Part 14

பாகம் 14
*இரண்டு மாதங்களுக்கு முன்*

அபி நீச்சல் குளத்தின் அருகில் நின்று, நிர்மலமான அந்த நீரில், தனது கண்களை ஓட்டிக் கொண்டிருந்தான். அப்போது வந்த போன் அழைப்பு அவனின் கவனத்தை சிதறடித்தது. அந்த அழைப்பு யாழினியுடையது. ரசிக்கத்தக்க அழகான புன்னகையுடன் அதற்கு பதிலளிக்க தயாரானாள் அபி.

"மாம்ஸ்ஸ்... "

யாழினியின் குரலில் இருந்த பதட்டம் அவனுக்கும் தொற்றிக்கொண்டது.

"யாழ்ழ்னி, என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா? "

"இல்ல, எனக்கு உடனே உன்னை பாக்கணும்."

"பிரச்சனை என்னன்னு முதல்ல சொல்லு". அடக்க முடியாமல் கேட்டான்.

"எனக்கு என்னமோ மனசு சரியில்ல. ஏதோ தப்பு நடக்க போற மாதிரி மனசுல படுது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு"

யாழினி இப்படி சொல்வது, இது முதல் தடவை அல்ல. அபிக்கு இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாவிட்டாலும், யாழினியை அவன் அவநம்பிக்கை அடைய விட்டதில்லை. ஏனென்றால், அவள் எப்போதெல்லாம் இப்படி தவிக்கிறாளோ, அப்போதெல்லாம் ஏதாவது ஒன்று நடந்து தான் இருக்கிறது.

"யாழ்ழ்னி ரிலாக்ஸ்".

"முடியாது. நான் உன்னை பாக்குற வரைக்கும் என்னால ரிலாக்ஸ் ஆக முடியாது. ப்ளீஸ் நான் உன்னை பாக்கணும். உன் மடியில உக்காரணும்" அவள் அழ ஆரம்பித்து விட்டாள்.

அவள் கெஞ்சலை பொறுக்க முடியாதவனாய் கண்களை இறுக மூடினான்.

"நான் சொல்றதை கேளு!

"யாழினி, சீக்கிரமா வா" மகாவின் குரல் கேட்டது.

"மாம்ஸ், அம்மா கூப்பிடறாங்க. நான் போகணும். அப்புறமா வந்து பேசுறேன். "

அவள் தனக்குள் இருந்த தவிப்பை, அபியிடம் தாரைவார்த்து விட்டு ஓடிச் சென்றாள். உண்மையிலேயே இது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாக தான் இருக்க வேண்டும். ஏனென்றால், யாழினி எப்போதும் அவனிடம் இப்படி கெஞ்சியதில்லை.

ஒரு மணி நேரத்திற்குப் பின், யாழினியின் ஃபோன் அழைத்தது. அபியினுடைய அழைப்பு தான் அது. அழைப்பை ஏற்று பேச போனவள், ஒரு நிமிடம் நின்றாள். ஏதோ ஒன்று அவள் மனதில் உரைக்க,  ஓடிச் சென்று ஜன்னல் கதவை திறந்தாள். அவளுடைய யூகம் சரிதான். அபி, அங்கு நின்று கொண்டிருந்தான். ஜன்னல் வழியாக அவன் அறைக்குள் பிரவேசித்தான். அடுத்த நொடி யாழினி அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். அவளது தலையை தடவிய வண்ணம் கேட்டான் அபி.

"என்னாச்சு, யாழ்ழ்னி?

அவனுக்கு பதில் எதுவும் கூறாதவளாய் அவனை அணைத்துக் கொண்டு நின்றாள் யாழினி. அபியும் மறுபடி அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அனுமதித்தான். ஆனால்,  இப்போதைக்கு அவள்,  அவன் அணைப்பிலிருந்து வெளி வருவதாக தெரியவில்லை.

"என் மடியில் உட்கார போறதில்லையா?" என்றான் அபி.

அவள் தலையை உயர்த்தி அவனைப் பார்த்த வண்ணம்,  ஆமாம் என்று தலையசைத்தாள். கட்டிலில் அமர்ந்து கொண்டு அவளை தன் மடியில் வாங்கிக்கொண்டான். அவள் கையில் இருந்து போனை எடுத்து, அதை துண்டிக்காமல் பக்கத்தில் வைத்துக் கொண்டான். இப்போதெல்லாம், அவனுக்கும் யாழினியைப் போலவே,  அவர்கள் பேசியதை மறுபடி மறுபடி கேட்க மிகவும் பிடித்திருந்தது. அவன் தோளில் சாய்ந்து கொண்டு அவன்  கழுத்தை கட்டிக்கொண்டாள்.

"ஏதோ இனம் புரியாத பயம் என் மனசுல இருக்கு. ஏதோ தப்பு நடக்க போகுதுன்னு பயமா இருக்கு. எனக்கு உன்கூட இருக்கணும், அவ்வளவு தான். "

"நான் எப்பவுமே உன் கூடத்தான் இருப்பேன். என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு?"

"இது நம்பிக்கை சம்பந்தப்பட்டது இல்ல. எல்லா விஷயமுமே நம்மளுடைய கட்டுப்பாட்டுக்குள எப்பவுமே இருக்கிறதில்ல. சில நேரம், சில விஷயங்கள், நம்மளை மீறி நடக்கிறது உண்டு. அது தான் எனக்கு பயமா இருக்கு. "

"அது ஏதுவா வேணாலும் இருந்துட்டு போகட்டும். ஆனா, இந்த ஜென்மத்துல உன்னை எங்கிட்டயிருந்து யாராலயும் பிரிக்க முடியாது. அதை  எப்பவுமே மறந்துடாத. சரியா?"

யாழினி அவளுடைய மென்மையான கரங்களால் அவன் கன்னம் தொட்டாள். அவளுடை முகமே அவளுடைய சலனம் நிறைந்த மனதை பிரதிபலித்தது. அச்சில் வார்த்தார் போல் இருந்த அவனுடைய அழகான முகத்தை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ இந்த ஒரு நாள் தான் அவளுக்கு கடைசியாக அவன் முகத்தைப் பார்ப்பதற்கு இருப்பது போல. அவளின் குத்திட்ட பார்வை அபியை ஏதோ செய்தது.

அபியின் கண்,  அவள் உதடுகளால் ஸ்பரிசிக்கப்பட்டன. பொங்கி வந்த உணர்வுகளை கட்டுப்படுத்த படாதபாடு பட்டுக் கொண்டிருந்தான் அபி. ஆனால் யாழினியோ, அனைத்தையும் உடைத்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தாள். அவனும் பாவம், எவ்வளவு நேரம் தான் நல்லவனாகவே நடிக்க முடியும்? அவன் இதழ்களின் மீது,  அவள் இதழ் பட்டபோது,  அவன் அவ்வளவு நேரம் கட்டி வைத்திருந்த அத்தனை கட்டுப்பாடுகளும் தூள் தூளானது. அவர்களின் உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாய் அழகான முத்தம் வெளிப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக யாழினி அவன் கழுத்தில் முத்தமிட அபிக்கு தூக்கிவாரிப்போட்டது. அவளுடைய மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது?

"யா... யாழ்ழ்னி என்ன இது?"

"என்னை தடுக்காதே"

"என்ன வேணும் உனக்கு?

"நீ தான்"

"நான் எப்பவுமே உன்னுடையவன் தான். ஆனா, இப்ப நீ செய்ய நினைக்கிறது தப்பு".

"நமக்குள்ள எதுவுமே தப்பில்லை"

"ஆனா, நீ ரொம்ப பெருசா நினைக்கிற உன்னோட கலாச்சாரமும்,  பண்பாடும் இதை தப்புன்னு சொல்லுது".

"அதனால தான் இப்ப எனக்கு இது வேணும்னு தோணுது. ஏன்னா, அதுக்கப்புறம் நம்மளை யாராலயும் பிரிக்க முடியாது."

"நீ, அனாவசியமா பயப்படுற. உன்னை எங்கிட்ட இருந்து யாராலும் பிரிக்க முடியாது. இது சத்தியம்"

"அப்படின்னா, நம்ம எப்படியும் சேர தானே போறோம்? அப்ப, இதுல தப்பு என்ன இருக்கு?"

"யாழ்ழ்னி, புரிஞ்சுக்க முயற்சி பண்ணு"

"நீ ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்குற?"

"சரி ஓகே. ஆனா, எனக்கு கொஞ்சம் டைம் கொடு."

"டைமா? எதுக்கு?"

"என்னை நான் தயார்படுத்திக்கத் தான். நீ என்ன நினைச்சுகிட்டு இருக்க?  மனசுக்குள்ள தேக்கி வச்சிருக்குறது நெருப்பு மாதிரி. அது கட்டுப்பாடில்லாமல் திடீர்னு வெளியில வந்தா நீ தாங்க மாட்ட".

யாழினியின் கன்னங்கள் தக்காளி நிறம் போல் சிவந்து போயின.

"உனக்கு இருபத்தி நாலு மணி நேரம் டைம் கொடுக்கிறேன். ஒருவேளை நீ இங்க வரல, அப்புறம் நான் நேரா சாந்தி நிலையம் வந்துருவேன்." அவனைப் பார்க்காமல்,  வேறு எங்கோ பார்த்துக்கொண்டு பேசினாள் யாழினி.

அதைக்கேட்டு சிரித்தான்  அபி.

"நான் ஒன்னு கேக்குறேன், ஒருவேளை, அதுக்கப்புறம் நான் உன்னை ஏமாத்திட்டா என்ன செய்வ?"

"நீயாவது என்னை ஏமாத்தறதாவது. உண்மைய சொல்லப் போனா, அதுக்கப்புறம்,  உனக்கு என் மேல இருக்குற பொசசிவ்னஸ் இன்னும் அதிகமா தான் ஆகும்" உண்மையைச் சொல்லி அவனை கிண்டலடித்தாள் யாழினி.

"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? உன்னை மாதிரி யாருமே என்னை புரிஞ்சுகிட்டது  கிடையாது. எனக்கு நிச்சயமா தெரியல, ஒருவேளை எங்க அம்மா உயிரோட இருந்திருந்தா கூட என்னை இந்த அளவுக்கு புரிஞ்சு இருப்பாங்களான்னு. நான் உண்மையிலேயே ரொம்ப அதிர்ஷ்டசாலி"

அன்பாக அவளை உச்சி முகர்ந்தான் அபி.

"ஐஸ் வச்சது போதும். உனக்கு 24 மணி நேரம் தான் டைம். ஞாபகம் இருக்கட்டும்" எச்சரிக்கை விடுதாள் யாழினி.

"ஆமா ஆமா நல்லா ஞாபகம் இருக்கு. இல்லன்னா நீ நேரா என் வீட்டுக்கு வந்து என்னை ரேப் பண்ணிடுவே. கரெக்டா?"

"மாட்டேன்னு சொல்றதுக்கு இல்ல"

இருவரும் சிரித்து கொண்டார்கள்.

"ஓகே பாஸ், இப்ப நான் போலாமா?" என்றான் அபி

"என் கூட இங்கேயே இரேன்".

"வீன் வம்ப விலைக்கு வாங்காத. சொல்றத கேளு. நாளைக்கு எல்லாம் சரியாயிடும். "

தன் மடியில் இருந்த அவளை தூக்கி கட்டில் மீது அமர வைத்துவிட்டு எழுந்தவனின் கரம் பற்றி நிறுத்தினாள் யாழினி. அவள் முகத்தில் சொல்ல முடியாத ஏதோ ஒரு தவிப்பு தெரிந்தது.

"யாழ்ழ்னி, நான் உன் கூட இருக்கேன். எந்த சூழ்நிலையிலும் உன்னை என்கிட்ட இருந்து யாராலும் பிரிக்க முடியாது".

சொல்லி முடித்தவன் அவள் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டான். அடுத்த நொடி,  விருவிருவென சென்று ஜன்னல் வழியாக எகிரி குடித்தவன், அங்கு ஒரு நொடியும் தாமதித்தால், அடுத்து நடப்பது தன்னுடைய வசம் இல்லை என்பதை உணர்ந்தவனாய் அங்கிருந்து விரைந்து சென்றான்.

அபியின் கண்களுக்கு அன்று தூக்கம் தூரமாகி போனது. யாழினியின் நினைவுகளிலிருந்து அவனால் வெளிவரவே முடியவில்லை. அபிக்கு எப்போதும் ஒரு எண்ணம் உண்டு. அவன் தான் யாழினி மீது மிகவும் பொஸசிவ்வாக இருப்பதாக நினைத்திருந்தான். ஆனால் இன்று, யாழினி தன்னுடைய செயல்களின் மூலம் அவள் அவன் மீது எந்த அளவிற்கு உரிமை கோறுகிறாள் என்பதை அவன் உணர்ந்தான். ஒரு பெண் தன்னை முழுவதுமாக ஒரு ஆணிடம் ஒப்படைக்கவும் நினைக்கிறாள் என்றால், அவள் அவனிடம் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்? எந்த அளவிற்கு அவனை உண்மையாக நேசிக்க வேண்டும்? என்பதை உணர முடியாதவன் அல்ல அபி. ஒரு பெண்ணின் பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் கீழ்த்தரமான ஆண்மகனும் அல்ல அவன். அவளுடைய பாதுகாப்பற்ற உணர்வை மாற்ற இது வழியாகாது. அவளுடைய புனிதத்துவத்தை விளையாட்டாக்க அவன் விரும்பவில்லை. அவன், அவள் மீது வைத்திருக்கும் மரியாதையை காண்பிக்க,  இது ஒரு அற்புதமான சந்தர்ப்பம் அவனுக்கு. அவளுடைய கௌரவத்தை குலைக்காமல் அவளைத் தன்னுடையவளாகிக் கொள்வதே ஒரு ஆண்மகன், பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதை என்பதை நம்பினான் அபி.

அபியை எந்த அளவிற்கு நம்புகிறாள் என்பதை காட்டிவிட்டாள் யாழினி. அவளுடைய நம்பிக்கைக்கு எந்த அளவிற்கு பாத்திரமானவன் தான் என்பதை நிரூபிக்க அபி தயாரானான்.

ஒரு மெல்லிய குறும்பு புன்னகை அபியின் முகத்தை இழையோடியது. அவளுடைய 24 மணிநேர மிரட்டலை நினைத்து.

"நாளைக்கு உனக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கு. ரெடியாயிரு." என்று மனதில் நினைத்துக்கொண்டான் அபி.

*மறுநாள் காலை*

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை எதற்காக அபி அனைவரையும் அழைத்திருக்கிறான் என்று. அபி மாடியில் இருந்து வருவதை பார்த்து அனைவரும் நிமிர்ந்து அமர்ந்தனர்.

"அக்கா, நான் யாழினியை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்"

டீயை குடித்துக் கொண்டிருந்த நந்தா,  அதிர்ச்சியில் அப்படியே துப்பி விட்டான். அபிக்கு எப்போதுமே வெட்டு ஒன்று,  துண்டு இரண்டு தான். தலையை சுற்றி மூக்கை தொடும் பழக்கம் எப்போதுமே அவனுடையது அல்ல.

"நீ நெஜமாத்தான் சொல்றியா சின்னா? இல்ல,  உன்னை  ஏதாவது பேய் அடிச்சிருச்சா?" என்று வழக்கம்போல கிண்டலடித்தாள் அஞ்சலி.

அபி தனது கண்களை சுழற்றி பெருமூச்சுவிட்டான்.

"அதானே, இப்படி ஒரு திடீர் முடிவுக்கு வர்ர அளவுக்கு இப்ப என்ன நடந்துச்சு? ராத்திரி ஏதாவது ரொமான்டிக் படம் பாத்தியா?" தன் பங்குக்கு சீண்டினான் நந்தா.

"காரணத்தை சொன்னா நாங்க சந்தோஷபடுவோம் இல்ல" என்றான் ஷ்யாம்.

"பெருசா என்ன ஒரு காரணம் இருக்க போகுது? யாழினி தான் காரணமா இருப்பா." என்றார் பாட்டி

"அது எங்களுக்கு ரொம்ப நாளாவே தெரியும். இப்ப திடீர்னு எதுக்கு இப்படி ஒரு முடிவுன்னு தான் எனக்குத் தெரியல". என்றாள் மாமி.

"ஆமா அபி, இவங்க ஒவ்வொரு விஷயத்தையும் மனசுல போட்டு போட்டு புதுசு புதுசா கதை எழுதறதுக்கு முன்னாடி நீ உண்மைய சொல்லிடு" என்றார் மாமா.

"உங்க ட்ராமாவை கொஞ்சம் நிறுத்துங்க. காத்திருந்தது போதும்னு நினைக்கிறேன். அவ்வளவு தான்".

"ஓஓஓ... அப்படியா கதை?"
என்றார்கள் கோரசாக.

"போதும் நிறுத்துங்க. இன்னிக்கே போய் ஆதி மாமா கிட்ட விஷயத்தை பேசிட்டு வந்துருங்க". என்றான் அபி.

இது அவர்களுக்கு இன்னொரு பேரதிர்ச்சியை தந்தது. எல்லோருக்கும் திட்டவட்டமாக புரிந்துபோனது, அவர்களுக்கிடையில் ஏதோ ஒன்று நிச்சயமாக நடந்திருக்கிறது என்று.

"மச்சான், உங்க ரெண்டு பேருக்குள்ளே ஏதும் பிரச்சனை இல்லயே? எல்லாம் நார்மல் தானே?" என்று கவலையாக கேட்டான் ஷ்யாம்.

"ஒருவேளை இன்னைக்கு நீங்க அங்க போகலைன்னா, சத்தியமா என்னை யாராலும் காப்பாத்த முடியாது" என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டான் அபி.

"கெட் ரெடி கைஸ், எல்லோரும் ரெடியாகுங்க" என பரபரப்பானான் நந்தா.

"இல்ல, மாமாவுக்கு இன்னைக்கு காலைல முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு. காலையில அவரு பிஸியா இருப்பாரு. நீங்க எல்லாரும் ஈவினிங் போனீங்கன்னா சரியா இருக்கும்.".

"அப்படின்னா சரி, எனக்கு பியூட்டி பார்லர் போய் பேஷியல் பண்றதுக்கு டைம் இருக்கு". என்றார் மாமி

"முக்கியமான ஒரு விஷயம், இதை எல்லாரும் ஒரு சர்ப்ரைஸ் வச்சுக்கங்க. யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்." என உதட்டோர புன்னகையுடன் சொன்னான் அபி.

"யாழினி கிட்ட சொல்லலாம் இல்ல?" என்றாள் அஞ்சலி.

"முக்கியமா, அவகிட்ட தான் சொல்ல கூடாது" என்று சிரித்தான் அபி.

எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"அக்கா, ஈவினிங் எனக்கு ஒரு முக்கியமான ஃபாரின் கிளையன்ட் மீட்டிங் இருக்கு. அதை முடிச்சுட்டு வந்து நான் உங்க கிட்டயும் யாழினி கிட்டயும் பேசிக்கிறேன்". என சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றான் அபி.

அனைவரும் பறப்பது போல் உணர்ந்தார்கள். அவர்களுடைய சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அவர்கள் வீட்டில் நடக்கும் கடைசி கல்யாணம் இது. அபி, நந்தாவையும் அஜய்யையும் விட பெரியவன் என்றாலும், யாழினிகாக காத்திருந்தான். அவனுடைய காத்திருப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top