paguthi 20


மாலை பொழுதும் மலர அந்த ஊரின் அனைத்து மக்களும் அந்த பரந்த அரண்மனையின் வளாகத்திற்குள் சென்று கொண்டிருந்தனர்.அந்த அரண்மனையை சுற்றிலும் அகழி அமைக்கப் பட்டிருந்தது அங்கே உள்ளே செல்வதற்கு ஒரு வழி மாத்திரமே உள்ளது அதுவும் என்று மூடியே இருக்கும் அரண்மனையின் உள்ளே செல்ல உள்ள ஓர் வழியானது அந்த அகழியின் நடுவே போடப் படும் பாலமே ஆகும்.அரண்மனையின் மறுபுறம் ஏறி செல்ல இயலாதவாறு சிங்கத்தின் வாயிலிருந்து வீழ்வதைப் போன்ற அருவி அமைக்கப் பட்டிருந்தது.அந்த அரண்மனையின் சுவர்களனைத்தும் பற்பல ஓவியங்களாலும்,சிற்பங்களாலும் மிகுந்த கலை நயத்துடன் அமைக்கப் பட்டிருந்தது.ஆனால் அந்த அரண்மனையின் அழகை ரசிக்கும் மனநிலையில் எவரும் இல்லை.அங்கே அரண்மனையின் வளாகம் மிகவும் பறந்து விரிந்து அமைத்திருந்தது.அதன் முடிவில் அதாவது அரண்மனையின் வாசலின் அருகில் ஒரு அரியாசனம் அமைக்கப் பட்டிருந்தது .


அதன் அருகில் இரண்டு பெண்கள் கருப்பு உடையில் கண்கள் மாத்திரம் தெரியும் அளவிற்கு மறைத்து கொண்டு நின்று கொண்டிருந்தனர்.அரியாசத்தின் அடியில் இரண்டு ஆண் காவலர்கள் கையில் வேல் தாங்கி நின்றுகொண்டிருந்தனர்.பின் சங்கின் பெரும் முழக்கம் எழுப்பப்பட்டது.மதில் சுவற்றின் நாள் புறத்திலுமிருந்தும் முரசுகள் கொட்டாய் பட்டது.பின் அங்கே அந்த அரண்மனையின் வாயில் கதவு திறக்கப் பட்டது .அரண்மனையின் வாயிலில் தன் முழு மேனியையும் மூடுமாறு உடை அணிந்த ஓர் உருவம் கீழே இறங்கி வந்து அரியாசனத்தில் தன் கால் மேல் கால் போட்டு அமர்ந்தது.பின் அது மெதுவாக தன் முகத்தை மறைத்திருக்கும் துணியை விளக்கியது.நீல நிறத்தில் மீன் போன்ற அமைப்பை உடைய கண்கள்

அகங்காரத்தை பிரதிபலிக்க கூர் நாசி செதுக்கி வைத்தார் போன்ற இதழில் ஏளனச் சிரிப்புடன் மிகவும் சௌந்தரமான முகத்தை உடைய அப்பெண் அந்த சௌந்தர்யத்தையும் மீறிய விஷப் பாம்பை போல் காட்சி அளித்தால்.பின் "எனது அருமை குடிமக்களே.தங்களை சந்தித்து எத்தனை நாட்களாகிவிட்டது .இந்த அரசி தங்களின் நலனை மாத்திரமே சிந்தையில் கொண்டிருப்பதால் தங்களை சந்திக்க நேரம் கூடி வரவில்லை என்று வஞ்சப்புகழ்ச்சியைப் போன்றதொரு குரலில் கூறினால்.


பின் ஆகையால் தாங்கள் தங்களுக்காக உழைக்கும் தங்கள் அரசிக்காக இன்று முதல் தினம் காலை 6 :௦௦ மணியிலிருந்து மாலை 7 :௦௦ மணி வரை வேலை செய்ய வேண்டும்.ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொடுக்கப்படும் உணவு பொருட்களின் அளவு இனி 2௦ விழுக்காடு குறைக்கப் படுகின்றது . இன்னும் 10 நாட்களில் மீண்டும் ஒரு முறை தங்களை சந்திக்க இருப்பதாக அரசாங்க அறிவிப்பு வரும் ஆகையால் இப்பொழுது அனைவரும் களைந்து செல்லலாம் "என்று உரக்க கூறிய அப்பெண் உள்ளே கோட்டைக்குள் செல்ல திரும்பினாள் பின் ஒரு முறை தன் கடைக் கண்ணால் கூட்டத்தை நோக்கியவள் ஒரு விஷமமானச் சிரிப்புடன் உள்ளே சென்றால் .

பின் அனைத்து மக்களுடனும் வெளியேற பிரியா கார்த்திக் மற்றும் அர்ஜுன் அந்த ஊரில் பல வருடங்களுக்கு முன் கைவிடப்பட்ட குடிசையை சுத்தம் செய்து அதில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

அர்ஜுன்"இங்க என்ன நடக்குதுன்னே தெரியல .வெளி உலகத்துக்கு தெரியாம இப்டி ஒரு ராஜ்ஜியம்"

கார்த்திக்"ராஜ்ஜியம் இல்லடா நரகம்னு சொல்லு பொருத்தமா இருக்கும்"

அர்ஜுன் "exactly .இவ்ளோ கொடுமை படுத்துறங்க அண்ட் அந்த அரசிய பாத்தியா பாக்க அழகா இருக்கா ஆனா உடம்பு பேச்சுன்னு எல்லாம் விஷம்."

கார்த்திக்"இதை தான் அதீத அழகு ஆபத்துனு சொல்லுவாங்க"என்று கூறி ப்ரியாவை பார்க்க அவளோ ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தால்.பின் அவளின் அருகில் சென்ற அர்ஜுன் அவளது தோளைத் தொட அப்பொழுதே தன் சிந்தனையிலிருந்து வெளி வந்த பிரியா அவனைப் நோக்கி என்ன என்பதைப் போல் பார்த்தாள்.


அர்ஜுன்"பிரியா நானும் இங்க வந்ததுல இருந்து பாக்குறேன் நீ என்னனா எதையோ யோசிச்சுகிட்டே இருக்க என்னாச்சுடா?"என்று கேட்க அவளோ சிறிது புன்முறுவலித்து விட்டு 

"ஒன்னும் இல்ல அர்ஜுன் இந்த இடம் இந்த மக்கள் ஏதோ பழக்கப் பட்டது மாறி இருக்கு.ஆனா இது பைத்தியக்காரத்தனம்னு எனக்கு நல்லாவே தெரியுது ஆனா இந்த இடத்துக்கு உரியவள் அந்த அரசி இல்லனு தோணுது"என்று கூற 

கார்திக்க்கோ"என்ன பிரியா நீ அவ இந்த இடத்திற்கு உரியவள் இல்லனா எப்படி மக்கள் அவளை அரசின்னு சொல்லுவாங்க அண்ட் இங்க இருக்குறவுங்க நெலமைய பார்த்த காலம் காலமா இது தான் நடக்குதுன்னு தெரியுது என இங்க இருக்குறவுங்கள புதுசா கொடும படுத்துனா ஒருத்தர் முகத்துலயாவது கோவம் தெரியும்ஜ் ஆனா இன்னைக்கு முழுசா கவனிச்சதுல அவுங்க எல்லாரோட முகமும் இயலாமையை தான் பிரதிபலிச்சது"என்று கூற 

ப்ரியாவோ"அது எனக்கு தெரியும் கார்த்திக் ஆனாலும் என் உள்ளுணர்வு இந்த எடத்துல ஏதோ மர்மம் இருக்குனு சொல்லுது ."எங்க 

அர்ஜுன்"அப்போ அதா கண்டிப்புடிச்சுட்டா போச்சு."என்க

 கார்த்திக்"ஹலோ பாஸ் நாம ஒன்னும் சிட்டில இல்ல போலீஸ் போர்ஸ் வச்சு காண்டாக்ட் பண்ணி விசாரிச்சு கண்டு புடிக்க இப்டி ஒரு இடம் இருக்குனு வெளிய பொய் சொன்ன நம்மள தான் பைத்தியம்னு சொல்லுவாங்க"என்று கூற 

அர்ஜுனோ"மர்மம் இருக்கு ஆனா அது தூரத்துல இல்ல"என்க 

பிரியா"ஹைய்யோ அர்ஜுன் புரியுற மாறி பேசுங்க இப்போ என்ன புதிர் போட்டியா நடக்குது"என்று சற்று கடுப்புடன் வினவ 

அர்ஜுன்"நாம அந்த அரண்மனைக்குள்ள போனா எல்லாத்துக்கும் விடை கிடைச்சுடும் "என்று கூற 

கார்த்திக் "அது ஒன்னும் ஆயா சுட்ட வடைய சுடுற மாறி எளிமையான விஷயம் இல்ல அந்த அரண்மனையோட கட்டமைப்பை பாத்தேல உள்ள போக ஒரு வழி அதையும் அவனுங்க அடைச்சு வச்சுருக்கானுங்க எப்படி உள்ள போவ ?"என்று வினவ 

அர்ஜுன் சிரித்துவிட்டு "இவ்ளோ யோசிச்சவன் அதை யோசிக்காம இருப்பேனா ?நாம இன்னைக்கு காலைல அரண்மனைக்கு உள்ள பல மூட்டைகள் கொண்ட வண்டிகள் போறத பார்த்தோம்ல .அதே மாறி அரண்மனைக்கு உள்ள இருக்குற பணியாட்களுக்கு தினம் உணவு பொருட்கள் கொண்டு போறாங்க அதை உள்ள கொண்டு போக 2 ஆண் வீரர்களும் சில பெண் பணியாட்களும் தினம் விலை நிலங்களுக்கு அதிகாலைல வந்து வாங்குறதுக்கு முன்னாடி ஆற்றுல குளிச்சுட்டு போவாங்கலாம்.இதை அங்க வேல செஞ்சுட்டு இருந்தவுங்க பொலம்பேல ஒட்டு கேட்டேன்.சோ நாம என்ன பண்றோம்னா அந்த பணியாட்கள் குளிக்க போகேல அவுங்க மாற்று துணிய எடுத்து நாம போட்டுக்கிட்டு அதை tally பண்ற மாறி 2 ஆண் வீரர்களையும் ஒரு பெண் பணியாளையும் அடிச்சு கட்டி போட்டுட்டு அரண்மனைக்குள்ள போறோம் ."என்று கூறினான் அவனது திட்டத்தை கேட்ட ப்ரியாவிற்கும் கார்த்திக்கிற்கு அதுவே செறியென பட மூவரும் சிறிது உண்டு விட்டு உறங்க சென்றனர்.

இங்கே அரண்மனையில் அதே இருட்டறையில் வெள்ளைப் பந்தில் அந்த உருவத்திற்கு சொந்தமானவள் தன் நீண்ட நகங்களைக் கொண்ட கரங்களை அதன் மேல் வைத்து மந்திரம் உச்சரிக்கிறாள் பின் அப்பந்தை பார்க்கவோ அது எதையும் காண்பிக்க வில்லை .கோபமுற்ற அது மீண்டும் மந்திரத்தை உச்சரிக்க அதுவோ பலனற்று இருந்தது பின் ஆஆ என்று உரக்க கத்திய அவ்வுருவம் "இந்நாட்டை ஆளும் அரசி யான்.எம்மால் முடியாது இவ்வகிலத்தில் யாதும் அன்று.அப்படி இருக்கையில் ஏன் என் சக்திபந்து நடப்பவற்றை காட்ட மறுக்கின்றது "என்று கத்த அந்த இருள் நிறைந்த அறையில் ஒரு மெல்லிய ஒளி உருவாகியது "சம்யுக்தா"என்று கோரக் குரல் அதிலிருந்து வந்தது அந்த ஒளியில் நாம் அவ்வுருவத்தின் சொந்தக்காரியின் வதனத்தை காண முடிகின்றது.


 அதே விஷம் தோய்ந்த நீல கண்கள் அதே ஏளனச் சிரிப்பை உடைய இதழ்கள் இன்று கோபத்தால் நடுங்கியது ஆம் அந்த நாட்டின் அரசி சம்யுக்தா தான் அவ்வுருவத்தின் சொந்தக்காரி.

 பின் அவள் அவ்வொளியை நோக்கி "ஞான குருவே ஏன் எமது பந்து நடப்பவற்றை காண்பிக்க மறுக்கின்றது ?"என்று வினவ அவ்வொளியோ"நீ உன் சக்திகளை தற்காலிகமாக இழந்துள்ளாய் .இன்னும் 4 நாட்களில் பௌர்ணமி வர உள்ளது.நாளை மரு நாள் நீ ஒரு யுவதியை பலியிட்டு  மகா யாகம் செய்தால் இழந்த உன் சக்திகளை மீண்டும் பெறுவாய்.அது வரை இவ்விரண்டு நாட்களுக்கு நடப்பவை எதுவும் நீ அறிய மாட்டாய்"என்றது சம்யுக்தா"வேறு உபாயம் உண்டோ ??"என்று வினவ அவ்வொளியோ "இல்லை என்றுவிட்டு மறைந்தது.

பின் சம்யுக்தா "விதி உன் பக்கம் நின்று சதி செய்கின்றதோ அவ்விதியை வென்று உன்னை ஏன் கட்டுக்குள் கொண்டு வருவேனடி"என்று சூளுரைத்து விட்டு வெளி சென்றால்.

காலை பொழுது புலர கார்த்திக் ,அர்ஜுன் ,மற்றும் பிரியா தங்கள் திட்டத்தை செயல் படுத்த வேண்டி ஆற்றங்கரைக்கு சென்றனர்.அங்கே ஆண்களும் பெண்களும் வெவ்வேறு திசையிலிருந்து குளித்து விட்டு வெளிவர அர்ஜுனும் கார்திக்க்கும் ஆண்களில் 2 பேரை வீழ்த்தினர்,பின் அவர்களை உள்ளே காட்டில் ஒரு மரத்தோடு கட்டியவர்கள் அவர்களது உடையை மாற்றி கொண்டனர்.இதே போல் ப்ரியாவும் 1 பெண் பணியாளை வீழ்த்த .மூவரும் அவ்வரண்மனைக்குள் பணியாட்களோடு ஒருவராக நுழைந்தனர்.

இனி நடக்க விருப்பது என்ன??

மர்மம் அவிழ்க்கப் படுமா??

சம்யுக்தாவின் ரகசியம் என்ன??

stay tuned to know

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top