paguthi 24
காலை கதிரவன் அழகாக விடிய அக்காலை வேளையின் அழகை பூஞ்சோலையில் கழித்துக் கொண்டிருந்தாள் ருத்ரமதி.அந்த காலை நேரத்தில் பனி எங்கும் சூழ்ந்திருக்க சில்லென்ற காற்றில் மரங்கள் சல சளவென்ற ஓசையுடன் அசைய மல்லிகை பூக்கள் சூழ்ந்திருக்கும் அந்த விசாலமான அரண்மனையில் அமைந்த சிறு குளத்தின் படியில் அமர்ந்திருந்த ருத்ரமதி எதிரில் தெரிந்த ஆஜானு பாகுவான மலையையும் அந்த ரம்மியமான சூழலை ரசித்துக் கொண்டிருந்தாள்.அன்று அவள் அணிந்திருந்த இளஞ்சிவப்பு நிற உடை சூரியனின் செங்கதிர்களால் பளபளத்து சிகப்பெரிய அவளது கன்னத்தை மேலும் சிகப்பாகியது ,யாரும் கண்டதும் மயங்கும் ரதியை போல் காட்சி அளித்தால் ருத்ரமதி .
அவள் அங்கே இயற்கையின் அழகில் சஞ்சரித்திருக்க அங்கே அவளை போலவே ஆடை அணிந்த ஒரு பெண் வந்து "ருத்திரா இங்கே என்ன செய்கிறாய் இன்று நாம் சுனை அருவிக்கு சென்று விளையாட திட்டமிட்டிருந்தோம் நினைவு இல்லையோ உனக்கு ?"என்று வினவ
அவளோ"இல்லை ஊர்வசி எனக்கு நினைவு உள்ளது இன்று ஏனோ மனது மிகவும் மகிழ்சியாக உள்ளது ஆதலால் இயற்கை தாயின் அழகில் என்னையே தொலைத்துவிட்டேன் ."என்று கூற
ஊர்வசியோ "பருவப் பெண்களின் எல்லையில்லா மகிழ்ச்சிக்கு காரணம் ஒரு ஆடவனின் நினைவுகளாகவே இருக்கும் உனது நினைவை ஆட்சி செய்யும் அந்த ஆடவன் எவனோ "என்று கேலி செய்ய
ருத்ரமதியோ "போதும் உன் பரிகாசம் அங்ஙனம் ஒன்றும் இல்ல .வா இப்பொழுது செல்லலாம் "என்று கூறி செல்ல
ஊர்வசியும் "உன் மனதை வெல்ல ஒரு மன்னன் இல்லாமலா போய் விடுவான் "என்று கூறிவிட்டு அவள் பின்னோடே சென்றால் .
அவர்கள் இருவரும் ரதத்தில் ஏறி காட்டின் வழி பயணித்து சுனை அருவியை அடைந்தனர் .சுனை அருவி அண்ணாந்து பார்த்தாலும் அவ்வருவியின் ஆரம்பத்தை காண இயலாதவாறு உயர்ந்து அமைந்திருந்தது ,சுற்றிலும் வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் ,தண்ணீர் அருந்த வைத்திருக்கும் புள்ளி மான்கள் என அந்த சுனை அருவி மிகுந்த சௌந்தர்யத்தோடு இருந்தது .
அதைக் கண்ட ஊர்வசியும் ருத்ரமதியும் சிறு குழந்தைகள் போல் இறங்கி தண்ணீரில் விளையாட துவங்கினர்.இவர்கள் விளையாடி இன்பத்தில் திளைத்துக் கொண்டிருக்க எங்கோ ஒரு உறுமல் சத்தம் கேட்டது.இதை கவனித்த ருத்திரா"ஊர்வசி இங்கே ஏதோ விசித்திரமான உறுமல் சத்தம் கேட்கின்றதே "என்று கூற ஊர்வசியோ "உறுமல் சத்தமா எனக்கு ஏதும் கேட்க வில்லையே "என்று கூறவோ அம்மா என்றொரு அலறல் சத்தம் கேட்டது இருவரும் பயந்து என்ன வென்று சென்று பார்க்கவோ அவர்களது ரதத்தின் சாரதியின் குரல் வளையை ஒரு சிங்கம் கடித்துக் கொண்டிருந்தது .
அவர்கள் கண்ட இக்கோரக் காட்சியால் இருவரும் ஆஆ என்று கத்த நிமிர்ந்த அந்த சிங்கமோ இவர்களை நோக்கி பாய எத்தனித்தது இருவரும் தங்கள் உயிரை காக்க ஓடினர் அப்பொழுது ருத்திராவின் கால் ஒரு மரத்தின் வேரில் தட்ட அவள் நிலை தடுமாறி விழுந்தாள் .அவள் விழுந்ததை அறியாத ஊர்வசியோ ஓடிக் கொண்டே இருந்தால் .
ருத்திரா எழுந்திரிக்க முயற்சி செய்யவோ பாவம் அவளது கால்கள் மரத்தின் வேர்களின் நடுவில் மாட்டி கொண்டது .அவள் பின்னே திரும்ப அங்கே சிங்கம் இவளை நோக்கி மெது மெதுவாய் நெருங்கி வந்து கொண்டிருந்தது .அவள் தன முடிவு நெருங்கியதாய் எண்ணி தன கண்களை மூட எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு சிங்கத்தின் வயிற்றுப் பகுதியில் குத்தியது .சிங்கத்தின் அலறலால் கண் விழித்த ருத்திரா அதன் வயிற்று பகுதியில் குத்தி இருந்த அம்பை பார்த்து திகைக்க அங்கோ ஓர் மரத்தில் இருந்து ஓர் உருவம் குதித்தது .
தோல் வரை நீண்ட முடியும்,நெற்றியில் சூரிய சின்னமும் பருத்தியால் செய்த உடையில்,ஆறடிக்கும் குறையாத உயரத்தில் அகன்ற மார்புடன் கம்பீரத்தை பறைசாற்றும் முகமும் அதில் சூரியனின் தேஜசுமென ஆணழகனாய் ஒருவன் கீழ் குதித்தான்.எந்த ஒரு ஆடவனையும் நிமிர்ந்து பார்க்காத ருத்ரா அவனது வதனத்திலிருந்து தன் கண்களை எடுக்க இயலாதவாறு இருந்தால்.ருத்ராவின் அருகில் வந்தவன் அவனது கையை நீட்ட அவளோ மந்திரத்தில் கட்டுண்டவள் போல் தன் கையை கொடுத்தால் பின் அவளை எழுப்பியவன் அவளை தனக்கு பின்னே தள்ளி நிறுத்தினான்.அங்கோ சிங்கம் எழுந்து வெறி பிடித்தார் போல் அவனை நோக்கி வந்தது .அமைதியாக நின்றவன் அது பாய போகும் நேரம் அவனது இடையில் கட்டியிருந்த வாளை அதன் குரல் வளையில் செலுத்தி அதை தள்ளி விட்டான் .
ரத்தம் ஆற்றாய் பெருக்கெடுக்க சிங்கம் அங்கேயே துடி துடித்து இறந்தது .பின் ருத்ரா அவனிடம் திரும்பி "என் உயிரை காப்பாற்றியதற்கு மிகவும் நன்றி.நான் இததேசத்தின் இளவரிசியாவேன் .நாமம் ருத்ரமதி .தாங்கள் செய்த பெருமுதவிக்காக தங்களை எமது அரண்மனைக்கு இன்று வருமாறு வேண்டிக்கொள்கிறேன்,"என்று கூற அவனோ "தங்கள் உபசரிப்பு எனக்கு தேவை இல்லை இளவரசியாரே .தம்மை காத்து கொள்ள ஒவ்வொரு முறையும் இது போல் ஒருவன் வர மாட்டான் .தழைய தழைய தாவணி கட்டி ஒப்பனை செய்வதில் காட்டும் சிரத்தையை தற்காப்பில் காட்டினாள் நன்றாயிருக்கும்."என்று நேராய் அவளது கண் பார்த்து கூறியவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.
இது போல் மாற்றார் பேசியிருந்தால் வெகுண்டெழும் ருத்திரா இன்று ஏனோ அவனது கண் பார்த்து பேசுகையில் பேச மடந்தையாகி போனால்.அங்கேயே சிலையாய் நின்றிருந்தவள் ஊர்வசியின் உலுக்கலுக்கு பின்னே சுயநினைவுக்கு வந்தால் .ஊர்வசி"ருத்திரா என்ன ஆனது உனக்கு இப்படி பிரம்மை பிடித்தார் போல் நிற்கிறாய்.நீ என் பின் வரவில்லை என்று தெரிந்ததும் எவ்வளவு பயந்தேன் என்று அறிவாயா ஒரு நிமிடம் என் மூச்சே நின்று விட்டார் போன்று உணர்ந்தேன் ."என்று அவள் பேசிக் கொண்டே போக ருத்ராவோ அவன் கூறிய வார்த்தைகளையே நினைத்துக் கொண்டிருந்தாள் "பின் "என்ன இருந்தாலும் இவ்வளவு கடுமை கூடாது "என்று அவள் கூற ஊர்வசியோ "ருத்ரா நான் என்ன பேசுகின்றேன் நீ என்ன கூறிகின்றாய்?"என்ன ஆனது உனக்கு என்று வினவ ருத்ராவோ"ஒன்றுமில்லை ஊர்வசி புறப்படலாம் வா நேரம் ஆகி விட்டது"என்று கூறி விட்டு முன்னே சென்றால் ஊர்வசி "என்ன இவளுக்கு ஏதோ சரியில்லை கேட்டாலும் கூற மாட்டாள் அழுத்தக்காரி அவளே கூறட்டும் ."என்று நினைத்துக் கொண்டு அரண்மனைக்கு சென்றால் .
2 நாட்களுக்கு பின்
ருத்ரா இந்த இரண்டு நாட்களாய் ஏதோ யோசனையிலேயே இருந்தால் அவள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு முன்னும் அவள் கண்ட அந்த ஆடவனின் முகம் அவளது நினைவில் நிழலாட இப்படி ஓர் உணர்வை இன்று வரை அனுபவித்திராத ருத்ரா வெகுவாக குழம்பியே போனால் .
ஒருநாள் உணவின் பொழுது அவள் உணவை உண்ணாது யோசனையிலேயே இருக்க சித்தாரா தேவியார்"மகளே என்னவானது உனக்கு ஏன் உண்ணாமல் அப்படியே வைத்திருக்கிறாய் .2 நாட்களாய் சரியாக முகம் கொடுத்து பேச மாட்டேன் என்கிறாய் என்னானது மகளே?உடம்பு ஏதும் சுகமில்லையா ருத்த்ரா "என்று பதற
அவளோ"ஒன்றுமில்லை அன்னையே சிந்தனையில் இருந்தேன் ."என்று கூற சித்தாரா தேவியாரோ "உனக்கு விரைவில் திருமணம் செய்தால் தான் எல்லாம் சரியாகும்"என்று கூற வேண்டும் எனக்கு திருமணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று கூறும் ருத்ரா இன்று அமைதியாய் தலை கவிழ்ந்திருப்பது சித்தாரா தேவியாருக்கு புதிதாகவே இருந்தது .
பின் அவர் அவள் அருகில் சென்று தட்டை எடுத்து அதில் இருந்த உணவை அவளுக்கு ஊட்டி விட்டார் .அன்னையின் கையால் உண்ணுவது ருத்ராவிற்கு சற்று குழப்பத்திலிருந்து விடுதலை தர அவ்வேளை ராஜா ஷிவதேவ் வர்மர் உள்ளே வந்து "என்ன அநியாயம் நடை பெறுகின்றது இந்த அரண்மனையில் ?"என்று வினவ அவரது கேள்வியில் சித்தாரா தேவியாரும் ருத்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள ஷிவதேவரே தொடர்ந்தார்."நான் பெற்றவளுக்கு மட்டும் தான் அன்னத்தை ஊட்டுவீர்களோ எனக்கு ஊட்ட மாடீர்களோ தேவியாரே இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் "என்று கூற
அவரது குழந்தைத் தனத்தில் இருவரும் வாய் விட்டு சிரித்தனர் .பின் மூவரும் இணைந்து உண்டு சிறிது நேரம் அளவளாவிக்கொண்டிருக்க ராஜா ஷிவதேவர்"என் அருமை மகளே உனக்கு ஏற்ற துணையை அந்த சிவ பெருமானின் உதவியால் உன் தந்தை கண்டு பிடித்து விட்டேனம்மா ."
என்று கூற ருத்ராவிற்கோ நெஞ்சை ஈட்டியை கொண்டு கிழிப்பதை போல் இருந்தது .பின் அவர்"என்ன அம்மா ருத்ரா இப்படி பார்க்கிறாய்.இந்த முறை நீ எதுவும் கூறி தட்டி கழிக்க இயலாது .உன் தந்தை உனக்கு என்றும் நல்லதையே செய்வேன் என்ற நம்பிக்கை இருந்தால் நீ இதற்கு சம்மதித்தே ஆகா வேண்டும்"என்று கூற
சித்தாரா தேவியாரோ"தாங்கள் இத்தனை பெருமையாய் கூறும் அந்த நபர் யார் அரசே?"என்று வினவ அவரோ"வேறு யாரும் அல்ல அரசியாரே எனது ஆருயிர் நண்பன் ,சிம்ம தேசத்து அரசன் ரவி வர்மா மற்றும் எனது உடன் பிறந்த அருமை சகோதரி மணிமேகலையின் மகன் இந்திரஜித் தான்.அவன் நற்குணங்கள் நிறைந்த பார் போற்றும் வீரன்,மன்மதனை ஒத்த அழகன் நம் மகள் ருத்ராவிற்கு உற்ற துணை அவனே இன்னும் 2 நாட்களில் அவர்கள் இங்கே வருகை தர விருக்கின்றனர்.நம் தேசத்தின் திருவிழாவிற்கு பின் நமது இளவரசியின் திருமணத்தை முடிக்கலாம் என்றிருக்கிறேன்"என்று கூறி ருத்ராவிடம் திரும்பியவர்"மகளே உனக்கு இதில் சம்மதம் தானே என்று வினவ
அவளோ"தங்களுக்கு விருப்பம் உள்ள எதுவும் எனக்கு சம்மதம் தான் தந்தையே ஆனால் ஒரு நிபந்தனை "என்க
அரசியார்"என்ன மகளே?"என்று வினவ
அவளோ "எனக்கு தற்காப்பு கலைகள் கற்க வேண்டுமென்று ஆசை உள்ளது தந்தையே "என்று கூற
ஷிவதேவ் வர்மரோ "இவ்வளவு தானே இந்திரஜித் அனைத்து தற்காப்பு கலைகளிலும் கை தேர்ந்த இளைஞன் .அவனிடம் உன் விருப்பத்தை கூறு நிச்சயம் அவனே உனக்கு படிப்பிப்பான் "என்று கூறினார் .பின் அனைவரும் தத்தம் அறைக்கு செல்ல ஏனோ ருத்ராவால் நிம்மதியாக துயில் கொள்ள இயல வில்லை.
முழுதாக 3 நிமிடம் கூட பேசியிருக்க மாட்டேன் அந்த நபரிடம்.அவன் நாமம் ஊர் பேர் எதுவும் அறியேன் ஆனால் ஏன் இன்று தந்தை என் திருமணத்தை குறித்து பேசுகையில் அவனது முகம் என்முன் நிழலாடியது .இது என்ன இம்சை .நான் செய்வது சரியா.கடவுளே என்னை நல்வழியில் அழைத்து செல்லப்பா .என்று மனமார பிரார்த்தித்தவள் பின்னே துயில் கொண்டால் .
ருத்ராவிற்கு ஏன் இந்த குழப்பம்??
அவளது திருமணம் நல்லமுறையில் நடக்குமா??
பிரெச்சனைகள் பல விளையுமா??
stay tuned to know
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top