paguthi 29

அந்த பதக்கத்தை எடுத்து பார்த்த இருவரும் அதை தங்கள் கண்களில் ஒற்றி எடுத்தனர் பின் அந்த இடத்திலிருந்து புறப்பட்டவர்கள் அந்த காட்டை விட்டு வெளியேறினர்.

இங்கே கார்த்திக்கின் கை அணைப்பிலிருந்த மித்ராவிடம் கார்த்திக் "என்ன ஆச்சு டி ஏன் என்ன விட்டு வந்த என்ன ஆச்சுன்னு சொல்லுடா எந்த ப்ரோப்ளேம்னாலும் சேந்தே solve பண்ணலாம் "என்க

அவளும் கூற துவங்கினால் "அன்று ஒரு நாள் மித்ராவை பின் தொடர்ந்த அவ்வுருவம் சம்யுக்தாவே தான்.

அவளிடம் வந்தவள் "நீ இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது மித்ரா .நான் சம்யுக்தா சாஹித்ய வம்சத்து தோன்றல் என்று அவளது சரித்திரத்தை கூறினால் .இந்த வருடப் பூஜையை என்னால் செய்ய இயலாது நான் சென்ற மாதம் செய்த யாகத்தில் பலியிட்டது ஓர் சிவ தபசினியை அந்த சாபத்தால் என்னால் இப்பூஜையை செய்ய இயலாது எனக்கு பதில் சாஹித்ய வம்சத்தில் பிறந்த நீ இப்பூஜையை புரியவேண்டும் ."என்று கூற 

மித்ராவோ "எது நா பூஜை பண்ணனுமா நா ஏன் பூஜை பண்ணனும் அது மட்டும் இல்லாம நீ மனுஷங்களை பலி குடுத்துருக்கேன்னு சொல்ற உன்ன போலீஸ்ல புடிச்சு குடுக்காம விட மாட்டேன் .என்று கூற 

அவளோ அவள் அருகில் வந்து "மித்ரா என்ன அவசரம் என்றவள் அவளது கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தை எடுத்தவள் "ஓ உனக்கு திருமணம் ஆகி விட்டதா .என்றவள் சிறிது நேரம் தன் கண்களை மூடினாள் .பின் உன் கணவன் நாமம் கார்த்திக் தானே அவன் இந்த ஊரின் காவல் அதிகாரி தானே "என்க

 மித்ராவிற்கோ பயம் தொற்றிக்கொண்டது எனினும் அதை காட்டிக்கொள்ளாமல் "இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் இதலீம் இப்போ எதுக்கு எந்த சொல்லிட்டு இருக்க "என்க 

அவளோ நகைத்துவிட்டு "இந்த சம்யுக்தா அறியாது ஜகத்தில் ஒரு அணுவும் அசையாது.நான் கூறுவதை நீ செய்தே ஆகா வேண்டும் "என்றால் பின் பொறுமை இழந்த 

மித்ரா "முடியாது என்ன பண்ணணுமோ பண்ணிகோ டி"என்றுவிட்டு நகர போக சம்யுக்தாவோ மித்ரா என்று கத்தியவள் தன கண்களில் இருந்து தன் சக்தியால் அந்த மண்டபத்தின் ஒரு பகுதியை இடிய செய்தால் அந்த sathathil தன் காதுகளை moodinaal பின் மித்ராவின் அருகில் வந்த

 சம்யுக்தா இந்த மண்டபத்தை இடிய வய்த்த எனக்கு உன் கணவனை கொல்ல அதிக நேரம் எடுக்காது .சிந்தித்து செயலாற்று .இன்று இரவு 2 :௦௦ மணிக்கு நீ மாயாபுரியின் காட்டு பகுதிக்கு செல்லும் வழியை அடைந்திருக்க வேண்டும் இல்லையேல் நீ தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உன் கணவன் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது "என்றவள் அங்கிருந்து சென்றால்."

இதை கேட்ட கார்த்திக்கின் ரத்தம் கொதித்தது கோபத்தில் அந்த அறையின் சுவற்றில் குத்தியவன் "ஏண்டி இதை அன்னைக்கே சொல்லல என்கிட்டே"என்க

 மித்ராவோ "நீ என்ன போக விட்ருக்க மாட்டடா.அவ சொன்ன மாறி உன்ன ஏதாச்சும் பண்ணிருந்தானா சாத்தியமா சொல்றேன் அடுத்த நிமிஷம் நா உயிரோட இருந்துருக்கு மாட்டேன் "என்க அவனோ 

அவளது உதட்டை தன் கரங்களால் மூடியவன் "இன்னொரு தரம் அப்டி சொல்லாதடி "என்க அவனது கரத்தை விலக்கியவள் "நா பேச்சுக்கு சொன்னதுக்கே உனக்கு இப்டி இருக்கே அவ என் கண்ணு முன்னாடி என்ன மெரட்டுனா டா அதான் எனக்கு என்ன ஆனாலும் பரவா இல்லனு கெளம்பி வந்தேன் .இங்க வந்தது மட்டும் தான் கார்த்திக் எனக்கு ஞாபகம் இருக்கு மத்தபடி நேத்து நடுராத்திரி வரைக்கும் என்ன நடந்துச்சுனு எனக்கு தெரியாது.சம்யுக்தா என்ன மந்திர கட்டுக்குள்ள வச்சிருந்தா ."என்க 

அவனோ "அப்போ அதில இருந்து எப்படி நீ வெளிய வந்த என்க 

அவளோ "அவ என்னோட மூளையை செயலிழக்க வச்சு என்ன அவ இயக்குறதுக்கெல்லாம் ஆடுற ஒரு பொம்மை மாறி செஞ்சுருந்தா.என்னோட மொத கட்டுப்பாட்டையும் ஒரு பில்லி சூனிய பொம்மைக்குள்ள வச்சிருந்தா.என் அதிர்ஷ்டமோ அவ துரதிஷ்டமோ தெரியல நேத்து அந்த யாகத்துல கடைசியா போட்ட பூ கூடைல அந்த பொம்மையும் எப்டியோ அறுந்து விழுந்துருக்கு .அதா நா தீ ல போட்டதும் அது எரிஞ்சதால அவ என் மேல ஏவி விட்ருந்த மாந்த்ரீக கட்டு ஒடஞ்சுருச்சு.இது எல்லாமே அவ நேத்து அவளோட ஞான குரு கிட்ட ஒளறிட்டு இருந்தப்போ கேட்டேன் .ஆனால் அவளுக்கு நா சரியானது தெரியாது"என்று கூறி முடித்தால் ."அது வரை பொறுமையாய் கேட்டு கொண்டிருந்த 

கார்த்திக் அவளை மீண்டும் இழுத்து அனைத்துஇ அவள் கழுத்தில் முகம் புதைத்து "எனக்காக தான் இவ்வளவும் செய்தியா டி ."என்றவன் அப்படியே நிற்க இருவரும் நேரம் கடப்பது கூட உணராது அப்படியே நின்றனர்.

பின் இருவரும் கை தட்டும் ஓசையில் தான் தங்கள் நிலைக்கே திரும்பினார்.அங்கோ சம்யுக்தா நின்றுகொண்டிருந்தாள் .

சம்யுக்தா"அழகு மிக அழகு என்னையே ஏமாற்றிவிட்டாயே மித்ரா அதி அற்புதம்."என்று கூறி அவள் அருகே செல்ல கார்திக்க்கோ மித்ராவின் முன் நின்று சம்யுக்தாவின் கழுத்தை பிடித்தான்.அவனது பிடியில் முதலில் துடித்த சம்யுக்தா பின் சிறிது சிறிதாக தன் முகபாவத்தை சிரிப்பாக்கினால் பின் அவனது கையை தட்டி விட்டவள் மித்ரா கார்த்திக் இருவரையும் சேர்த்து காட்டினாள் .பின் "உங்கள் இருவரையும் பிடித்தாகி விட்டது என் அருமை தோழி ருத்ரா அதாவது அவளின் மறுஜென்மம் அந்த ப்ரியாவையும் அவளது அமரக் காதலன் அர்ஜுனையும் என் கையால் இன்று பலியிட்டு அப்பதக்கத்தை அடைந்து இவ்வுலகத்தை ஆளும் சர்வாதிகாரியாக உருவெடுப்பேன் ."என்றவள் அவ்விடமே அதிரும் வண்ணம் சிரித்தாள் .

இங்கே இது எதுவும் அறியாத அர்ஜுனும் ப்ரியாவும் அந்த அரண்மனையை ராத்திரி வேளை அடைந்தனர் .அவர்கள் உள்ளே செல்ல பார்க்கவோ அவர்களது காலடியில் ஒரு அம்பு குத்திட்டு நின்றது .அதில் ஓர் செய்தி துருப்பு இருந்தது .அது என்னவென்று கீழே குனிந்து எடுத்த ப்ரியாவோ அதில் இருந்த செய்தியை பார்த்து அதிர்ந்து நின்றாள்.அவள் கையிலிருந்து அதை வாங்கி பார்த்த அர்ஜுனும் அதே நிலைக்குள்ளாயினான்

"என் அருமை தோழி ருத்ராவிற்கு சம்யுக்தா எழுதி கொள்வது

மிகவும் அருமையாக திட்டம் தீட்டி இருக்கிறாய் ஆனால் என்ன செய்வது உன் விதி இன்றும் மாறாமல் உன்னை மீண்டும் என்னிடம் தோற்க வைக்க உள்ளதே.உன் அருமை தோழியும் தோழனும் என் கட்டு பாட்டில் தான் உள்ளனர் .அவர்களை காப்பாற்ற நினைத்தால் இப்பொழுதே நீ உன் எதிரில் இருக்கும் மலை முகத்திற்கு வா.இல்லையேல் என்ன நடவும் என்பதை நீயே அறிவாய் அல்லவா"என்று இருந்தது.

அதை பார்த்த ப்ரியாவும் அர்ஜுனும் ஏதும் யோசிக்காது அந்த மலையின் முகட்டை நோக்கி நடந்தனர்.அங்கே அதே காளி சிலை முன் அமர்ந்திருந்தாள் சம்யுக்தா .பிரியா மற்றும் அர்ஜுனின் வரவை கண்டவள் அவர்களை நோக்கி வந்தால் பின் சிரித்தவள் "என்ன கூறினாய் என்ன கூறினாய் எதனை ஜென்மம் எடுத்தாலும் உன்னை எமது குலா பொக்கிஷத்தை அடைய விட மாட்டேன் என்றல்லவா கூறினாய் இதோ பார் என்னிடம் ஒரு பாதி உள்ளது .இன்று உன்னை பலியிட்டு அந்த இன்னொரு பாதியை அடைவேன் ."

என்க ப்ரியாவோ உணர்ச்சி துடைத்த முகத்துடன் "மித்ராவும் கார்திக்க்கும் எங்கே "என்க 

சம்யுக்தாவோ "ஓஹ் நட்பு பாசமோ .இதோ அங்கே தான் உள்ளார்கள் என்று ஒரு திசையை காட்டவோ அங்கே மித்ராவும் கார்திக்க்கும் இரு மரங்களில் கட்ட பட்டு மயக்க நிலையில் இருந்தனர்.

அவர்களின் நிலையை கண்டு கொதித்த அர்ஜுன் சம்யுக்தாவை நோக்கி "ஹே பொண்ணா டி நீ பொண்ணா நீ இப்டி மிருகத்தை விட மோசமா நடந்துக்குற "என்க 

அவளோ "நான் பெண்ணென்று கூறியவர் யார் உருவில் பெண் நான் நிஜத்தில் ராட்சசி நான் .என்னிடம் ஈவும் இல்லை இரக்கமும் இல்லை "என்க அர்ஜுன் "அதான் தெரியுமே என்ன ஆனாலும் சேரி ப்ரியா மேல கை வைக்க நா விட மாட்டேன் "என்க அதற்குள் 

பிரியா எழுந்து "எங்கே அமர வேண்டும் ?"என்று வினவ 

சம்யுக்தாவும் "ஆஹா அருமை ப்ரியா இதோ இந்த புடவையை மாற்றி விட்டு அந்த யாகத்தில் வந்து அமர் "என்க 

அர்ஜுனோ "ப்ரியா பைத்தியமா உனக்கு "என்க அவளோ "நா என் friendskaaga என்ன வேணா செய்வேன் அர்ஜுன் "என்றவள் அந்த புடவையை மாற்றி விட்டு வந்து யாகத்தில் அமர்ந்தாள்.யாகம் சென்றுகொண்டே இருந்தது.அது முடிவு பெரும் வேளை சம்யுக்தா தன் கண்ணை திறக்கவோ அங்கே அந்த பாதி பதக்கம் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே இருந்தது.

அதை கண்டு திகைத்தவல்"இது எப்படி சத்தியம் இவளிடம் இருக்கும் பதக்கம் இந்த ஒரு பாதியோடு இணைந்திருக்க வேண்டுமே எங்கே அது"என்று ப்ரியாவை நோக்க ப்ரியாவோ அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள்.அதில் கோப முற்ற

சம்யுக்தா "என்ன சிரிக்கிறாய் "என்று வினவ

ப்ரியாவோ "நீ முட்டாள் என்றறிவேன் ஆனால் இவ்வளவு முட்டாள் என்றறியேன் என்றவள் தனது புடவை முந்தானையில் இருந்து அந்த பதக்கத்தின் இரு பாகங்களையும் எடுத்தவள் அதை இணைத்தால்.அதில் பௌர்ணமி நிலவின் ஒளி பட

சம்யுக்தா "இல்லை " என்று கத்த அதற்குள் அந்த padhakathin ஒளியை சம்யுக்தா இருக்கும் திசையில் காட்டினாள் பிரியா அந்த ஒளி அவள் மேல் பட சம்யுக்தாவின் இளமையான தோற்றம் மாரி அவள் மிகவும் கூனி குறுகிய ஓர் கிழவியானால்.அவள் தோற்றம் மிகவும் கோரமானதாய் மாறியது .

அவளிடம் சென்ற அர்ஜுன் "என்ன என்ன நடக்கின்றதென்பதை உணர இயல வில்லையோ .சொல்கிறேன் கேள் "என்று கூற துவங்கினான் .

ப்ரியாவும் அர்ஜுனும் அந்த இடத்தை விட்டு வெளியேறி நடந்து வர ஒரு இடத்தில பிரியா கால் தடுமாறி அவளது பையிலிருந்து அனைத்தும் கீழே விழுந்தது அவர்கள் அதை அனைத்தையும் உள்ளே எடுத்து வைக்கவோ அதில் அந்த பதக்கத்தை 2 பாகங்களும் இருந்தது ."

 மித்ராவோ அது எப்படி "வந்ததென்று நான் கூறுகின்றேன் ."என்று கூறினால் அன்று பூஜை முடிந்ததும் கார்த்திக் மற்றும் அர்ஜுன் பிரியா மூவரும் பேசிக்கொண்டதை மித்ரா கேட்டால்.பின் சம்யுக்தவிடம் சென்றவள் அவளது கட்டுக்குள் இருப்பதை போலவே நடித்து அவள் அப்பதக்கத்தை பதுக்கி வைத்திருக்கும் இடத்தை அறிந்து கொண்டால்.பின் அப்பதக்கத்தை எடுத்தவள் போலிபதக்கத்தை மாற்றினாள். பிரியா அவளது பையை மர பொந்தில் போட்டு சென்ற பின் அதை எடுத்து அதில் போட்டால்.

பின் கார்த்திக் "என்னமா ஆட்டம் போட்ட உன் ஆட்டம் இன்னையோட முடிஞ்சுச்சு டி"என்று கோரி விட்டு நகைக்க அது பொறுக்காத சம்யுக்தா அர்ஜுனை நோக்கி கத்தியை வீசினால் அதை கண்டா ப்ரியா "அர்ஜுன் "என்று கத்த அர்ஜுனோ அதிலிருந்து லாவகமாக தப்பித்தவன் அந்த கத்தியை அவளை நோக்கி திருப்பி வீசினான் .அந்த கத்தி சம்யுக்தாவின் மார்பில் பாய்ந்தது.அவள் அங்கேயே மடிந்து சரிந்தாள். 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top