paguthi 25
அழகான மலை பிரதேசம் அங்கே கதிரவனின் கதிர்களால் கண்ணாடியாய் ஒளிர்ந்த பனிகளின் குளுமையிலும் ஆங்காங்கே தெரியும் பனி மான்களின் அழகிலும் தன்னை தொலைத்திருந்த ருத்ரமதி தன் இடையில் ஏதோ படுருவதை உணர்ந்தவள் திரும்ப அங்கோ அவன் நின்றிருந்தான் .அதே தேஜஸுடன் ஒளிர்ந்த முகத்துடன் அவளுக்கு மிக அருகாமையில் அவள் இடையோடு சேர்த்தணைத்து நின்றிருந்தான் .பின் அவள் முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கி விட்டு அவளுக்கு மிக அருகாமையில் செல்ல அங்கே மழை பெய்தது ருத்திராவின் முகத்தில் மட்டும் .அதில் பதறிய ருத்திரா பதறி எழ ஊர்வசியோ கையில் தண்ணீர் குவலையுடன் நின்று கொண்டிருந்தாள் .
அவளை கண்ட ருத்ரா "ஊர்வசி உன்னை "என்று கத்திக்கொண்டே அவளை துரத்த அவளோ அவளுக்கு பழிப்பு காட்டிவிட்டு ஓடினாள் .அவளை துரத்தி கொண்டே வந்த ருத்ரா தரையில் இருந்த எண்ணையை கவனிக்க தவற அவளது காலோ அதில் வழுக்கியது .அவள் ஆஹ் என்று விழ போக அவளை இரு கைகள் தாங்கி பிடித்தது .அவள் கண்ணை திறக்க அவள் கண் முன் அவனது முகம் இருந்தது .ஒரே நாளில் அவள் உயிர் மூச்சாகிப் போனவரின் முகம்.அதை நம்ப முடியாதவள் தன் கண்ணை கசக்கி கொண்டு மீண்டும் பார்க்க அவனோ அவளை சற்று தள்ளி நிறுத்தினான் .அவள் தன் அகன்ற விழி கொண்டு அவனை பார்த்து "தா தாம் எவ்வாறு இங்கே ?"என்று வினவ அங்கே ஷிவதேவ் வர்மர் வந்தார் தன் அருமை தங்கை மணிமேகலையுடன்
ஷிவதேவ் வர்மர் "என்ன ருத்ரா ஏன் இவ்வளவு அதிர்ச்சியாக பார்க்கிறாய் இது யார் என்று உனக்கு நினைவில்லயா?"
மணிமேகலை "எவ்வாறு இருக்கும் தமயனாரே இவளை 15 வருடங்களுக்கு முன் பார்த்தது .
திருவிழாவில் .அன்று மிகவும் அழகாக பாவாடை சட்டை போட்டுகொண்டு அங்கும் இங்கும் சுற்றி கொண்டிருந்தாய் பின் அப்போது நீயும் இந்திரஜித்தும் மிகவும் நெருங்கி பழகுவீர்கள் "என்று அவர் கூறி கொண்டே செல்ல
இந்திரஜித் அவரிடம்"தாயே தாங்கள் பயணக் களைப்பில் இருப்பீர்கள் தாங்கள் சென்று ஓய்வெடுத்து கொள்ளுங்கள் ."என்று கூறி அவளை ஓர் ஓரப்பார்வை பார்த்து சென்றான் அவளுக்கு அந்த ஒரே பார்வையே முகத்தில் ஓராயிரம் நிலவை குடிகொள்ள செய்தது போன்ற பிரகாசத்தை தந்தது .
பின் அவள் அறைக்கு சென்றவள் அவளது தோற்றத்தை கண்ணாடியில் பார்த்தாள் .அவள் முன்பு போல் அதிகமான அலங்காரம் செய்து கொள்ள வில்லை,எளிமையான ஆடை அணிந்திருந்தாள் ,அவன் கூறிய வார்த்தைக்காக .பின் அவள் ஒவ்வொரு நாளும் அவனது அருகாமைக்காக ஏங்கினாள் அவன் ஒரு முறை தன்னை பார்க்க மாட்டானா என்று எண்ணினால் பின் ஒரு நாள் மாலை வேளை முன் பனி காலமாதலால் மறைந்தும் மறையாமல் இருந்த சூரிய ஒளியின் மங்கிய வெளிச்சத்தில் அவன் அந்த அரண்மனையின் களரி பயிற்சி கூடத்தில் வாள் பயிச்சி செய்து கொண்டிருப்பதை ருத்ர அங்கிருந்த ஒரு மரத்தின் மறைவிலிருந்து பார்க்க
அவனோ சற்று நேரத்தில் 3 அடியில் அவள் இருக்கும் இடத்தை அடைந்தவன் அவள் கழுத்தில் வாளை வைத்து மிகவும் அருகாமையில் நின்றான் .அவனை அத்தனை அருகாமையில் பார்த்தவளுக்கு வேர்க்க அவனோ அதை சற்று ரசித்தவாறு"இளவரசி களரி கூடத்திற்கு வந்த காரணம் தான் என்னவோ?"என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்க அவளோ "அது அது நான் தங்களிடம் பயிற்சி எடுப்பதற்காக வந்தேன் "என்று திணறி தடுமாறி கூற அவளது தடுமாற்றத்தை கண்டவனின் இதழில் குறுநகை ஒன்று குடி கொண்டது அவனது சிரிப்பை ரசித்தவள் அவனிடம் "பயிற்சி அளிப்பீர்களா?" என்று வினவ அவன் அவளை விட்டு விலகி அவள் கையில் வாளை கொடுத்து அவளுக்கு பயிற்சி கொடுக்க ஆரம்பித்தான் .
பயிற்சி என்ற பேரில் இருவரும் மாலை பொழுதில் காதல் கவிதை தீட்டினர் .இவர்களது நெருக்கத்தை கண்ட ஷிவதேவ் வர்மர் இருவருக்கும் திருமணதிற்கு ஏற்பாடுகள் செய்தார் ..இவ்வாறே இருவருக்கும் நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாய் சென்றது
அங்கே ஒரு இருள் குகையில் ஒரு உருவம் பூஜை செய்து கொண்டிருந்தது .அன்றும் அதே போல் விளக்கின் ஒளி தெரிந்தது சம்யுக்தா என்ற அதே கோரக் குரல் ஆம் சம்யுக்தா தான் அவள் அந்த ஒளியை பார்த்து பணிகிறேன் ஞான குருவே என்கிறாள் பின் "எம் வம்சத்தின் பல நாள் தேடலின் வேட்டை முடிவுற்றது யான் அந்த செல்வதை பெற என்ன செய்தல் வேண்டும் என்று கூறுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்" அதற்கு
அந்த ஒளி
"ஆதியும் அந்தமும் ஆனவன் அம்சத்தில் ஜனித்த பாவையை நீ 108 வருடங்களுக்கு ஒரு முறை வரவிருக்கும் இந்த மகா சிவராத்திரி அன்று பலி இட்டால் அந்த பதக்கத்தில் இருக்கும் அனைத்து சக்தியும் நீ பெறப் பெறுவாய் ".என்றது .
இதை கேட்ட சம்யுக்தா "நன்றி குருவே அனால் அத்தகைய அம்சத்தில் பிறந்த பெண்ணை நான் எவ்வாறு கண்டு கொள்வது "என்று வினவ
அந்த ஒளி "இதோ அவளது பிம்பத்தை எமது ஞான திருஷ்டியில் காண்" என்றது அதில் தெரிந்ததோ ருத்ரமதியின் பிம்பம் .
அதை கண்ட சம்யுக்தா விஷமமாக சிரித்தாள்
"அலுவல் சுலபமானது யான் இருக்கும் இடத்திலேயே இரை இருக்கும் போது எவ்வாறு தவற விடுவேன்.ருத்ரா உன் முடிவு நெருங்கி விட்டது "என்று கூற
அந்த ஒளியோ "சம்யுக்தா கவனம் அவள் கன்னியாய் இருக்க வேண்டும் அவளுக்கு திருமணம் ஆனால் அந்த பதக்கம் உன்னை சேரும் முன் பாதியாய் உடைந்து ஒரு பாதி சிம்ம வம்சத்தை சேர்ந்தவர்களை தவிர்த்து யாரும் அறியாத ஓர் இடத்திற்கு சென்றுவிடும் என்று கூறி மறைந்தது ."அங்கு நடந்த அனைத்தையும் இரு ஜோடி கண்கள் பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தது .
இது எதுவும் அறியாத ருத்திராவோ மகிழ்ச்சியாக தனது திருமணத்தின் முதல் நாள் சடங்குகளுக்காக தயாராகிக் கொண்டிருந்தாள் .தேன் மொழி "ஏன் மாலதி 1 மாதத்திற்கு முன் திருமணமா நானா என்று யாரோ ஒருத்தி கங்கணம் கட்டி கொண்டு தெரிந்தாலே அவளைக் கண்டாயா நீ??"என்று வினவ
மாலதியோ "ஆம் தேன் மொழி அவள் எங்கே?"என்று கூற ருத்திராவிற்கோ முகம் செம்மை வண்ணத்தை பூசிக் கொண்டது பின் அவள் மாலதியிடம்"மாலதி ஊர்வசி எங்கே அவளை நான் காண வில்லையே" என்று வினவ
மாலதியோ "அவள் கோவிலுக்கு சென்று வருவதாக கூறி சென்றால் .நாளை அவள் அருமை தோழியின் திருமணம் அல்லவா"என்று கூறினால் .
பின் அங்கே "தனிமை கிடைக்குமா" என்று கணீர் குரல் கேட்க அங்கு திரும்பவோ இந்திரஜித் மிகுந்த கம்பீரத்தோடு நின்றுகொண்டிருந்தான் .அதை கண்ட ருத்ரா மேலும் வெக்கம் கொள்ள அவளையும் இந்த்ரஜித்தையும் ஓர் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்த தேன் மொழியும் மாலதியும் வெளியே சென்றனர் .
அவர்கள் சென்றதும் அவள் அருகில் வந்த இந்திரஜித் அவளது இடையை வளைத்து தன்னோடு சேர்த்து நிற்க வைத்தான் .பின்" மதி இன்று அந்த வான்மதியும் தோற்கும் அளவிற்கு இத்தனை அழகாக உள்ளாயே.ஏன் இப்படி என்னை வதைக்கிறாய் "என்று அவள் கண் பார்த்து கேட்க
அவளோ"நானா வதைத்தேன்.எந்த ஆடவனையும் நேராய் பார்க்காத எம்மை பார்த்த முதல் நாளே முழுவதுமாய் ஆட்சி புரிய துவங்கியவர் தாமல்லவா.என்னை பாரா முகமாய் இருந்ததும் தாமல்லவா"என்று குற்றம் சாட்டுவதை போல் கூற அவனோ அவளது குழந்தை தனத்தில் வாய் விட்டு சிரித்தவன் அவள் நெற்றியோடு நெற்றி முட்டியவன்
"உன்னை பாரா முகமாய் இருந்ததே நான் என்னை உன்னிடம் தொலைத்ததனால் தானடி என் அன்பே.முதல் பார்வையிலேயே என்னை ஆக்ரமித்து விட்டாய் நீ .நாளை என் காதலி என் மனைவி ஆக போகிறாள்.வானில் மிதப்பதை போல் உள்ளது "என்று கூறியவன் அவளை தூக்கி சுற்ற அதில் பயந்தவள்
"இந்தர் என்னை விடுங்கள் தலை சுற்றுகிறது "என்று கூற அவளை இறக்கிவிட்டவன்
"மதி இப்பொழுது என்னை எவ்வாறு அழைத்தாய் ?"என்று வினவ அவளோ ஒன்றும் கூறாது வேறு புறம் திரும்பினாள் பின் அவளை நெருங்கியவன் அவளை பின்னிருந்து அணைத்து "இன்று கூறுகிறேன் மதி என் வாழ்வாயினும் சாவாயினும் அது உன்னுடனே தான்.நீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேன் ."என்று உணர்ச்சி பூர்வமாய் கூற அவனது வார்த்தைகளில் உணர்ச்சி வசப்பட்டவள் முன் திரும்பி அவன் மார்பில் முகம் புதைத்தாள் .
பின் ருத்ரா "இன்றும் போலே என்றும் இருக்க ஆசையாக உள்ளது இந்தர் "என்று கூறினால் .
பின் அவளை விளங்கியவன் "நாளை உன்னை மணமேடையில் சந்திக்கிறேன்" என்று விட்டு கண் சிமிட்டியவன் அங்கிருந்து நகர்ந்தான் .
அவன் சென்ற பின்னும் அவனை பற்றியே நினைத்து கொண்டிருந்தவள் யாரோ கை தட்டும் ஓசை கேட்ட பின்பே திரும்பினாள்.அங்கே முகத்தை மூடி இருந்த ஓர் உருவம் இருந்தது அதை பார்த்த ருத்திரா"யாரது என் அறைக்குள் பிரவேசிக்க உனக்கு அனுமதி அளித்தது யார் ?"என்று வினவ
அந்த உருவமோ தன் முகத்தில் இருந்த துணியை விளக்கியது . அவளது வதனத்தை கண்டவள் "ஊர்வசி நீ தானா நான் யாரோ என்று நினைத்து பயந்துவிட்டேன் "என்று கூற
அவளோ "ஊர்வசி அல்லல் ருத்ரா சம்யுக்தா ,சிம்ம வம்சத்தின் பரம எதிரிகளான சாஹித்ய வம்சத்து தோன்றல் சம்யுக்தா" என்று கூற அதை நம்பமுடியாத
ருத்ராவோ "ஊர்வசி என்ன விளையாட்டு இது ஏன் பிதற்றுகிறாய் உன் விளையாட்டும் பரிகாசமும் போதும்"என்று கோபமாக கூற
சம்யுக்தவோ"உண்மைகள் கசப்பது தான் ருத்ரா.நான் உன் தோழி அல்லல் நான் இந்த அரண்மனைக்கு வந்ததே உன் குல பொக்கிஷமான அந்த உன்னத பதக்கத்தை எமதாக்குவதற்காக தான் .அதை எடுக்கவே இந்த அரண்மனைக்குள் நுழைந்தேன் உன் தோழியின் வடிவில்.12 வயதில் நீ மலையில் இருந்து விழுக சென்ற போது உன்னை காப்பாற்றியதால் அல்லவோ நீ என்னை உன் தோழியாக்கினாய்.கேள் உன்னை தள்ளி விட்டதும் நான் தான் உன்னை காப்பாற்றியதாய் நாடகமாடியதும் நான் தான்."என்க
இதில் உறைந்து போன ருத்ராவோ"அனைத்தும் பொய்யா ஏன் என்னை ஏமாற்றினாய் நீ ??வஞ்சகி கூடே இருந்து குழி பறித்து விட்டாயே .உயிரே போனாலும் எமது குல பொக்கிஷத்தை நீ அடைய நான் விட மாட்டேன் ."என்று கூற அவளோ பயங்கரமாக சிரித்தாள் .
சிரித்தவள் "உன் உயிர் போனால் தான் என்னால் அதை அடைய இயலும் பேதையே" என்று கூற
ருத்ராவோ "இதற்கு ஒரு காலும் நான் சம்மதிக்க மாட்டேன் என்று கூற சம்யுக்தாவோ "அப்படியா அப்பொழுது இங்கே பார் என்று கோரி தனது மந்திரத்தால் அங்கே மாந்த்ரீக காட்சி ஒன்றை காண்பித்தாள் அதில் அவளது ஊரில் உள்ள அனைவரும் சிவராத்திரியை முன்னிட்டு அங்கே இருந்த மலை கோவிலில் இருந்தனர் .அப்பொழுது சம்யுக்தா ஏதோ மந்திரம் உச்சரிக்க அங்கே மலையில் இருந்த ஒரு பெரிய பாறை அந்த கோவிலை நோக்கி உருண்டு வந்தது அது அக்கோவிலை எளிதில் தகர்த்து அங்குள்ள மக்களை கொன்றுவிடும்.இதை கண்டு பதறிய
ருத்ரா "என்ன செய்கிறாய் நீ அப்பாவி மக்களை ஏன் கொள்ள துடிக்கிறாய்?"என்று வினவ
அவளோ "அப்பாவியாய் இருந்தால் என்ன யாராய் இருந்தால் என்ன நீ எமது கட்டளைக்கு இணங்காவிடில் அங்கு இருக்கும் அத்தனை உயிரும் பலியாவது உறுதி.மக்கள் நலன் முக்கியமா பரம்பரை பொக்கிஷம் முக்கியமா முடிவு உன் கையில் என்று கூற ருத்ராவிற்கு அங்கே கூடி இருந்த ஆயிரக்கணக்கான மக்களின் நலனே பெரிதாய் பட்டது ஒரு முடிவு எடுத்தவள்
"நீ என்ன கூறினாலும் அதை செய்ய நான் தயார்.எனக்கு எனது மக்களின் நலனே பிரதானம் அதற்கு ஏன் உயிர் பிரிந்தாலும் நான் கவலை கொள்ளேன்."என்று கூறினால் அதை கண்டு சிரித்த சம்யுக்தா அந்த பாறையை நிறுத்தினால்
பின்"அப்பொழுது என்னுடன் வா என்றால்"ருத்ராவும் உணர்ச்சி துடைத்த முகத்துடன் அவள் பின்னோடு சென்றால் மனதில்"என்னை மன்னித்து விடுங்கள் இந்தர்" என்று நினைத்துக்கொண்டே.
ருத்ராவிற்கு நிகழ இருப்பது என்ன??
சம்யுக்தா வெற்றி கொள்வாளா??
stay tuned to know
hi ellarukkum vanakkam ennada 12 naala update illa ipdi oru character uyiroda irukka illayaanu neraya peru kolambiruppeenga.yes naa uyiroda dhaan irukken.ini dhenam oru updateoda ungala torture panna readyaah vandhurukken.aduthu enna nadakkumnu yosichute irunga naalaiku badhil soliruren.aprom poradhuku munnadi vote buttona dokunu oru thattu thattitu enna thittanumna commentsla thittitu ponga.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top