paguthi 5
அந்தி சாய்ந்து கதிரவன் தன் கடல் தாயின் அணைப்பிற்குள் செல்லும் நேரம் அர்ஜுனும் கார்திக்க்கும் மாயாபுரியை அடைந்தனர் .மாயாபுரி மலையடிவாரத்தில் இயற்கை எழில் கொஞ்ச நான் அழகா என் ஆடல் அழகா என காண்போரை கேள்வி கேட்கும் அழகிய மயில்களும்.நிலத்தில் கால் படுமோ என துள்ளி குதித்து ஓடும் மான்களும் அவற்றோடு நீரில் போட்டியிடும் மீன்களும் என மாயாபுரி மாயலோகத்தை ஒத்த அழகோடு இருந்தது (அதீத அழகு ஆபத்தும் ஆகும்)
கார்த்திக் அக்காட்சியை கண்டு "beautiful " என்று கூற அர்ஜுனோ தான் என்றோ தொலைத்த விலைமதிப்பில்லாத ஒன்றை காண்பது போல் அவ்வூரின் அழகை பார்த்து கொண்டிருந்தான்.பின் இருவரும் தங்களின் தங்கும் விடுதிக்கு சென்றனர்.அங்கு சுவற்றை பார்த்து சிரித்து கொண்டிருந்தான் அர்ஜுன் அதை கண்ட கார்த்திக் (இவன் என்ன ஏதோ பெரிய கௌண்டமணி செந்தில் காமெடி ஓடுற மாறி வெறும் செவுத்த பாத்து சிரிக்கிறான் இவன இப்டியே விட கூடாது கேட்ருவோம் ) என்று நினைத்துக்கொண்டு அர்ஜுனின் தோளை தொட்டு அழைக்கிறான் பின் "மச்சான் நானும் காலைல இருந்து பாக்குறேன் சிரிச்சுகிட்டே இருக்க என்ன விஷயம் டா" அதுக்கு அர்ஜுன் கார்திக்க பிடிச்சு கன்னத்துல கிஸ் பண்ணிட்டு (அய்யய்ய அவனா நீ ) மச்சான் நேத்து என் கனவுல அந்த பொண்ணு வந்தா டா வந்து
"நிழலாக தொடர்கிறான் உன்னை
நினைவால் அணைக்கின்றேன்
நித்தமும் உன்னை
நிழலான என்னை
நிஜமாக காண
நின் விழி திறந்திடு
வழி அது கிடைத்திடும் "
அப்டின்னு சொல்லிட்டு மறைஞ்சுட்டா டா கண்ணா தெறந்து பாத்தா நம்ம commisioner குடுத்த கேஸ் ஹிஸ்டரி file தான் இருந்துச்சு "
கார்த்திக் "அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம் ?"
அர்ஜுன் "அட மங்குனி அமைச்சரே அதுக்கு என்ன அர்த்தம்னா அவளை நா மாயாபுரில்ல பாக்க போரேன்னு அர்த்தம் சரி சரி பேசி பேசி என் timeah வேஸ்ட் பண்ணாத நா என் கனவை continue பண்ணனும் குட் நைட் " என கூறி விட்டு உறங்கி விட்டான் இங்கு கார்திக்கோ இது எங்க கொண்டு போய் விடப்போகுதோ என்று நினைத்துக்கொண்டு உறங்கினான்.
(சரி இப்போ நாம heroinah கவனிப்போம் )
காலையில் தங்கும் விடுதியில் தனது அறையில் இருந்த பிரியா 5 மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி ஹாலில் இருந்த மித்ராவிடம் சென்றால்
பிரியா" மித்ரா"
மித்ரா"ஹ்ம்ம்"
பிரியா"மித்ரா.."
மித்ரா"என்னடி காலங்காத்தால என் பேர ஏலம் விட்டுட்டு இருக்க என்ன வேணும் " என கேட்க
ப்ரியாவோ "கோவிலுக்கு போலாமா என கேட்டால் "
அதை கேட்ட மித்ரா அதிர்ச்சியில் உரைந்துவிட்டால் ஏனெனில் பிரியா இதுவரை கோவிலுக்கு சென்றதில்லை அழைத்தாலும் என் விதியை இவ்ளோ மோசமா படைச்ச கடவுளை நா என் பாக்கணும் என நாத்திகம் பேசுவாள் இன்று அவளே கோவிலுக்கு அழைத்தது மித்ராவிற்கு பெரும் அதிர்ச்சியாய் இருந்தது .
பிரியா "என்னடி வாய பொளந்துட்டு நிக்கிற வா என்று அவளது கையை பிடித்து இழுத்து சென்றால்"
அந்த கோவில் மிகவும் பழமையானதாகவும் நுண்ணிய சிற்ப வேலைகளை கொண்ட சுவர்களுடனும் தெய்வீக அம்சம் பொருந்தி இருந்தது அங்கு சென்ற ப்ரியாவும் மித்ராவும் தத்தம் பிரார்த்தனையை இறைவனின் பாதத்தில் வைக்கிறார்கள் பின் இருவரும் கோவில் படிகளில் இறங்கி வருகிறார்கள் (ஓகே இப்போ இவுங்க இங்க freeze நம்ம ஹீரோவா பாப்போம் )
காலையிலேயே எழுந்து நமது கார்த்திக்கும் அர்ஜுனும் கேஸ் பத்தி டிஸ்க்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்க
அர்ஜுன் "மச்சான் commisioner சொன்னதை வச்சு பாக்கேல இந்த கேஸ் கொஞ்சம் காம்ப்ளிகேடட்னு தான் தோணுது சோ நாம கேஸ் ஹிஸ்டரி படிக்குறதுக்கு முன்னாடி இந்த ஊற ஒரு தடவ பாத்துட்டோம்னா ஏதாவது ஐடியா கிடைக்கும் என்ன சொல்லுற" என
அதற்கு கார்த்திக் "அதாவது ஊரு சுத்தலாம்னு சொல்லுற ஓகே "(எப்பவுமே நீ சீரியஸ் ஆக மாட்டியா டா).
பின் இருவரும் தங்கள் அலுவலக ஜீப்பில் செல்கின்றனர்
கார்த்திக் "why திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி கொலவெறி கொலவெறி di "என பாட (ஒரு சின்ன correction கத்த) வண்டி திடீரென puncture ஆனது
அர்ஜுன்"நீ பாடுறது tyreகே பொறுக்கல டா " என
கார்த்திக் அசடு வழிய" நா மெக்கானிக் கால் பண்ணிட்டு வரேன் மச்சான்"என்று கூறி சென்றான் பின் அர்ஜுனோ கேஸ் ஹிஸ்டரி filai எடுத்து படிக்க எத்தனிக்க பலத்த காற்று ஒன்று வீசி அதில் இருந்த பக்கங்கள் அனைத்தும் பறந்தது இதை கவனித்த கார்த்திக்கும் அர்ஜுனும் ஒவ்வொரு திசையிலும் சென்று பறந்த காகிதங்களை சேகரிக்க ஒரு காகிதம் மட்டும் அர்ஜுனிடம் சிக்காமல் பறந்து சென்று ஒருவர் முகத்தில் விழுந்தது அந்த காகிதத்தை எடுத்த அர்ஜுன் அவ்விடமே சிலை ஆகினான் .இங்கு கார்திக்கோ கடைசி காகிதத்தை தேடி கொண்டு செல்ல அது ஒருவர் காலில் விழுந்தது அதை எடுத்து நிமிர்ந்த கார்திக்க்கோ அவ்வுருவத்தை பார்த்து நீயா ?
என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் .
அர்ஜுனையும் கார்திக்க்கையும் அதிர வைத்த அந்த இருவர் யார் ??அடுத்து என்ன நடக்கும்?
stay tuned to know
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top