15.அவனோடு
டாக்டர் ப்ரகதி மேத்தாவுடன் பேசிவிட்டுத் தனது தளத்துக்கு வந்தபோது, அவள் முகத்தில் உற்சாகம் பொங்கியது.
'நினைத்ததை நடத்திவிட்டாய் ப்ரகதி... யாருக்காக அந்த நடிகனுக்கு வைத்தியம் பார்க்க ஒத்துக் கொண்டாயோ, அவருக்கு உன் அருமை புரிந்தது. ஒரு ஆறே மாத அனுபவமுள்ள மருத்துவருக்கு, இன்று மருத்துவமனை முதல்வரின் பாராட்டுக் கிடைத்திருக்கிறது. வெல்டன் மை கேர்ள்...'
பரிசோதனைக்காக அவனிருந்த அறையை நோக்கி நடந்தாள் அவள். எதிரில் பரிச்சயமான முகமொன்றைக் கண்டதும் நின்றாள்.
"டாக்டர் லோகேஷ்.."
"ம்.. உன்னைப் பார்க்க தான் வந்தேன்."
"பரவால்ல இருக்கட்டும் சார்."
"என்னது?"
"தேங்க்ஸ் சொல்லத் தானே வந்தீங்க டாக்டர்...அதான் பரவால்ல இருக்கட்டும்ன்னு சொன்னேன்"
லேசான சிரிப்போடு சொன்னாள் அவள். ஆனால் அந்த மருத்துவர் முறைத்தார்.
"தேங்க்ஸா... My bad! நிவீஷுக்கு ட்ரீட்மெண்ட் குடுக்க வேண்டியது நான்... அந்த opportunityய நீ எடுத்துக்கிட்டதுக்கு நான் தேங்க்ஸ் சொல்லணுமா?"
அவரது பேச்சில் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றாள் அவள்.
"Excuse me? என்ன சொல்றீங்க டாக்டர்? நான் உங்க வாய்ப்ப தட்டிப் பரிச்சுகிட்டேன்னு நெனைக்கறீங்களா?"
"தென்...? நிவீஷ் வந்திருக்கார்னு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நான் உடனே ஓடி வந்திருப்பேன்... சே! How can you be so indignant, Pragathi?"
அவரால் இதற்குமேல் முட்டாள்தனமாகப் பேச முடியுமா என்பதுபோல் பார்த்தாள் அவள்.
"You have no idea..."
"Whatever. இப்ப என் குடும்பமே என்னைத் திட்டிட்டு இருக்கு... அது நான் இருந்திருக்க வேண்டிய இடம்... The doctor who saved the People's star... இப்ப எல்லாம் போச்சு, shit!"
இப்போது ஆத்திரத்தைக் குறைக்கக் கைகளை முறுக்கி நெடுமூச்சு விட்டாள் அவள்.
"Trust me, he doesn't need to be saved. நிவீஷுக்கு உங்க உதவி தேவையில்லை. நடந்தது ஒரு தன்னிச்சை செயல். உங்க இடத்துல நான் வந்தது உங்க விருப்பப்படி தான். ஆனா உங்களுக்கு இன்னும் எரிச்சலாவும் பொறாமையாவும் இருந்தா, தாராளமாக டீன் கிட்டப் போய் பேசுவோம் வாங்க... You can tell him all your misendeavours"
டீன் என்றதும் பின்வாங்கினார் அம்மருத்துவர்.
"வாட்??? ப்ரகதி...நான் உன்னை ஒரு ஃப்ரெண்டுன்னு நெனச்சேன்.. ஆனா நீ--"
"Please. ஃப்ரெண்ட்ஸ்... அந்த வார்த்தைக்காக நிறையா செஞ்சாச்சு சார். இந்த நிமிஷம் வரைக்கும் மேத்தாவுக்கு நீங்க அந்த நேரத்தில அங்க இருந்திருக்கணும்னோ , அங்க இல்லைன்னோ, தெரியாது. செஞ்ச உதவிக்கு எனக்கு கிடைக்கறது என்னவோ நன்றிகெட்டத்தனமான வார்த்தைகள் தான். நான் நிறையா பண்ணிட்டேன்... இதோட முடிச்சுக்கலாம்னு நெனைக்கறேன்"
அவரிடம் மேலும் எதாவது பேசினால் அவரைத் திட்டிவிடுவோமென்று தோன்றியது அவளுக்கு. எனவே விறுவிறுவென நடந்து அவரைவிட்டு விலகி அந்த எக்ஸிக்யூட்டிவ் அறைக்கு வந்தாள். அவளது மனம் இன்னும் எரிமலையாகக் குமுறிக்கொண்டிருந்தது.
'ப்ரகதி... மீண்டும் மீண்டும் ஏன் அவமானப்படுத்தப்படுகிறாய் நீ... எல்லா வேலைகளையும் செய்தும், பழிகளையும் சுமக்க வேண்டுமா? எதற்காக இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டும்? நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்ளும் ஆண்களை ஏன் இன்னும் உயிரோடு வைத்திருக்கிறாய் இறைவா?!'
உள்ளே நுழைகையில் அவன் முகத்தைப் பார்த்தாள் அவள். மேத்தாவின் பாராட்டினால் மறந்துபோன கோபம், இப்போது அந்த மருத்துவரின் வார்த்தையால் திரும்ப, அவன்மீதும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அவன் ஏதோ சொல்லத் தொடங்க, அவள் ஒரு வார்த்தை அவனைப் பேசவிடாமல்,
"உங்க மனசில என்ன நினைச்சிட்டு இருக்கீங்கன்னு எனக்குத் தெரியல சார். ஆனா நான் ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருக்கேன். I can't stand you anymore. I can't stand emotional abuses, I can't stand irritable verbal exchanges. I can't stand them, sir!!"
அவன் வாய்பிளந்து பார்த்திருக்க, அவள் பெருமூச்சு ஒன்றை உதிர்த்துவிட்டுத் தொடர்ந்தாள். "I'm done. I'm shifting you to Physiotherapy department. B- block, 3rd floor"
சங்கர் அப்போதுதான் கைபேசியில் ஏதோ அழைப்பிற்குப் பேசியபடி பால்கனியிலிருந்து உள்ளே வந்தார். அவளது படபடப்பான முகத்தைக் கண்டவர் உடனே தன் கைபேசியை அணைத்து சட்டைப்பையில் வைத்துவிட்டு நிவீஷின் அருகில் வந்தார். நிவீஷ் சற்றே திகைப்பான பார்வையோடு அவளை ஏறிட்டான்.
ஆனால் சங்கல்பமாக உரைத்தான்.
"முடியாது."
சங்கர் எதுவும் புரியாமல் அவனைப் பார்த்தார். ப்ரகதி கூட ஒரு குழப்பமான முகத்துடன் அவனை ஏறிட்டாள்.
"என்னது, முடியாதா?"
"என்னாச்சு சார்? என்னாச்சு டாக்டர்?"
"சங்கர், டாக்டருக்கு நம்மளைப் புடிக்கலையாம்... நாலு ப்ளாக் தள்ளித் தூக்கிப்போடப் போறாங்களாம்..."
அவன் சங்கரிடம் இவ்வாறு மாற்றிப் பேச, சங்கர் கஷ்டமாக அவளைப் பார்க்க, அவளுக்கு இது எல்லாமே சேர்ந்து வார்த்தையில் வெடித்தது.
"நான் பேசறதை எல்லாம் தப்பாவே interpret பண்றீங்க, தப்பாவே convey பண்றீங்க... என்ன தான் சார் பிரச்சனை உங்களுக்கு?"
அவளது குமுறல்களைப் பார்த்தும், சலனமில்லாமல் இருந்தான் அவன்.
"தேங்க்ஸ் டாக்டர்."
"ஹான்?"
திருவிழாவில் தொலைந்த குழந்தைபோல் விழித்தாள் அவள்.
சங்கர் அவளையும் அவனையும் மாறிமாறிப் பார்த்தார்.
"என்னோட ப்ரஸ்மீட்ல கலந்துக்கிட்டதுக்கும், எனக்காகப் பேசினதுக்கும்"
"நான் அதைப்பத்திக் கேட்கலையே? சரி, நீங்களா சொன்னதால கேட்கறேன், உங்களுக்கு ஏன் என்னைக் கூப்பிட்டு அவமானப்படுத்தனும்னு தோணுச்சு மொதல்ல? அதை சொல்லுங்களேன்?"
'நான் இன்னைக்கு இங்கிருந்து கிளம்பிருவேன்னு நினைச்சுப் பண்ணினேன்...அதை எப்படி உங்கிட்ட சொல்வேன்?'
"அ.. அது.. சும்மா... சாதாரணமா எல்லாருக்கும் வர்ற ஆர்வம்தான். என்னைத் தெரியாம ஒருத்தர் இருக்கறதை மத்தவங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன். அதான்..."
அவனது பதில் திருப்தியளிக்கவில்லை அவளுக்கு.
அவள் தலையசைத்துவிட்டு சங்கரின் பக்கம் திரும்பி, "சார்.. நான் டீன் கிட்ட சொல்லிடறேன். அவரை இடம் மாத்தறதுக்கு தயாராகிக்கங்க" என்றபடி, அவளது அருகிலிருந்த ஊழியரிடம் ஏதோ கூறினாள். அவர் சென்றதும் மீண்டும் அவனிடம் "Be ready to leave.." என உரக்கச் சொல்லிவிட்டு, ".. me alone" என்பதை தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
அவள் சென்ற பின் சங்கரை அழைத்தவன், "எதாவது பண்ணுங்க சங்கர்... நான் எங்கயும் போகக் கூடாது," என்றான்.
அவரோ அவனை விநோதமாகப் பார்த்தார்.
"ஏன் சார்...? பொதுவா நீங்க ரொம்ப சென்சிடீவ். உங்களை யாராவது எதிர்த்துப் பேசினா அந்த இடத்தை விட்டு உடனே எந்திரிச்சுப் போய்டுவீங்க... அவங்களை ஒரு பொருட்டாக் கூட மதிக்க மாட்டீஙக... இப்ப எதுக்காக அந்த டாக்டர்கிட்ட வீணா... ஆர்க்யூ பண்ணிக்கிட்டு...?"
அவனும் வினோதமாகச் சிரித்தான்.
"அது எனக்கே தெரியல சங்கர். நான் இதுவரைக்கும் யார்கிட்டயும் இவ்ளோ அட்ராக்ட் ஆனதில்ல.. முதல்ல நான் அவங்களைத் தப்பா நெனைச்சிட்டேன். அவங்க என்கூட நெருங்கிப் பழகறதுக்காக அப்டிலாம் செஞ்சாங்கன்னு ஏதேதோ கற்பனை பண்ணிக்கிட்டேன். பட், அவங்க அப்டி இல்ல... she's different...she's something special... அதுக்காக என்னால சாரி எல்லாம் கேட்க முடியாது. அவளுக்கு பயந்து வேற ரூமுக்கு ஓடவும் முடியாது. I want to be near her. I wanna get closer."
"இது..சரியா வரும்னு எனக்குப் படல சார்...அவங்களும் பயங்கர கோபத்தில இருக்காங்க. நீங்களும் பேசும்போதெல்லாம் அவங்களைக் கோபப்படுத்தி விடறீங்க... மேற்கொண்டு சண்டை வளர்க்காம... நாம கொஞ்சம்.."
"இந்த நிவீஷ்க்கு பின்வாங்கத் தெரியாதே சங்கர்! Let her fall for my charms!!"
அவன் சிரித்துக்கொண்டே சொல்ல, சங்கர் தவிப்போடு தலையசைத்துவிட்டு நகர்ந்தார். அவன் தளர்வாகக் கட்டிலில் சாய்ந்து கண்ணை மூடினான்.
அவன் எண்ணங்கள் வண்ணமயமாக விரியத் தொடங்கின...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top