paguthi 18
கார்த்திக்கின் சத்தம் கேட்டு அங்கு வந்த ப்ரியாவும் அர்ஜுனும் அவன் தரையில் முட்டியிட்டு அமர்ந்து இருப்பதைப் பார்த்து ஒரு நிமிடம் திகைத்து நின்றனர் .
பின் அவனிடம் சென்ற ப்ரியாவும் அர்ஜுனும் கார்திக்க்கை பிடித்து உலுக்க அவன் அர்ஜுனை கட்டி பிடித்து "அவ ஏன்டா போனா.அவ இல்லாம நான் எப்படி டா இருப்பேன் " என்று பிதற்றத் தொடங்கினான் .
அவன் கூறுவது விளங்காத அர்ஜுன் "டேய்ய் கார்த்திக் என்ன ஆச்சுடா ஏன் இப்டி பிதற்றுற மித்ரா எங்க?""என்று வினவ ப்ரியாவோ கார்த்திக் கையில் கசங்கி இருந்த மித்ராவின் கடிதத்தை பார்த்து விட்டு திகைத்து நின்றாள்.
இருவரையும் பார்த்த அர்ஜுன் என்ன நடக்கின்றது என்று புரியாமல் "காய்ஸ் கேன் யு ஜஸ்ட் ஸ்பீக் அவுட் .என்ன நடக்குது இங்க ??"என்று கேட்க
கார்திக்கோ "என் மித்ரா என்ன விட்டு போய்ட்டாடா .வாழ்க்கையை ஆரம்பிச்சவளே அத முடிச்சுக்குறேன்னு சொல்லிட்டு போய்ட்டா ."என்று மித்ராவின் கடிதத்தை அவனிடம் கொடுக்க அர்ஜுனோ என்ன செய்வதென்றும் மித்ராவின் இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பதும் தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் விட்டதைப் போல் உணர்ந்தான் .
பின் அவ்விடத்தில் இருந்து எழுந்த கார்த்திக்"உன்ன அவ்ளோ சீக்கரம் விட்டுற மாட்டேன் மித்ரா .உனக்கும் என்ன புடிச்சுருக்குனு தெரிஞ்சதுக்கு அப்பறோம் நான் உன்ன அவ்ளோ சீக்கரமா என்ன விட்டு போக விட்டுற மாட்டேன் .நீ எங்க இருந்தாலும் உன்கிட்ட வருவேன் "என்று கூறி வெளியே செல்ல போனவனை அர்ஜுன் கரம் பிடித்து தடுத்தான் .
அர்ஜுன்"ஹே கார்த்திக் உணர்ச்சிவசப் பட்டு ஏதாவது பண்ணாத பொறுமையா தேடி பாப்போம்"என்க
கார்த்திக் "பொறுமையாவா என் பொண்டாட்டி எங்க போனான்னு தெரியாம நா அவளை கண்டு பிடிக்க போறேன் நீ என்னனா என்ன பொறுமையா இருக்க சொல்லுற"என்று கத்த
ப்ரியாவோ"exactly அவ எங்க போனான்னு நமக்கு எந்த cluevum இல்ல சோ நாம பொறுமையா தான் கார்த்திக் அவளை trace பண்ணனும்"என்று கூற அவனோ அவர்கள் கூறுவது எதையும் காதில் வாங்காமல் தன் மடிக்கணினி கொண்ட பையை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.
"இனி இந்த வீட்டுக்குள்ள வந்தா அது என் மித்ராவோட தான் வருவேன் என்று கூறி விட்டு சென்றான்." அவனை தடுக்க சென்ற ப்ரியாவை அர்ஜுன் தடுத்தான்.
பிரியா"ஹே அர்ஜுன் அவன் போயிட்டு இருக்கான் நீ என்னனா அவனை தடுக்காம என்ன தடுக்குற "என்று கேட்க
அர்ஜுன்"அவன் போகட்டும் விடு "என்று கூற
ப்ரியாவோ"ஹே லூசா டா நீ அவன் மித்ராவை காணோம்ங்குற நெலமையில என்ன பண்ணுறான்னே தெரியாம போய்கிட்டு இருக்கான் நீ என்னடான்னா அவனை போகட்டும் விடுன்னு சொல்லுற"என்று கூற
அர்ஜுனோ "கார்த்திக்க என்னனு நெனச்ச அவன் எவ்வளவுக்கு எவ்வளோ வேகமா இருக்கானோ அதை விட அதிகமா விவேகத்தோட செயல் படுவான்.அவனால கண்டிப்பா மித்ராவை கண்டு பிடிக்க முடியும் .நாம அவனை பின் தொடர்ந்தால் போதும் ."என்று கூறி அவளை தேவையானதை எடுத்து வைக்க சொன்னான்.
அவள் ரேடார்,மடிக்கணினி ,போன்ற நவீன சாதனங்களை ஒரு பையில் எடுத்தவள் ஏதோ தோன்ற அவளது மேஜையில் இருந்த அந்த பெட்டியையும் போட்டுக் கொண்டு அவனுடன் ஜீப்பில் கிளம்பினாள்.
இங்கு கார்த்திக் அவ்வூரில் பொருத்தப் பட்டுள்ள அனைத்து cctv காமெராக்களின் நேற்றைய பதிவைக் கண்டு கொண்டிருந்தான்.ஆனால் எந்த காமெராவிலும் மித்ரா பிடி பட வில்லை .
சோர்ந்தவன்"எங்கடி போன என்று மித்ராவின் புகைப் படத்தை பார்க்க ஏதோ தோன்றியவன் போல் காட்டு வழியே பொருத்தப் பட்டிருந்த காமெராவின் பதிவை நோக்க சுமார் 2 :௦௦ மணி அளவில் மித்ரா காட்டின் உள்ளே செல்வது பதிவாகி இருந்தது .அதைக் கண்டு சிரித்தவன்"உன்னால என்ன விட்டு அவ்ளோ சீக்கரம் போகிற முடியாதுடி.உன்ன தேடி நீ போன இடத்துக்கே வரேன் "என்று கூறியவன் ஜீப்பை காட்டின் வழி விட்டான்.
ப்ரியாவும் அர்ஜுனும் கார்த்திக்கின் மொபைல் signalai தொடர்ந்து சென்று கொண்டிருந்தனர் .அவனது போனின் சிக்னல் காட்டின் வழியே பயணிப்பதை பார்த்த
அர்ஜுன்"இந்த காட்டுக்கு நமக்கும் ஏதோ பிரிக்கப்படாத உறவு இருக்கு போல எப்போவும் பிரச்சன இங்க தான் ஆரம்பிக்குது "என்று கூறி ஜீப்பை செலுத்தினான் .
இங்கு கார்த்திக் ஜீப்பை செலுத்திக் கொண்டு செல்ல ஒரு இடத்தில் அவனது ஜீப் நின்றது .அவன் எவ்வளவோ முயற்சித்தும் அது செயலிழந்து இருந்தது .பின் தனது தோள் பையுடன் இறங்கியவன் உள்ளே செல்ல அவனது தோள் பையில் வைத்திருந்த கைபேசி நழுவி கீழே விழுந்தது .
பின் அவனது போனின் சிக்னல் இருக்கும் இடத்திற்கு வந்த அர்ஜுனும் ப்ரியாவும் கண்டதோ வெற்று ஜீப்பும் அதனிலிருந்து 10 அடி தூரத்தில் நழுவி விழுந்திருந்த அவனது போனும் தான்.
பின் அவன் அருகில் தான் இருப்பான் என்று எண்ணிய அர்ஜுனும் ப்ரியாவும் கார்த்திக் கார்த்திக் என்று கத்த அவர்களுக்கு அவர்களின் குறளைத் தவிர வேறு எதுவும் கேட்க வில்லை.
அர்ஜுன் முதல் முதலாய் தான் செய்தது தவறோ என்று எண்ணமிடத் துவங்கினான்.ப்ரியாவோ தன் இரு நட்புகளும் காணாமல் போனதில் அழ ஆரம்பித்தாள்.பின் அவள் அருகில் வந்த அர்ஜுன்"ஹே பிரியா அழாதடா .ரெண்டு பெரும் கெடச்சுடுவாங்க வா நாம அவுங்கள தேடி போலாம் என்று கூறியவன் ஜீப்பில் சென்று அதை ஸ்டார்ட் செய்ய அதுவோ சற்று தூரம் கடந்த பின் puncture ஆகி நின்றது .
பின் இதுவேற என்று நினைத்தவன் அவளையும் தோள் பையையும் எடுத்துக் கொண்டு நடந்தான் .பின் சற்று நேரத்திற்கு பின் அவர்கள் இருவரின் காலும் ஏதோ கயிற்றில் தட்டுப்பட .அதை கவனித்த அர்ஜுன் சுற்றி முற்றி பார்க்க அங்கே எங்கிருந்தோ ஒரு மரத்தின் தண்டு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது அதை கண்ட அர்ஜுன் பிரியா என்று கூறி அவளை தன்னோடு சேர்த்து அணைத்து குதிக்க அங்கோ அடுத்த ஆபத்தாக இன்னொரு மரம் அவர்களைத் தாக்கியது .
பின் தாங்கள் எங்கே செல்கிறோம் என்றே கவனிக்காமல் சென்று கொண்டிருந்த அர்ஜுனும் ப்ரியாவும் கால் இடறி ஒரு சரிவில் சரிந்து கொண்டே சென்றனர்.அச்சரிவு முடிவில்லாததை போல் அதிக தூரம் நீண்டது .பின் அச்சரிவு முடிவுக்கு வர அர்ஜுனும் ப்ரியாவும் தட்டு தடுமாறி கை கால்களில் காயங்களுடன் எழுந்தனர்.
இருவரும் எழுந்த பின் தங்கள் மேனியில் பட்ட காயத்தை பொருட் படுத்தாது தனது காதலின் மேனியில் பட்ட காயத்திற்காக வருத்தப் பட ஆரம்பித்தனர்.
பின் இரவு வேலையும் நெருங்க இனி பயணிக்க முடியாது என்று நினைத்தவர்கள் அங்கே ஒரு சிறிய கூடாரம் போல் மரத்தின் விறகுகளாலும் இலைகளாலும் செய்து அங்கே தீ மூட்டி அமர்ந்தனர்.
பிரியா கார்த்திக் மற்றும் மித்ராவுடன் தான் கழித்த நேரங்களைக் குறித்து சிந்திக்க அவளது கண்களில் கண்ணீர் தாரை தாரையாக சுரந்தது .
பின் அர்ஜுன் அவளை சமாதானப் படுத்த வேண்டி அவள் அருகில் அமர்ந்தவன் அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.வாழ்க்கை என்றும் நேரான ஒரு பாதையை செல்வதில்லை .அதில் பல இடங்களில் நெளிவுகளும் சுழிவுகளும் ஏற்ற தாழ்வுகளும் இருப்பது இயற்கையே ஆகும் .துன்பத்தைக் கண்டு ஓடாமல் அதை எதிர்த்து நின்றால் வாழ்க்கையின் விளையாட்டில் வெற்றி பெறுவது எளிதே.
பின் இருவரும் உறங்க நடுஜாமத்தில் அர்ஜுன் ஏதோ ஒரு அசாதாரணமான ஒலியை கேட்டு கண் விழித்தான்.அருகில் பிரியா களைப்பால் உறங்கி கொண்டிருந்தாள் .
ஆபத்து அருகில் உள்ளது என்பதை உணர்ந்ந்தவன் ப்ரியாவை உலுக்கி எழுப்பினான்.பிரியா"என்ன அர்ஜுன் "என்று ஏதோ பேச ஆரம்பிக்க அர்ஜுன் அவனது உதட்டில் கை வைத்து பேசாதிருக்கும் படி சைகை செய்தான்.பின் அவர்கள் அந்த ராத்திரியில் நிசப்தத்தில் கூர்ந்து கவனிக்க அவர்களது கூடாரத்தின் வெகு சமீபத்தில் நரிக் கூட்டம் இருப்பதை உணர்ந்தனர் ஊளை சத்தத்தின் வழி.
இதற்கு பிறகும் இங்கு இருப்பது தங்கள் உயிருக்கு காலனாகக் கூடும் என்று உணர்ந்தவர்கள் அங்கிருந்து தமது தோள் பைகளை போட்டு கொண்டு ஓடத் துவங்கினர்.
எங்கு செல்கின்றோம்,இனி என்ன செய்யப் போகின்றோம் என்று அறியாமல் தத்தம் உயிரை காப்பாற்ற விதியின் வழியில் ஓடினர்.பின் மிகவும் சோர்ந்து ஒரு கல்லில் பிரியா உட்கார இனி ஆபத்து இல்லை என்று தெளிந்த அர்ஜுன் சற்று நேரம் நின்று தன்னை ஆசுவாசப் படுத்திக்க கொண்டான் .
தெளிந்த நீரோடையை போல் சென்று கொண்டிருந்த வாழ்க்கை குழம்பிய குட்டையைப் போல் ஆனதை எண்ணி அவன் அங்கிருந்த ஓர் கல்லை காலால் உதைக்க அது திரும்பி வந்தது.அவன் அத்திசையில் பார்க்க அங்கு மெலிதான கொடிகள் மாத்திரமே மண்டி இருந்தது.
அத்தனை மெலிதான கொடியில் பட்டு கல் திரும்பி வர வாய்ப்பில்லாததால் அவன் அக்கொடிகளுக்கு வெகு அருகாமையில் சென்று அதன் நடுவில் தட்ட ஏதோ கல்லை தட்டுவதைப் போன்ற ஒலி எழுந்தது.இதை கவனித்த பிரியா அவன் அருகில் வந்து அவன் தோள் தொட அவன் அவளை நோக்கி ஒரு குழப்பமான பார்வையை வீசினான் பின் இருவரும் அக்கொடிகளை விளக்க உள்ளே அவர்கள் கண்டதோ அவர்களை ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.
அவர்கள் கண்டது என்ன??
கார்த்திக்கும் மித்ராவும் இணைவார்களா??
அர்ஜுன் மற்றும் ப்ரியாவின் இத்தேடுதல் வேட்டை வெற்றி பெறுமா??
stay tuned to know.
readers please yaarum enna thittaadheenga karthickayum mithraavayum kaanaama pona maari ezhudhunadhukku.inime dhaan indha kadhaila pala charactersum twistsum varap pogudhu so porumaya padinga.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top