42 இடமாற்றம்
42 இடமாற்றம்
லண்டன்/ ஹோலி கிரிஸ்ட் மருத்துவமனை
சினேகா யார் என்பதை டாக்டர் ரோஸ் விவரிக்க, அதைக் கேட்ட ஸ்டஃபி, அதிர்ந்து அமர்ந்திருந்தார். சினேகாவை பற்றி ரோஸிடம் ஏற்கனவே அனைத்தையும் கூறிவிட்டிருந்தான் மகேந்திரன். தங்களுடன் ஏழு ஆண்டுகளாய் பழகிக் கொண்டிருந்த ஒரு பெண், ஒரு மோசடிக்காரி என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.
"என்னால இதை நம்ப முடியல" என்றார் ஸ்டஃபி.
"என்னாலையும் நம்ப முடியல டாக்டர். எவ்வளவு புத்திசாலித்தனமா அவ நம்ம எல்லாரையும் ஏமாத்தியிருக்கா..."
"ஒரு கார்டியாலஜிஸ்ட்டா இருந்துகிட்டு, எப்படி அவளால இப்படி இதயம் இல்லாம நடந்துக்க முடிஞ்சது?"
"அவ ஒரு கார்டியாலஜிஸ்டா இருந்தாலும், அவ இதயம் இல்லாதவ தான்... இல்லன்னா, ஆர்த்தியை அவள் குழந்தைகிட்ட இருந்தும், அப்பாகிட்ட இருந்தும் இப்படி பிரிச்சு வச்சிருப்பாளா?" என்றாள் ரோஸ் ஆத்திரத்துடன்.
"அவ மறுபடியும் இங்கிலாந்துக்குள்ள காலடி எடுத்து வைக்கக் கூடாது. அவ மேல நான் போலீஸ் கேஸ் கொடுக்கப் போறேன்" என்றார் ஸ்டிஃபி காட்டமாக.
"ஆமாம் டாக்டர். நம்ம ஆர்த்தியோட சர்டிபிகேட்டை திரும்பி அனுப்பணும். அப்ப தான் அவளால மறுபடி ப்ராக்டிசை ஆரம்பிக்க முடியும்"
"சட்டப்படி என்னென்ன செய்யணுமோ, அதை எல்லாம் செஞ்சுட்டு, நான் அவளுடைய சர்டிபிகேட்டை திருப்பி அனுப்புறேன்"
"தேங்க்யூ டாக்டர்"
அவர்கள் இருவரும் சினேகாவை பற்றிய உண்மையால், ரொம்பவே பாதிக்கப்பட்டு இருந்தார்கள். ஒரு மருத்துவர் செய்த அந்த இழி செயலை அவர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.
........
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தன் அம்மாவுடன் தான் தங்கி இருந்த இடத்திற்கு வந்த சினேகா, மலைத்து நின்றாள். அந்த முன்பின் தெரியாத பெண் கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு, தான் முன்பு தங்கி இருந்த இடத்திற்கு வந்தாள் சினேகா. அங்கு தனக்கு ஏதாவது உதவி கிடைக்கும் என்று அவள் எதிர்பார்த்து இருந்தாள். ஆனால் அந்த இடம், கற்பனைக்கு எட்டாத அளவிற்கு அடியோடு மாறி விட்டிருந்தது. ஷாப்பிங் மால்களும், கம்ப்யூட்டர் சென்டர்களும், ஹோட்டல்களும், உயர்ந்து நின்று பிரமிப்பூட்டின.
அவளால், அவளது வீடு இருந்த இடத்தை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. அவளுடைய தோழிகளின் பெயர்களை கூறி யாரையாவது கண்டுபிடிக்க முடிகிறதா என்று முயன்றாள். ஆனால் யாருக்கும் யாரைப் பற்றியும் தெரியவில்லை. அவளுக்கு பசி வயிற்றை கிள்ளி, தொண்டையில் வந்து முட்டியது. கிடைத்த பணத்தில் எதையாவது வாங்கி சாப்பிடுவதை விட்டு, அவள் பேருந்துக்கு செலவழித்து விட்டள். அவளது எண்ணமும் ஈடேறவில்லை. சாப்பிட ஏதாவது கிடைக்காவிட்டால் அவள் மயங்கி விழுவது நிச்சயம். என்ன செய்வதென்று புரியாமல் நின்றாள் சினேகா.
யாழ் இல்லம்
"ஆர்த்தி, சீக்கிரமா கிளம்பு" என்றான் யாழினியன்.
"எங்க?"
"ஒரு வேளை விஷயமா சஞ்சையை பாக்கணும். அதனால அவனோட ஹாஸ்பிடலுக்கு போறேன்"
"சரி... ஆனா, உன் கூட வந்து நான் என்ன செய்யப் போறேன்?"
அவள் இப்படி ஒரு கேள்வியை கேட்பாள் என்று அவன் எதிர்பார்த்து இருந்ததால், அதற்கு என்ன பதில் கூறுவது என்றும் தயாராய் வைத்திருந்தான்.
"நீ வீட்ல இருந்து என்ன செய்யப் போற? எல்லாரும் ஹாஸ்பிடலுக்கு போறாங்க."
"நான் தியா கூட இருக்கேன்"
"அவ மமதியை பார்க்க, அக்கா கூட ஹாஸ்பிடலுக்கு போறா"
"ஆமாம்ல...?"
"இப்போ, என் கூட வரிங்களா மேடம்?"
சரி என்று தலையசைத்தாள் ஆர்த்தி.
"நீ இவ்வளவு மாறி போவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல ஆர்த்தி" என்றான் சோகமாய்.
"நான் என்ன மாறினேன்?"
"நம்ம காலேஜ் படிக்கும் போது, எப்பவும் என் கூடவே இருக்கணும்னு நீ ரொம்ப இன்ட்ரஸ்டா இருந்த. ஆனா இப்போ, என் கூட வெளியே வர்றதுக்கு கூட உனக்கு காரணம் தேவைப்படுது" என்றான் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு.
"அப்படியெல்லாம் ஒன்னுமில்ல..." என்று சங்கடத்துடன் இழுத்தாள் ஆர்த்தி.
"எல்லா அம்மாக்களும் ஒரே மாதிரி தான் இருக்கீங்க. அவங்களோட ஃபர்ஸ்ட் பிரஃபரன்ஸ், எப்பயுமே அவங்களோட குழந்தைங்க தான்"
"ஏன்னா, அவங்களுக்கு அம்மாவோட கைடன்ஸ் தேவை. அவங்களை கைட் பண்ண வேண்டிய பொறுப்பு, அம்மாக்களுக்கும் இருக்கு. அதனால தான்"
"அப்படின்னா, பாவப்பட்ட புருஷங்களோட கதி என்ன?"
"குழந்தைகளை எப்படி நல்ல விதமா கைடு பண்ணனும்னு, அவங்க மனைவிகளுக்கு கைடு பண்ற வேலையே அவர்களுடையது தானே?" இன்று அவன் கன்னத்தை பிடித்து கிள்ளினாள் ஆர்த்தி.
"ஒத்துக்கிறேன், மேடம்... இப்போ நம்ம போகலாமா?" என்று சிரித்தான் யாழினியன்.
.......
அரசு மருத்துவமனை
யாழினியனையும், மகேந்திரனையும் வரவேற்ற சஞ்சய்,
"ஆர்த்தி எங்க? வரலையா?" என்றான்.
"அவ கார்ல தான் இருக்கா" என்றான் யாழினியன்.
"நீ மருமகனோட ரோலை சின்சியரா கையில எடுத்துக்கிட்ட போல தெரியுது.???" என்றான் கிண்டலாய்.
அவனுக்கு தன் புன்னகையை பதிலாய் தந்தான் யாழினியன். சினேகாவின் அம்மாவை அந்த மருத்துவமனையில் இருந்து கொண்டு செல்ல தேவையான அனைத்து சம்பிரதாயங்களையும் முடிக்க அவர்களுக்கு உதவினான் சஞ்சய். அப்பொழுது யாரும் எதிர்பாராத விதமாய், அந்த மருத்துவமனையின் பணியாளன் ஒருவன் அங்கு வந்தான்.
"சார், யாரு நீங்க? எதுக்காக அந்த அம்மாவை இங்கிருந்து கூட்டிக்கிட்டு போறீங்க?" என்றான் அவன்.
"இவரு அவங்களோட மருமகன்" என்றான் சஞ்சய், யாழினியனை காட்டி.
"என்ன சொல்றீங்க? அவங்க பொண்ணு தான் லண்டனுக்கு போயிட்டாங்களே...?"
என்னடா இது புது பிரச்சனை? என்பது போல், யாழினியனும், மகேந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"உனக்கு ஆர்த்தியை தெரியுமா?" என்றான் சஞ்சய்.
"யாரு சார் ஆரத்தி?" என்றான் அவன்.
யாழினியனும், மகேந்திரனும் தாங்கள் மாட்டிக்கொண்டோம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். இந்த மனிதனுக்கு சினேகாவை தெரிந்திருக்கிறது. அவன் ஏதாவது உளறி கொட்டி விட்டால் என்ன செய்வது?
"உனக்கு அவங்க லண்டன்ல இருக்காங்கன்னு தெரியும். ஆனா அவங்க பேர் மட்டும் தெரியாதா?" என்றான் சஞ்சய்.
"எனக்கு அவங்க பேர் தெரியாது சார்" என்றான்.
யாழினியனும், மகேந்திரனும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
"நீங்க அவங்கள பார்த்திருக்கீங்களா?" என்றான் யாழினியன் .
"அவங்க லண்டனுக்கு போறதுக்கு முன்னாடி இங்கே வந்திருந்தாங்க. அப்போ பார்த்தேன் சார்"
"அப்படியா? அவங்களை இப்போ பார்த்தா உங்களால அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா?" - யாழினியன்.
"நிச்சயமா முடியும் சார். அவங்க அம்மாவை கவனிச்சுக்க, எனக்கு அவங்க பணம் கொடுத்துட்டு போனாங்க. நானும் அவங்க திரும்பி வருவாங்கன்னு தான் காத்துக்கிட்டு இருக்கேன். ஏன்னா, அவங்க அம்மா என்னோட பொறுப்பு."
அவன் பணத்தை எதிர்பார்ப்பதை புரிந்து கொண்டான் யாழினியன்.
"ஓ... அந்த கம்பவுண்டர் நீங்க தானா? உங்களுக்கு நானே தேங்க்ஸ் சொல்லனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அவங்க கார்ல தான் இருக்காங்க. இந்த நிலைமையில, அம்மாவை அவங்க பார்க்க வேண்டாம்னு நான் நினைக்கிறேன். அதனால தான் கார்லயே உட்கார வச்சுட்டு வந்தேன். நீங்க அவங்களை பார்க்கணும்னு நினைச்சா, எனக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்ல. தூரத்தில் இருந்து பாக்கலாம், வாங்க..."
அவனை தன்னுடன் அழைத்துச் சென்றான் யாழினியன். மகேந்திரனுக்கு கண்களால் ஏதோ சைகை செய்ய, அவன் புரிந்து கொண்டேன் என்பது போல் தலையசைத்தான்.
"வா சஞ்சய், நம்ம வேலையை நம்ம பார்க்கலாம்" என்றான் மகேந்திரன்.
சரி என்று தலையசைத்தான் சஞ்சய்.
வெளியே வந்த யாழினியன், ஆரத்திக்கு ஃபோன் செய்தான். அந்த அழைப்பை ஏற்ற ஆர்த்தி,
"நீ எங்க இருக்க யாழ்?" என்றாள்.
"கார் கண்ணாடியை கீழே இறக்கு"
அவள் காரின் கண்ணாடியை கீழே இறக்க, யாழினியனுடன் நின்றிருந்த மருத்துவமனை ஊழியன் ஆரத்தி கண்டான்.
"அவங்க தான் என்னோட வைஃப்" என்றான் யாழினியன்.
ஆர்த்தியை நோக்கி இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் வைத்தான் அந்த ஊழியன். ஆர்த்தியும் அதையே செய்ய, அழைப்பை துண்டித்து விட்டு, பாக்கெட்டில் இருந்து கத்தையாய் பணத்தை எடுத்த யாழினியன்,
"ஆள் ரொம்ப டல்லா இருக்காங்க இல்ல?" என்றான்.
"ஆமாம் சார். இருக்காதா பின்ன? அவங்க அம்மாவை இந்த நிலைமையில் பாக்கும் போது, அவங்களுக்கு மனசு கஷ்டப்பட தானே செய்யும்?" என்றான் தன் கண்களை பணத்தின் மீது வைத்து.
"அதே தான்... அதனால் தான் அவ உள்ள வர வேண்டாம்னு நான் நினைச்சேன்" என்றபடி அந்த பணத்தை அவனிடம் நீட்டினான் யாழினியன்.
"நீங்க சொல்றது சரி தான் சார். அவங்க எதுக்கு இங்க வரணும்? நான் தான் இருக்கேனே, வாங்க உங்களுக்கு தேவையான உதவியை நான் செய்றேன்" என்றான் அவன்.
சரி என்று புன்னகையுடன் தலையசைத்தான் யாழினியன் தனது தந்திரம் பலித்துவிட்ட சந்தோஷத்தில்.
யாழ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் புனிதா. அவர் அழைத்துச் செல்லப்பட்ட அவசர ஊர்தியில், தானும் அவருடன் சென்றான் மகேந்திரன். அந்த விஷயத்தை ஆர்த்தியின் கவனத்திற்கு கொண்டுவராமலேயே அதை முடித்துவிட்ட நிம்மதியில் பெருமூச்சு விட்டான் யாழினியன்.
யாழினியனும், ஆர்த்தியும், யாழ் இல்லம் நோக்கி புறப்பட்டார்கள். ஐந்து நிமிட பயணத்திற்கு பிறகு, அவனை வண்டியை நிறுத்த சொல்லி கேட்டாள் ஆர்த்தி.
"என்ன ஆச்சி, ஆர்த்தி?"
"ஹாஃப் அன் ஹவர் இங்க வெயிட் பண்ண முடியுமா?"
"என்ன செய்யப் போற?"
அங்கே இருந்த அழகு நிலையத்தை அவள் காண்பிக்க, தன் தலையசைத்து சிரித்தான் யாழினியன்.
"நீ ஏற்கனவே அழகா தானே இருக்கே?" என்றான்.
"ப்ளீஸ், ப்ளீஸ் வேண்டாம்னு சொல்லாதே"
"சரி வா போகலாம்"
"அது விமன்ஸ் பியூட்டி பார்லர். ஜென்ட்ஸ் அளவுட் இல்ல..."
"நான் வெளியில வெயிட் பண்றேன்"
"நீ கார்ல வெயிட் பண்ணு"
"அதெல்லாம் முடியாது. நானும் வருவேன்"
"சரி வா"
அவளுக்காக அழகு நிலையத்தின் வெளியே காத்திருந்தான் யாழினியன். அவளை எங்கும் தனியாக அனுப்ப அவன் தயாராக இல்லை. அவள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதற்காக தான் அழகு நிலையம் சென்றிருக்கிறாள் என்று எண்ணினான் யாழினியன். ஒரு விதத்தில் அவன் எண்ணியது சரி தான். அவள் செய்து கொண்டது அவளுக்கு நிச்சயம் அழகாகத் தான் இருக்கும். ஆனால், யாழினியில் நினைத்தது போல் அல்ல...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top