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால், அவளுடைய வாழ்க்கையில் அபியின் பங்கு மிகப்பெரிதாக இருந்திருக்க வேண்டும். அப்படி என்றால், அவன் ஏன் மற்றவரைப் போல பழகாமல், தூரமாக இருந்து கொண்டிருக்கிறான்? கேட்டுவிடலாமா? மகாவின் குரல், யாழினியை சிந்தனை உலகத்தில் இருந்து வெளிக்கொண்டு வந்தது.
"கிளம்பலாமா? நேரமாயிடுச்சு"
மகா கூறினார்
அவள் பார்வை, அனிச்சையாக அபியை நோக்கி நகர்ந்தது. அனைவருடைய முகத்திலும் சோகம் தெரிந்தாலும், அபியின் முகத்தில் தெரிந்த உணர்வு வித்யாசமாக பட்டது.
"யாழினி கண்ணு, இங்க வந்துட்டு போயிட்டு இருமா, இங்கேயும் உனக்கு ஒரு குடும்பம் இருக்கு. மறந்துடாத" என்று கூறிய பாட்டியை, எல்லோரும் ஆச்சரியமாய் பார்த்தார்கள். அவர்களுக்கு, யாழினி ஆதிகேசவனுடன் நடத்திய விவாதம் பற்றி தெரியாததே காரணம்.
"கண்டிப்பா வரேன் பாட்டி" யாழினி அழகான புன்னகையுடன் பதிலளித்தாள்.
அனைவரிடமும் பிரியாவிடை பெற்றுக் கொண்டாள் யாழினி. இறுதியாக அபியிடம் வந்து, கை குலுக்க கையை நீட்டினாள் யாழினி. அபியும் அவள் கரத்தை மென்மையாக பற்றிக் கொண்டான்.
"தேங்க்ஸ் ஃபார் கமிங்" சகஜமாய் சொன்னான்.
"தேங்க் யூ பார் ஸ்பெண்டிங் யூர் பிரீஷியஸ் டைம் ஆன் மீ"
இருவரும் இயல்பாய் பேச முயன்றனர்.
அபி அழகாக சிரித்தான். அவன் கையைப் பற்றியிருந்த அவள் கரம் இறுகுவதை உணர்ந்தான். குழப்பத்துடன் அவளைப் பார்த்தான்.
"நான் உங்ககிட்ட சண்டை போட்டிருந்தேனா?"
"என்ன?" கண்களை சுருக்கி, குழப்பமாக கேட்டான், அபி.
"நம்ம ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸ்னு, இங்க இருக்கிறவங்க எல்லாரும் சொன்னாங்க. ஆனா, எனக்கு என்னமோ அப்படி தெரியல. நீங்க கொஞ்சம் க்கோல்டா இருக்கிற மாதிரி தெரியுது" கேட்டேவிட்டாள் யாழினி.
"நமக்கு எந்த சண்டையும் இல்ல. அப்படியே இருந்தாலும், அதெல்லாம் உன்னை என்கிட்ட இருந்து தூரமாக்கிட முடியாது."
அதைக் கேட்டபோது யாழினிக்கு ஏதோ செய்யத் தான் செய்தது.
"நீ, இங்க எல்லாரோடவும் கம்பர்ட்டபிள்ளா இருக்கணும்னு நான் நினைச்சேன். தட்ஸ் ஆல்"
என்றான் அபி.
"நான் உங்களோட கம்ஃபர்டபிள்ளா இருக்கனும்னு நீங்க நினைக்கலையா?"
"மத்தவங்க மாதிரி, பழகி தான் நான் உன் கூட கம்ஃபர்டபிள்ளா இருக்க முடியும்னு நான் நினைக்கல. என்னா, நீ ஏற்கனவே என்னோட கம்ஃபர்டபுள்ளா தான் இருக்கேன்னு எனக்கு தோணுது."
அவன் அவளின் இறுகப் பற்றியிருந்த கையை பார்த்து, மெலிதாய் புன்னகைத்து, பதிலளித்தான். யாழினி, அவன் பிடிக்குள் சிக்கியிருந்த தன் கரத்தை விடுவிக்க முயன்றாள். ஆனால், அவளை அதைச் செய்யவிடாமல் மீண்டும் இருக்க பற்றிக்கொண்டான் அபி.
"உனக்கு, எப்போ, எது தேவைப்பட்டாலும், நான் இருக்கேன். எப்பவும்... ஞாபகம் வச்சுக்கோ."
தலை அசைப்பை விடையாக கொடுத்தாள் யாழினி.
அவர்களுக்கு தெரியாது, அவர்கள் குடும்பத்தில் இருந்த அனைவரும் அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று. ஆனால், பார்க்காதது போல திறமையாக நடித்துக் கொண்டிருந்தார்கள்.
"எங்களை யாராவது வீட்ல ட்ராப் பண்ண முடியுமா? " மகா கேட்டார்.
"அம்மா, நாம வரும் போது கார்ல தானே வந்தோம்?" குழப்பமாக கேட்டாள் யாழினி.
"டிரைவருக்கு ஏதோ வேலை வந்ததுன்னு சொன்னாரு. அதனால நான் அவரை அனுப்பிட்டேன்"
"சின்னா உங்கள ட்ராப் பண்ணுவான்". அஞ்சலி கூறினாள்.
"யார் சின்னா?" மறுபடியும் கேள்விக் கணை தொடுத்தாள் யாழினி.
களுக் என்ற சிரிப்புகளுக்கிடையே அபி கூறினான்
"அது நான் தான்"
"உங்களுக்கு மொத்தம் எத்தனை பேர் தான் இருக்கு? அபுன்ஸ், சின்னா... " புருவத்தை உயர்த்தி சிரித்தாள் யாழினி.
"இன்னும் ஒரு பேர் கூட இருக்கு. நீ மாட்டும் கூப்பிடும் பேர்."
அந்த அறை நிசப்தமாகிப் போனது.
"அது என்ன?" ஆர்வமாகக் கேட்டாள் யாழினி.
"கிளம்பலாம். உங்களுக்கு லேட் ஆகுது." பதில் சொல்லாமல் விறுவிறுவென நடக்க ஆரம்பித்துவிட்டான், அபி.
யாழினியும் மஹாவும் அவனை பின் தொடர்ந்து சென்றார்கள். அபி காரை ரிவர்ஸ் எடுத்த போது, யாழினியின் கவனத்தை கச்சிதமாக ஒன்று ஈர்த்தது, அது அபியின் கார் நம்பர் TN 04 Y1000.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top