22.அவளுக்காக
அவனை உதறித் தள்ளிவிட்டு தளர்ந்த நடையோடு அவள் நடந்து வெளியே செல்ல, அதைக் கனத்த பார்வையோடு பார்த்திருந்தான் அவன்.
'ஏன்? எதற்காக நான் அவளை ஆறுதல் படுத்த நினைத்தேன்? அவள் கண்களில் கண்ணீரைக் கண்டதும் எனக்கு ஏன் அவள் மேல் அந்தக் கரிசனம் தோன்றியது? அவளை இனிமேல் அழவே விடக்கூடாது என்றெல்லாம் ஏன் யோசித்தேன் நான்?
ஆனால் ஏன் அத்தனை கஷ்டத்திலும் அவள் தனித்திருக்கவே நினைக்கிறாள்? அதிலும் ஆண்களை ஏன் அவள் இத்தனை வெறுக்கிறாள்? அவளை ஒரு பெண் என்பதால் மற்றவர்கள் ஏறி மிதிப்பதாய் உணர்கிறாள்... அவளை அப்படி உணர வைத்தது யார்? ப்ச்..வேறு யார், அந்த மலைமாடு வசந்த் தான்! அவனை....'
அவன் எண்ணங்கள் யாவும் அந்தப் புதியவனை என்ன செய்யலாம், அதற்குமேல் தன்னை விலக்கி விலக்கிச் செல்லும் அந்த தொட்டால்சிணுங்கியை என்ன செய்யலாம் என்றே இருந்தது.
அதனால் அவள் சொன்னதைக் கேட்காமல் ட்ரெட்மில்லில் ஏறி ஓடத் தொடங்கினான். கால்கள் லேசாக வலித்தாலும், அதை லட்சியம் செய்யாமல், தன் முழு பலத்தையும் காட்டத் தொடங்க, ஒரு கட்டத்தில் கால்நரம்புகள் இழுப்பதுபோல் தெரிந்தது அவனுக்கு. சட்டென அவன் நிற்கவும், ட்ரெட்மில்லின் வேகத்தால் அவன் சரிந்து தடாரென்ற சத்தத்துடன் தரையில் விழுந்தான்.
"Damn it!"
தோள்பட்டையைப் பிடித்துக்கொண்டு கடித்த பற்களினூடே நான்கைந்து ஆங்கில வசவு வார்த்தைகளைத் தரையை நோக்கித் தெளித்தான் அவன்.
பால்கனியில் நின்று யாரோ இயக்குனர் ஒருவரோடு கைபேசியில் பேசிக்கொண்டிருந்த சங்கர் அவன் விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்தார். அவனைக் கைத்தாங்கலாகத் தூக்கி நிமிர்த்துவதற்குள் இரண்டு உதவியாளர்களும் உள்ளே ஓடி வந்தனர்.
"என்ன சார்... நான்தான் சொன்னனே, டாக்டர் exercises பண்ண வேணாம்னு தான சொன்னாங்கனு... இப்படி ஆயிடுச்சு பாருங்க"
அவர் சொற்களில் தெரிந்தது சலிப்பா, அக்கறையா, தவிப்பா, எரிச்சலா என இனங்கான முடியவில்லை யாராலும். நல்ல காரியதரிசிக்கு அதுதானே அழகு, தன் உண்மை உணர்வுகளை வார்த்தைகளில் காட்டாமல் மறைப்பது!
"எங்கயாவது அடிபட்டுடுச்சா சார்? வலி இருக்கா?"
மருத்துவமனை உதவியாளர் ஒருவர் கேட்டார். மற்றொருவர் அவனது தோள்களை அழுத்திப் பார்த்தார். வலது தோளின் கீழ்ப்பகுதியை அழுத்துகையில் அவன் "ஸ்ஸ்..." என வலியில் சத்தமிட்டான். தரையில் நேராக இடித்த பகுதி அதுதான் என்பதால் லேசாக வீக்கம் கட்டியிருந்தது.
"சார்.. நான் போய் டாக்டரைப் பாத்து கூட்டிட்டு வரேன்."
சென்றமுறை நடந்தது ஞாபகம் இருந்ததால் சங்கர் தானே செல்வதாகக் கூறினார்.
மணி பன்னிரெண்டு ஆகியிருந்தது. அவள் எங்கே இருப்பாள் என வினவிக் கொண்டு அறுவை சிகிச்சையறையின் வாசலை வந்தடைந்தார் அவர்.
'Authorised entry only' என்ற சிவப்பு வண்ணப் பலகை அவரைத் தடுத்து நிற்கவைத்தது. கண்ணாடிக் கதவு என்றாலும் வெள்ளைக் காகிதம் ஒட்டப்பட்டு, ஒரு சின்ன வட்டமளவு மட்டுமே எட்டிப் பார்க்கும்படி இருந்தது.
என்ன செய்வது எனக் கையைப் பிசைந்துகொண்டே அவர் சுற்றுமுற்றும் பார்த்து நின்றார். தெய்வத்தின் அருள்போல அந்தக் கண்ணாடி ஓட்டையில் ப்ரகதியின் முகம் தெரிந்தது.
__________________________________
தனது அட்டவணையில் இருந்த இரண்டு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்திருந்தாள் அவள். ஆனால் வழக்கமாக அதன்மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி அவள் முகத்தில் இன்று இல்லை. இயந்திரம் போலத் தன் பணிகளை அவள் செய்துவிட்டு, ஓய்வறைக்கு நடந்தாள் அவள், அடுத்த நோயாளி வரும்வரை கொஞ்சம் மூச்சு வாங்க.
எதேச்சையாகக் கண்ணாடிக் கதவின் வழியே வெளியே பார்க்க, சங்கரின் உருவம் போலவே யாரோ வெளியே நிற்பது தெரிந்தது.
வெளியே போய்ப் பார்க்கலாமா வேண்டாமா என அவள் யோசனையோடு நிற்கையில், எதிரே இருந்த அறையில் இருந்து வெளியே வந்தான் வசந்த்.
"என்ன ப்ரகதி, ஏன் வழியில நிற்கறீங்க?"
"ந..நத்திங் சார். I just came out of my surgery"
"Well, take some time. நான் கொஞ்சம் ரெஸ்ட் ரூமை யூஸ் பண்ணலாமா? என் சைட்ல லேடீஸ் இருக்காங்க"
"Sure sir. I wasn't going in anyway"
"Are you still upset over this morning?"
"No sir. You just made me realise my position"
"அப்போ உள்ள உட்கார்ந்து பேசலாமே?"
"எ.. என்னைப் பார்க்க யாரோ வந்திருக்காங்க.. நான் போறேன் டாக்டர்"
அவனது பதிலுக்குக் காத்திராமல் அவள் வெளியே சென்றுவிட, கண்களில் கோபம் கனன்றது அவனுக்கு.
அது சங்கராவே இருக்கவேண்டும் என வேண்டியவாறு அவள் கதவை நோக்கி நடந்தாள். அவளைப் பார்த்திட்ட சங்கரும் அவளை நோக்கிக் கையசைக்க, கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு அவரிடம் சென்றாள்.
"என்னாச்சு சங்கர் சார்? ஏன் இங்க நிக்கறீங்க?"
"டாக்டர் கொஞ்சம் சீக்கிரம் வாங்களேன்... நிவீஷ் கீழ விழுந்துட்டார்" பேசிக்கொண்டே அவளை இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு அவர் விரைந்தார்.
அவனுக்கு அடிபட்ட செய்தி காதில் விழுந்ததும், அதுவரை மனதிலிருந்த எண்ணங்கள் யாவும் மறைய, மனம் முழுதும் அவனே நிறைந்தான். என்ன ஆயிற்றோ எனப் பதபதைத்தவாறே அவள் அவனிடம் வர, இடது கையால் தோளை நீவிவிட்டவாறே அவன் அமர்ந்திருந்தான்.
வரும்வழியில் சங்கர் நடந்ததை அவருக்குத் தெரிந்தவரை சொல்லியிருந்தார். எனவே வந்ததும் அவனிடம் நேராகக் கேட்டாள்.
"என்ன நடந்தது? ஏன் ட்ரெட்மில்லில ஏறினீங்க? எப்படி விழுந்தீங்க?"
அவள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல், அவள் முகத்தையும் பார்க்காமல் வேறுபுறம் திரும்பியிருந்தான் அவன்.
உடன்நின்றிருந்த உதவியாளரை ஏறிட்டாள் அவள்.
"என்ன ஆச்சு? எதாவது சொன்னா தானே தெரியும்?"
"டாக்டர், நாங்க வரும்போது கீழ விழுந்திருந்தார். தூக்கிக் கட்டில்ல படுக்க வச்சோம். தோளைத் தொட்டப்போ வலியில கத்தினார் டாக்டர். லேசா வீங்கியிருக்கு, காலும் கூட வீங்கியிருக்கு , பாருங்க"
"நிவீஷ், எப்படி நீங்க போய் ட்ரெட்மில்லில இருந்து விழுந்தீங்க... I thought you had good balance?"
அவனது மௌன விரதத்தைக் கலைக்க வேண்டுமென்றே அவள் அவனது தன்மானத்தைத் தட்டினாள்.
"சங்கர், நம்ம ஆண் வர்க்கத்தையே அடியோட வெறுக்கறாங்க... அவங்ககிட்ட எப்படி நான் பேசறது? போக சொல்லுங்க அவங்களை!"
சங்கர் அதிர்ச்சியில் விழிகள் பிதுங்கப் பார்த்திருக்க, ப்ரகதி முகத்தில் கோப ரேகைகள் படரத் தொடங்கின.
"I know you have a hearing and perception difficulties. But never knew that you could trip over your feet too"
(உங்களுக்கு காது கேட்பதில், புரிந்துகொள்வதில் கோளாறு என்று தெரியும். ஆனால் நடக்க நடக்க இடறி விழுவீர்கள் என இப்போது தான் தெரிகிறது)
"தேவையில்லாம பேச வேணாம்னு அவங்க தானே சொல்வாங்க சங்கர், அதேதான் நானும் இப்போ சொல்றேன். Don't talk to me anymore."
சங்கர் அவளிடம் திரும்பினார். கெஞ்சும் குரலில், "டாக்டர், அவர் வேற சண்டை போடணும்னே பேசறார்.. நீங்களாவது அவருக்கு என்ன பிரச்சினைனு பாருங்களேன், ப்ளீஸ்.." என கிசுகிசுத்தார்.
சரியென அவனருகில் சென்று தோளைப் பிடிக்கப் போனாள் அவள். அவள் கையை உதறுவதற்காகத் தோளைக் குலுக்க, அதனால் வந்த வலியில் முகம்சுளித்தான் அவன். அதைக் கண்டு புன்னகைத்தாள் அவள்.
அவனது கோபமும் பாராமுகமும் அவளுக்கு சிரிப்பை ஏனோ வரவழைத்தது.
"சரி, உங்களுக்கு இப்ப என்ன வேணும்? நான் என்ன செஞ்சா என்னை inspect பண்ண விடுவீங்க?"
"எனக்கு சில கேள்விகளுக்குப் பதில் வேணும்"
"என்ன கேள்வி?"
"ஏன் நீங்க இப்படி இருக்கீங்க?"
"எப்படி இருக்கேன்?"
"உங்களுக்கே தெரியும்"
பெருமூச்சு ஒன்றை காற்றில் கலக்கவிட்டு, அவனருகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.
"சரி... as you asked..."
*****
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top