Part 1

பாகம் 1

*சாந்தி நிலையம் *

சென்னையின் மிக பெரிய செல்வந்தர்கள் வாழவே கட்டமைக்கப்பட்ட, பிரசித்தி பெற்ற பகுதியில், நீச்சல் குளத்துடன் கூடிய அரண்மனை போன்ற வீடு "சாந்த நிலையம்".

அபிமன்யுவின் அந்த TN 04 Y 1000 கார், சாந்தி நிலயத்தினுள் நுழைகிறது. ஈர துணியுடன் அபிமன்யு காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் செல்கிறான்.

மிக பெரிய கூட்டு குடும்பம் அவனுடையது. கூட்டு குடும்பம் என்றால், மனதார கூடி வாழும் குடும்பம். வானுலகதில் இருப்பதாக சொல்லப்படும் சொர்கம் ஒரு வேலை போரடித்து போகலாம். ஆனால்,  இந்த குடும்பத்தில் வாழும் போது அதற்கு வாய்ப்பே இல்லை.

அபி வீட்டினுள் நுழைந்த போது, வீட்டின் வரவேற்பறையில் யாரும் இருக்கவில்லை. அபி, அவனின் அறைக்கு சென்று, ஈர துணியை கூட மாற்ற தோன்றாமல், அறையை ஒட்டிய நீச்சல் குளத்தின் அருகிலிருக்கும் இரும்பு நாற்காலியில் அமர்ந்து, எதையோ யோசிக்கிறான்.

அவனுடைய அக்கா, அஞ்சலி, அவனுடைய அறைக்குள் பிரவேசித்து, அவனை வலி நிறைந்த பார்வை பார்ப்பது கூட அவனுக்கு தெரியவில்லை.

"சின்னா" அவள் அவனின் தோளை தொடுகின்றாள்.

"அக்கா... நீங்க இன்னும் தூங்கலியா? "

"நீ சாப்பிட்டியா இல்லையானு தெரியாம, நான் தூங்கமாட்டேன்னு உனக்கு தெரியாதா? "

கேள்வியை பதிலாக கொடுத்தாள் அஞ்சலி.

"எனக்கு பசி இல்லக்கா" அவளின் முகத்தை பார்க்காமல் பதில் சொன்னான், அபி.

"சாப்பிடாம இருந்தா எல்லாம் சரியாயிடும்னா சொல்லு, நானும் சாப்பிடாம இருக்கேன். பட்டினியா இருக்குறது பிரச்சனைக்கு தீர்வு இல்ல."

"சரி நான் சாப்பிடறேன்"

அவனுக்கு தெரியும், அஞ்சலி அவன் சாப்பிடும் வரை போக மாட்டாள் என்று. இது, கடந்த இரு மாதங்களாக, அவர்களின் தினசரி வழக்கமாகி போனது. அஞ்சலிக்கு தெரியும், அபி ஏன் இப்படி இருக்கிறான் என்று. தன் மனதை வெளிக்காட்டிக்கொள்ள, இப்போதெல்லாம் அபி விரும்புவதில்லை. அவனை சமாதானப்படுத்த, வார்த்தைகள் போதுமானதாக இல்லை. அப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்டு அவன் சோர்ந்துவிட்டான். அவனுக்கு புளித்துப்போன வார்த்தைகளை கேட்க விருப்பமில்லை. மாறாக... அவனுக்கு ஓஓஓவென்று கத்த வேண்டும் என்று தோன்றுகிறது... கண்ணில் படுவதையெல்லாம் உடைக்க வேண்டுமென்று தோன்றுகிறது. தனது கையாலாகாத தனத்தால், தன்னையே வெறுக்கிறான்.

அபியின் அறையிலிருந்து வெளிவந்த அஞ்சலி, தனது பாட்டியின் அறைக்குள் ஓடிச்சென்று, பாட்டியின் தோளில் சாய்ந்து அழுகிறாள்.

"என்னால இதை சகிக்க முடியல பாட்டி. சின்னாவ இப்படி பாக்க முடியல. போதும் பாட்டி, நாம ஏதாவது செய்யணும். என்ன ஆனாலும் சரி. எதுவுமே செய்யாம, எல்லாம் சரியாது. "

"நான் மட்டும் சந்தோஷமாவா இருக்கேன்? நம்ம ஏதாவது செய்ய நெனச்சாலும், சின்னா அதுக்கு ஒதுக்கணுமே? " பாட்டி சோகமாக சொன்னார்.

"அவன பத்தி எனக்கு கவலையில்ல. யாரு சொல்றதையும் நான் கேக்க போறதில்ல" அஞ்சலி பிடிவாதமாக கூறினாள்.

"அப்படினா நானும் உன் கூட இருக்கேன். என்ன செய்யலாம்னு சொல்லு"

"மஹாலக்ஷ்மி அத்தை கிட்ட பேசலாம்"

"சரி"

அஞ்சலியின் முகம் பிரகாசமானது.

*ஆதிகேசவன் இல்லம்*

சற்று நேரத்திற்கு முன், ஆதிகேசவன் இல்லத்தில் நாம் பார்த்த அந்த பெண்மணி, காலர் ID யில் நம்பரை பார்த்த பின், மனமார்ந்த சிரிப்புடன் ஃபோனை எடுக்கிறார். அவர் தான் மஹாலக்ஷ்மியாக இருக்க வேண்டும்.

"எப்படி இருக்கம்மா?" என்றார் அவர்.

"நாங்க எப்படி இருக்கோம்னு உங்களுக்கு தெரியாதா? சத்தியமா நாங்க நல்லயில்ல" அஞ்சலி சீறினாள்.

"எனக்கு நல்லா தெரியும். நானும் இங்க அப்படி தான் இருக்கேன். உங்க மாமாவ பத்தி உனக்கு தெரியாதா?" முட்டும் கண்ணீருடன் பேசினார் மஹா.

"இன்னும் எத்தனை நாளைக்கு இதே காரணத்தை சொல்ல போறிங்க?"

அஞ்சலியின் கணவன் ஷியாம், அவள் பேசுவதை கேட்டுக்கொண்டு உள்ளே நுழைகிறான். அஞ்சலியின் கையிலிருந்து போனை வாங்கி பேசுகிறான்.

"நான் ஷியாம் பேசுறேன், அம்மா"

"எப்படி இருக்கீங்க தம்பி?"

"என் மனைவி அழும் போது நான் நல்லா இருக்க முடியுமா? உங்களுக்கே நல்லா தெரியும், அவளோட சந்தோஷம், அபியோட சந்தோஷம் தான்னு. என்னை தப்பா எடுத்துக்காதீங்க, எதுவுமே முயற்சிக்கம, என்ன சாதிக்க முடியும்னு நினைக்கிறீங்க? எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க. எங்களுக்காக இல்லனாலும், அட் லீஸ்ட் யாழினிக்காக... அவளோட சந்தோஷத்துக்காக... ப்ளீஸ்... "

"நீங்க என்ன நினைக்கிறீங்க? நான் இங்க சந்தோசமா இருக்கேன்னு நினைக்குறிங்களா? எனக்கு மட்டும் என் குழந்தை சந்தோஷமா இருக்கணும்னு ஆசை இல்லையா? அவளுக்கு உண்மை தெரியணும்னு நினைக்கலயா?"

"அப்படியில்லம்மா"
ஷியாம் வருத்தப்பட்டான்.

"நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க" அவள் குரலில் உறுதி தெரிந்தது.

"யாழினியை இங்க ஒரு தடவை கூட்டிட்டு வாங்க. நாளைக்கு அஜய், ப்ரியாவோட கல்யாண நாள்."

"என்னால நிச்சயமா சொல்ல முடியாது. ஆனா நான் முயற்சி செய்றேன். "

ஃபோனை துண்டித்துவிட்டு  திரும்பிய மஹா, யாழினி தன்னை குழப்பத்தோடு பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்தார்.

"யாரும்மா ஃபோன்ல?"

"அது வந்து..." மஹாவை பதற்றம் பற்றி கொண்டது.

"யாரையோ தம்பின்னு கூப்பிட்டீங்க. ஏதோ உண்மைய பத்தி பேசுனீங்க. யாரும்மா அது? நீங்க என்கிட்ட எதையோ மறைக்குறீங்க. சொல்லுங்கம்மா"

"யாழினி" ஆதிகேசவனின் கம்பிர குரலை கேட்டு திரும்பினாள்.

"அப்பா... நீங்களாவது சொல்லுங்க"

ஆதிகேசவன் மஹாவை நோக்கி ஒரு கோப பார்வை வீசினார்.

"ஏன் எனக்கு எல்லாமே அந்நியமா தெரியுது? எனக்கு எதுவுமே புரியல. ஆனா,  நீங்க ரெண்டு பேரும் அமைதியா இருக்கீங்க. ஏன்? எனக்குள்ள நடக்குற போராட்டம் உங்களுக்கு புரியலையா? நான் பைத்தியமாயிடுவேன் போலிருக்கு" யாழினியின் கண்ணிலிருந்து அருவி கொட்டியது.

"அவ என் அண்ணன் பொண்ணு" மஹா, ஆதியின் கோப பார்வையை நிராகரித்து உண்மையை கூறிவிட்டார்.

"என்ன???? உங்களுக்கு இவ்வளவு நெருக்கமான சொந்தம் இருக்கா? ஆனா,  ஏன் என்கிட்டே நீங்க சொல்லல? அவங்க ஏன் என்னை வந்து பாக்கல? " கேள்விகளை அடுக்கினாள் யாழினி.

"ஏன்னா, அவங்க இங்க வர்றது, உன்னை பாக்குறது எனக்கு பிடிக்கல." ஆதி ஸ்திரமான குரலில் கூறினார்.

"ஏன்? ஏம்பா? "மாற்றம்" எனக்கு முக்கியம்னு உங்களுக்கு தோணலையா? இன்னும் எத்தனை நாள் நான் இப்படியே இருக்குறது? இந்த வீட்டுக்குள்ள... நாலு சுவத்துக்குள்ள... சாகுறவரைக்குமா?"

"அவங்கள எனக்கு பிடிக்காது. உனக்கும் அவங்க வேண்டாம்"

"என்னோட வாழக்கையை முடிவு பண்ண நீங்க யாரு?" என்று யாழினி கத்த, அந்த அறை நிசப்தமாகி போனது.

"நான் உங்கப்பா"

"நான் ஏன் உங்கள நம்பனும்? உங்கள நம்ப சில போட்டோவும், டிகிரி சர்டிபிகேட்டும் போதாது. நான் உங்கள நம்பினேன். ஏன்னா எனக்கு வேற வழி இல்ல. ஆனா,  நீங்க நடந்துக்குறத பாக்கும் போது எனக்கு சந்தேகமா இருக்கு. நீங்க என் அப்பாவா இருந்தா, ஏன் என்னை வீட்லயே கைதி மாதிரி பூட்டி வைக்குறீங்க? நான் கடந்த காலத்துல அவ்வளவு கேவலமானவளா? எதுக்காக என்னை எங்கயும் போகவிட மாட்டெங்குறிங்க? நான் யாருன்னே தெரியாம, இந்த வீட்ல இருந்து, இருந்து பைத்தியமாக போறேன். உண்மைல நான் யாரு?"

அவளை சொல்லி குற்றமில்லை. இது தான் தனது வாழ்க்கை, இவர்கள் மட்டும் தான் தன்னை சேர்ந்த மனிதர்கள் என்று நினைத்திருந்த நேரத்தில், இப்படி ஒரு உறவும், உண்மையும் இருப்பது தெரிய வந்ததால் ஏற்பட்ட தடுமாற்றம் அது. அவள் நினைத்தது போல் இல்லை. அவளுக்கு தெரியாத இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன, அவையனைத்தும் இப்படி அவளுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டிரும் என்று அவள் நினைக்கவில்லை. ஏமாற்றத்தால் ஏற்பட்ட திடீர் தடுமாற்றம் இது.

"யாழினி, புரிஞ்சிக்க முயற்சி பண்ணு. உன்னோட நல்லதுக்காக தான் நான் இதை செய்யறேன். உன்னை யாரும் ஸ்ட்ரெஸ் பண்ண கூடாதுனு நெனச்சேன். யாராவது ஏதாவது சொல்லி, நீ ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சா, அது உனக்கு நல்லதில்லைனு பயந்தேன். நான் உன்னை கட்டுப்படுத்துறேன்னு நினைக்காதம்மா."

"குழம்பி சாகுறதைவிட, பட்டு தெளியுறது மேல் இல்லையா? நான் யாருனு எனக்கே தெரியாம இருக்குறது நரகம்பா. என்னை போராட விடுங்க. நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்கு தெரியும்? தயவு செய்து என் வாழ்க்கையை என்னை வாழ விடுங்க. வலியோ வேதனையோ என்னை நானே சரி செய்ய விடுங்க"

ஆதிகேசவனும் மஹாவும் அவளை ஆச்சர்யமாக பார்த்துகொண்டிருந்தனர். ஏனெனில், இது தான் யாழினி. எதையும் படபடவென பொரிந்து தள்ளும் மனப்பான்மை கொண்டவள். எந்த சூழ்நிலையையும் கையாள தக்கவள். இப்போதும் அது தான் நடக்கிறது. இரண்டு மாதங்களுக்கு பின்,  யாழினியை பழையபடி பார்த்ததில் அவர்களுக்கு உண்மையில் சந்தோஷம் தான்.

"உனக்கு என்ன வேணும்?"
வேறு வழியின்றி ஆதிகேசவன் கேட்டார்.

"என் கடந்த காலத்துடன் சமந்தபட்ட அதனை பேரையும் நான் சந்திக்கணும். ப்ளீஸ்" அவள் கெஞ்சினாள்.

நீண்ட யோசனைக்கு பிறகு...

"சரி. நீ அவரங்களை சந்திக்கலாம்." ஆதிகேசவன் முகத்தில் புன்னகையின்றி சொன்னார்.

ஆனால் அவரின் பதில், யாழினி மற்றும் மஹாவின் முகத்தில் புன்னகையை வரவழைத்தது.

"தேங்க்ஸ் பா" என்று  நெகிழ்ந்தாள் யாழினி.
ஆதிகேசவன் மெல்லிய முறுவல் செய்தார்.

"நான் உங்களை ஹர்ட் பண்ணிட்டேன். ஐம் சாரி" என்றாள் அதே நெகிழ்ச்சியுடன்.

"பரவாயில்ல, என்னால் புரிஞ்சிக்க முடியுது. நீ போய் ரெஸ்ட் எடு"

"அம்மா, என்னை எப்போ உங்க அண்ணன் வீட்டுக்கு கூட்டிட்டு போவீங்க?" ஆவலுடன் கேட்டாள்.

"நாளைக்கு... அங்க ஒரு பார்ட்டி இருக்கு. நாம போலாம்" மஹா, ஆதியை பார்க்காமல் பதில் சொன்னார்.

"தேங்க்யூ மா" சந்தோஷமாக அவள் அறையை நோக்கி ஓடினாள் யாழினி .

"அவளை அனுப்ப சம்மதிச்சதால, நான் எல்லாத்துக்கும் தயார்னு அர்த்தமில்ல. என்னோட முடிவ நான் மாத்திக்குவேன்னு நினைக்காத. அவங்களுக்கும் நியாபகபடுத்து, எனக்கு அவங்க சத்தியம் செஞ்சி குடுத்திருக்காங்க. யாரும் யாழினிகிட்ட எதுவும் சொல்ல கூடாது. நினைவிருக்கட்டும்."

ஆதியின் குரல் கட்டளையாக ஒலித்தது. மஹா தலை அசைத்துவிட்டு நகர்ந்தாள். யாழினியின்  அறைக்குள் பரவேசித்தாள்... யாழினியிடம் பேச... அவள் செய்தது சரி என்று சொல்ல... யாழினி பீரோவில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள்.

"யாழினி, என்ன தேடற?
"

"நாளைக்கு போட வேண்டிய ட்ரெஸ்ஸ தான். சினிமாவில் பார்த்திருக்கிறேன் பார்ட்டினா எப்படி இருக்கும்னு." அவள் குதுகுலமாக சொல்லிவிட்டு, தேடலை தொடர்ந்தாள்.

மஹா, யாழினியின் ஆர்வத்தை பார்த்து சிரித்துக்கொண்டார். ஏன் இருக்காது? அவள் பார்ட்டிக்கு செல்வது இதுவே முதல் முறை... ஏன்... வீட்டைவிட்டு வெளியே செல்வதும், இதுவே முதல் முறை.

"அம்மா, அவங்க குடும்பத்தை பத்தி சொல்லுங்களேன். உங்க அண்ணன் பொண்ணுனு சொன்னிங்க. அப்போ எனக்கு மாமா, மாமி எல்லோரும் இருக்காங்களா?"

"இல்ல. என்னோட அண்ணனும் அண்ணியும் உயிரோட இல்ல" சோகமாக சொன்னாள் மஹா. யாழினிக்கும் அது புரிந்தது.

"என்ன ஆச்சி மா?"

"இனொரு நாள் அவங்கள பத்தி சொல்றேன். அவங்க குடும்பத்தை பத்தி, அவங்கள பாக்கும் போது நீயே தெரிஞ்சிக்குவ."

"ஓ... சஸ்பென்ஸா?"

மஹா களுக்கென்று சிரித்தாள்.

"அப்படிதான் வச்சுக்கோயேன். ஆனா,  நான் உங்கிட்ட ஒன்னு சொல்லணும். *உன்னோட கண்ணை மட்டும் இல்ல, உன் மனசையும் திறந்து வை. பேசாத பல விஷயங்களை நீ புரிஞ்சிக்குவ.* உன்னை நினைச்சி நான் ரொம்ப பயந்தேன். ஆனா, நீ உன் உரிமைக்காக சண்டை போட்ட பாரு, எனக்கு உன் மேல இருந்த பயமெல்லாம் போயே போச்சி. நீ உன்னோட *நினைவை இழந்துட்டேனு* என்னால நம்பவே முடியல. நீ சீக்கிரமா எல்லாத்தையும் புரிஞ்சிக்குவங்குற நம்பிக்கை எனக்கு இருக்கு. எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்பிக்கை வருது. சரி. நீ இதை பத்தியெல்லாம் ரொம்ப யோசிக்க வேண்டாம். அப்பா சொன்ன மாதிரி கொஞ்ச நேரம் ஓய்வெடு."
கூறிவிட்டு, அவள் அறையை விட்டு வெளியேறினார் மஹா.

*யோசிக்காதே* என்று மஹா கூறினார் தான். ஆனால், யாழினியாவது யோசிக்காமல் போவதாவது? நடக்கிற காரியமா அது? முன்பை விட தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

"ஏன் அப்பாவுக்கு அவங்கள பிடிக்கல? அவங்க நல்லவங்க இல்லையோ? ஆனா, அம்மா, அப்பாவுக்கு நேர் எதிரால இருக்காங்க? அப்படி என்ன நடந்திருக்கும்? அவங்க எல்லாரும் எப்படி பழகுவாங்களோ. அது என்ன அம்மா சொன்னது? *கண்ணை மட்டுமில்ல, மனசையும் திறந்து வை. பேசாத பல விஷயங்களை புரிஞ்சிக்குவ* என்னவா இருக்கும்? ஏதாவது சிக்னலா இருக்குமோ? பாக்கலாம். நாளையை பற்றிய ஆவல் அவளை தொற்றிக்கொண்டது.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top