27.அவள் நெஞ்சில்

அவன் ஒரு காரணமாக அவளைச் சந்திக்க வந்ததாகச் சொல்லவும், சற்றுமுன் நடந்த நிகழ்வுகள் அவள் மனத்திரையில் ஓட, அவள் முகம் மாறியது.

"Listen, don't take any advantage of my talk. காலைல நான் பேசினது எனக்காக. எனக்கு யார்கிட்டயாவது சொல்லணும்போல இருந்தது. அதான் சொன்னேன்.. So, don't think of yourself as special. I just needed to vent out. And you were used."

அவள் அலட்சியமாகக் கூறியதில் அவன் முகம் கோபத்தில் சிவந்தது.

சடாரென எழுந்து நின்று, "எப்படி டாக்டர் உங்களால இப்படி இருக்க முடியுது? எப்படி இவ்வளவு அழகா பொய் பேச முடியுது?  உங்க கண்ணுல பாசத்துக்கான ஏக்கம், தவிப்பு எல்லாம் தெரியுது. ஆனா மறைக்கறீங்க. Behind this hard, stoic facade, there is a heart that yearns for love. How come you don't let anyone near?" என வாதிட்டான் அவன்.

"I may seem vulnerable to you. But that is not what I am. நான் எப்போதும் சொல்றது தான் மிஸ்டர் நிவீஷ். என்கிட்ட தேவையில்லாம பேச வேண்டாம். நமக்குள்ள டாக்டர் பேஷண்ட் உறவு மட்டும் இருந்தா எல்லாமே நல்லபடியா இருக்கும்"
அவள் நிதானமாவே நடித்தாள்.

"ப்ரகதி, உங்களை பத்தி இங்க யாருக்கும் தெரியாதுன்னு நினைக்கறேன்... யாருக்கும் உங்களைப் பத்தி நீங்க சொன்னதில்ல. அப்டி இருக்கும்போது, என்கிட்ட ஏன் நீங்க உங்க வாழ்க்கையைப் பத்தி சொல்லணும்? நான் கேட்டதால சொன்னேன்னு சொல்லாதீங்க, அது பொய். நீங்க நினைச்சிருந்தா என்னை ஒரு மொறை மொறைச்சு என்னை அடக்கியிருக்கலாம். But you didn't do it. You chose to open up.--"

"And I already feel bad for that. Stop making me feel like that"

"But-"

"I AM SORRY FOR BOTHERING YOU WITH MY LIFE! NOW WILL YOU PLEASE LEAVE ME ALONE?"

பொறுமையிழந்து அவள் கத்த, அவன் சொல்ல வந்த வாக்கியம் முற்றுப் பெறாமல் மடிந்தது. வேகமாக எழுந்து அவன் வெளியேற, அவன் போவதை ஒருவித வறண்ட பார்வையோடு பார்த்திருந்தாள் அவள்.

'நீ செய்வது அர்த்தமற்ற செயல் ப்ரகதி. ஒருவனிடம் உள்ள கோபத்தை ஏன் இன்னொருவனிடம் காட்டுகிறாய்?

ஆண்கள் எல்லோரும் ஒன்றுதான். அவனென்ன, இவனென்ன... எல்லாம் ஒரே ரகம் தான். அன்பு காட்டிப் பேச வேண்டியது, பின் நன்றாகப் பேசினால் காதல் என்று வந்து நிற்க வேண்டியது, ஆமாம் என்றால் உபயோகித்துக் கசக்கியெறிவது, இல்லை என்றால் கசக்கிப் பிழிந்து கலங்க வைப்பது. இவற்றைத் தவிர வேறென்ன செய்யத் தெரியும் அவர்களுக்கு?

இருந்தாலும் இவன்மீது உனக்கு நல்ல அபிப்ராயம் இருந்ததல்லவா? அதை ஏன் வெளிக்காட்ட மறுக்கிறாய்?

எனக்கு இந்த உணர்வுகள் எதுவும் வேண்டாம். நான், என் வாழ்க்கை, என் சுதந்திரம். இது போதும். என்னால் மீண்டும் ஒருமுறை செத்துப் பிழைக்க முடியாது'

அவள் கண்ணீரை துடைத்துக் கொண்டு கையிலிருந்த ரிப்போர்ட்டை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள்.

தோளில் ரத்தக்கட்டு. காலில் வீக்கம். கழுத்தெலும்பு இன்னும் வளைந்திருந்தது. எப்படியும் ஒருமாதம் ஆகலாம் சரியாகுவதற்கு.

'சுத்தம்!! இன்னும் ஒரு மாசத்துக்கு இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடணுமா? அவனா புரிஞ்சுகிட்டு ஒதுங்கிட்டா, நான் தேவையில்லாம அவன் மனசைக் காயப்படுத்தத் தேவையில்லை. இல்லைன்னா இன்னும் நிறைய வாங்குவான் அவன்..'

எண்ணங்கள் அவளை மூழ்கடிக்க, சிலை போல அமர்ந்திருந்தவளை ஹரிதாவின் குரல் எழுப்பியது.

"ஹேய், என்னாச்சு? பிரம்மை பிடிச்ச மாதிரி உட்கார்ந்திருக்க? டீன் உங்கிட்ட எதாவது பேசினாரா?"

"டீனா , எதுக்கு?"

"அப்ப உனக்கு விஷயம் எதுவும் தெரியாதா?"

"என்ன விஷயம்?"

"ஆ... அதை உன் நிவீஷ் கிட்ட கேளு..."

"என்ன நடந்தது? தயவுசெய்து உளறாம சொல்லு"

"அட முறைக்காதம்மா! நிவீஷை அட்டெண்ட் பண்ண சொல்லி என்னை அனுப்பினார் வசந்த் சார். நான் போய் x-rayக்கு எழுதிக் கொடுத்தேன். ஆனா அங்கிருந்து நகர மாட்டேன், டீனைப் பார்க்கணும்னு சொல்லி அடம்பிடிச்சான் அவன். அப்றம் அவனோட மேனேஜர் டீனைக் கூப்பிட்டார்.

அவர் வந்ததும் என்னை வெளிய அனுப்பிட்டாங்க. ஸோ வேறெதுவும் எனக்குத் தெரியாது. உனக்கும் அவனுக்கும் அடிக்கடி முட்டிக்கும்ல? அதான் டீன் உன்கிட்ட எதாவது அவனைப் பத்தி பேசினாரான்னு கேட்டேன்"

அவளுக்கு பதில் சொல்லாமல் திடுதிடுவென வெளியே ஓடியவளைக் குழப்பத்தோடு பார்த்தாள் ஹரிதா.

அவளோ நிற்காமல் பறந்தாள் அவனது அறைக்கு. அவள் உள்ளே சென்றபோது அவனும் சங்கரும் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அவள் அவனிடம் திரும்பி, "மிஸ்டர் நிவீஷ், டீன் கிட்ட என்ன பேசினீங்க? மொதல்ல டீனை எதுக்கு வர சொன்னீங்க?" எனக் காட்டமாக வினவினாள். அவனோ அவளைக் கண்டுகொள்ளாமல் ஆயாசமாகத் தன் தொடுதிரைக் கைபேசியை எடுத்து நோண்டத் தொடங்கினான்.

சங்கர் அவளைக் கண்டதும் எழுந்து நின்றிருந்தார். அவளது கேள்விக்கு அவன் விடையளிக்கப் போவதில்லை என்று தெரிந்து அவள் சங்கரிடம் திரும்பினாள்.

"சார், நீங்க சொல்லுங்க, டீன் ஏன் வந்தார்?"

அவர் ஏதும் கூறுவதற்குள், "Because I asked him to" எனத் தன் கைபேசித் திரையிலிருந்து கண்ணெடுக்காமல் அவன் சொன்னான்.

பல்லைக் கடித்துக் கொண்டு, "அதான்...ஏன் கூப்டீங்கன்னு கேட்டேன்" என்றாள் அவள்.

"அதையெல்லாம் நான் யாருக்கும் சொல்லணும்னு அவசியமில்லை சங்கர்"

அவள் பொறுமை அத்தோடு காற்றில் பறந்தது. கையில் வைத்திருந்த அவனது ரிப்போர்ட்டை ஆவேசமாகக் காற்றில் எறிந்தவள்,

"நானும் பாத்துக்கிட்டே இருக்கேன், ஓவராப் பேசிட்டே இருக்கீங்களே ? பேஷண்ட், ஆக்டர், விஐபினு மரியாதை தந்தா, ஓவரா உங்க இஷ்டப்படி ஆடுவீங்களா? என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாது. கோபம் வந்தா நான் என்ன செய்வேன்னே தெரியாது‌. ஒரு மேனிடால் இன்ஜெக்ஷன் போதும் உங்களை லைஃப்லாங் கோமால படுக்க வைக்கறதுக்கு. என் பொறுமையை சோதிக்காதீங்க" என அனல்பறக்கும் கண்களோடு கத்தி எச்சரித்தாள்.

சங்கர் ஒருநொடி அதிர்ந்து பின்வாங்கினார். அவனும் கைபேசியை வைத்துவிட்டு அவளை ஏறிட்டான். நல்லவேளை வேறு யாரும், எந்த ஊழியர்களும் அப்போது அங்கில்லை.

அவளது கதையை அறிந்ததால் சங்கருக்கு அவள்மேல் பரிவும் அக்கறையும் மட்டுமே இருந்தது. அவளது கோபங்கள் அனைத்திலும் நியாயத்தைக் கண்டிருந்ததால் அவை எதுவும் அவருக்குத் தப்பாகத் தெரியவில்லை. இப்போதும் அவள் முகத்தில் கலக்கத்தை மட்டுமே கண்டார் அவர். ஆயினும் தனது எஜமானரது எண்ணங்கள் ஓரளவு புரிந்ததால் ஏதும் பேசாமல் மௌனம் காத்தார்.

அவனோ சற்றே கலங்கினாலும் குரலில் அதை வெளிக்காட்டாமல் ,
"ஆமா சங்கர்... அவங்களை ஒருத்தன் குப்பை மாதிரி நடத்துவான். அவனை ஒண்ணும் கேட்க மாட்டாங்க, ஆனா ஆறுதல் சொல்ல யாராவது போனா அவங்களைக் கடிச்சுக் குதறுவாங்க" என்றான்.

அவனது குத்தல் பேச்சு நன்றாகவே புரிந்தது அவளுக்கு. ஆனால் என்ன செய்வது! அவளது கோபத்தை காரணகர்த்தா மீது காட்டினால் வேலை இருக்காதே!

'அப்போது என்ன உரிமையில் இவனின் மீது மட்டும் இவ்வாறு கோபப்படுகிறாய் ப்ரகதி?'

அவளது உள்மனம் வினவ, சில நொடிகள் விக்கித்து நின்றாள் அவள்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top