25. அவளாலே

ப்ரகதி ஹரிதாவின் கேள்வியில் அதிர்ந்துபோய் அமர்ந்திருந்தாள்.

" அப்ப நீ அவனைக் காதலிக்கலையா ப்ரகதி?"

"நான் எப்போ அப்டிலாம் சொன்னேன்?"

"இதெல்லாம் சொல்லணுமா என்ன? உன்னோட நடவடிக்கைகள்லயே தெரியுதே... என்ன டாக்டர்..? எத்தனை ஸிம்ப்டம்ஸ் வச்சு வியாதியைக் கண்டுபிடிப்பீங்க... உங்களுக்கு வந்திருக்கற ஸிம்ப்டம்ஸ் எதுவும் உங்களுக்குத் தெரியலையா?"

"எ..என்ன சொல்ற?"

"அட, புரியாத மாதிரி நடிக்காத! எப்போப்பாரு அவனைப் பத்தியே நினைக்கறது, அவனைப் பார்க்க ஓடறது, அவனுக்கு எதாவதுன்னா துடிக்கறது.. இதெல்லாம் லவ் இல்லையா?"

"ஏ... என்ன உளர்ர? இதெல்லாம் ஒரு பேஷண்ட்டுக்கு டாக்டர் தர்ற அடிப்படை கவனிப்பு. அவனை செக் பண்றது, எதாவது அடிபட்டா எமர்ஜென்சி ட்ரீட்மெண்ட்க்காக ஓடறது, இதை எல்லாத்தையும் நான் எல்லா பேஷண்ட்ஸுக்கும் செய்யறது தான்... அதைத்தான் அவனுக்கும் பண்றேன். அப்போ எல்லாரையும் நான் லவ் பண்றேன்னு அர்த்தமா?"

"சரி, எத்தனை பேருக்காக மார்னிங் அட்டெண்டன்ஸ் கூடப் போடாம ஓடிப் போய் பார்த்திருக்க ப்ரகதி?"

கையில் எடுத்த சாப்பாடு அப்படியே நின்றது அவளுக்கு. அச்சடித்ததுபோல் அப்படியே அமர்ந்திருந்தவளை ஹரிதா கண்ணால் மீண்டும் தூண்டினாள். வார்த்தைகள் தடுமாறி வெளிவந்தன.

"உ...உனக்கு எப்டித் தெரியும் ஹரி?"

"நீ அவன் ரூமை விட்டு வெளிய வர்றப்போ நான் லிப்ட்ல இருந்து இறங்கினேன். அதுக்கப்றம் போய் நீ அட்டெண்டன்ஸ் போட்டதைப் பாத்தேன்"

"That was my forgetfulness. It has nothing to do with him"

தன்னாலேயே நம்பமுடியவில்லை அதை.

"பார்க்கலாம்... இங்க தானே எல்லாரும் இருக்கப் போறோம்... ப்ரகதி என்ன செய்யறான்னு பாக்கலாம்."

"ஆமாமா.. பாக்கலாம் பாக்கலாம். ஹரிதா இன்னும் எத்தனை டாக்டர்ஸை தான் சைட் அடிப்பான்னு பாக்கலாம்"

பேசிக்கொண்டே எழுந்து தன் தட்டைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு கைகழுவச் சென்றாள் அவள். ஹரிதா தலையை சோர்வாக இடவலமாய் அசைத்தாள். பின் அவளும் எழுந்து சென்றாள்.

ப்ரகதிக்கு ஹரிதா அவனை நினைவுபடுத்தியதால் அவனைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது.

'காலையில் வேறு அவனுக்கு அடிபட்டிருந்ததே! யார் அவனைக் கவனித்தாரெனத் தெரியவில்லை. இப்போது எப்படி இருக்கிறானோ?!'

வேகமாகப் போக விரும்பினாலும் ஹரிதாவுக்கு பயந்து தன் தவிப்பை அடக்கிக் கொண்டு இயல்பாகக் காட்டிக்கொண்டு மெதுவாகவே நடந்தாள். தன்னறைக்கு வந்து வருகைப்பதிவை செய்துவிட்டு, நிமிடமும் நில்லாமல் அவனறைக்கு நடந்து அவனைக் காணச் சென்றாள்.

கதவை இருமுறை தட்டிவிட்டு, திறக்க முயன்றபோது கதவு பூட்டப்பட்டிருந்தது தெரிந்தது.

'எங்கே போயிருப்பார்கள்? என்ன ஆனது அவனுக்கு? எதாவது எலும்பு முறிந்திருக்குமா? அதுதான் ஆளைக் காணவில்லையா? ஆர்த்தோ யூனிட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்களா? அப்படி அவசரமாகப் போயிருந்தாலும் கதவை ஏன் பூட்டியிருக்கிறார்கள்? எப்போதும் இதுபோன்ற அறைகளுக்கு பூட்டுசாவி டீன் அலுவலகத்தில் தானே இருக்கும்?'

என்ன நடந்தது என அவள் அறியாமல் குழம்பித் தவித்தாள். யாரிடம் கேட்கலாம் என யோசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு உதவியாளர் அவளிடம் வந்தார்.

"டாக்டர், என்னாச்சு.. எதாவது பிரச்சனையா மேடம்? ஏன் கதவு முன்னாடி நிக்கறீங்க?"

"நிவீஷை காணோம்? எ.. எங்கே போனாங்க அவங்க?"

"தெரியல டாக்டர். நீங்க போனதுக்கப்றம் வசந்த் டாக்டரும் வெளியே போனாரு. கொஞ்ச நேரத்தில டீன் வந்தாரு. அப்றம் சாரை வீல்சேர்ல வச்சுக் கூட்டிட்டுப் போனாங்க, எங்க போனாங்கன்னு தெரியாது டாக்டர். ஆனா போய் அரைமணி நேரம் ஆகப் போகுது"

"சரி நீங்க போங்க. நான் பாத்துக்கறேன்"

அவள் வேறெங்கும் நகர்வதற்குமுன் அவள் வழியை மறித்து நின்றான் வசந்த்.

"தியேட்டர் போகாம என்ன பண்றீங்க டாக்டர் இங்க?"

"அ.. சார், என்னோட பேஷண்ட்... அவருக்கு என்ன ஆச்சுனு பாக்கலாம்னு வந்தேன்"

"அதான் நான் பாத்துக்கறேன்னு சொன்னேன்ல. உங்களுக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா?"
அவன் குரலை உயர்த்த, அவள் எழுந்த கோபத்தைக் வெளிக்காட்டாமல் மூச்சுகளை நீளமான இழுத்து விட்டாள்.

"சரி சார். நான் போயிடறேன்"

அவள் திரும்பிப் பாராமல் வேகமாக நடந்தாள். அவனிடமிருந்து விலக விலக அவள் கோபமும் குறைவதுபோல் இருந்தது.

'நிவீஷ்க்கு ஒண்ணும் ஆகியிருக்காது. இன்னும் ரெண்டு சர்ஜரி தானே...முடிச்சுட்டு உடனே அவனைப் பார்க்கப் போலாம். எவ்வளவு வேகமா முடியுமோ அவ்ளோ சீக்கிரம் போய்டலாம்...'

மனதுக்கு ஆறுதல் கூறியவாறே நடந்து அறுவையரங்கத்திற்கு வந்தாள் அவள். அவள் வருகைக்காகக் காத்திருந்த ஊழியர்கள் விறுவிறுவென தங்கள் பணிகளைத் தொடங்க, அவளும் மற்ற சிந்தனைகளைக் கலைத்துவிட்டு முழுமூச்சாகத் தன் சிகிச்சையைப் பார்க்கத் தொடங்கினாள்.

ஒன்றரை மணியிலிருந்து மூன்றரை மணி வரை நடந்தன அந்த அறுவை சிகிச்சைகள். முடிந்ததும் சோர்வாக வந்து ஓய்வறையில் அமர்ந்தாள் அவள். உதவியாளர்கள் சில தாள்களை அவளிடம் தந்து கையெழுத்து வாங்கிச் சென்றனர். கையுறைகளைக் கழற்றி எறிந்துவிட்டு, ஏப்ரனையும் களைந்துவிட்டு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு மெல்ல அடியெடுத்து அவள் வெளியே வர, அங்கே வசந்த் அவளது அறைவாசலில் நின்றிருந்தான்.

'சே..மறுபடியும் இவன் மூஞ்சில முழிக்கணுமா?' என அலுத்துக்கொண்டாள் அவள்.

வசந்த் நல்ல அழகன்தான். அறிவாளி தான். அவள் வந்த புதிதில் இருவரும் நண்பர்கள்போல இருந்தனர். ஆனால் அவனது பிடிவாத குணம் அவனது அத்தனை நல்ல குணங்களையும் மறைத்துக் காட்டியது. அவனை நல்ல நண்பனாகவே பார்த்த ப்ரகதிக்கு, சென்ற மாதம் அவன் திடீரென்று காதலைச் சொல்லவும் பக்கென்றது.

..........

"ப்ரகதி...ஈவ்னிங் ஃப்ரீயா?"

"இல்லையே டாக்டர், சர்ஜரி முடிஞ்சதும் review op இருக்கு. எப்டியும் அஞ்சு மணி ஆயிடும். நீங்க தானே ஷெட்யூல் போட்டீங்க.."

"அ...அதான், அஞ்சு மணிக்கு அப்றம் ஃப்ரீயா?"

"அஞ்சு மணிக்கு அப்றம்... வீட்டுக்குப் போவேன். ஏன் சார் எதாவது வேலை பெண்டிங் இருக்கா? நான் எதாவது செய்யணுமா?"

"ம்... அஞ்சரை வரைக்கும் எனக்காக வெய்ட் பண்ண முடியுமா? நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் உங்கிட்ட."

"அப்டியா? இப்போவே சொல்லுங்க சார், என்ன விஷயம்? எதாவது performance meet இருக்கா?"

"இல்லை...நான் ஈவ்னிங் சொல்றேன்...just don't go away... wait for me."

"Just tell it now na? லஞ்ச் ப்ரேக் தானே.. இன்னும் அரை மணி நேரம் வெட்டி தான். இப்பவோ பேசுங்க. அரை மணி நேரத்துக்கா பேசப் போறீங்க?"

"கொஞ்சம் முக்கியமான விஷயம்.... புரிஞ்சுக்கங்க... ஈவ்னிங் வெய்ட் பண்ண முடியுமா முடியாதா?"
அவன் பொறுமையிழந்து கேட்க, அவள் திகைப்பாகப் பார்த்தாள்.

"சார்... அரைமணி நேரத்தில பேச முடியாததையா சார் சாயங்காலம் பேசப் போறீங்க? என்னால பத்து நிமிஷமே பொறுமையா கேட்க முடியாது..."

"So , your answer is 'no'? "

"My answer is 'now'. நீங்க டென்ஷனாக இதுல ஒண்ணுமே இல்லை."

"ம்.. ஃபைன். ப்ரகதி, இதை நான் வேற மாதிரி சொல்லணும்னு நினைச்சிருந்தேன். உன்னால இந்த மூட்ல சொல்றேன்... பரவால்ல.
ப்ரகதி... I think I'm in love with you. உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. உன்னை லவ் பண்ணி, அப்றம் கல்யாணம் பண்ணிட்டு, உன்கூட லைஃப் ஷேர் பண்ணனும்னு தோணுது. உன்னை மாதிரி பொண்ணை எங்க வீட்டுக்கும் ரொம்பப் பிடிச்சுப் போகும். நீ ஆர்ஃபன்னு தயங்க வேணாம். நாங்க அட்ஜஸ்ட் பண்ணிப்போம். உனக்கும் என்னைப் பிடிக்கும்னு தெரியும்... உன் வாயால நீயே சொல்லேன்..."

அவனது ஒவ்வொரு வார்த்தைக்கும் அவள் முகம் மாறியது.

பயம், அருவருப்பு, கோபம், எரிச்சல், அனைத்தும் கலந்ததொரு பார்வையோடு அவனைப் பார்க்க, அவன் முகமும் மாறியது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top