21.அவளுக்கு
"Anything for my doctor"
அவன் யதார்த்தமாகக் கூறிய வார்த்தைகளில் அவள் இறுக்கமானாள். கண்களில் நேசம் விலகி நெருடல் தோன்ற, இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.
"சொல்லாதீங்க."
"என்ன?"
"அதை இன்னொரு தடவை சொல்லாதீங்க. நான் யாருக்கும் சொந்தம் இல்ல. I'm not anyone's property. 'My doctor'னு நீங்க கூப்படறதுக்கு நீங்க ஒண்ணும் என்னை எழுதி வாங்கிடல."
வெடுக்கென அவள் பேச, அவன் முகம் சட்டென வாடியது.
"நான் தப்பான அர்த்தத்தில சொல்லல டாக்டர். நீங்க என்னை ட்ரீட் பண்ணினா நீங்க தானே என்னோட டாக்டர்? அதைத்தான் மீன் பண்ணி சொன்னேன்"
"சொல்ல வேணாம்"
"அ..."
"சொல்ல. வேணாம்."
அழுத்தி அவள் உரைக்கவும் அதற்குமேல் எதுவும் பேசவில்லை அவன். சங்கர் குழப்பத்தோடு அவர்கள் இருவரையும் ஏறிட்டார்.
அவனைத் தவிர்த்துவிட்டு ஜன்னல் வழியாகக் கண்களை செலுத்தினாள் அவள். செவிலியர் அவனுக்கு மீதமிருந்த பரிசோதனைகளை செய்து முடித்ததும் அவனது ரிப்போர்ட்டில் அதை எழுதிக் கையெழுத்திட்டாள் அவள்.
மேலும் அதில் எதையோ அவள் படித்துக்கொண்டிருக்க, அந்த அறைக் கதவு தட்டப்படும் ஓசை நிசப்தத்தைக் கலைத்தது.
"யார்னு பாருங்க சிஸ்டர்.."
ரிப்போர்ட்டிலிருந்து கண்ணை அகற்றாமல் கூறினாள் அவள். செவிலியர் சென்று திறப்பதற்குள் தானாகவே திறந்துகொண்டது கதவு.
"Pragathi, who the hell do you think you are?"
அறையெங்கும் எதிரொலித்தது அந்தக் குரல். சங்கரும் நிவீஷும் தங்கள் அறையின் உள்ளே நுழைந்து கத்திய அந்த ஆளை திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தனர். ப்ரகதி ஒருநொடி லேசாக நடுங்கியது அவனுக்குத் தெரிந்தது.
வந்திருந்தவனைக் கண்ணால் அளவெடுத்தான் அவன்.
ஆறடிக்கும் சற்றே குறைவான உயரம், கட்டுமஸ்தான தேகம். தோளில் அலட்சியமாகக் கிடந்த கசங்கிய வெள்ளைக் கோட். கையில் ஸ்டெத். கண்களில் கோபம்.
'யாரிவன் புதிதாக? எதற்காக அவளிடம் இவ்வாறு கத்திப் பேசிக் கோபப்படுகிறான்? இந்தப் பெண் புலியை எதிர்த்துப் பேச இந்த மருத்துவமனையில் ஆளே இல்லையென நினைத்தோமே... இவன் என்ன அவளையே நடுங்க வைக்குமளவு கத்துகிறான்?'
"சார், நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க"
கஷ்டப்பட்டு வரவழைத்த அமைதியோடு அவள் பேசுவது அவனுக்குப் புரிந்தது. ஆனால் வந்த புதியவனோ அவளைப் பேசவிடாமல் அலட்சியமாகக் கை நீட்டித் தடுத்துவிட்டு, மற்றவர்கள் அந்த அறையிலிருப்பதையே பொருட்படுத்தாமல் கூச்சலிட்டான்.
"எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. உங்களுக்கு ஷெட்யூல் போடறது நான் தான். அதில் என்ன இருந்தாலும் அதை அப்படியே செய்யறதுதான் உங்க வேலை. லிஸ்ட்டை மாத்தறதுக்கு, மாத்த சொல்லி கேட்கறதுக்கு யாரு உங்களுக்கு அதிகாரம் குடுத்தா? ரெண்டு நாள் நான் வரலைன்னா என்ன வேணா நடக்குமா யூனிட்ல?
Mind you, you are just a resident surgeon under me. நீங்க ஒரு authorised practitioner ஆ ஆகறதும் ஆகாததும் என் கையில தான் இருக்கு. ஒரு வார்த்தை, disobedientனு உங்க performance paperல எழுதினேன்னா உங்க மொத்த கரியரும் காலி, புரிஞ்சதா? இப்ப போய் ஷெட்யூலை ஃபாலோ பண்ற வழியப் பாருங்க...
எப்ப பாரு உங்க ஹீரோ ரூம்லயே விழுந்து கிடக்கிறது... ஆமா, நீங்க மட்டும் எந்த prior informationனும் இல்லாம, யார்கிட்டவும் கேட்காம எமர்ஜென்சி கேர்ல போய் உங்க இஷ்டத்துக்கு manipulation பண்ணிருக்கீங்க, இங்க ஒரு எமர்ஜென்சி சர்ஜரி குடுத்தா அதை செய்ய கசக்குதா?"
அவள் மொத்தமாகத் தன்னை அடக்கிக்கொண்டு அமைதியாக நின்றாள். கண்களில் கண்ணீர் திரண்டிருந்தது. அவன் மேலும் சில வசவுகளை அவள்புறம் வீசிவிட்டு வந்த வேகத்திலேயே வெளியேறினான். நிவீஷையோ, சங்கரையோ அவன் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
புயலடித்து ஓய்ந்ததுபோல இருந்தது.
யாரும் சில நிமிடங்கள் வரை பேசவில்லை.
அவளிடமிருந்து லேசான விசும்பல் எழும்பியது.
அவளை நோக்கி அவன் நகர எத்தனிக்க, அவளோ, "I..I need a moment" என அவசரமாக அருகிலிருந்த குளியலறைக்குள் நுழைந்து தாழிட்டாள் அவள். குளியலறைக் கதவை அரை நிமிடம் வெறித்துப் பார்த்தான் அவன். சங்கரிடம் திரும்பி,
"யாரது சங்கர்? நம்ம ரூம்லயே வந்து நம்ம டாக்டரைப் பார்த்து இப்படி பேசறது? டீனைக் கூப்பிடுங்க" என்றிட, அவரும் கோபத்தோடு,
"ஆமா சார், ப்ரகதி டாக்டரையே இப்டிப் பேசறார், என்ன திமிரு? இப்பவே நான் டீன் சாரைக் கூப்படறேன்"
"ஐயோ சார் வேணாம்!"
இருவரின் பார்வையும் அந்த செவிலியரின் பக்கம் திரும்பியது.
"சார், அவர்தான் எங்க சர்ஜரி டிபார்ட்மெண்ட்டோட சீஃப் டாக்டர், டாக்டர் வசந்த். அவருக்குக் கீழ தான் மூணு யூனிட்டோட சீனியர் சர்ஜன், ரெஸிடண்ட் சர்ஜன், அஸிஸ்டண்ட், அசோசியேட் அப்டின்னு பதினெட்டுப் பேர் இருக்காங்க. அதுமட்டும் இல்ல, இந்த யூனிட்டோட இருபது நர்ஸ், இருபத்தஞ்சு ஹெல்ப்பர்ஸ், பத்து அட்டெண்டர்ஸ், ஏன், தரையைக் கூட்டிப் பெருக்கற க்ளீனிங் ஸ்டாஃப் கூட அவர் கண்ட்ரோல் தான்.
ப்ரகதி டாக்டர் அவங்க யூனிட்டோட அஞ்சு ஜூனியர் டாக்டர்களுக்கு மட்டும் தான் இன்சார்ஜ், ஆனா அவங்களோட திறமைக்காக எல்லா டாக்டருமே அவங்களை மதிக்கறாங்க. அதுக்காக அவங்க தான் பெரியவங்கனு நீங்க நினைக்கக் கூடாது சார். அவங்களுக்கே ஆர்டர் போட பிறந்தவர்தான் வசந்த் டாக்டர். என்னதான் திறமையான ஆளா இருந்தாலும், மேல இருக்கறவங்க பேச்சைக் கேட்டுத்தானே ஆகணும் அவங்களும்?
டீன் சாருக்கு அவங்க ரெண்டுபேர் மேலயுமே நல்ல மரியாதை இருக்கு.. அத்தோட, டிபார்ட்மெண்ட்டுக்கு உள்ள நடக்கற விஷயத்தை டீன் கிட்ட கொண்டு போறது நல்லா இருக்காது. டிபார்ட்மெண்ட் சுமுகமா இயங்கறதா அவர் நினைச்சிட்டு இருக்கார். நீங்க எதுவும் பேசி அதைக் கெடுத்தறாதீங்க சார்."
அவர் பேசி முடிக்கவும் கதவு திறந்து ப்ரகதி வெளியே வரவும் சரியாக இருந்தது. அழுகைத் தடம் அவள் அழிக்க முயன்றிருந்தாலும் தெரிந்தது. தண்ணீரால் கண்ணீரை அழிக்க முயன்று தோற்றிருந்தாள் அவள். சிவந்திருந்த விழிகள் அவளது இயலாமையைக் காட்டிக் கொடுத்தன.
"சிஸ்டர், நான் கிளம்பறேன். நீங்க மீதி செக்கப்பை பாத்துக்கங்க. எதாவது வேணும்னா கேட்டு செய்யுங்க. நான் ஈவனிங் வரேன்."
வேண்டுமென்றே அவர்கள் இருவரது பார்வையையையும் தவிர்க்க வேண்டி முகம் திருப்பாமல் நேராக வெளியே நடந்தாள் அவள்.
அவள் செல்வதை சங்கர் பாவமாகப் பார்க்க, அவனோ இரண்டெட்டில் அவளை நெருங்கி அவள் கரம்பற்றி நிறுத்தினான்.
அவள் ஏதும் செய்யுமுன் அவள் தோளைப் பற்றித் தன்னோடு சாய்த்துக் கொண்டு,
"It's alright. It's okay. You did nothing, and it wasn't your fault" என மெல்லிய குரலில் சொல்லிக் கொண்டே அவள் தலையை ஆதரவாகத் தடவிக் கொடுத்தான்.
சட்டென நடந்த அந்தக் காட்சியைக் கண்டு சங்கரும் செவிலியரும் உறைந்து நின்றனர்.
ப்ரகதியும் எந்த எதிர்ப்பும் இன்றி அவனோடு சாய்ந்து நின்றிருந்தாள்.
ஒரு கணம் தான் நீடித்ததென்றாலும் அது அவளது தாங்கும்சக்திக்கு மிகவும் மீறியதாக அமைந்தது. சட்டெனத் தன்னை விலக்கிக் கொண்டவள், அவனை எரித்துவிடுவதுபோல் முறைத்தாள்.
"I know about you men. உங்களை மாதிரி ஆம்பளைங்களை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். எப்படான்னு காத்துக்கிட்டு இருக்கற புத்தி! சே! Never ever touch me again!"
முன்பிருந்த சோகத்துக்கு முற்றிலும் முரணான ஒரு ஆத்திரம் தொனிக்கும் அச்சுக்குரலில் எச்சரித்துவிட்டு அவள் நகர, அவன் விக்கித்து நின்றான்.
***
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top