48 அப்பாவின் நிலைப்பாடு
48 அப்பாவின் நிலைப்பாடு
புனிதாவின் புகைப்படத்தை பார்த்தவாறு அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தார் வெங்கட்ராகவன்.
"புனிதாவுக்கு என்ன ஆச்சு? அவ எப்படி உங்க கைக்கு கிடைச்சா? இவ்வளவு நாளா எங்க இருந்தா?" என்று கேள்விகளை அடுக்கினார் அவர்.
ஆர்த்தியிடம் கூறிய அதே கதையை அவரிடமும் கூறினான் யாழினியின். அதற்குப் பிறகு, அவர் கேட்ட முதல் கேள்வி,
"புனிதாவை பத்தி ஆர்த்திக்கு தெரியுமா?" என்பது தான்.
"தெரியணும்னு நினைக்குறிங்களா?"
அவருக்கு பதில் சொல்வதை தவிர்த்து, அவரை கேள்வி கேட்டான் யாழினியன்.
"என்ன கேக்குறீங்க யாழ்?"
"இது சினேகாவோட அம்மா பத்தின விஷயம் அங்கிள். இதுக்கு ஆர்த்தி எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியல"
"ஆர்த்தி எங்க இருக்கா?
"எங்க ரூம்ல தான் இருக்கா"
ஆர்த்தியை பார்க்க, அவர்களின் அறையை நோக்கி விருவிறுவென நடந்தார் வெங்கட்ராகவன். அவரை பின்தொடர்ந்தான் யாழினியன். ஏதோ ஒரு மருத்துவ புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள் ஆர்த்தி. அவரை பார்த்து எழுந்து நின்றாள். அவளிடம் வந்த அவர், மீண்டும் அவளை அமர வைத்து, அவரும் அமர்ந்து கொண்டார்.
"உன்கிட்ட ஒரு முகியமான விஷயம் சொல்லணும் மா..." என்றார்.
கேள்வியுடன் யாழினியனை பார்த்தாள் ஆர்த்தி. தன் கைகளை கட்டிக்கொண்டு, தந்தையும் மகளும் பேசுவதை கேட்க தயாரானான் யாழினியன்.
"புனிதா ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்கா. அவளுக்கு கோமான்னு நினைக்கிறேன். நான் போய் அவளை பார்த்துட்டு வரட்டுமா மா?" என்றார் வெங்கட்ராகவன்.
வாயடைத்துப் போன ஆர்த்தி, நம்ப முடியாமல் அவரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
"உனக்கு பிடிக்கலன்னா சத்தியமா நான் போய் அவளை பார்க்க மாட்டேன். ஆனா, அவளை நினைக்கும் போது மனசுக்கு ரொம்ப உறுத்தலா இருக்கு மா. அவ ரொம்ப நல்லவ. உங்க அம்மாவுக்கு கூட அவளை பத்தி தெரியும்"
"அம்மாவுக்கு அவங்களைப் பத்தி தெரியுமா?" என்றாள் அதிர்ச்சியுடன் ஆர்த்தி.
"புனிதாவை பத்தி எல்லா விஷயத்தையும் எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே நான் உங்க அம்மா கிட்ட சொல்லிட்டேன். எதிர்காலத்தில புனிதாவைப் பத்தி அவளுக்கு தெரிய வாய்ப்பு இருக்கு. அப்படி தெரிஞ்சா, அவ என் மேல வருத்தப்படக் கூடாதுன்னு தான் நான் முன்னாடியே அவ கிட்ட எதையும் மறைக்காமல் சொல்லிட்டேன். என்னை நம்பர் உங்களுக்கு உண்மையா இருக்கணும் அப்படிங்கிறதுல, நான் தீர்மானமா இருந்தேன். அதனால உங்க அம்மாகிட்ட அந்த விஷயத்தை மறைக்க நான் விரும்பல. நான் புனிதாவை பார்க்க வேண்டாம்னு நீ நினைச்சா, நான் பார்க்கல... ஆனா ஹாஸ்பிடல் பில்லை மட்டுமாவது நான் செட்டில் பண்ண பர்மிஷன் கொடு மா" என்றார் கெஞ்சலாக.
"என்னோட பர்மிஷனை ஏன் டாட் கேக்குறீங்க? உங்களுக்கு என்ன தோணுதோ அதை நீங்க தாராளமா செய்யலாம்"
"இல்ல ஆர்த்தி... புனிதா விஷயத்துல எனக்கு உறுத்தல் இருக்கிறது உண்மை தான். ஆனா அதே நேரம், நான் உன்னோட உணர்வுகளை ரொம்ப மதிக்கிறேன். சினேகாவால நீ பார்க்க கூடாத துன்பத்தை எல்லாம் பார்த்துட்ட... அதுக்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம். என் மனசறிஞ்சி அது நடக்கலனாலும், அதனால பாதிக்கப்பட்டவ நீ தான். சினேகா உன் வாழ்க்கையோட ரொம்ப கொடூரமாக விளையாடிட்டா. அவ அப்படி செய்யாம இருந்திருந்தா, எல்லாமே மாறியிருக்கும். இதுக்குப் பிறகு, எதுக்காகவும் உன்னை வருத்தப்பட வைக்க நான் விரும்பல. அதனால தான் உன்னோட பர்மிஷனை கேட்கிறேன்"
ஆர்த்தியின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்று நாம் கூற வேண்டிய அவசியம் இல்லை. அவளது கண்கள் குலமாயின. வெங்கட்ரகவனை கட்டியணைத்து,
"ஐ அம் சாரி டாட்... உங்க மேல நான் கோபமா இருந்தேன். எனக்கும் சினேகாவுக்கும் இடையில் இருந்த வித்தியாசத்தை உங்களால கண்டுபிடிக்க முடியாம போனதுக்காக உங்க மேல எனக்கு ரொம்ப கோபம் இருந்தது. ஒரு அப்பாவா நீங்க தோத்துட்டீங்கன்னு நான் நெனச்சேன்"
"நான் தோத்தது உண்மை தான். என்ன அப்பா நான்? சினேகா உன்னை மாதிரி இக்காங்குறதுக்காக நான் அவளை நம்பியிருக்க கூடாது. என்னை மன்னிச்சுடு மா... என்னால தான் நீ எல்லாத்தையும் இழந்த..."
"அதையெல்லாம் விடுங்க டாட். உங்களுக்கு என்ன செய்யணும்னு தோணுதோ அதை நீங்க தாராளமா செய்யலாம். நீங்க அவங்களை பாருங்க... ஹாஸ்பிடல் பில்லையும் பே பண்ணுங்க"
"ரொம்ப தேங்க்ஸ் டா"
யாழினியனை பார்த்தபடி சந்தோஷமாய் எழுந்து நின்ற வெங்கட்ராகவன்,
"தேங்க்ஸ் யாழ்" என்றார்.
"பரவாயில்ல அங்கிள். உங்களை ஹாஸ்பிடலுக்கு சாயங்காலம் கூட்டுக்கிட்டு போறேன்"
சரி என்று தலையசைத்துவிட்டு, அங்கிருந்து சென்றார் வெங்கட்ராமன். யாழினியனை அணைத்துக் கொண்டு அழுதாள் ஆர்த்தி. அவளை அணைத்துக் கொண்டு, அவள் அழுது ஓயட்டும் என்று காத்திருந்தான் யாழினியன்.
"நான் எங்க அப்பாவை தப்பா நினைச்சுட்டேன்"
"நீ நினைச்சது தப்பு இல்ல. உன்னோட வாழ்க்கையில நடந்தது எல்லாமே தப்பா தானே நடந்திருக்கு? அப்போ நீ எப்படி சரியா நினைக்க முடியும்? ஆனா இப்போ, அவரைப் பத்தி தெரிஞ்சு நீ ரிலீவ் ஆனதுல எனக்கு சந்தோஷம்... ரிலீவ் ஆயிட்ட இல்ல?"
ஆமாம் என்று தலையாசைத்தாள்.
"உனக்கு தெரியுமா, உங்க அப்பா இப்படித் தான் செய்வார்னு நான் எதிர்பார்த்தேன்"
"நெஜமாவா?"
"ஆமாம். உன்னை நினைச்சு அவர் மனசார வருத்தப்பட்டதை நான் பார்த்தேன். நான் லண்டன் போயிருந்தப்போ, நீ ரொம்பவே மாறிப் போயிட்டேன்னு ரொம்பவே வருத்தப்பட்டாரு. சினேகா அவரை தனியா விட்டு பழிவாங்கனப்போ, அவர் ரொம்பவே தனிமையை உணர்ந்திருந்தார்"
"ஆனா, தியா தான் அவர் கூட இருந்தாளே..."
"இல்ல... தியா கூட டைம் ஸ்பென்ட் பண்ண அவர் அனுமதிக்க படல. சினேகா அவங்களை சேர விடல"
"தியா, தன்னோட வேலைகளை தானே செஞ்சுகிற வீடியோவை சினேகா எனக்கு அனுப்பி கிட்டே இருந்தா. அதை பார்க்கும் போதெல்லாம், எதுவுமே செய்யாம என் குழந்தையை இப்படி தனியா தவிக்க விட்டுட்டாரேன்னு எனக்கு எங்க அப்பா மேல தான் ரொம்ப கோபம் வரும்..."
"அப்போ, அவரும் சூழ்நிலை கைதியா தான் இருந்திருக்காரு"
"அது இப்போ தான் எனக்கு புரியுது"
"அதையெல்லாம் மறந்துடு ஆரத்தி. புனிதா கோமாவில் இருக்காங்க. இப்போதைக்கு நம்ம அவங்களை பத்தி யோசிக்க வேண்டிய அவசியம் இல்ல. இன்னும் கொஞ்ச நாள்ல சினேகாவோட கேசுக்கு ஜட்ஜ்மெண்ட் வந்துடும். அதனால, அவளைப் பற்றியும் யோசிக்காத உன்னோட படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணு"
சரி என்று தலையசைத்தாள்ஆர்த்தி.
புனிதா விஷயத்தில் வெங்கட்ராகவனின் நிலைப்பாட்டை உணர்ந்த பிறகு, நிம்மதியுடனும் நம்பிக்கையுடனும் காணப்பட்டாள் ஆர்த்தி.
தியா பள்ளிக்குச் செல்லத் துவங்கினாள். ஆர்த்தியும் தனது வாழ்நாள் கனவான *கார்டியாலஜி* யை நோக்கி தன் அடிகளை எடுத்து வைக்க தொடங்கினாள். அவளுக்கு, செய்ய வேண்டிய வேலைகள் நிரம்ப இருந்ததால், தனது பொறுப்புக்களை உணர்ந்து, அது படிப்பில் கவனம் செலுத்த துவங்கினாள். அது அவளுக்கு தனது கவலைகளை மறந்து, சிறிது சிறிதாய் கடந்த கால நினைவுகளில் இருந்து வெளியேற உதவியது.
இவை அனைத்தையும் சாதிக்க அவளுக்கு உறுதுணையாய் நின்றான் யாழினியன். தியாவின் முழு பொறுப்பையும் தன் தோலில் ஏற்றுக் கொண்டான் அவன். அது ஆர்த்தியின் வேலையை எளிமையாக்கியது. அதனால் யாழினியனும், தியாவும் தங்களை விட்டு ஆர்த்தி விலகிச் செல்வதாய் எண்ண வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை. நல்ல பிள்ளையான தியாவும், ஆர்த்திக்கு எந்த தொந்தரவும் கொடுக்காமல், அவளை வேலை செய்ய விட்டாள். அவளுக்கு கதை சொல்ல பாட்டியும், அலங்காரம் செய்து அழகு பார்க்க அத்தையும், அவளை கொண்டாட குடும்பமும் இருந்ததால், ஆரத்தி அவளுடன் நேரம் செலவிடாமல் இருந்தது அவளுக்கு பெரிதாக தெரியவில்லை... சினேகா அவளை அப்படித் தானே வளர்த்திருந்தாள்? அதோடு மட்டுமல்லாமல், மதிவதனியின் மகளான மமதியும் அவளும் நெருங்கிய தோழிகளாகி போனார்கள். அவளுடைய வட்டாரம் பெரிதானது. தன்னுடன், அம்மாவும் அப்பாவும் இருந்து தான் தீர வேண்டும் என்று கேட்காத நல்ல பிள்ளையாக இருந்தாள் அவள். அதேநேரம், அவர்களுடன் இருக்க கிடைத்த சந்தர்ப்பத்தையும் அவள் நழுவ விடவில்லை.
ஆரத்தி தனக்கு வேண்டிய அனுமதியை வழங்கி விட்டதால் புனிதாவை மருத்துவமனையில் சென்று தயக்கமில்லாமல் பார்த்து வந்தார் வெங்கட்ராகவன். புனிதாவிற்கு நிச்சயமாய் ஒரு நாள் நினைவு திரும்பும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அவரிடம் மன்னிப்பு கேட்க காத்திருந்தார் அவர்.
சினேகாவுக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. சினேகாவுக்கு உறுதுணையாய் இருந்ததற்காக, ஹரிக்கும், லட்சுமிக்கும் கூட அதே தண்டனை தான் கிடைத்தது. சினேகாவுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட நாளன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தான் யாழினியன். ஆர்த்தியை தன்னுடன் வருமாறு அவன் அழைத்த போது, அங்கு வர மறுத்து விட்டாள் ஆர்த்தி. சினேகாவுக்கு தண்டனையை கிடைத்து விட்ட பொழுதிலும், அவளை பார்க்க ஆர்த்தி விரும்பவில்லை.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு,
கிட்டத்தட்ட இருதய அறுவை சிகிச்சை நிபுணருக்கான படிப்பின் இறுதி கட்டத்தில் இருந்தாள் ஆரத்தி. இன்னும் ஓரிரு மாதங்களில் அவள் முழு நேர இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆக இருக்கிறாள்.
வழக்கம் போல், கல்லூரி முடிந்து யாழினியனை பார்க்க யாழ் மருத்துவமனைக்கு வந்தாள் ஆர்த்தி. அவளைப் பார்த்த நிலவன் அவளிடம் வந்தான்.
"ஹாய் ஆர்த்தி"
"ஹாய், யாழ் எங்க?"
"புனிதமா ரூம்ல இருக்கான். அவங்களுக்கு அக்குபஞ்சர் டிரீட்மென்ட் நடந்துகிட்டு இருக்கு"
"ஓ... சரி நான் போய் பாத்துக்குறேன்"
புனிதாவின் அறையை நோக்கி நடந்தாள் ஆர்த்தி.
நூல் போன்ற மெல்லிய ஊசியால் அவர் உடலை துளைத்து அவருக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு கொண்டிருந்தது. அவர்களை தொந்தரவு செய்யாமல் அமைதியாய் நின்றாள் ஆரத்தி. அப்பொழுது அவள், புனிதா லேசாய் அசைவதை கவனித்தாள்.
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top