paguthi 26

அவளை பின்தொடர்ந்த ருத்திரா ஒரு மலை முகடின் உச்சிக்கு கொண்டு வர பட்டால்.அந்த ராத்திரி வேளையில் ஆந்தைகளின் அகவலும்,ஓணான்களின் ஊளையும் அந்த சூழலை அச்சுறுத்துவதாக மாற்றியது மேலும் அங்கே மண்டை ஓடுகள்,குங்குமம் ,மஞ்சள்,இருந்தது யாகம் வளர்ப்பதற்காக வைக்க பட்டிருந்த ஹோம குண்டத்தில் விறகுகள் அடுக்க பட்டு தயார் நிலையில் இருந்தது.அதன் முன்னேமிகவும் கோரமான தோற்றத்தை உடைய ஓர் காளி சிலை இருந்தது.அந்த காளி சிலை சுமார் 20 அடி இருக்கும்.அது ஒரு காலை தூக்கி கொண்டு கழுத்தில் மண்டை ஓடுகளை மாலையாக மாட்டிக் கொண்டு சிவந்த கண்களுடன் மிகவும் உக்கிரமான தோற்றத்தை பெற்றிருந்தது .

அந்த இடத்தின் தோற்றமே அச்சத்தை மூட்டுவதாய் இருந்தது ஆனால் இது எதையும் கண்டு எந்த ஒரு சலனமும் ருத்திராவின் முகத்தில் தெரியவில்லை .ஏதோ ஜடம் போல் அவள் கூறுவதை எல்லாம் கேட்டு கொண்டிருந்தாள் அவள் . சம்யுக்தா "ருத்திரா அதோ அங்கே போடப் பட்டிருக்கும் யாக குண்டத்தின் முன் சென்று அமர்வாயாக என்க ருத்திராவோ சம்யுக்தாவை பார்த்து ஓர் ஏளன சிரிப்பை சிந்தினால் .அவளது சிரிப்பிற்கு அர்த்தம் புரியாத சம்யுக்தாவோ "என்ன சிரிப்பு ?"என்று வினவ ருத்திராவோ "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் எனில் தர்மமே என்றும் வெல்லும் நீ எத்தனை முயற்சி எடுப்பினும் உன் எண்ணம் ஈடேறப் போவதில்லை சம்யுக்தா"என்று கூற அவள் கூற்றை கேட்ட சம்யுக்தாவோ அந்த இடமே அதிரும்படி சிரித்தாள் பின் "பைத்தியமே தான் நினைத்ததை அடைவதே தர்மமாகும் .யான் நினைத்ததை நிறைவேற்ற நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் "என்று கூறினால் பின் "சென்று அமர் "என்று கூற ருத்ரா அவளை நீ என்றும் வெற்றி பெற மாட்டாயடி என்பது போல் பார்த்து விட்டு சென்றால் .அங்கே அவள் கூறிய இடத்தில அமர்ந்து அவள் கூறுவதை போல் செய்து கொண்டிருந்தாள் .

இங்கே அரண்மனையில் இந்திரஜித் நாளை தனது திருமணம் குறித்த கனவுகளோடு துயில் கொண்டிருக்க அப்பொழுது யாரோ அவன் அறைக்கதவை மிகவும் பலமாக தட்டினர்.

அந்த சத்தத்தில் தன் துயில் கலைந்தவன் கதவை திறக்கவோ அங்கே அவனது ஒற்றர் படை தலைவனும் அவனது உயிர் தோழனும் ஆனா மகேந்திர வர்மன் மூச்சிரைக்க முகத்தில் கலவரத்துடன் நின்று கொண்டிருந்தான் .அவனது விதானத்தில் தெரிந்த கலவரத்தை கண்ட இந்திரஜித் "என்ன மகேந்திரா ஏன் இவ்வளவு பரபரப்புடன் காணப் படுகிறாய் ஏதேனும் முக்கியமான விஷயமா ?எதுவாய் இருந்தாலும் உள்ளே வா அமர்ந்து பேசலாம் "என்று கூற மஹேந்திரனோ "இந்திரா இப்பொழுது அளவளாவ நமக்கு அவகாசம் இல்லை .உன் வருங்கால மனைவி ருத்திரா மிக பெரிய ஆபத்தில் மாட்டி கொண்டுள்ளாள் ."என்று அங்கு குகையில் அவன் கேட்டதையும் இப்பொழுது அவள் மலை உச்சிக்கு அழைத்து செல்ல பட்டதையும் கூற இந்த்ரஜித்தோ மேலும் கலவரமடைந்தான் .அந்த நிமிடமே தன் உடை வாளை எடுத்தவன் அசுர வேகத்தில் தன் வெண்ணிற புரவியில் அந்த மலை தொடரை நோக்கி மின்னலென பறந்தான் .அப்பொழுது அவனது சிந்தையில் இருந்தது ருத்ரா மட்டுமே .

இங்கே சம்யுக்தாவோ யாகத்தை வளர்த்து அதில் மந்திரங்களை உச்சரித்து கொண்டிருந்தாள் பின் ருத்திராவிடம் திரும்பியவள் அவளிடம் "உன் ஆடைகளை களைந்துவிட்டு இதோ இந்த சிகப்பு நிற புடவையை அணிந்து வா என்றால் " அவளிடம் இருந்து அந்த புடவையை வாங்கிய ருத்திராவோ அதன் சிகப்பு நிறத்தை பார்த்து அதை வருடி கொடுத்தால்.

அன்று ருத்திராவின் திருமணத்திற்கான பட்டுகள் எடுப்பதற்காக அனைவரும் குழுமி இருந்தனர் அப்பொழுது சித்தாரா தேவியார் ருத்திராவிடம்"ருத்திரா இந்த மஞ்சள் நிறத்தை பார் இது மிகவும் அழகாக உள்ளதல்லவா "என்று நீட்ட அவளோ இந்திரஜித்தின் முகத்தை பார்த்தால் சம்மதத்திற்காக ஆனால் அவனோ முகத்தில் எந்த ஒரு பிரகாசமும் காட்டாமல் இருந்தான் .இவ்வாறே பல சேலைகளையும் அவன் தட்டி கழிக்க ருத்திராவோ எழுந்து "தாயே நான் சற்று நேரம் வெளியே சென்று வருகிறேன் "என்று கூறி இந்திரஜித்தை ஒர பார்வை பார்த்து செல்ல அவனும் அதை புரிந்து கொண்டு அவள் பின்னோடே சென்றான்.

 பின் ஒரு தூணின் மறைவுக்கு சென்றவள் அவனிடம் திரும்பி "ஏன் தாங்கள் எந்த புடவை காட்டினாலும் பிடிக்கவில்லை என்கிறீர்கள் ?"என்று வினவ 

அவனோ "புடவையை உடுத்தவிருப்பது நீயா நானா என்னிடம் ஏன் வினவுகிறாய் ?"என்று சற்றே குறும்புடன் அவளிடம் வினவ 

அவளோ "உடுத்துவதே தாங்கள் ரசிக்க தானே" என்று முணுமுணுக்க அவனோ அவளுக்கு மிக அருகாமையில் சென்று" என்ன கூறினாய் மதி சற்று உரக்க கூறு "என்று தாழ்ந்த குரலில் கேட்க 

அவளோ பேச்சற்று இருந்தால் பின் அவன் மேலும் அவளை நெருங்கி அவளது கன்னத்தை வருட அவளோ தன் கண்களை மூடினாள் பின் அவள் கைகளில் எதையோ வைப்பதை போல் இருக்க அவள் கண் திறந்து பார்க்கவோ அதில் சிகப்பு நிறத்தில் மிகவும் அழகான வேலைப்பாடுகளை உடைய பட்டு புடவை இருந்தது .

அதை பார்த்து தன் கண்களை அகல விரித்தவள் அவனை ஆச்சர்யத்துடன் நோக்க அவனோ அவளை நோக்கி முறுவலித்து விட்டு "உன்னை முதல் முதல் பார்த்த போது நீ சிகப்பு தாவணி உடுத்தியிருந்தாய்.அப்படியே வானில் இருந்து இறங்கி வந்த தேவதை போல் இருந்தாய் .எனவே நீ என் மனைவி ஆகும் தருணத்திலும் அதே போல் இருக்கவேண்டுமென இந்த புடவையை வாங்கி வந்தேன் "என்று கூற 

அவளோ "மிகவும் அழகாக உள்ளது ."என்று கூறி செல்ல போக அவனோ கை வைத்து வழி மறித்தான் அவனது செய்கையை பார்த்தவள் என்ன என்பது போல் நோக்க .

அவனோ " இந்த பரிசுக்கு வெகுமதி இல்லையா ?"என்று வினவ 

அவளோ "அழகாக உள்ளது என்று கூறினேனே "என்று கேட்க 

அவனோ "நான் அதை கேட்கவில்லையே "என்க அவளோ அவனை தள்ளி விட்டு விட்டு ஓடி விட்டால் .

இவ்வாறு தான் இந்திரஜித்துடன் இருந்த நினைவுகளை புரட்டியவள் கண்களில் கண்ணீர் அருவி போல் சுரந்தது எனினும் தனது மக்களுக்காக அவள் மீண்டும் தன் மனதை கல்லாகி கொண்டு அந்த புடவையை உடுத்தி விட்டு யாகத்தில் வந்து அமர்ந்தாள் .

அப்பொழுது நடு ஜாமம் ஆகி இருக்க யாக குண்டத்திற்கு அருகில் வைக்க பட்டிருந்த ஒரு கல்லின் மேல் அந்த பதக்கம் தோண்ற அதை கண்ட சம்யுக்தா விஷமமாக சிரித்து விட்டு அதை தன் கைகளில் ஏந்தியவள் அதை தன் கண்களில் ஒத்தி கொண்டு மீண்டும் அந்த கல்லில் வைத்தால் பின் ருத்திராவை எழுப்பியவள் அங்கே ஒரு இடத்தில் படுக்க வைத்தால்.பின் அவள் சக்தி பூஜையை துவங்கினால் .

இங்கே தன் புரவியில் அந்த மலையின் உச்சிக்கு வந்த இந்திரஜித் அங்கே தூரத்தில் ஏதோ வெளிச்சம் தெரிய அங்கே சென்றவன் அங்கு உள்ள கொடிகளை விளக்கி கொண்டு பார்க்க அங்கோ ருத்திரா தரையில் படுத்து கொண்டு இருக்க சம்யுக்தாவோ கண்களை மூடி ஷக்தி பூஜை செய்துகொண்டிருந்தாள் .

பின் அந்த பதக்கத்தை பார்த்தவன் அதில் இருந்து ஷக்தி வெளியே வருவதை உணர்த்துவதை போல் அந்த பதக்கத்திலிருந்து மஞ்சள் நிற ஒளி பரவ அதற்கு மேலும் காலத்தை தாமதம் செய்தால் அது இந்த உலகத்தையே சம்யுக்தாவின் ஆட்சிக்குள் கொண்டு வந்து விடும் என்று உணர்ந்தவன் சிந்தைக்குள் மகேந்திரன் கூறிய வார்த்தைகள் ரீங்காரமிட்டது "ருத்திராவிற்கு அந்த சக்திகளை பெரும் முன் திருமணம் ஆனால் அந்த பதக்கம் உடைந்து இரு பாகங்களாக போய் விடும் .அதை வைத்து ஏதும் செய்ய இயலாது "என்று கூறியது நினைவு வர பூனை நடை இட்டவன் ஏதும் யோசிக்காது ருத்திராவின் அருகில் சென்றான் .

பின் அவளது தலையை வருடியவன் அருகில் இருந்த குங்குமத்தை எடுத்து அவளது வகிட்டில் இட்டு அவளை தன் சரி பாதி ஆக்கினான்.அவனது ஸ்பரிசத்தில் கண் விழித்த ருத்திரா அவனை தனக்கு அருகாமையில் நோக்க தாயை கண்ட சேய் போல் அவனை கழுத்தோடு சேர்த்து அணைத்து கொண்டால் .பின் திரும்பவோ அந்த பதக்கம் தடால் என்ற சத்தத்துடன் இரு பாகங்களாக உடைந்தது அந்த சத்தத்தில் தன் பூஜையில் இருந்து கண் விழித்த சம்யுக்தா இரு பாகங்களாக உடைந்திருந்த பதக்கத்தை கண்டு அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றால் பின் அந்த பதக்கத்தின் ஒரு பாதி அவள் கண் முன்னே மறைந்தது இதை கண்டவள் தன் கனவு சுக்குநூறாக உடைந்த ஆற்றாமையில் பெரும் குரலில் கத்தினாள் .

பின் அவள் தன் பார்வையை சுழல விட அங்கோ இந்திரஜித் ருத்திராவை எழுப்பி கொண்டிருந்தான் .தரையில் இருந்து எழுந்த 

ருத்திரா சம்யுக்தாவை நோக்கி ஒரு ஏளனச் சிரிப்பை சிந்தியவள் "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் நீ நினைத்தது ஈடேறாது என்று கூறினேனல்லவா சம்யுக்தா இன்று வென்றது தர்மமே ."என்று கூற அவள் கூற்றில் மேலும் ஆத்திரமடைந்தவள் ருத்திராவை நோக்கி காளியின் கையில் இருந்த சூலத்தை வீசினால் .அது சரியாக ருத்திராவின் வயிற்றில் பதிந்தது .

அவள் ஆஆ என்ற அலறலுடன் சரிய இந்த்ரஜித்தோ "மதி என்ற கூவலுடன் அவளை தன் மடியில் சாய்த்தவன் "மதி மதி என்னை பார் "என்று பதற அவனை நோக்கி புன்னகைத்தவள்

 "என் கடமை முடிந்தது இந்தர் .என்றவள் தன் வகிட்டை தொட்டு அதில் உள்ள குங்குமத்தை பார்த்து சிரித்தவள் இந்த ஜென்மத்திற்கும் இது போதும் இந்தர் என்றவள் அவனது நெற்றியில் தன் முத்தத்தை பதித்தாள் பின் சம்யுக்தாவிடம் திரும்பியவள் "இந்த ஜென்மம் அல்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன்னிடம் அந்த பதக்கத்தை சேர விட மாட்டேன்" என்றவள் உயிர் அக்கணமே இப்புவியை விட்டு பிரிந்தது .அவளது உயிரற்ற சடலத்தை கண்ட

 சம்யுக்தா "அதையும் பார்ப்போமடி என்று விட்டு அவ்விடத்தை விட்டு சென்றால் .அவள் சென்ற பின் ருத்திராவின் கன்னத்தை தட்டிய இந்திரஜித் "மதி மதி" என்று அழைக்க அவளிடம் எந்த பதிலும் இல்லாமல் போனது அவள் உயிர் பிரிந்ததை ஏற்க முடியாதவன் "மதிஇஇஇ "என்று கத்தினான் பின் அவளது நெற்றியில் முத்தமிட்டவன்

 "நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேன் மதி "என்றவன் தன் உடை வாளால் தன் கழுத்தில் அறுத்து அங்கேயே சரிந்தான்.

"கனவில் தோன்றிய காதலியே

என் கரமதை பிடித்த துணைவியே

உன் கண்ணில் கண்ணீரை தாங்காத என் நெஞ்சம்

இன்று உன் குருதியால் நனைந்ததும் ஏன்

சேரட்டும் நம் காதல்

நம் குருதியோடு இந்த நொடியில்

விடியும் மறு பிறவி எழுவேன் மீண்டும்

உன் காதலனாய் சத்தியம் செய்தேன் நிச்சயம் செய்வேன்

நமது இந்த காதல் யாத்திரை முடிய

நீ எந்தன் மடியில் மடிய

உன்னோடு நானும் வின் உலகம் செல்ல

மீண்டும் பிறப்போம் காதலராய்

பகையதை வெல்ல "

(இதை எழுதினது என் friend ஸ்ரீநிதி thanksdi செல்லக்குட்டி)

இவர்கள் கதை இங்கு முடிய கண்களில் கண்ணீர் திரை இட இதை கேட்டு கொண்டிருந்தனர் அர்ஜுனும் ப்ரியாவும் பின் அர்ஜுன் " அதன் பிறகு என்ன நேர்ந்தது? "என்று வினவ அவரோ 

அதன் பின் அரண்மனை வந்த சம்யுக்தா அரச குடும்பத்தினர் அனைவரையும் அந்த இடத்தை கூறுமாறு சித்ரவதை செய்தால் எனினும் யாரும் வாயை திறக்காத காரணத்தால் அவர்கள் அனைவரையும் சிலையாக மாற்றியவள் அரண்மனையில் இருக்கும் சிவன் கோவிலை ஒட்டி உள்ள அறையில் பூட்டி வைத்தால் .பின் சிம்ம குளத்தின் குருதேவரான என்னை 108 வருடங்களாக இங்கே அடைத்து வைத்து அந்த இடத்தை பற்றி கேட்டு சித்ரவதை செய்து கொண்டிருக்கிறாள்.எனக்கு ஆணித்தரமான நம்பிக்கை இருந்தது சிவன் அம்சத்தில் ஜனித்த எங்கள் இளவரசி மீண்டு வருவாள் அந்த வஞ்சகியின் முடிவு அவள் கையில் நேரும் என்று .எனவே என் ஆயுளை இத்தனை வருடங்களாக கையில் பிடித்து வைத்திருந்தேன் .அவள் தன் இளமை போய் விட கூடாது என்பதற்காக ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு யுவதியை பலியிட்டு மகா யாகம் செய்வாள்,பின் அவள் இந்த ராஜ்ஜியம் யார் கண்ணிற்கும் புலப்படாதவாறு இருக்க  தடுப்பு சுவர் ஒன்றை எழுப்பினால் ,மக்களை மிகவும் துன்புறுத்தினால் .உனது பிறந்த நாளும் நட்சத்திரமும் உன் உருவமும் எங்கள் இளவரசியின் நகலாகவே உள்ளது எங்கள் இளவரசி ஜனித்த அதே லக்கினத்தில் அதே உருவத்தில் ஜனித்த எங்கள் இளவரசியின் மறு ஜென்மமம்மா நீ இந்த ராஜ்யத்தை காப்பது உன் கையில் தான் உள்ளது " என்று கூறியவர் 

இடை விடாது இரும அவர் அருகில் சென்ற பிரியா"குருவே என்ன ஆயிற்று தங்களுக்கு ?"என்று பதற்றத்துடன் வினவ 

அவரோ "என் முடிவு நெருங்கிவிட்டது இளவரசியாரே என் கடமை முடிந்தது சிம்ம வம்சத்திற்கு அறிந்த அந்த ரகசியத்தை இதோ இந்த ஓலையில் எழுதியுள்ளேன் .அங்கே சென்று நமது குளத்தின் பொக்கிஷத்தை கண்டறிந்து அந்த வஞ்சகியிடம் இருக்கும் இன்னொரு பாகத்தையும் இணைத்தீர்களாயின் அவளை அழிப்பது சுலபம் .வெற்றி உண்டாகட்டும் "என்று அர்ஜுன் மற்றும் ப்ரியாவின் கையை பற்றி கூறியவர் மூச்சு அங்கேயே நின்றது .பிரியா அங்கேயே உறைந்து போய் இருக்க அர்ஜுன் அவளை தோள் தொட்டு திருப்பி அவளோடு அந்த அறையை விட்டு வெளியேறினான் .

அந்த ஓலையில் இருப்பது என்ன??

ருத்திரா மற்றும் இந்திரஜித்தின் காதல் இந்த ஜென்மத்திலாவது ஈடேறுமா??

சம்யுக்தா வீழ்த்தப்படுவாளா??

மித்ராவின் இந்த செயல்களுக்கு காரணம் தான் என்ன??

stay tuned to know

hi freinds flash back epdi irundhuchu??ennala mudinja alavukku emotionalaah ezhudha try pannirukken ini arjun priya aprom karthick mithraava suthi dhaan indha story travel aagum 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top