10.அவளாக

அவள் பெயரைச் சொன்னதும் அவன் முகம் கன்றியது.
"What? Is she gonna operate on me after all these?"

அவன் குழப்பத்தை, தவிப்பைப் பார்த்துவிட்டு அவரே தொடர்ந்தார்,
"என்னதான் ஒரு டாக்டருக்கு தன்கிட்ட சிகிச்சைக்காக வந்த பேஷண்ட்டைப் பிடிக்கலன்னாலும், தங்களோட சொந்த விருப்பு வெறுப்புக்களை என்னைக்குமே அவங்க தங்களோட தொழில்ல காட்ட மாட்டாங்க. இது எங்க hippocratic oathஓட ஒரு clause. ப்ரகதியும் அப்படித்தான். She is unimpassioned. Indifferent. நீங்க எதுக்காகவும் பயப்படவேண்டாம். You literally are in safe hands"

"என்னவோ... நீங்க சொல்றீங்க..."

"எனக்காக நீங்க compromise பண்ணிக்க வேணாம் சார். வேற சர்ஜன் வேணும்னு request பண்ணீங்கன்னா மாத்திடலாம்..."

"வேணாம் பரவால்ல... ப்ரகதியே பண்ணட்டும்."
மனமின்றி ஒருவழியாக ஒத்துக்கொண்டான் அவன்.

மேத்தா சென்றதும் சங்கர் அவனைக் குழப்பத்தோடு ஏறிட்டவாறு,
"என்ன சார்... டக்குனு அந்த டாக்டரைப் பத்தி... கொஞ்சம்... தப்பா சொல்லிட்டீங்க?" எனக் கேட்டார்.

"தப்பாவா?? என்ன சங்கர், நீங்களும் புரியாம பேசறீங்க? இப்ப ப்ரகதி என்னைப் பிடிக்காம தானே கோபமா கத்திட்டுப் போனாங்க?"

"சார்... அவங்களுக்கு உங்களைப் பிடிக்காதுன்னு நீங்களே நெனைச்சுக்கற மாதிரி இருக்கு சார்.. அவங்க அப்படி எதுவும் சொல்லல. அதனால, அவங்ககிட்ட ஒருதடவை பேசினா.."

அதற்குள் நான்கைந்து மருத்துவமனை ஊழியர்கள் வந்து, "டீன் உங்களை ஷிஃப்ட் பண்ண சொன்னார் சார். இந்த வீல்சேர்ல உட்கார்ந்துக்கறீங்களா?" என்றனர் பணிவாக.

ஒரு முகமூடியை அவனுக்கு அணிவித்து, மருத்துவர்கள் பயன்படுத்தும் பிரத்யேக லிஃப்ட்டின் வழியாக அவனை ஐந்தாவது மாடிக்கு அழைத்துச் சென்றனர் அவர்கள்.

அந்த executive chamber கிட்டத்தட்ட ஒரு நட்சத்திர விடுதியின் அறை போல, இளநீல வண்ணத்தில் கண்ணாடித் தூய்மையோடு பளபளத்தது. படுக்கை, மேசைகள் என அனைத்தும் கலைநயத்துடன் இருந்தது கண்டு வியந்தனர் சங்கரும் நிவீஷும்.

அவனை பத்திரமாக அங்கே இருக்கச் செய்து, அவனுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்துவிட்டு ஊழியர்கள் அனைவரும் அகன்றனர். மெத்தையின் சுகத்தில் அவன் மெல்ல உறங்கிவிட, சங்கர் மட்டும் தனக்கும் அவனுக்கும் வரும் அழைப்புக்களைப் பார்த்து அதில் வேண்டியவர்களுக்கு மட்டும் பதிலளித்தார்.

___________________________________

ப்ரகதி தனது அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துவிட்டு வெளியே வந்தாள். நோயாளியை பரிசோதனை அறையிலேயே வைத்திருக்குமாறு கூறிவிட்டு, குறிப்பேட்டில் சில instructions எழுதித் தந்துவிட்டு, தன் அலுவலக அறைக்கு நடந்தாள். வழியில் executive room திறந்திருந்தது கண்டு அங்கேயே நின்றாள்.

'உள்ளே போகலாமா , வேண்டாமா?

அவன் ஒரு நோயாளி, உன் பொறுப்பில் உள்ள ஒரு நோயாளி. அவன்மீது நீ கோபப்படக் கூடாது ப்ரகதி...

அவன்மட்டும் என்னை அவமானப்படுத்தலாமா?

ஒரு நோயாளியை உன் சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு நீ கையாளவேண்டும்.

அவனுக்கு நான் சிகிச்சையளிக்க மறுப்பதற்கு எனக்கு முழு உரிமை உண்டு.

அது நீ அவனை முதன்முதலில் பார்த்தபோதே மறுத்திருக்க வேண்டும். பாதி வழியில் அவனை விட்டுச்செல்வது பாவம், குற்றம்.

சே...to hell with this hippocratic oath!'

தன் மனதோடே ஒரு வாக்குவாதம் நடத்தி, இறுதியில் அவனது அறைக்குத் திரும்ப, அவள்பின்னால் நின்றுகொண்டிருந்தார் மேத்தா.

அவரைக் கண்டு திகைத்தவள் சுதாரித்துக்கொண்டு, "மார்னிங் டாக்டர்." எனத் தலையசைத்தாள் பணிவாக.

"Shall we?" எனக் கைகாட்டினார் அவர், அந்த அறையை.

"After you, sir"

"No. After you, surgeon"

இருவரும் அவனிருந்த அறைக்குள் நுழைந்தபோது அவன் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். சங்கர் அவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்றார்.

"டாக்டர், நிவீஷ்க்காக நான் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன். அவர் ஏதோ டென்ஷன்ல பேசிட்டார். மனசுல வச்சுக்காதீங்க, ப்ளீஸ்"

அவள் கண்ணை மட்டும் அசைக்க, டீன் மேத்தா புரியாமல் பார்த்தார்.

"What happened?"

"அது..."

"Nothing, sir. This actor insulted me for not knowing him."
முகத்தில் எந்த வித்தியாசமும் இன்றி அவள் கூற, சங்கர் தலைகவிழ்ந்து நின்றார்.

"ப்ரகதி, நீங்க ஏதோ அவரை ஒழுங்கா அட்டெண்ட் பண்ணலன்னு நிவீஷ் சொன்னார்"

"That shows his immaturity."

"டாக்டர் அவருக்காக-" இடைமறித்த சங்கரை விழிகளால் அவள் தடுக்க, அவரும் மௌனமாகக் கைகளைப் பிசைந்தவாறு நின்றார்.

"ப்ரகதி, உங்களைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நிவீஷ் உங்ககிட்ட சர்ஜரி பண்ணிக்க ஒத்துக்கிட்டார். இந்த சர்ஜரிக்குப் பிறகு, I hope you both will be on good terms"

மேத்தா சென்றதும், அவள் சங்கரை முறைத்தாள்.

"ஏன் சார்? அதான் நான் ஒழுங்கா அவரை அட்டெண்ட் பண்ணலல்ல? அப்றம் ஏன் என்கிட்ட சர்ஜரி பண்ணிக்கணும்? வேற நல்ல ஹாஸ்பிடல் பாக்கறேன்னு சொன்னாரு, அப்றம் ஏன் இந்த ரூமுக்கு, அதுவும் என் கன்ட்ரோல்ல இருக்க டிபார்ட்மெண்ட்க்கு வந்தீங்க?"

அவள் பேச, அதில் சட்டென முழித்துக் கொண்டான் அவன். அவளைப் பார்த்ததும் ஒரு லேசான திகைப்பும் பதற்றமும் அவன் முகத்தில் நிழலாடின. ஆனால் ஒரே கணத்தில் அதை மறைத்து, முகத்தைத் திமிராக வைத்துக்கொண்டு அவளைப் பார்த்தான்.

அவள் தலையை இடவலமாக ஆட்டிவிட்டுக் கோபமாக அவள் நகர முயன்றாள்.

"டாக்டர்!"

அவள் திரும்பலாமா வேண்டாமா என மனதிற்குள் விவாதிக்கும் நேரத்தில் அவன் எழுந்து சாய்வாக அமர்ந்து கொண்டான்.

"சர்ஜரி பத்தி டிஸ்கஸ் பண்ணலாமா?"

அவள் திரும்பி, ஒரு நாற்காலியில் அமர்ந்து அவனை நேருக்கு நேராக நோக்கினாள்.

"You owe me an explanation, and an apology"

"But that doesn't come with your hippocratic oath"

ஏதோ சாதித்துவிட்டதுபோல் அவன் திமிராகச் சிரித்தான் அவன். அவளுக்கு அது எரிகிற தீயில் எண்ணை விட்டதுபோல இருந்தது.

"சரி, உங்களால என்னை ஒரு பேஷண்ட்டா மட்டும் பார்க்க முடியலன்னா நீங்க போலாம். நான் உங்க டீன் கிட்ட பேசிக்கறேன்"

"Mr. Niveesh, இது ஸ்கூலும் இல்ல, டீன் எனக்கு ப்ரின்சிபாலும் இல்ல, நீங்க போய் கம்ப்ளெய்ண்ட் பண்ணினா நான் பயப்படறதுக்கு."

"அப்போ போங்க டாக்டர்... போய் நீங்களே டீன் கிட்ட சொல்லிடுங்க... என்னை ட்ரீட் பண்ற அளவுக்கு உங்களுக்கு திறமை பத்தலன்னு."

கோபம் எல்லை மீறியது அவளுக்கு. ஆனால் அதே சமயம், அவள் மனம் சட்டென வேறு வழி காட்டியது.

'ப்ரகதி, இது உனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் ...
எத்தனை முட்டாள் பேஷண்ட்களை நீ பார்த்திருப்பாய்! உன் பொறுமைக்கும் திறமைக்கும் இந்த முட்டாள் ஒரு சவால். டீன் மேத்தாவின் நன்மதிப்பைப் பெறவும் இது ஒரு சிறந்த வழி. இவனது ரசிகர் முன்னிலையில் மருத்துவமனைக்கு நற்பெயர் வந்தால் மேத்தாவுக்குப் பெருமை. மேத்தா சந்தோஷமடைந்தால் அது உனக்கும் உன் துறைக்கும் நன்மை... இவனை சகித்துக் கொள் ப்ரகதி.'

அவளது கோபமுகம் சட்டென சாந்தமாகியது.

"நிவீஷ், நானே உங்க சர்ஜரியைப் பண்றேன். I will prove myself to you"

"பாக்கலாம்"

'கால் உடைஞ்சாலும் திமிரு பாத்தியா இவனுக்கு! அவன் கண்ணை நோண்டி...'

ஷ்ஷ். சாந்தம் ப்ரகதி...focus... இவன் உன் பேஷண்ட்.

"சரி சார்.. treatment procedures பத்தி கொஞ்சம் பேசலாமா?"

"ஸ்யூர்..."

"இது ஒரு சின்ன சர்ஜரி தான். அரைமணி நேர ஆபரேஷன். ஒரே நாள்ல வீட்டுக்குப் போய்டலாம். மணி இப்ப மூணு. நாலு மணிக்கு சர்ஜரி ஆரம்பிச்சு நாலரைக்கு முடியும், நாளைக்கு காலைல நீங்க வீட்டுக்குப் போய்டலாம்"

"ஓ.. நீங்க மட்டுமே பண்ணிடுவீங்களா?"

எழுந்த சில ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளை எச்சில் முழுங்கினாள் அவள்.

"சார், நான் primary surgeon. கூட ரெண்டு assistant surgeons, ஒரு anesthesiologist, அஞ்சு junior doctors, நாலு நர்ஸ், அவங்களோட ஒரு இன்சார்ஜ், எல்லாரும் தியேட்டர்ல இருப்பாங்க. Moreover, procedureஐ முழுக்க கேமரால ரெக்கார்ட் பண்ணுவாங்க. உங்களுக்கு சர்ஜரி முடிஞ்சு எதாவது சந்தேகம் வந்தா அந்த footageஅ பாத்துக்கலாம்"

"தேவையில்லை. நான் உங்களை நம்பறேன். No recordings. தியேட்டர்னா... அங்கயும் கேமரா வைக்கணுமா என்ன?"

"சரி, டீன்கிட்ட சொல்லிடலாம். வேற டவுட்ஸ் இருக்கா?"

"ம்.. நான் பிழைச்சுக்குவேனா?"

அவன் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவளை சிரிக்கவைக்க முயன்றான். ஆனால் எரிச்சல்தான் மூண்டது அவளுக்கு.

"You don't have to be this dramatic. I told you it's an outpatient procedure"

"Relax... just kidding"

"Don't."

அவனிடமிருந்து திரும்பி சங்கரைப் பார்த்தவள், "நான் சர்ஜரிக்கு ரெடி பண்ண சொல்லப் போறேன். அதுக்குள்ள மனசு மாறிடப் போகுது உங்க ஹீரோவுக்கு" என்றாள்.

அவள் பேச்சிலிருந்த நக்கல் வெளிப்படையாகவே தெரிந்தது. சங்கர் லேசான தவிப்போடு தலையசைத்தார்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top