5.அவன் பார்க்க
அவனுக்கு நினைவு திரும்பியிருந்தது. அவனது புறக்காயங்களுக்கு மருந்திடப்பட்டு கட்டுப் போடப் பட்டிருந்தது. மூக்கில் வழிந்த ரத்தப் பெருக்கு நிறுத்தப்பட்டு, தலையை சாய்த்து வைக்கப் பட்டிருந்தது.
முகத்தில் எந்தக் காயங்களும் இல்லை..
அதிர்ஷ்டம் தான்!
எழுந்ததும் அவன் வலியோடு ஆங்கிலத்தில் என்னென்னவோ முனகிட, என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவரை அழைத்து வருவதாகச் சொல்லி உதவியாளர்கள் நகர்ந்தனர். ப்ரகதிதான் கூறியிருந்தாளே, இங்கே நடப்பவை அனைத்தையும் அவள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று!
அவளிடம் வந்து அவனுக்கு நினைவு திரும்பி விட்டதாகவும் அவளை அழைத்ததாகவும் சொல்ல, அவள் தலையசைத்துவிட்டு அவனிடம் வந்தாள். அறைக்குள் வந்தபோதே செவிலியர் ஒருவர் பணிவாக ஒரு admission formஐ அவளிடம் தந்துவிட்டுச் சென்றார். அதை வாங்கிக்கொண்டு, பேனாவைத் தயாராக வைத்துக்கொண்டு, அவனிடம் வந்தவள், அவன் முகம் பார்க்காமல் காகிதத்தில் கண்ணாக வினவினாள்.
"Name please."
ஒரு கணம் நம்ப முடியாமல் அவளைப் பார்த்தான் அவன். அவள் நிமிரவே இல்லை.
"You're joking right?"
"Excuse me?"
இப்போது நிமிர்ந்தாள் அவள். முகத்தில் அவனைப் போலவே லேசான குழப்பமும், இன்னும் கொஞ்சம் கோபமும் இருந்தது.
"என் பேர கேட்டியா?"
அவனது குரலில் அதிர்ச்சி, ஆச்சரியம், வியப்பு, குழப்பம், லேசான கோபம், எல்லாம் தெரிந்தது.
"ஏன்... உங்களுக்கு பேர் இல்லையா?" லேசான எரிச்சலோடு பொறுமையின்றி அவள் கேட்க, அவன் சிரிப்பும் திகைப்புமாய் நெடுமூச்சு ஒன்று விட்டான்.
"ஏன் உனக்கு டிவி, சினிமா பாக்குற பழக்கம் கிடையாதா?"
"ப்ச் Hello mister, it's Doctor Pragathi for you. 'நீ', 'வா' 'போ'ன்னு பேசற வேலை வச்சுக்காதீங்க. டாக்டர்கிட்ட இப்படித்தான் பேசுவீங்களா?"
அவள் சூடாக சொல்ல, 'இவள் என்ன வேற்றுக்கிரக வாசியா' எனக் குழம்பிப் போனான் அவன்.
'எத்தனை பொண்ணுங்க நான் அவங்க கிட்ட ஒரு தடவை பேச மாட்டனான்னு ஏங்குவாங்க.. என்கூட ஒரு நிமிஷ நேரம் கிடைக்காதான்னு ஏங்குவாங்க.. எத்தனை பேர் தூக்கத்துல, கனவுல கூட என் பேரை சொல்லுவாங்க.. என்னைத் தெரியாம இந்த தமிழ்நாட்டுல யாருமே இல்லைன்னு நினைச்சேனே... என் பெருமைய உடைக்கறக்காகவே வந்தவளா இவள்?'
அவனது சிந்தனையை அவள் சொடக்கிட்டுக் கலைத்தாள்.
"Okay. Mr.Whatever-your-name-is, what is your age?"
"25"
"Date of birth?"
'Times' பத்திரிகை அவனது பிறந்தநாள் சிறப்பு இதழ் பதிப்பித்திருந்தது நினைவுவந்தது. கூடவே இன்னொரு பெருமூச்சும் எழுந்தது.
"June 24th"
"எந்த வருஷம்?"
"ஏன் அதை நீ.. நீங்களே calculate பண்ணக்கூடாதா?"
அவனது கேள்விக்கு ஒரு முறைப்பு பதிலாகக் கிடைத்தது.
"கேக்கற கேள்விக்கு பதில் சொன்னா தான் ஒழுங்கா வீட்டுக்குப் போக முடியும். Got it?"
"1995"
ஒரு சோர்வான பெருமூச்சுடன் அவன் சொன்னான்.
"ம்ம்...conscious, oriented. But பேரு மட்டும் மறந்து போச்சு..."
அவள் தனக்குள் பேசுவது அவனுக்கும் கேட்டது.
"The name is Niveesh" என்றான் ஒரு சலிப்போடு.
"ஓகே... ம்ம். பேரும் ஞாபகம் இருக்கு. Good. ஆக்சிடெண்ட் ஆனப்போ என்ன நடந்ததுன்னு ஞாபகம் இருக்கா?"
"கார்ல ஒரு ஃபங்ஷனுக்குப் போயிட்டிருந்தோம். என்னோட மேனேஜரும் கூட இருந்தார். ஷார்ட்-கட்ல போலான்னு சொல்லி தெரியாத ஏரியாக்குள்ள போனோமா.. ஒரு டர்னிங்ல dead end. Classic cinematic accident. புளியமரத்தில கார் மோதிருச்சு. அதுவரைக்கும் ஞாபகம் இருக்கு"
கைகளை ஆட்டி கதை சொல்வதுபோல அவன் சொல்ல, உள்ளூர ஏனோ ஒரு புன்னகை தோன்றியது அவளுக்கு.
"ம்... நல்லது. அதாவது, உங்களுக்கு என்ன நடந்ததுன்னு ஞாபகம் இருந்தாலே, மூளைக்கு எந்த பாதிப்பும் ஏற்படலைன்னு அர்த்தம். ஏன்னா தலைல அடிபட்டு மூளையில இரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்புகள் இருக்குல்ல.. அதைக் கண்டுபிடிக்க தான் கேட்டேன்."
"ம்...சங்கர்-- ஐ மீன், என் மேனேஜர்க்கு என்ன ஆச்சு? Is he okay?"
'ஓ...அப்போது இவன் தான் முக்கியப் புள்ளியா? அந்த மனிதர் இவனது உதவியாளரா?'
அவளுக்கு ஏதோ புரியத் தொடங்கியது. அவன் கேட்ட கேள்வி பதிலில்லாமல் நிற்பது நினைவுக்கு வர, "Still unconscious. Driver's impact" என்றாள்.
மேலும் சில கேள்விகள் கேட்டுவிட்டு, அவனது இதயத்துடிப்பை stethoscope எனும் நாடிமானி வைத்துக் கவனித்தாள். பின் கண்களில் டார்ச் அடித்துப் பார்த்தாள்.
"ம்.. normal vitals. Stable. ஓகே Mr.Niveesh, எதாவது வேணுமா?"
"என்னோட மொபைல்?"
"தருவாங்க. அது எங்கயும் போயிடாது. Full medical examination, abdominal ultrasound, systemic evaluation எல்லாம் பண்ணனும். வேற எங்கயாச்சும் அடிபட்டிருக்கான்னு பாக்கணும். தேவைப்பட்டா CT, MRI கூட எடுக்கணும். இந்த formல கையெழுத்துப் போடுங்க"
'சார் சார்.. ஒரே ஒரு autograph.. please.. சார் என் சட்டைல போடுங்க, சார் '
'சார்... பெரிய ஃபேன்ஸ் சார்... ஒரே ஒரு ஆட்டோகிராப் சார்...'
'மக்கள் நாயகன் நிவீஷின் கையெழுத்திட்ட ஆல்பம்!! உடனே வாங்குங்கள்!!'
அவன் ஏதும் பேசாமல் வாங்கிக் கையெழுத்திட்டான்.
அவள் வாங்கிக்கொண்டுத் திரும்பிப் போக முயலவும், அவன்,
"டாக்டர்" என்று அழைத்தான்.
"Yes?"
"நிஜமாவே நான் யார்னு தெரியாதா?"
அவனது கேள்வியின் தீவிரம் கண்டு ஒருகணம் குழம்பினாலும், முகத்தில் எதையும் காட்டாமல் மிடுக்காகவே நின்றாள் அவள்.
"மிஸ்டர், பாத்தவுடனே தெரிஞ்சுக்க நீங்க என்ன ஜனாதிபதியா? One among a million other VIPs"
அந்த 'VIP' ல் தவழ்ந்த நக்கலை அவன் கவனிக்கத் தவறவில்லை. அது சுருக்கென்று அவன் தன்மானத்தில் தைத்தது.
"You must be living under a rock to not know me"
"Sorry to break your bubble, but I live under a roof, not rock"
இதழில் ஏளனப் புன்னகை வழிய அவள் பதிலடி கொடுக்க, அவனது முகம் சுருங்கியது.
மேலும் பேசாமல் விறுவிறுவென அவள் நடந்து சென்றுவிட, அவன் பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தான்.
'யாரிவள்? எத்தனை திமிர் பேச்சில், எத்தனை கர்வம் கண்ணில், எத்தனை வேகம் நடையில்... புயலைப் பெண்ணுருவில் பார்க்கிறேனே...
என்னைத் தெரியாதென்று எவ்வளவு சாதாரணமாகச் சொல்கிறாள்... உண்மை தானா? இல்லை நடிக்கிறாளா? எதற்காக நடிக்க வேண்டும்? நிஜமாகவே என்னைத் தெரியாதா? இளம் பெண்ணாக இருக்கிறாள், பின் எப்படி என்னைத் தெரியாமல்..?'
அதை யோசித்தபோது எழுந்த அழுத்தத்தில் தலை வலித்தது. அந்த மருத்துவமனைச் சுற்றுச்சூழல், மருந்து நெடி, பீப்பீப் என்ற கணினி ஒலி, எல்லாம் சேர்ந்து அவனை ஏதோ செய்தது. அங்கிருக்கப் பிடிக்காமல், எழுந்து சென்றுவிட நினைத்துப் படுக்கையிலிருந்து எழுந்தான் அவன்.
கால்களைத் தரையில் ஊன்றி உடலை நிமிர்த்தியதும், வலது முழங்காலில் மின்னல் தாக்கியதுபோல் வலி வந்தது. வலியில் முகம் சுழிக்க, உதடுகள் அனிச்சையாகக் காற்றை ஸ்ஸ் என்று இழுத்தன. கால்கள் நிதானமின்றிச் சாய, தரை காலடியில் வழுக்க, அருகிலிருந்த கம்பியை பற்றுதலுக்காகப் பிடிக்க முயன்று, நிலைதடுமாறி அதையும் இழுத்துக் கொண்டு தடாலெனத் தரையில் விழுந்தான் அவன்.
விழுந்த சத்தம் கேட்டு அறைக்குள் அவசரமாக ஓடி வந்த உதவியாளர்கள் இருவர், அவன் இருந்த நிலையைக் கண்டு திகைத்து அவனைப் பிடித்து எழுப்பிக் கைத்தாங்கலாகக் கட்டிலில் கிடத்தினர். மருத்துவரை அழைக்க ஒருவர் விரைந்தார்.
வலி தாங்காமல் இன்னும் அலறிக் கொண்டிருந்தான் அவன்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top