10 ஆதாரம்

10 ஆதாரம்

என்ன செய்வதென்றே புரியாமல், அலுவலக அறைக்கு வெளியே நின்று கையை பிசைந்து கொண்டிருந்தான் யாழினியன். அப்போது அவனிடம் வந்தார்கள் அவனது நண்பர்கள். அவனை பட்டென்று ஒரு அடி போட்டாள் மைதிலி.

"நீ எல்லாம் ஒரு ஃப்ரெண்டா? எனக்கு விஷ் பண்ணணும்னு கூட உனக்கு தோணல" என்றாள்.

அப்பொழுது தான் யாழினியனுக்கு ஞாபகம் வந்தது, அன்று மைதிலியின் பிறந்தநாள் என்று.

"ஹாப்பி பர்த்டே பா..." என்றான் சுரத்தேயில்லாமல்.

"ஆர்த்தி எங்க? அவ இன்னும் வரலயா?" என்றான் மகேந்திரன்.

"நேத்து நடந்ததை நினைச்சு, அவ இன்னும் அப்சட்டா இருக்கான்னு நினைக்கிறேன்." என்றான் நிலவன்.

"இல்ல, இல்ல, நேத்து அவ என்கிட்ட நார்மலா தான் பேசினா" என்றாள் மைதிலி.

"நீ அவளை பாத்தியா?" என்றான் யாழினியன்.

"நேத்து ராத்திரி, அவ மட்டும் தான் எனக்கு ஸ்கைப்ல வந்து விஷ் பண்ணா"

"உனக்கு நானும் தான் ட்ரை பண்ணேன். ஆனா, நீ ஆர்த்தி கிட்ட அரை மணி நேரமா பேசிக்கிட்டு இருந்தா, எனக்கு எப்படி லைன் கிடைக்கும்?" என்றாள் வானதி.

"ஆமாம்... நான் கூட அவள் லைனுக்கு ட்ரை பண்ணி கடுப்பாயிட்டேன்." என்றான் நிலவன்.

"அவ எவ்வளவு அப்சட்டா இருந்தான்னு உங்க எல்லாருக்கும் தெரியும் இல்ல? அதனால தான் அவ மூடை கொஞ்சம் மாத்த ட்ரை பண்ணி, அவ கிட்ட பேசிகிட்டு இருந்தேன்"

அதை கேட்ட யாழினியனின் முகம் பிரகாசம் அடைந்தது.

"ஆர்த்தி உனக்கு எத்தனை மணிக்கு ஃபோன் பண்ணா?"

"கரெக்டா 12 மணிக்கு" என்றாள் மைதிலி.

"உன்கிட்ட எவ்வளவு நேரம் பேசிக்கிட்டு இருந்தா?"

"அரை மணி நேரம் பேசி இருப்போம்"

"எதுல பேசின?"

"லேப்டாப்ல..."

"லேப்டாப் ஹிஸ்டரியை டெலிட் பண்ணிட்டியா?"

"இல்ல. டெலிட் பண்ணல."

"உன்னோட லேப்டாப்பை எடுத்துட்டு வந்திருக்கியா?"

"ஆமாம்"

"அதை என்கிட்ட குடு"

"ஏன்?"

"குடுன்னு சொல்றேன்ல?"

அதை அவளிடமிருந்து பெற்றுக்கொண்டு டீனின் அறைக்குள் நுழைந்தான். அனைவரும் அவன் பின்னால் ஓடியபோதும், அவர்கள் வாசலிலேயே தடுக்கப்பட்டார்கள். ஆனால், யாழினியன் மட்டும் உள்ளே புகுந்தான்.

ஆர்த்தியை கல்லூரிக்கு வரக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து, அதில் கையெழுத்திட சென்ற, கல்லூரியின் தலைமை மருத்துவர் அவன் புயலென உள்ளே நுழைந்ததை பார்த்து நின்றார்.

"சார், ப்ளீஸ் நிறுத்துங்க"

"நீ இங்க என்ன செய்ற? உன்னை யார் உள்ள விட்டது?"

"சார், சைன் பண்றதுக்கு முன்னாடி இதை பாருங்க"

"என்னது?"

"ப்ரூஃப்"

தனது நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தார் தலைமை மருத்துவர்.

"இன்னைக்கு மைதிலியோட பர்த்டே, சார். நேத்து ராத்திரி 12 மணிக்கு ஆரத்தி அவளுக்கு விஷ் பண்ணிட்டு, அரை மணி நேரம் அவகிட்ட பேசிக்கிட்டு இருந்திருக்கா. ஆனா, அவளை பண்ணன்டே காலுக்கு அவங்களோட ரூம்ல பார்த்ததா நிஷா சொன்னா. மைதிலி கூட ஸ்கைப்ல பேசிக்கிட்டு இருந்த ஆர்த்தி, எப்படி பண்ணன்டே காலுக்கு அவங்க ரூமுக்கு போயிருக்க முடியும்? அதுக்கான ப்ரூஃப் இந்த லேப்டாப்ல இருக்கு பாருங்க."

அதை அவரிடம் கொடுத்தான் யாழினியன். அதிர்ஷ்டவசமாய், அவர்கள் பேசியதை, தங்கள் நண்பர்களிடம் காட்ட, பதிவு செய்து வைத்திருந்தாள் மைதிலி. தன் முன்னாள் நின்றிருந்த அமிர்தாவையும், நிஷாவையும் கோபத்துடன் பார்த்தார் தலைமை மருத்துவர்.

"இதெல்லாம் என்ன?"

அந்தப் பெண்கள் இருவரும் கதி கலங்கி நின்றார்கள்.

"சார், ஆரத்தி தான் எங்க கிளாஸ் டாப்பர். நிஷா செகண்ட் பிளேஸ்ல இருக்கா. அவளுக்கு எப்பவுமே ஆர்த்தியை பிடிக்காது. அவளோட நல்ல பேரை கெடுத்து, அவளுடைய கான்ஃபிடன்ட் லெவலை குறைச்சுட்டா இவ ஈஸியா ஃபர்ஸ்ட் வந்துடலாம்னு  தான் சார் இவ இப்படி எல்லாம் செஞ்சிருக்கா. ஆர்த்தியை பழிவாங்க நிஷா தான் சார் அமிர்தா முடியை வெட்டி அவ மேல பழி போட்டிருக்கணும்"

"இல்ல இல்ல. இதை செஞ்சது நான் இல்ல. அமிர்தா தான், ஆர்த்தி எல்லாரும் முன்னாடியும் தன்னை இன்சல்ட் பண்ணிட்டான்னு அவளோட முடியை அவளே வெட்டிக்கிட்டு அந்த பழியை ஆர்த்தி மேல போட்டா. அவ சொன்னதுக்கு நானும் ஒத்துக்கிட்டேன். ஏன்னா, எங்க கிளாஸ்ல ஆரத்திக்கு இருக்கிற இடத்தை பிடிக்க தான் அப்படி செஞ்சேன். அமிர்தா முடியை நான் வெட்டல"

நிம்மதி பெருமூச்சு விட்டாள் ஆர்த்தி.

"உங்க மனசுல நீங்க என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க? இதெல்லாம் டாக்டர்ங்க செய்ற வேலையா? உங்களையெல்லாம் டாக்டர்னு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு. உங்க ரெண்டு பேரையும் நான் பத்து நாள் சஸ்பெண்ட் பண்றேன். கெட் லாஸ்ட்" என்றார் டீன்.

"சார் ப்ளீஸ் சார்... ஐ அம் சாரி சார்" கெஞ்சினாள் நிஷா.

"ஐ செட் கெட் அவுட்..."

அவர்கள் இருவரும் முகத்தை தொங்க விட்டு அங்கிருந்து சென்றார்கள்.

"நீங்க ரெண்டு பேரும் கிளாசுக்கு போங்க" என்றார் டீன்.

"வா, ஆர்த்தி..."

அவனுடன் அமைதியாய் சென்றாள் ஆர்த்தி. வெளியில் இருந்த அவர்கள் நண்பர்களுக்கு விஷயம் தெள்ளத் தெளிவாக புரிந்து போனது. ஆர்த்தியின் கையை பிடித்துக் கொண்டு, வானதியும், மைதிலியும் அவளை சமாதானப்படுத்த முயன்றார்கள். ஆனால் அவள் யாரிடமும் பேசவில்லை.

ஆர்த்தியிடம் பேச, அன்று போல், அதற்கு முன் எப்போதும் தயங்கியதில்லை யாழினியன். ஆர்த்தியை எப்படி சமாதானப்படுத்துவது என்றே அவனுக்கு புரியவில்லை. கல்லூரி அலுவலகத்தை விட்டு அவர்கள் வெகு தூரம் வந்த பிறகு, மெல்ல அவள் கரத்தை பற்றினான் யாழினியன். அவ்வளவு தான், அவன் தோளில் சாய்ந்து கொண்டு, ஓவென்று அழுதாள் ஆர்த்தி.

"நான் ரொம்ப பயந்து போயிட்டேன்"

"ஐ அம் சாரி, ஆர்த்தி. என்னால தான் நீ இவ்வளவு பெரிய பிரச்சனையில மாட்டிகிட்ட. ஐ ப்ராமிஸ், இது மாதிரி மறுபடியும் நடக்காது. உன்னை நிச்சயமா லோவா ஃபீல் பண்ண நான் விட மாட்டேன்"

"தேங்க்ஸ்"

"நீ எனக்கு தேங்க்ஸ் சொல்ல வேண்டியதில்ல. எப்பவுமே உனக்காக யாழ் இருப்பான். சாகுற வரைக்கும்..."

"எதுக்காகவும் எப்பவும் என்னை கேலி செய்ய மாட்டேன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணு. அப்படி மட்டும் நீ செஞ்சா நான் உன்கிட்ட எப்பவுமே பேசமாட்டேன்"

"ஐ ப்ராமிஸ்... எதுக்காகவும் எப்பவும் உன்னை கிண்டல் பண்ண மாட்டேன்." என்று அவளுக்கு வாக்களித்தான் யாழினியன்.

சரி என்று தலையசைத்தாள் ஆர்த்தி. அவர்களுடைய பிரச்சனை தீர்ந்ததை பார்த்து, அவர்களுடைய நண்பர்களும் சந்தோஷம் அடைந்தார்கள்.

"இதை நம்ம கொண்டாடணும்" என்றான் நிலவன்.

"கண்டிப்பா" என்றான் மகேந்திரன்.

"நெஜமாவா?" என்றாள் மைதிலி.

"நாங்க எல்லாரும் சேர்ந்து உன்னோட பர்த் டே வை கொண்டாட போறோம்னு நினைக்காதே" என்று அவள் வம்புக்கு வந்தான் நிலவன்.

"என் பர்த்டேவை கொண்டாட சொல்லி உன்னை யாரும் கேட்கல" என்றாள் மைதிலி.

"ஓ அப்படியா? அப்ப நேத்து என்கிட்ட கிஃப்ட் கேட்டது யாரு?"

"ஆமாம், கேட்டா மட்டும் அப்படியே நீ வாங்கி கொடுத்துடுவ பாரு..."

"நான் எதுக்கு உனக்கு வாங்கி தரணும்?"

"போடா குரங்கு"

"உன்னோட வார்த்தையை திருப்பி வாங்கிக்கோ. இல்லனா ரொம்ப வருத்தப்படுவ"

"முடியாது"

"சரி, அப்படின்னா வாங்கின கடையிலேயே கிஃப்ட்டை திருப்பி கொடுத்துடறேன்" சிறிய டப்பாவை தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்தான் நிலவன்.

"யாராவது என்னை கிள்ளுங்களேன்..."

நிலவனே அவள் கையைப் பிடித்து கிள்ளினான்..

"இடியட், இன்னிக்கு எனக்கு பர்த்டே. எனக்கு வலிக்கிற மாதிரி எதுவும் செய்யக்கூடாது"

"என்னோட கிஃப்ட்டை பார்த்தா, நீ வலியை மறந்துடுவ"

அவன் கையில் இருந்த டப்பாவை பிடுங்கி அதை திறந்தாள் மைதிலி. அதை பார்த்து அவள் பல்லை கடிக்க, மற்ற அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அதில் இருந்தது பீடிங் பாட்டில். அவனை அடிக்க, துரத்த தொடங்கினாள் மைதிலி. ஆனால் அது அவ்வளவு சுலபத்தில் நடப்பதாய் தெரியவில்லை. தன் கவலையை மறந்து சிரித்தாள் ஆர்த்தி. மூச்சு வாங்க அவள் முன் வந்து நின்றான் நிலவன்.

"அப்பாடா ஒரு வழியா நீ சிரிச்சுட்ட..."

"தட்ஸ் மை கேர்ள். கீப் ஸ்மைலிங்" என்றாள் மைதிலி.

"என்னை சிரிக்க வைக்க தான் நீங்க இதெல்லாம் செஞ்சீங்களா?" என்றாள் ஆர்த்தி ஆச்சரியமாய்.

ஆமாம் என்றார்கள் இருவரும்.

"அப்படின்னா அவன் உனக்கு நிஜமாகவே கிஃப்ட் கொடுக்கலயா?"

தான் அணிந்திருந்த, நீ- லெங்த்  ஃப்ராக்கை, விரித்து பிடித்து, போஸ் கொடுத்து,

"டடான்..."   என்றாள் மைதிலி.

"சூப்பர் செலக்ஷன் நிலா..." என்றாள் ஆர்த்தி.

"சரி வாங்க, மைதிலி பர்த்டே வை கொண்டாடலாம்" என்றான் யாழினியன்.

"இது என்னோட ட்ரீட்" என்றாள் ஆர்த்தி.

"இல்ல என்னோட ட்ரீட்" என்றான் யாழினியன்.

"முடியாது..."

"போதும் போதும்... ரெண்டு பேரும் சேர்ந்து எங்களுக்கு ட்ரீட் குடுங்க" என்றார்கள் அனைவரும்.

"அப்படின்னா, வெளியில எங்கேயாவது போகலாம்" என்றான் யாழினியன்.

"போகலாம்" என்றாள் ஆர்த்தி.

"சரி வாங்க"

"என்னது இப்பவா? கிளாசை பங்க் பண்ணிட்டா?" என்றாள் ஆர்த்தி.

"ஆமாம்" என்றான் யாழினியன்

"இல்ல, கிளாசை பங்க் பண்ண முடியாது"

"ஆர்த்தி, என்னை இன்னும் ஃபெட்டப் ஆக்காத"

"இன்னுமா? அப்படின்னா நீ ஃபெட்டப்பா இருக்கியா?"

ஆமாம் என்று தலையசைத்தான் யாழினியன் .

"ஏன்?"

"நான் எவ்வளவு பெருமையா ஃபீல் பண்ணேன் தெரியுமா?" என்றான் சோகமாக.

"பெருமையாவா? எதுக்கு?"

"நீ தான் உண்மையிலேயே அமிர்தா முடியை வெட்டிட்டேன்னு நினைச்சேன். ஆனா நீ என்னை ஏமாத்திட்ட... "

"என்ன்னனது?" பல்லை கடித்தாள் ஆர்த்தி.

"உன்னோட காதல் எவ்வளவு உயர்ந்ததுன்னு நினைச்சேன்... என் காதலுக்காக நீ இதைக் கூட செய்ய முடியாதா ஆர்த்தி? போ... நீ என்னை அப்செட் பண்ணிட்ட"

"மரியாதையா இதோட நிறுத்து, யாழ். என்னை கோபப்படுத்தாத"

"கோபம் வந்தா என்ன செய்வியாம்?" அவன் பின்னோக்கி நகர துவங்கினான்.

"என்ன செய்வேன்னு காட்டணுமா?"

அவன் அங்கிருந்து ஓடுவதற்கு முன், அவனை அடைந்து அவன் தலைமுடியை கெட்டியாய் பற்றிக் கொண்டாள் ஆர்த்தி. எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், அதை தனக்கான தண்டனையாய் ஏற்றான் யாழினியன்.

"நீயும், உன்னோட வீணாப்போன லவ்வும்..." அவனை அடித்து துவைத்து விட்டாள் ஆர்த்தி.

அவளது கரங்களை பின்னாலலிருந்து இறுக்கப் பற்றிக் கொண்டான் யாழினியன். அவளை அணைத்துக் கொண்டான் என்றும் கூறலாம்.

"விடு என்னை..."

"வா எங்கேயாவது வெளியில் போகலாம்"

"நான் வரமாட்டேன்"

"வருவ"

அவளை தன்னுடன் தள்ளிக் கொண்டு நடக்கத் தொடங்கினான் யாழினியன், அவர்களது நண்பர்களைப் பற்றி கவலைப்படாமல். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

"உண்மையிலேயே காதலிக்கிறேன்னு சொல்லி காதலிக்கிறவன் கூட, இவனை மாதிரி லவ்வரை தைரியமா கட்டிப்பிடிக்க மாட்டான் டா" என்றான் நிலவன்.

"ஆமாம். ஆனா காதலிக்கிறேன்னு மட்டும் சொல்ல மாட்டான்" என்றான் மகேந்திரன்.

"அவனும் ஆரத்தியை காதலிக்கிறான்னு தான் எனக்கு தோணுது" என்றாள் மைதிலி.

"அப்படின்னா, அதை சொல்றதுல அவனுக்கு என்ன பிரச்சனை?" என்றாள் வானதி.

"காலேஜ் முடியறதுக்கு முன்னாடி அவன் அவ கிட்ட சொல்லிடுவான்னு நான் நம்புறேன்" என்றான் கதிரவன்.

அனைவரும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்கள்.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top