paguthi28
அடுத்த நாள் காலை அந்த அரண்மனையை விட்டு மற்ற வீரர்களுடன் வெளியேறிய ப்ரியாவும் அர்ஜுனும் ஆற்றங்கரைக்கு வந்தனர்.பின் அவர்கள் எந்த வழியில் செல்வது என்பது குறித்து எந்த வழியும் தெரியாது நிற்க பிரியா மீண்டும் அந்த ஓலையை எடுத்து அடுத்த பக்கத்தை பார்த்தால் அதில்
ஒரு சூலாயுதம் போன்ற குறியீடு இருந்தது அந்த சூலாயுதத்தை சுற்றி ஓர் பாம்பு பின்னி பிணைந்திருப்பதை போல் இருந்தது பின் அதில் ஓர் சூரியனின் குறியீடும் 10 என்றும் இருந்தது.அதை கண்டவர்களுக்கு மீண்டும் அதன் விளக்கம் யாதாயிருக்கும் என்று விளங்கவில்லை.
அர்ஜுன்"எப்பா இதுல என்ன இருக்குனு யோசிச்சு யோசிச்சே எனக்கு வயசாயிடும் போல பாம்பு பாம்பா இருக்கு ஒரு மண்ணும் புரில .ஷிவா பெருமானே இதுக்கு உன் சூலத்துல ஒரு குத்து வாங்கிறலாம் போல "என்று கூற
பிரியா "அர்ஜுன் இப்போ என்ன சொன்னீங்க?என்று கேட்க
அவனோ "இதுக்கு சூலத்துல ஒரு குத்து வாங்கிறலாம் "என்க பிரியா அவளது கை பையிலிருந்து ஒரு நவீன சாதனத்தை எடுத்தால் பின் அதில் ஒரு பொத்தானை அழுத்தவோ அதில் இருந்து ஒரு திரை வந்தது அதில் ஏதோ செய்தவள் சற்று நேரம் கழித்து முகத்தில் அத்தனை பிரகாசத்துடன் "அர்ஜுன் என்கூட வாங்க" என்க அர்ஜுனோ அவள் என்ன செய்கிறாள் என்பதே புரியாமல் விழிக்க
அவளோ "என்ன அர்ஜுன் என்னையே பாத்துட்டு இருக்கீங்க வாங்க போலாம் என்று அழைக்க அவனோ பிரியா வெயிட் வெயிட் என்ன ஆச்சு இப்போ எங்குடு போலாம்ங்குற??என்க
அவளோ அந்த ஓலையை காட்டினாள் . "சூலாயுதம் குடுத்துருக்காங்கன்னா சிவனுக்கு உகந்த மரம் வில்வ மரம் அந்த மரம் சூலாயுதத்தை குறிக்கும் .இந்த இடத்தோட தட்ப வெட்பத்தை வச்சு பாக்கேல வில்வ மரம் இருக்க வாய்ப்பில்லை ஆனா இந்த காட்டோட ஒரே ஒரு எடத்துல மட்டும் இருக்கு அத இந்த floral detector வச்சு செக் பண்ணிட்டேன் அந்த இடத்துக்கு போனோம்னா ஏதாவது clue கிடைக்கும் ."என்றால் .
அவள் கூறியதை கேட்டவன் அப்படியே நிக்க.
அவளோ என்னாச்சு இவருக்கு என்று நினைத்தவள் "அர்ஜுன் என்னாச்சு ?"என்று வினவ
அவனோ "உனக்கு மூல பூராம் உடம்பு பிரியா chi உடம்பு பூராம் மூல பிரியா "என்க
அவளோ "நேரம் காலம் தெரியாம நீங்க வேற காமெடி பன்றேன்னு டென்ஷன் பண்ணாதீங்க வாங்க"என்று கூறி அழைத்து சென்றால் .
அவர்கள் காட்டுக்குள் நெடு நேரமாக பயணித்தபின் ஒரு உயரமான மரத்தை கண்டனர் .அதன் இலைகளை சென்று பார்த்த பிரியா அது வில்வ மரம் என்பதை உணர்ந்து கொண்டால் .பின் அந்த ஓலையை பார்த்தால் அதில் சூரியன் குறியீடும் அருகில் 10 என்றும் இருந்தது .அதன் அர்த்தம் என்ன வென்பதை அவளால் அறிய இயலவில்லை .அவளது குழப்ப ரேகைகள் நிறைந்த முகத்தை பார்த்த
அர்ஜுன் அவள் அருகில் வந்து "என்ன பிரியா என்னாச்சு?" என்று கேட்க
அவளோ "இந்த சூரியனுக்கும் 10கும் என்ன connectionnu தெரியல அர்ஜுன் " எங்க அவன் அதை பார்த்து விட்டு சற்று நேரம் யோசித்தான்.
பின் "பிரியா கெடச்சுருச்சு நீ அந்த மரத்துல இருந்து கிழக்கு பக்கமா 10 அடி நட நா மேற்கு பக்கமா 10 அடி நடக்கிறேன் ஏதாவது ஒரு எடத்துல தெரியும்" என்றான் .
அவன் கூறியதை கேட்டு குழம்பிய பிரியா" அர்ஜுன் இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? "என்று வினவ
அவனோ "அதுல என்ன இருக்கு ?"என்க
"பாம்பு இருக்கு சூரியன் இருக்கு "என்க
அவன் "சூரியன் எந்த திசைல உதிக்கும் மறையும்?"என்க
அவள் "கிழக்கு மேற்கு "என்றால்
பின் அவன் "சரி பாம்பு எப்படி போகும்"என்க
அவள் "என்ன அர்ஜுன் சில்லயாஹ் கேக்குறீங்க ஊர்ந்து தான் போகும் "என்க
அவனோ "ஹ்ம்ம் அதே தான் தரைல அந்த சூலாயுதமா இருக்குற மரத்துல இருந்து பத்து அடி சூரியன் இருக்குற திசைல ஏதோ ஒரு திசைல வழி இருக்குனு அர்த்தம் "என்க
அவளோ "ஹைய்யோ அர்ஜுன் மூளையோ மூல போங்க உங்களுக்கு லவ் யு டா புருஷா "என்றால் பின் இருவரும் கிழக்கு மற்றும் மேற்கு திசையில் நடந்து சென்று அங்கே காலால் தட்ட கிழக்கு திசையில் தரையில் ஏதோ வித்யாசமான சத்தம் கேட்டது .
பின் இருவரும் அந்த இடத்தை தோண்ட அங்கே பித்தளையால் ஆனா ஒரு தகடு இருந்தது அதில் கருடன் உருவம் பொறிக்க பட்டிருந்தது .அதில் அந்த லட்சணையை அவள் வைக்க அந்த தகடு திறந்து வழி உருவானது .பின் அவர்கள் இருவரும் அதில் உள்ள படிக்கட்டுகளில் இறங்கி சென்றனர் .
இங்கே கார்த்திக் மித்ராவை கவனித்து கொண்டிருந்தான் .அவளது அறைக்குள் எவ்வாறு நுழைவது என்று சிந்தித்து கொண்டிருந்தவன் அவளது அறைக்கு ஒரு பணிப்பெண் பழரசத்தோடு செல்வதை கவனித்தான் .அவளிடம் விரைந்தவன் "பெண்ணே எங்கே செல்கிறாய் என்று கேட்டான் அவள் சிற்றரசியின் அறைக்கு பழரசம் எடுத்து செல்கிறேன் என்று கூறினால்.
பின் அவன் "சரி நீ செல் நான் கொண்டு செல்கிறேன் "என்க அவளோ "இல்லை .."என்று ஏதோ சொல்ல வர
அவனோ "நான் சிற்றரசியிடம் ஒரு தூது கூற வேண்டும் அப்படியே இதையும் கொடுத்து விடுகிறேன் "என்று கூற அவளும் சரி என்று அவனிடம் கொடுத்தனுப்பினால்.
மித்ராவின் அறைக்கு சென்றவன் அங்கே காவலுக்கு இருந்த வீரர்களின் முகத்தில் எப்பொழுதும் தன்னிடம் வைத்திருக்கும் மயக்க மருந்தை அடித்தவன் உள்ளே சென்று அவளது அறை கதவை தாளிட்டான் .அவள் அந்த சத்தத்தில் திரும்பி "யார் அது" என்று வினவ
அவனோ "ஆங் உன் புருஷன்" என்று தன் முகத்தில் இருக்கும் துணியை விளக்கினான்.
அவனது முகத்தை கண்டவள் அவனை ஓடி சென்று அணைத்து கொண்டால் .அவனை அணைத்தவள் தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தாள் .அவளிடம் அவளது நடவடிக்கைக்கு சண்டை இட நினைத்து வந்தவன் அவளது அழுகையில் குழம்பினான் ."அப்போ இவ நிதானத்துல தான் இருக்காளா மந்திர கட்டுல இருக்காணுள்ள நெனச்சேன்.இதெல்லாம் தெரிஞ்சேவ பண்ணுறா? "என்று எண்ணமிட்டான் ஆனால் அவனது கரங்களோ அவனது சிந்தனைக்கு சம்பந்தமில்லாமல் அவளது முதுகை ஆதரவாய் நீவி விட்டுக்கொண்டிருந்தது .
பின் அவனிடமிருந்து விலகியவள் அவனது முகத்தில்முத்தமழை பொழிந்தாள் .அவளது இந்த செயலில் திக்கி திணறி போனான் கார்த்திக் அவளை இருக்க அணைத்தான் .அவனது அணைப்பு இறுகி கொண்டே போனது அவளை பிரிந்து அவன் இந்த 10 நாளாய் தவித்த தவிப்பு அவனது அணைப்பில் தெரிந்தது .அவன் மேலும் அவளை இருக்க அவள் வலியால் "கார்த்திக் வலிக்குதுடா "என்றால் .
பின் அவளை நிமிர்த்தியவன் "நீ இல்லாம செத்துட்டேண்டி .என்ன ஆச்சு என் இப்டி இருக்க நேத்து நீயா இதெல்லாம் பண்ண நா நீ உன் சுயநினைவுல இல்லனு நெனச்சேன் ஆனா இப்போ நீ நடந்துக்குறத பார்த்தா உனக்கு சுயநினைவு நல்லா இருக்குனு தெரியுது ஏண்டி இப்டி பன்னுற?" என்று அவளது தோளை பிடித்து உலுக்க
அவளோ "நேத்து வரைக்கும் அப்டி தாங்க இருந்தேன் நான் என் கையாள கொலை பண்ணிருக்கேன்னு நெனச்சாலே அருவெறுப்பா இருக்கு எனக்கு ."என்க அவனுக்கோ மிகவும் குழப்பமாக இருந்தது பின் அவன் அவளை அணைத்துகொண்டே"என்னடி சொல்ற நேத்து வரைக்கும்னா ஏன் நீ என்ன விட்டு வந்த அத சொல்லு firstuh " என்க அவளும் கூற துவங்கினால் .
இங்கே அர்ஜுனும் ப்ரியாவும் படிக்கட்டுகளில் இறங்க அங்கே ஒரு இடத்தில பல சிவலிங்கங்கள் இருந்தது .அந்த ஓலையில் பார்க்கவோ அதில் எந்த ஒரு குறிப்பும் இல்லை .இதில் அர்ஜுனிற்கு தலை தொங்கிவிட்டது "என்னடா இது வாழ்க்கைல தடை வரலாம் ஆனா தடையே வாழ்க்கையா வந்துருக்கே "என்றவன் திரும்ப அங்கோ பிரியா சம்மணம் இட்டு ஓம் நமசிவாய என்று கூறி கொண்டிருந்தாள் .அவள் அருகில் சென்றவன் அவளை பார்க்க அவள் ஒரு நாள் கூறியது நினைவு வந்தது .
ஒருநாள் பிரியா அவனிடம் "எப்போலாம் வாழ்க்கைல வழியே இல்லனு தோணுதோ அப்போ மனச ஒரு நிலை படுத்தி கடவுளை பிரார்த்திக்கோம்னா கண்டிப்பா கடவுளே வழி கொடுப்பாரு "என்றது ஞாபகம் வர அவனும் தன்னை பிரார்த்தனையில் இணைத்து கொண்டான் .இவர்கள் 108 முறை சிவநாமம் கூறி முடிக்க அந்த இடத்தை ஓம் என்ற சத்தம் நிறைத்தது பின் அங்கே பரவிய ஒளியில் இருவரும் தங்கக்ள் கண்களை திறந்தனர்.அங்கே நடுநாயகமாக அமைந்திருந்த சிவலிங்கத்தில் அந்த பதக்கத்தை ஒரு பாதி தோன்றியது அதை எடுத்து பார்த்தவர்கள் எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தனர்.
நாளை சம்யுக்தாவின் ஆட்டம் நிறைவு பெறுமா??
மித்ரா கார்திக்க்கை விட்டு பிரிந்தது ஏன்??
stay tuned to know
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top