12 உனக்காகத் தான்
12 உனக்காகத் தான்
ஆர்த்தி அணிந்திருந்த உடையை பார்த்து கோபம் பொத்துக் கொண்டு வந்தது யாழினியனுக்கு. மகேந்திரனும், நிலவனும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டார்கள். யாழினியனின் முகத்தை பார்க்கவே வேடிக்கையா இருந்தது அவர்களுக்கு. அவன் கோபம் அதிகமாகிக் கொண்டே சென்றது, அனைவரது பார்வையும் ஆர்த்தியின் மீது குவிந்தபோது. சில மாணவர்கள் அவளை நோக்கி ஓடிவந்து அவளுக்கு ரோஜாப்பூ கொடுத்தார்கள். அவர்களிடமிருந்து அந்த பூவை பெற்றுக் கொள்ளாமல், தங்கள் நண்பர்களை நோக்கி ஒயிலாய் நடந்து வந்தாள் ஆரத்தி.
"நீ தான் இன்னைக்கு நம்ம காலேஜோட ஹீரோயின்" என்றான் மகேந்திரன்.
"இன்னைக்கு உன்னை நிறைய பேர் ப்ரொபோஸ் பண்ண போறாங்க" என்றான் நிலவன்
"யூ ஆர் லுக்கிங் சோ ஹாட்" என்றாள் மைதிலி.
தான் அமர்ந்திருந்த பெஞ்சிலிருந்து எதிரி குதித்தான் யாழினியன். அவள் கையைப் பிடித்து சற்று தூரமாய் இழுத்துச் சென்றான்.
"என்ன டிரஸ் பண்ணிக்கிட்டு வந்திருக்க நீ?
"ஏன், இது நல்லா இல்லயா? பாரு எல்லாரும் என்னைத் தான் பாக்குறாங்க"
"ஷட் அப்... போய் இந்த டிரஸை சேஞ்ச் பண்ணிட்டு வா"
"என்ன்னனது? முடியாது"
"ஆர்த்தி, என் கோபத்தை கிளறாத"
"இப்போ என்னால ஹாஸ்டலுக்கு போக முடியாது. ஹாஸ்டலுக்கு போயி, டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு திரும்பி வர எப்படியும் ஆஃப் ஆன் ஹவர் மேல ஆயிடும். நான் ஃபர்ஸ்ட் பீரியடை மிஸ் பண்ணுவேன்"
"சரி, என் கூட வா"
அவளை பார்க்கிங் லாட்டுக்கு அழைத்து வந்து, தான் வாங்கி வைத்திருந்த உடையை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
"இந்த டிரஸை போய் சேஞ்ச் பண்ணிக்கிட்டு வா"
"இது யாரோட டிரஸ்?"
"எனக்கு தெரியாது"
"அப்படின்னா, இது எனக்கு வேண்டாம். மத்தவங்க ட்ரெஸ் எல்லாம் நான் போட மாட்டேன் "
"இது வேற யாரோட டிரஸும் இல்ல. புதுசு தான்..."
"யார் வாங்கினது?"
"நான் தான்"
"யாருக்காக வாங்கினே?"
"இன்னும் முடிவு பண்ணல"
"அப்புறம் எதுக்காக வாங்குன?"
"பிடிச்சிருந்தது வாங்கினேன்"
"அக்காவுக்காக வாங்கினியா?"
"யாருக்கோ வாங்கினேன். இப்ப நீ இதை மாத்திட்டு வர. அவ்வளவு தான்."
"ஓகே. நீ எனக்காக இதை வாங்கி இருக்கும் போது, நான் வேண்டாம்னு சொல்லுவேனா?"
"நான் இதை உனக்காக வாங்கல"
"அப்படின்னா எனக்கு இது வேண்டாம்"
"சரிஇஇஇ.... உனக்காகத் தான் வாங்கினேன்... போதுமா?"
"நிஜமாவா? ஏன்?"
"பிடிச்சது. வாங்கினேன்"
"வேலன்டைன்ஸ் டேக்காகத் தானே?"
"போய், சேஞ்ச் பண்ணிக்கிட்டு வா ஆர்த்தி"
"ஷ்யூர்... ஹாப்பி வேலண்டைன்ஸ் டே"
சிரித்தபடி அங்கிருந்து சென்றாள் ஆர்த்தி.
"நீங்க ரெண்டு பேரும் அவ கூட போங்க" என்றான் யாழினியன், மைதிலியையும் வானதியையும் பார்த்து.
"அவ கேர்ள்ஸ் காமன் ரூமுக்கு தானே போறா? ஏதோ சண்டைக்கு போற மாதிரி எங்களை கூட அனுப்புற?"
"போங்கண்ணா போங்க"
அவர்கள் இருவரும் ஆர்த்தியை பின் தொடர்ந்தார்கள். யாழினியனை பார்த்து, நக்கலாய் சிரித்தார்கள் மகேந்திரனும், நிலவனும்.
"பைத்தியம் மாதிரி சிரிக்கிறத நிறுத்துங்க"
"பைத்தியம்...? நாங்க...?" என்று மேலும் சிரித்தார்கள் இருவரும்.
சில நிமிடங்களில், யாழினியன் கொடுத்த வெள்ளை நிற உடையில் வந்தாள் ஆர்த்தி. அப்பொழுது அங்கு வந்த கதிரவன் மீது அவர்களுடைய கவனம் சென்றது. அவன் வெளிர் ஆரஞ்சு நிற சட்டை அணிந்து வந்தது தான் அவர்களுடைய கவனம் அவன் மீது திரும்பியதற்கு காரணம்.
"இவன் ஏன் லைட் ஆரஞ்சு ட்ரெஸ்ல வரான்? யாரையாவது ப்ரொபோஸ் பண்ண போறானா என்ன?" என்றாள் மைதிலி.
"சேச்சே அப்படியெல்லாம் இருக்காது. தற்செயலா தான் போட்டுகிட்டு வந்திருப்பான்." என்றாள் வானதி.
"டேய் கதிர், நீ இப்போ யாருக்காவது ப்ரபோஸ் பண்ண போறியா?" என்றான் நிலவன்.
ஆமாம் என்று தலையசைத்தான் கதிரவன்.
"அடப்பாவி... யாருடா அந்த பாவப்பட்ட பொண்ணு?" என்றாள் வானதி.
தனது பாக்கெட்டில் இருந்து ஒரு ரோஜா பூவை எடுத்து, வானதியின் முன்னால் மன்டியிட்டு அமர்ந்து, அதை அவளிடம் நீட்டினான்.
"அந்தப் பொண்ணு நீ தான் வானதி. நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன்." என்றானே பார்க்கலாம்.
அனைவரும் பேச்சிழந்து நின்றார்கள். கதிரவன் வானதியை காதலிக்கிறானா? இவ்வளவு நாள் அதற்கான எந்த அறிகுறியும் தென்பட வில்லையே...! தன் அழகிய கண்களை அதிர்ச்சியுடன் இமைத்தாள் வானதி.
"என் ப்ரொபோசலை ஏத்துக்கோ வானதி. நான் எப்பவும் உன் கூடவே இருக்கணும். நீ வேற ஒருத்தரை காதலிக்கிறதை என்னால் பார்க்க முடியாது..."
ஆர்த்தியை பார்த்தபடி மென்று முழுங்கினான் யாழினியன்.
"நான் உனக்கு ஒரு நல்ல பார்ட்னரா இருப்பேன்"
அவனுடைய வார்த்தைகள் வானதியை அசைத்துப் பார்த்தது. முடியாது என்று கூற அவளுக்கு மனம் வரவே இல்லை. அவனிடமிருந்து ரோஜா பூவை மெல்ல பெற்றுக் கொண்டாள். கதிரவன் காதலை சொன்ன விதத்தை விட, அதை வானதி ஏற்றுக் கொண்டது, அவர்களது நண்பர்களே மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
"தேங்க்யூ சோ மச் வானதி... ஐ லவ் யூ சோ மச்" என்றான் பூரிப்புடன் கதிரவன்.
இங்கும் அங்கும் எதையோ தேடிய நிலவன், வானதியின் கையில் இருந்த ரோஜா பூவை பிடுங்கி அதை மைதிலியிடம் நீட்டி அவளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினான்.
"நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன் மைதிலி."
"நீ என்ன பைத்தியமா?"
"நான் உன்னை காதலிக்கிறதால அப்படி ஒரு முடிவுக்கு வந்துடாத"
அவன் தலையில் ஒரு குட்டு குட்டினாள் மைதிலி.
"வாயை மூடு"
"நிஜமா தான் சொல்றேன். பாரு, கதிரவனும், வானதியும் ஒன்னு சேர்ந்துட்டாங்க. யாழும், ஆரத்தியும் கூட ஒன்னு சேருவாங்க. நீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கிட்டா, நம்ம எல்லாரும் கடைசி வரைக்கும் ஒன்னாவே இருக்கலாம் இல்ல?"
அவன் சீரியஸாய் பேசியதை பார்த்து திகைத்து நின்றாள் மைதிலி.
"ப்ளீஸ்... ப்ளீஸ்... ஒத்துக்கோ"
"எனக்கு உன்னை பிடிக்காது"
"பொய்... நம்ம கேங்கிலேயே உனக்கு என்னைத் தான் பிடிக்கும்"
"அது பிரண்ட்ஷிப்"
"ஒரு நல்ல ஃப்ரெண்ட், நல்ல ஹஸ்பண்டாவும் இருக்க முடியும்"
"வாவ்... வாழ்க்கையிலேயே முதல் முறையா, இவன் லாஜிக்கா பேசி இருக்கான். அவனை ஏத்துக்கோ மைதிலி" என்றான் மகேந்திரன்.
"நீ எனக்கு அஷ்யூரன்ஸ் குடுப்பியா? அவன் ஏதாவது ஏடாகூடமா செஞ்சா, நீ தான் அவன் எலும்பை உடைக்கணும். அப்படின்னா நான் இவன் ப்ரொபோசலை ஏத்துக்கிறேன். ஏன்னா இவன் சரியான குரங்கு." என்றாள் மைதிலி, மகேந்திரனிடம்.
"கண்டிப்பா செய்றேன்... எலும்பை உடைக்கிறது என்ன, மச்சானுக்கு சின்னதா ஆபரேஷனே பண்ணி விட்டுடுறேன்" என்றான் மகேந்திரன் சிரித்தபடி.
"அப்ப சரி" என்றாள் மைதிலி.
"அப்படினா, நீ ஒத்துக்கிட்டியா? நிஜந்தானா? என்றான் நிலவன்.
"ஆமாம். நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னு நீ சொன்னதுக்காக" என்றாள் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு.
"வாவ்... ஹாப்பி வேலண்டைன்ஸ் டே..."
என்றவன்,
"வேலண்டைன்ஸ் டே கிஃப்ட்டா ஒரு முத்தம் கொடேன்... " என்றான் பல்லை காட்டியபடி
"செருப்படி வேணும்னா கொடுக்கிறேன்" என்றாள் மைதிலி.
"சரி விடு, அடுத்த வருஷம் பாத்துக்கலாம்" என்றான் நிலவன்.
யாழினியனும், ஆர்த்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். எவ்வளவு விரைவாய் அவர்களது நண்பர்கள் ஒன்று கூடி விட்டார்கள்...! காதல் அவ்வளவு சுலபமானதா? ஆனால், அவர்களுக்கு மட்டும் அது ஏன் இவ்வளவு கடினமாய் இருக்கிறது?
அப்போது ஆர்த்தியை யாரோ கூப்பிடுவது காதில் விழுந்தது. கையில் சிவப்பு ரோஜாக்களுடன் ஒரு மாணவன் நின்றிருந்தான். அவனை விசித்திரமாய் பார்த்தாள் ஆர்த்தி. அவனது பெயர் ரோஷன். அவனும் இறுதியாண்டு மாணவன் தான். வேறு வகுப்பைச் சேர்ந்தவன். அவனிடம் சென்ற ஆர்த்தி,
"என்ன?" என்றாள்.
அந்த பூவை அவளிடம் நீட்டினான்.
"இது எதுக்கு?"
"ஐ லவ் யூ, ஆர்த்தி" என்றான்.
"நான் ஏற்கனவே யாழை காதலிக்கிற விஷயம் உனக்கு தெரியாதா?"
"அவன் தான் உன் காதலை ஏத்துக்கலையே...!"
"யார் சொன்னது? இந்த டிரஸ் அவனோட வேலண்டைன்ஸ் டே கிஃப்ட் தான்"
"உன்னை நீயே ஏமாத்திக்காத, ஆர்த்தி. உங்க ரெண்டு பேருக்கும் இடையில என்ன நடக்குதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். என்னோட ப்ரொபோசலை கன்சிடர் பண்ணு. உனக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒருத்தனுக்காக உன்னுடைய வாழ்க்கையை வீணாக்கிக்காத. நீ தான் அவன் பின்னாடி பல வருஷமா சுத்திகிட்டு இருக்க. ஆனா அவன் உன்னை மதிக்கிறதாவே தெரியல. அமிர்தா விஷயத்துல என்ன ஆச்சுன்னு இந்த காலேஜ்ல இருக்கிற எல்லாருக்கும் தெரியும் "
"ஆமாம். அவன் தான் நான் காலேஜ்ல இருந்து சஸ்பெண்ட் ஆகாம என்னை காப்பாத்தினான்" என்றாள் விட்டு கொடுக்காமல்.
அதேநேரம், அங்கு தனது நண்பர்கள் படை சூழ வந்தான் யாழினியன்.
"இங்க என்ன நடக்குது?" என்றான் மகேந்திரன்.
ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்தாள் ஆர்த்தி.
"நான் அவளை ப்ரொபோஸ் பண்ணேன்" என்றான் ரோஷன் துணிச்சலுடன்.
அதைக் கேட்ட யாழினியனுக்கு கோபம் வந்தது என்று கூற தேவையில்லை.
"அவ யாழை காதலிக்கிற விஷயம் உனக்கு தெரியாத மாதிரி ஏன் பிஹேவ் பண்ற?" என்றான் மகேந்திரன்.
"அவளோட காதல் இன்னும் ஏத்துக்கப்படல. அப்படி நடக்கிற வரைக்கும் நான் அவளை ப்ரொபோஸ் பண்ணிக்கிட்டு தான் இருப்பேன்" என்று யாழினியனை பார்த்து ஒரு கோபப்பார்வை வீசிவிட்டு, அங்கிருந்து சென்றான் ரோஷன்.
"அவனை விடுங்க..." என்றாள் ஆரத்தி.
"அவன் உன்கிட்ட என்ன சொன்னான்?" என்றான் யாழினியன்.
அதைக் கூற, ஆரத்தி தயங்க, *சொல்* என்று செய்கை செய்தான் மகேந்திரன். ரோஷன் கூறியதை அவர்களிடம் கூறினாள் ஆர்த்தி.
பல்லை கடித்துக் கொண்டு முஷ்ட்டியை மடக்கினான் யாழினியன்.
"எனக்கு ஒன்னும் அவன் சொல்றது தப்பா தோனல. அவன் சொன்னதை நீ ஏன் கன்சிடர் பண்ண கூடாது?" என்ற மகேந்திரனை நம்ப முடியாமல் பார்த்தான் யாழினியன்.
"ஆமாம். எனக்கும் அப்படித் தான் தோணுது. ரோஷன் உன்னை தலையில வச்சு தாங்குவான்" என்றான் நிலவன்.
"அதோட மட்டுமில்லாம, அவன் அமிர்தா மாதிரி மூணாவது மனுஷி முன்னாடி உன்னை விட்டுக் கொடுக்க மாட்டான்" என்றான் மகேந்திரன்.
"அதை நான் வேணும்னு செய்யல. அது ஆர்த்திக்கும் தெரியும்" என்றான் யாழினியன்.
"தன்னைத்தானே அப்படி சமாதானப்படுத்துகிறதை விட, அவளுக்கு வேற ஏதாவது சாய்ஸ் இருக்கா என்ன?" என்றான் மகேந்திரன்.
"நீங்க என்னோட ஃபிரெண்ட்ஸ் மாதிரியா பேசுறிங்க?"
"நாங்க உனக்கு மட்டும் ஃபிரண்ட்ஸ் இல்ல... ஆரத்திக்கும் தான். அவளுக்கு எது சரியோ அதை நாங்க சொல்லத் தான் செய்வோம்"
"தயவுசெஞ்சி நீங்க எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா? அவன் தன்னோட காதலை சொல்ல போறதும் இல்ல... நான் அவனை காதலிக்கிறதை நிறுத்த போறதும் இல்ல... உங்களால் எதையும் மாத்த முடியாது. தயவு செய்து இத்தோட விடுங்க" என்றாள் ஆர்த்தி.
"இவன் இப்படியே பிடிவாதமா இருந்தா, நீ எங்களை சமாதானப்படுத்திக்கிட்டே இருக்க முடியாது ஆர்த்தி. உண்மையிலேயே, நீ உன்னையே ஏமாத்திக்கிறியோன்னு தான் எனக்கு தோணுது" என்றான் மகேந்திரன்.
அதற்கு மேல் அங்கிருக்க விருப்பம் இல்லாமல், அவர்களை விட்டு விலகிச் சென்றான் யாழினியன். கதிரவன் கூறிய வார்த்தைகள் அவன் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
*நீ வேறு ஒருவரை காதலிப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது*
"அவன் கூறிய வார்த்தைகள் எவ்வளவு உண்மையானது...! உண்மையிலேயே ஆழமான காதல் கொண்ட ஒருவன் அப்படித் தான் யோசிப்பான். தான் காதலிக்கும் நபர், வேறு ஒருவரிடம் அன்பு செலுத்துவதை யாராலும் தாங்க முடியாது" என்று தன் மனதில் நினைத்தான் யாழினியன்.
அவனுக்கும் கூட தன் காதலை ஆர்த்தியிடம் வெளிப்படுத்த வேண்டும் என்று தான் ஆசை... மிக அழகாக... கதிரவன் கூறியது போல், அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து. அந்த நாள் அவர்களுடைய வாழ்க்கையில் வெகு விரைவில் வரும். தன் மனதில் உள்ள காதலை அவன் ஆர்த்தியிடம் கொட்டித் தீர்ப்பான்... ஆர்த்தியே எதிர்பாராத விதத்தில்...!
தொடரும்...
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top