paguthi 19
அவர்கள் அக்கொடிகளை விளக்கி விட்டு பார்க்க அங்கோ ஒரு கல்லாலான சுவர் போன்ற அமைப்பு இருந்தது .அர்ஜுன் வேகவேகமாக அங்கிருந்த கொடிகளை பிடுங்க அந்த கொடிகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு ஒரு திரையை போல் இருந்தது.அவன் இழுத்த வேகத்தில் அந்த கொடிகள் பாதி தூரத்திற்கு அந்து வந்து விட்டது.கொடிகள் அந்து விழுந்ததும் அவர்கள் கண்டதோ சுமார் 20 அடி உயரத்திற்கும் குறையாமல் கருங்கல்லால் செய்யப் பட்டு ஓங்கி உயர்ந்து நிற்கும் தடுப்பு சுவற்றை தான் .
அதைக் கண்ட அர்ஜுனிற்கும் ப்ரியாவிற்கும் திகைப்பு மென்மேலும் கூடியது.அர்ஜுன்"இட்ஸ் இட்ஸ் unbelievable .இந்த அடர்ந்த காட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம இப்டி ஒரு சுவரா?இது என்ன இந்த காட்டோட முடிவா??"என்க
ப்ரியாவோ "இல்ல அர்ஜுன் எனக்கென்னவோ இது தான் பல உண்மைகளோட ஆரம்பம்னு தோணுது .இதுக்கு அந்த பக்கம் என்ன இருக்குன்னு நாம பார்த்தே ஆகணும் "என்று பிரியா கண்ணில் ஓர் உறுதியுடன் கூற அர்ஜுனிற்கு இதைப் போல் பிரியா பேசுவது புதுமையாக இருந்தாலும் அவன் உள்ளே எவ்வாறு செல்வது என்று யோசித்தான்.
பின் இருவரும் அந்த சுவற்றை ஒட்டியே ஏதேனும் துவாரமோ வழியோ இருக்கின்றதா என்று நோக்க அவர்களுக்கோ எதுவும் கிடைக்கவில்லை.பின் பிரியா சோர்வில் அந்த சுவற்றின் ஒரு பகுதியில் தன் கையை ஊன்றி நிற்க எங்கோ ஒரு கதவு திறப்பதைப் போல் சத்தம் கேட்டது பின் இருவரும் சத்தம் வந்த திசையை நோக்க அங்கோ அந்த சுவற்றின் ஒரு பகுதி உள்ளிழுக்கப்பட்டு வழி உருவாகி இருந்தது.
பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் அர்ஜுன் அவனது கையை நீட்டினான் இனி உனக்கு துணையாக நானிருப்பேன் என் கரம் கோர்ப்பாயா என்னும் விதமாக ப்ரியாவும் அவளது கையை தனது கையோடு கோர்த்து கொண்டு இருவரும் உள்ளே சென்றனர் .
(போன epila கார்த்திக் என்ன ஆனான்னு நா சொல்லவே இல்ல இப்போ சொல்லிடுறேன் )
கார்த்திக் ஜீப்பில் இருந்து சென்றுகொண்டிருக்க அவனது கைபேசி பையில் இருந்து நழுவி கீழே விழுந்தது அதை அவன் கவனியாது சென்று கொண்டிருந்தான் அவன் மிக வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தான் அப்பொழுது அவனது சிந்தையில் மித்ரா மட்டுமே இருந்தால் அதனால் அவனுக்கு பிரியா மற்றும் அர்ஜுன் அழைத்தது செவியில் விழாமல் போனது .பின் அவன் நடந்து நடந்து சோர்ந்து போனானே ஒழிய மித்ரா எங்கு சென்றால் என்று எந்த துப்பும் அவனுக்கு கிடைக்கவில்லை.
நெற்றி கழுத்து என எங்கும் வேர்வை சுரக்க கால் நடக்கும் சக்தியை இழந்து விட அவனுக்கோ உடல் வலியை விட மனதின் வலியே அவனை வாட்டி வதைத்தது.மித்ரா என்று உரக்க குரலில் கத்தியவன் அவ்விடத்திலேயே முட்டியிட்டு அமர அவன் அவளோடு இருந்த நிமிடங்களை நினைத்து பார்த்தான்
"நித்தமும் நின் நிழலில்
இருந்த நாள் அறியேனடி
நின் மீது நான்
கொண்ட காதலை
நீ விட்டு
சென்ற நொடி
உணர்ந்தேனடி என்
நாடி துடிப்பும் நீயென்று "
பின் அவனுக்கோ யாரோ அவனது தலையை வருடுவதைப் போன்ற உணர்வு யாரென்று நிமிர்ந்து நோக்க அங்கோ அவன் கண்ணில் தெரிந்தது மித்ரா .
மித்ரா என்று அவளை தீண்ட செல்ல அவளோ மறைந்து விட்டால் எங்கே என்று நோக்க அவளோ சற்று தூரத்தில் அவனை தன்னிடம் வருமாறு அழைத்தால்.
இவன் மீண்டும் அங்கு ஓடி சென்று பார்க்க அங்கோ அவள் இல்லை மீண்டும் நோக்க மித்ரா அங்கே ஓர் இடத்தில் நின்று கொண்டிருந்தாள் கார்த்திக் கீழே என்ன உள்ளது என்று நோக்காமல் ஓடி சென்றான் .
அவனது கண்ணில் தெரிந்தது மித்ரா மட்டுமே அவன் அவ்வாறு நோக்காமல் செல்ல அவனோ ஒரு பள்ளத்தில் விழுந்தான் .அந்த பள்ளம் முடிவில்லாமல் சென்றது கார்த்திக் மேலே நோக்க மித்ராவின் சிரித்த முகமே அவன் கண்ணிற்கு தெரிந்தது விழும் வழியில் மரக்கிளை தாக்கியதில் அவன் மயக்கம் அடைந்தான் .பின் கார்த்திக் தடாலென்று ஆற்றிற்குள் விழுந்தான் .
(சரி இப்போ அர்ஜுன் ப்ரியாவை பாப்போம் )
அர்ஜுனும் ப்ரியாவும் உள்ளே செல்ல அந்த சுவற்றுக்கு அந்த பக்கம் மிகவும் இருட்டாக இருந்தது பின் தங்கள் தோள் பையிலிருந்து இருவரும் டார்ச்சை அடித்து கொண்டு சிறிது தூரம் சென்றனர் பின் தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது .
இருவரும் அதை நோக்கி செல்ல சிறிது நேரத்திற்கு பின் எங்கும் வெளிச்சமாக இருந்தது .இருவரும் தங்கள் கண்களை அவ்விடத்தில் சுழல விட்டனர் .அங்கே இருபுறமும் சிறிய மண் குடிசைகளும் ,மண்ணால் அமைக்கப் பட்ட சாலையும், தண்ணீர் இறைக்கும் சக்கரமும்,வயல் வெளிகளும் ,தூரத்தில் மிகவும் பிரம்மாண்டமான கட்டமைப்பை பெற்றிருந்த அரண்மனையும் என மிகவும் பழமை வாய்ந்த கட்டமைப்பை பெற்றிருந்த ஒரு நகரமே உள்ளே இருந்தது.
அர்ஜுன் உள்ளே செல்ல எத்தனிக்க ப்ரியாவோ அவனை கரம் பற்றி தடுத்து ஆற்றங்கரை பக்கம் கூட்டி போனால் .
பின் அர்ஜுன்"ஹே ப்ரியா என்ன இது உள்ள ஒரு நகரமே இருக்கு உள்ள போலாம்னு பாத்தா நீ என்னனா என்ன இங்க கூட்டிட்டு வந்துருக்க ?"என்று வினவ
அவளோ "இல்ல அர்ஜுன் இப்போ நாம உள்ள நுழையுறது நல்லது இல்ல .இங்க இருக்குறவுங்க எப்படி பட்டவுங்க எப்படி டிரஸ் பண்ணுவாங்க என்ன எதுன்னு நமக்கு தெரியாது.எதுவும் தெரியாம உள்ள போறது நமக்கு தான் ஆபத்தா முடியும் சோ பொறுமையா இங்க மறைஞ்சு இருந்து பாப்போம் .இங்க இறக்குறவுங்கள பத்தி தெரிஞ்சுக்குவோம் அப்ரோமா உள்ள போவோம்"என்று கூற அவனுக்கும் அதுவே செறியென பட்டது.
பின் பிரியா தன் கண்ணை ஆற்றின் புறம் சுழல விட அவள் கண்ணிற்கோ ஆற்றில் ஏதோ மிதந்து கரையில் ஒதுங்கி இருப்பது தெரிந்தது பின் அர்ஜுனையும் அழைத்துக் கொண்டு அங்கே சென்றவள் என்ன வென்று பார்க்க அதுவோ ஒரு மனிதனைப் போல் இருந்தது பின் அர்ஜுன் அம்மனிதனைத் திருப்ப திருப்பி பார்த்தவர்களுக்கோ பெரும் அதிர்ச்சி ஏனெனில் அது வேறு யாரும் இல்லை கார்த்திக் தான்.
பின் அவனை கரைக்கு அழைத்து வந்தவர்கள் அவனது வயிற்றில் அமுக்கி தண்ணீரை வெளியே எடுத்தனர் .பின் கார்த்திக் மீது மெதுவாய்க் கண்ணைத் திறக்க அவன் கண் முழிப்பதைப் பார்த்த அர்ஜுனும் ப்ரியாவும் அவனை கட்டிக் கொண்டனர்.
அர்ஜுன்"எரும உன்ன காணாம எப்படி பயந்துட்டோம் தெரியுமா ."என்றான் பின் அனைவரும் அங்கு ஊர் இடத்தில் அமர்ந்து எவ்வாறு உள்ளே செல்வது என்பதைப் பற்றி ஆலோசனை செய்ய அங்கு தூரத்தில் ஏதோ சத்தம் கேட்க மரங்களுக்கு நடுவே தங்களை மறைத்துக் கொண்டனர் .
பின் அவர்கள் கண்டதோ ஒரு இழு வண்டியைத் தான்.அந்த வண்டி மிகவும் பெரியதாக பல மூட்டைகளுடன் இருந்தது .அந்த வண்டியை 2 முதியவர்கள் இழுத்துக் கொண்டு வந்தனர்.
அவர்கள் மேலாடை எதுவும் அணியவில்லை.அவர்கள் மிகவும் களைப்பாக இருக்கிறார்கள் என்று அவர்களது முகத்திலேயே தெரிந்தது.அவர்கள் வேகம் குறையும் போதெல்லாம் இரு புறத்திலுமிருந்தும் முகத்தை மறைத்து மேலிருந்து கீழ் வரை கருப்பு உடை அணிந்து கையில் வேல் பிடித்த வீரர் போன்றவர்கள் அவர்களை சாட்டையால் அடித்தனர்.
இதைக் கண்ட அர்ஜுனிற்கும் கார்திக்க்கிற்கும் கோவம் தலைக்கேற முன்னே செல்ல போனவர்களை பிரியா அவர்கள் கையை பிடித்து தடுத்து கவனிக்குமாறு கூறினால்.
பின் தலையில் பெரிய மூட்டைகளுடன் பெண்களும் வந்தனர் அவர்களும் தங்கள் முகத்தை துணியால் மூடி இருந்தனர் .கண்கள் மட்டுமே தெரிந்தது .அவர்கள் பேசுவதை கவனிக்கையில் பண்டைய தமிழில் பேசுகிறார்கள் என்பதை கண்டு கொண்டனர்.பின் கடைசியாக சென்ற வண்டியில் இருந்து ஒரு மூட்டை கீழே விழுந்தது .அவர்கள் அனைவரும் சென்ற பின் அந்த முட்டையின் அருகே சென்ற ப்ரியாவும் அர்ஜுனும் கார்திக்க்கும் அதில் என்ன உள்ளது என்று பார்த்தனர் .அதில் 4 ஆண்களுக்கான உடையும் 2 பெண்களுக்கான உடையும் இருந்தது.
அதைக் கண்டவர்கள் அவ்வூரின் உள்ளே செல்ல வழி கிட்டியதாய் நினைத்து அதில் இருந்த ஆடைகளை மாற்றிக் கொண்டனர் .பின் அவர்கள் அவ்வூரின் உள்ளே செல்ல அவர்கள் கண்டதோ மக்களை துன்புறுத்தியும் அடித்தும் அடிமை போல் நடத்தும் கோரக்க காட்சிகளைத் தான்.பின் மக்களுக்குள் மக்களாக கலந்து கொண்டவர்கள் அங்கே அவர்களின் அகோரமான வாழ்க்கை முறையைக் கண்டனர்.
பின் அங்கே இரு குதிரைகளில் இரண்டு வீரர்கள் வந்து அவர்கள் கையில் வைத்திருந்த சிங்கால் முழக்கமிட்டனர் பின் "அனைவருக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு.ராஜ்ஜியத்தின் முக்கியமான ஓர் அறிவிப்பை வெளியிட இன்று கோ தங்கள் அனைவரையும் அரண்மனையின் வளாகத்தில் கூட கூறி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்."என்று கூறி விட்டு சென்று விட்டனர்.பின் மாலை வேளை நெருங்க தனியே சந்தித்து கொண்ட பிரியா,அர்ஜுன்,மாற்று கார்த்திக் யார் அந்த கோ ??எதற்காக அரண்மனைக்கு வர கூறி இருக்கிறார் ??
இங்கே இந்த மக்கள் என் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் ??யாருக்கும் தெரியாமல் இங்கே எவ்வாறு இப்படி ஓர் ராஜ்ஜியம் உள்ளது என்று பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
பின் கிளம்பி அரண்மனை வளாகத்திற்கு சென்றனர்.
செல்லும் இவர்களுக்கு பதில் கிடைக்குமா??
இல்லை மேலும் பல வினாக்கள் விளையுமா??
stay tuned to know
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top