Part 22
பாகம் 22
அபியின் கைகளுக்கு இடையில் சிறைப்பட்ட யாழினிக்கு, அவன் முகத்தை பார்க்கும் தைரியம் இல்லாமலிருந்தது. அவன், இவ்வாறு அவளிடம், நடந்து கொள்வது இதுதான் முதல் முறை. அவன் எப்பொழுதும் தனது எல்லையை விட்டு விலகியது இல்லை. யாழினிக்கு இது மிகவும் புதியதாக இருந்தது. அவனது இந்த புதிய தோற்றம், ஒருவித பயத்தை ஏற்படுத்தினாலும், ஏனோ அவளுக்கு, அவனுடைய இந்த நெருக்கம் எந்த தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்த வில்லை. இறுதியாக, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,
"மாம்ஸ்... என்ன இது? என்று மெதுவாக பேசத் துவங்கினாள் யாழினி.
அவள் கேட்க வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தவன் போல...
"இங்க நான் செத்துகிட்டு இருக்கேன், உனக்கு உன் புடவை ரொம்ப முக்கியமா போச்சா?" என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான் அபி.
"ஆனா, நீங்க ஏன் செத்துகிட்டு இருக்கீங்க? என்று அப்பாவியாய் கேட்டாள் யாழினி.
"ஏன்னா, நான்....." என்று நிறுத்தி வார்த்தைகளை தேடினான் அபி
"ஏன்னா?" என்று எதிர்க் கேள்வி கேட்டாள் யாழினி.
அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே,
"சிகப்பு புடவை கட்டிக்கிட்டு வந்து கேட்டா, நீங்க எதுவா இருந்தாலும், ஓகே சொல்லிடுவிங்கனு நான் நெனச்சேன். உங்க முகத்தை பாருங்க, எவ்வளவு பயமா இருக்கு. உங்களுக்கு தெரியுமா, புடவை கட்டுவது எவ்வளவு கஷ்டம்ன்னு? இதை கட்டி முடிக்க எனக்கு ஒரு மணி நேரம் ஆச்சு."
அவள் பேசியதைக் கேட்டு முதலில் முகத்தை சுருக்கியவன், சுதாகரித்துக் கொண்டு களுக்கென்று சிரித்தான்.
"என்னை ஓகே சொல்ல வைக்க, சிகப்பு புடவை கட்டிக்கிட்டு தான் வரணும்னு எந்த அவசியமும் இல்ல. நீ எது வேணாலும் எப்ப வேணாலும் என்கிட்ட கேட்கலாம்"
"அப்போ, நீங்க எனக்கு புடவை டிசைன் பண்ணி கொடுப்பீங்களா?"
ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு
"ஓகே... உன்னுடைய கல்யாண புடவைய நான்தான் டிசைன் பண்ணுவேன். போதுமா?"
"நெஜமாவா?" என்று சந்தோஷமாக கேட்டாள் யாழினி
"நான் புடவைக்குத்தான் ஓகே சொல்லி இருக்கேன். உன்னோட கல்யாணத்துக்கு இல்ல"
"அப்படின்னா என்ன அர்த்தம்?"
"நான் இந்த கல்யாணத்தை நடத்த விட மாட்டேன்னு அர்த்தம்" என்று ஆணித்தரமாய் சொன்னான் அபி.
"ஆனா ஏன்?"
"ஏன்னா கிரிஷ் உனக்கு பொருத்தமானவன் இல்லை"
"ஆனா...
அவள் அடுத்த கேள்வியைக் கேட்கத் துவங்கும் முன் அவளை வெட்டி பேசினான் அபி.
"உனக்கு ஆக்சிடென்ட் ஆனப்போ, உன் தலையில இருந்த 'கொஸ்டின் பேங்க்' ல அடிபட்டுருச்சின்னு நினைக்கிறேன். நீ இப்ப நிறைய கேள்வி கேட்க ஆரம்பிச்சிருக்கே"
"ஆனால், என்னுடைய கேள்விக்கு, யாருமே பதில் சொல்றது இல்லையே?"
"ஏன்னா, உன்னோட கேள்விகள் எல்லாமே 'அவுட் ஆப் சிலபஸ்" என்று சிரித்தான் அபி.
அவனுடைய கழுத்தை நெரிப்பது போல யாழினி பாவனை செய்ய, அவள் கைகளுக்கு இடையில் அழகாக தன் கழுத்தை பொருத்திக் கொண்டு, 'நடத்து' என்பது போல் ஒரு சைகை செய்தான் அபி. களுக்கென சிரித்தவள், விளையாட்டாக அவன் கன்னத்தில் அறைந்தாள். அது, அபிக்கு பிடித்திருந்தது.
"உண்மையிலேயே உனக்கு இந்த கல்யாணதுல விருப்பமா? நான் தான் சொன்னேனே, கிரிஷ் உன்னோட ஃப்ரண்ட் இல்லைன்னு?" என்று சீரியசான குரலில் கேட்டான் அபி
"ஆனா, அப்பா உங்களுக்கு ஆப்போசிட்டா சொல்றாரே?"
"நீ என்னுடைய பேச்சை நம்பலையா?"
"ஆனா நான் எங்க அப்பாவையும் நம்பனும்ல?"
"நீ உங்க அப்பாவை நம்பனும். அதுக்காக நீ அவர் சொல்ற எல்லாத்தையும் கேட்கணுமுன்னு அவசியமில்லை"
"நான் ரொம்ப குழம்பிப் போயிருக்கேன்" குருட்டாம் போக்கில் என்னால எந்த முடிவையும் எடுக்க முடியாது"
"அப்படின்னா உன் மூளை சொல்றத கேக்கறதுக்கு பதிலா, உன் மனசு என்ன சொல்லுதுன்னு கேளு"
"நான் கேட்கலனு நீங்க நினைக்கிறீங்களா? எனக்கு நீங்க எல்லாருமே நல்லவங்களா தெரியறீங்க. நான் என்ன தான் பண்ணட்டும்?"
"கண்டிப்பா யாராவது ஒருத்தர், எல்லாருக்கும் மேல, உன் மனசுல ஒரு இடத்தில் இருக்கனும். எல்லோருமே சமமான இடத்தில் நிச்சயமா இருக்க முடியாது. எல்லாமே உன் கையில தான் இருக்கு. இது உன்னுடைய வாழ்க்கை. உன்னுடைய எதிர்காலம். அதை நீ புரிஞ்சுக்க."
"நீங்கதான் சொல்லுங்களேன், நான் என்ன செய்யணும்னு?"
அவளுடைய கைகளை எடுத்து அவள் இதய பகுதி மேல் வைத்துவிட்டு,
"உண்மையிலேயே, கிரிஷ் உனக்கு பொருத்தமானவன்னு, நீ நினைக்கிறாயா? மனசு சொல்றத கேளு. சூழ்நிலைகளையும், மத்தவங்களையும், மறந்திடு"
"நான் என் மனசு சொல்றத தான் கேட்கணும்னா, நான் உங்கள தான் கல்யாணம் பண்ணிக்கணும்"
தன்னை சுற்றியுள்ள அனைத்தும் நின்று போனதாய் உணர்ந்தான் அபி. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்களுடைய சூழ்நிலைகளை மறந்து நின்றனர். அந்த மாய வலையில் இருந்து, அபி தான் முதலில் வெளியே வந்தான். ஏனெனில், அவனுக்கு தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருந்தது.
"ஏன்?" சிலிர்ப்போடு கேட்டான் அபி.
"வேற யார் கூடையும் நான் இவ்ளோ கம்பர்டபிளா பீல் பண்ணதே இல்ல"
"அப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கோ"
அவள் கண்களை பார்த்தபடி சொன்னான் அபி.
"நீங்க நிஜமாத்தான் சொல்றீங்களா?" என அதிர்ச்சியில் தடுமாறினாள் யாழினி
"இரு நூறு சதவீதம்"
அவள் உதட்டின் மீது தனது ஆள்காட்டி விரலை வைத்தவனாய்...
"நம்ம கடந்தகாலத்தை பற்றி எந்த கேள்வியும் கேட்காதே. உனக்கு எந்த ஒரு பதிலும் கொடுக்கக்கூடிய நிலையில் நான் இல்லை. போனதை விட்டுடு. இப்போ உனக்கு என்ன வேணும்னு மட்டும் புரிஞ்சுக்கோ. உன் மனசு சொல்றதை கேளு"
"ஆனா அப்பா....?"
"நான் கேட்கிற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. இந்தக் கல்யாணத்துல உங்க அம்மாவுக்கு விருப்பமா?"
அவள் இல்லை என்று அசைத்தாள்.
"ஏன்? அவங்களுக்கு உன் மேல் அக்கறை இல்லையா? அவங்க எதுக்காக உங்க அப்பாவுக்கு எதிரா, உன் விருப்பத்துக்கு மாறா நடக்கணும்? உன் அப்பாவுக்கு மேல, நீ என்னை நம்ப வேண்டாம். ஆனா உங்க அம்மா ஏன் இப்படி இருக்காங்கனு நீ நெனச்சு பாத்தியா? அவங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனு உன்கிட்ட வெளிப்படுத்துறாங்கன்னா, அதுல யோசிக்க எதுவுமில்லைனு நினைக்கிறியா?"
"ஆனா உங்கள கல்யாணம் பண்ணிக்கிறத பத்தியும் அவங்க எதுவுமே சொல்லலையே?"
"நீ அவங்களை கேட்டியா?"
இல்லை என்று அவள் தலையசைத்தாள்.
"அப்ப, கேட்டு பாரு. ஒருவேளை அவங்க சரின்னு சொல்லிட்டா, நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"
அவளிடமிருந்து பதிலை எதிர் பார்த்து நிற்க,
"ஆனா அப்பாவுக்கு உங்க யாரையுமே பிடிக்கலையே?"
"அந்த விஷயத்தை, நீ என்கிட்ட விடு. நான் பார்த்துக்கறேன்"
"ஆனா, உங்களால என்ன செய்ய முடியும்?"
"நீ என்னை நம்பலயா?"
"மாம்ஸ்... தயவுசெய்து, என்ன புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க. ஏன் எல்லாரும் என்னை கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரியே உணர வைக்கிறீங்க? எனக்கு ஒரு காரணம் வேண்டாமா, நீங்க நினைக்கிற மாதிரி நான் நடந்துக்க?"
"நீ தான சொன்ன, மத்த எல்லார விடவும், என்கிட்ட மட்டும் தான் கம்பர்டபிளா பீல் பண்றனு? அது உண்மை இல்லையா?"
"உண்மைதான்"
"உன்னோட வாழ்க்கையை நீ என்னோட வாழ, அதைவிட வேறென்ன வேணும்? நீ சந்தோஷமா இருக்க அது போதாதா?"
"ஒருவேளை அப்பா ஒத்துக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாருனா?"
"எனக்கு உங்க அப்பாவை பத்தி கவலை இல்ல. உன்னை பத்தி மட்டும் தான் யோசிப்பேன். ஒன்னு சொல்லிக்கிறேன், எப்போ, நீ என்கூட மட்டும் தான் கம்பர்டபிளா இருக்கிறதா சொல்லிட்டீயோ, இதுக்கு அப்புறம் நான் இதிலிருந்து பின்வாங்க மாட்டேன்"
அவன் இதழோர சிரிப்பை உதிர்க்க, தனது வயிற்றுக்குள் சில பட்டாம்பூச்சிகள் பறப்பதை உணர்ந்தாள் யாழினி
"இப்ப சொல்லு, என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?"
அவனை ஏறிட்டு அவள் பார்க்க, அவளுடைய பதிலுக்காக அவன், புருவம் உயர்த்தி காத்திருப்பது தெரிந்தது.
"எனக்கு கொஞ்சம் டைம் வேணும்"
எனத் திக்கித்திக்கி சொன்னாள் யாழினி
"நீ இதுல ரொம்ப யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. நான் உனக்கு டைம் கொடுக்கிறது எதுக்குனா, உங்க அம்மாகிட்ட நீ இத பத்தி பேசி ஒரு முடிவுக்கு வர மட்டும் தான்"
"ஒருவேளை எங்க அம்மா வேண்டாம்ன்னு சொல்லிடா?"
அவளின் கேள்வியை கேட்டு, அபியின் முகத்தில் ஒரு கள்ளப் புன்னகை தவழ்ந்தது.
"அதுக்கப்புறம் எப்பவுமே உன்னோட வாழ்க்கைல நான் குறுக்கிட மாட்டேன். ஒருவேளை அவங்க சரின்னு சொல்லிட்டா....? நான் சொன்ன மாதிரி, எனக்கு நேரடியான பதில் வேணும்"
"ஏன்னா, நீங்க என்ன மாதிரி கமிட்டாகல"
அவள் சொன்னதை கேட்டு பல்லைக் கடித்தவன்,
"முதல்ல ஒன்னு புரிஞ்சுக்கோ, நீயும் இன்னும் கமிட்டாகல. புரிஞ்சுதா உனக்கு?"
"நான் அம்மா கிட்ட பேசிட்டு பதில் சொல்றேன்" என பயத்தில் உளறி கொட்டினாள் யாழினி.
"அவங்க என்ன சொல்லுவாங்கனு எனக்கு தெரியும்" என்றான் புன்னகையுடன்.
"நீங்க சொன்னிங்க, என்னுடைய ஞாபகம் திரும்ப வர்ற வரைக்கும் நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு. ஆனா இப்போ உங்களை என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்றீங்க. ஏன்?"
என அவள் கேட்ட கேள்வியால் வாயடைத்துப் போனான் அபி
"ஒருவேளை, நாம ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸா இருந்ததாலயா? ஒருவேளை எனக்கு ஞாபகம் திரும்ப வந்ததுக்கப்புறம், உங்கள நான் என் ஹஸ்பன்டா ஏத்துக்கலனா என்ன செய்வீங்க?"
பொங்கி வந்த தனது சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னான்,
"நீ ஏத்துக்குவ. உன்னுடைய ஞாபகம் திரும்ப வந்ததுக்கப்புறம், உன்னை எப்படி ஹேண்டில் பண்ணனும்னு எனக்கு தெரியும்"
என சிரித்துக்கொண்டே அவன் கூற, அவன் முகத்திலிருந்து தனது பார்வையை வேறெங்கோ திருப்பிக்கொண்டாள் யாழினி.
"பாக்கலாம், எங்க அம்மா, எந்த அளவுக்கு நீங்க மருமகனா வரணும்னு ஆசை படுறாங்கனு"
சிரித்தபடி அவனை தள்ளி விட்டு அவன் அறையிலிருந்து வெளியே ஓடினாள் யாழினி, அபிக்கு ஒரு புதுவித நம்பிக்கையைக் கொடுத்து...
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top