paguthi 17


இவ்வாறே மிகவும் அழகாக 1 மாதம் கடந்தது.கார்திக்க்கும் மித்ராவும் வழக்கம் போல் சண்டை இட்டுக் கொண்டாலும் முன்பு இருந்ததை விட மிக நெருக்கமாகவும் ,அன்பாகவும் பழக ஆரம்பித்தனர்.நம் ப்ரியாவும் அர்ஜுனும் தங்கள் காதல் கதையை தினம் தினம் தித்திப்பாக்கிக் கொண்டிருந்தனர்.

(சரி இப்போ உள்ள போவோம் )

பிரியா மற்றும் மித்ரா வரும் பொங்கலுக்காக அறைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.அப்பொழுது மித்ரா விட்டத்தில் படிந்திருக்கும் ஒட்டடையை சுத்தம் செய்வதற்காக ஒரு முக்காலியில் இன்னொரு முக்காலியை போட்டு ஏறி சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.

சிறிது சிறிதாக முக்காலி நகர்ந்து நழுவத் துவங்கியது .பின் முக்காலி முழுதாக நழுவ அம்மா என்ற கூவலுடன் விழப் போன மித்ராவை கார்த்திக் தன் இரு கைகளிலும் தாங்கி கொண்டான் .வேலை செய்ததன் சுவடாக அவள் நெற்றியில் துளிர்ந்திருந்த வேர்வை துளிகளும் ,வில்லை வலைத்ததைப் போன்ற சீரான புருவமும் தீச்சுடர் போல் அவனது மூச்சுக்காற்றோடு கலக்கும் அவளது மூச்சும் அவனை ஏதோ செய்தது.பின் கீழே தான் விழாததை உணர்ந்த மித்ரா கண்ணை விழிக்க அவள் தன் மணாளனின் முகத்தை அத்தனை அருகாமையில் கண்டு சற்று தடுமாறவே செய்தால்.

பின் மித்ரா"ஹே கார்த்திக் விடுங்க என்னை அதான் நா விழலேல "

என்று அடிக் குரலில் கூற அவனோ அவள் கூறியதை காதில் வாங்கியதாகவே தெரிய வில்லை .

பின் அவளை மெதுவாக இறக்கி விட்டவன் அவள் வெளியில் செல்ல போக அவளது கைபற்றி இழுத்தவன் அவளை கட்டிப் பிடித்து நின்றான்.முதன் முதலாய் ஒரு ஆண்மகனின் அணைப்பு அதுவும் தன் கணவனின் அணைப்பு மித்ராவின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சவே செய்தது .

பின் அவளை விளக்கியவன்.அவளது காதோரத்தில்" மித்து இன்னைக்கு ஈவினிங் வெளிய எங்கயாவது போலாமா" என்று அவள் கன்னத்தை கையில் ஏந்தி கேட்க அவளோ தன் தலையை மட்டும் ஆட்டினாள்.பின் அவளது கன்னத்தில் தன் இதழை பதித்தவன் அறையை விட்டு துள்ளலோடு வெளியேறினான்.

பின் மித்ரா சிரித்து விட்டு தன் நாட்குறிப்பை எடுத்து எழுதினால்.பின் மனது மிகவும் மகிழ்ச்சியாக இருக்க அவள் தான் முதல் முதலாய் பிரியாவுடன் சென்ற கோவிலுக்கு சென்றால் .

அன்று அக்கோவிலில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது .விழி மூடி தன் பிரார்த்தனையை இறைவன் பாதத்தில் சேர்ப்பிக்க அப்பொழுது அவளுக்கு அங்கு ஏதோ ஆள் நடமாட்டம் இருப்பதை போல் உணர்ந்தாள்.அக்கோயிலை சுற்றி வர அவளை யாரோ பின் தொடர்வதைப் போல் உணர்ந்தாள்.

 அந்த கோவிலை ஒரு முறை நோட்டமிட அங்கே தூணின் பின் யாரோ ஒளிந்திருப்பதை கண்டால்.பின் "ஹே யார் நீ.எதுக்கு என்ன follow பண்ணுற?" என்று கத்த அவள் கத்தியவுடன் அவ்வுருவம் காட்டின் வழி ஓடாத துவங்கியது.அவ்வுருவத்தை தொடர்ந்து ஓடினாள் பின் அவ்வுருவம் ஒரு இடத்தில் நின்றது .

பின் மூச்சு வாங்க நின்ற மித்ரா அவ்வுருவத்திடம் "கேக்குறேன்ல யாரு நீ என் என்ன follow பண்ண ?"என்று கேட்க அவ்வுருவம் சிரித்து விட்டு "பேச வேண்டியதை பேச துரத்த வேண்டியவர்களை துரத்தி தானே ஆக வேண்டும் "என்று கூற அவளோ "ஹே நா என்ன கேட்டா நீ என்ன பேசுற ??எதுக்கு என்ன follow பண்ணுனன்னு கேட்டா

ஏதேதோ பேசுற"என்று கூற அவ்வுருவம் பின் "நீ தெரிந்து கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது மித்ரா ."என்று ஏதோ கூற ஆரம்பித்தது.அது கூற கூற மித்ராவின் முகம் திகைப்பை வெளிப் படுத்தியது .பின் அது "முடிவு உன் கையில் "என்று கூறி விட்டு அவ்விடத்தில் இருந்து மறைந்தது.மித்ராவின் முகம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் பிரதிபலித்தது.

இங்கு அர்ஜுன் அன்று வந்த வழக்குகளின் கோப்புகளை சரி பார்த்து கொண்டிருந்தான் .பின் கார்த்திக்கிடம்"டேய்ய் மச்சான் இந்த caseah பாரேன் என்று கூற எந்த பதிலும் இல்லை மீண்டும் கார்த்திக் கார்த்திக் என்று அழைத்தும் பதில் வராமல் போக என்ன இவனுக்கு என்று பார்க்க அவனோ

சுவற்றை பார்த்து கொண்டு சிரித்து கொண்டிருந்தான்.பின் அர்ஜுன் அவனை வினோதமாக பார்த்து விட்டு அவனது தோளில் கை வைத்து உலுக்க சுய நினைவுக்கு வந்தவன் அர்ஜுனை பார்த்து மலங்க மலங்க விழித்தான் .

பின் "என்ன மச்சான்" என்று கேட்க 

அர்ஜுன் "இங்க ஒருத்தன் அரை மணி நேரமா கூப்டுட்டு இருக்கேன் நீ என்னடான்னா சேவித்த பாத்து சிரிச்சுட்டு இருக்க?"என்று வினவ 

அவனோ"மச்சான் எனக்கு வந்துருச்சு டா" என்று கூற 

அர்ஜுனோ "வந்துருச்சுனா போ டா "என்று கூறினான் அவன் கூறுவது புரிந்தும். 

பின் அர்ஜுனை முறைத்தவன் "அதில்ல மச்சான் நீ சொன்ன மாறி எனக்கு மித்ரா மேல லவ் வந்துருச்சு டா "என்று கூற 

அர்ஜுனோ"ஹ்ம்ம் உனக்கு இப்போ வரல மச்சான் எப்பவோ வந்துருச்சு அதை உணரல நீ அவ்ளோ தான் .சரி அவ கிட்ட சொல்லிட்டியா ?"என்று கேட்க 

அவனோ "இல்லடா மச்சான் இன்னைக்கு தான் சொல்லணும் .ஈவினிங் அவளிடம் வெளிய போலாம் ரெடியாக இருன்னு சொல்லிருக்கேன்."என்று கூற 

அர்ஜுன் "ஹப்பா ஒரு வழிய புரிஞ்சு கிட்டடா.நண்பேன்டா.அப்பறோம் மச்சான் எப்போ treatuh ??"என்று கேட்க

அவனோ "அப்டியே சார் குடிச்சு கிழுச்சுருவீங்க coffee dayla cappuchino தான வாங்கி தரேண்டா "என்று கூறினான்.

பின் இருவரும் வீடு வந்து சேர பிரியா கார்திக்க்கிடம் "ஹே கார்த்திக் மித்துக்கு என்னனு தெரியலடா கோவிலுக்கு போயிட்டு வந்தவ ரூம்லயே அடைஞ்சு கெடக்குறா .சாப்பிட கூப்டாப்போ கூட வரல ."என்று கூற

 அர்ஜுன்"என்னடி சொல்லுற இப்போ மணி 7 :oo ஆகுது இன்னும் மத்தியானம் சாப்பிடலைன்னு சொல்லுற .கார்த்திக் என்னனு பாரு "என்று கூறி திரும்ப அங்கோ கார்த்திக் இருந்த இடம் காலியாக இருந்தது .அங்கு அவர்கள் அறைக்கு செல்ல மித்ரா அங்கு இருந்த பெட்டில் தன் தலையை கையில் தாங்கியபடி அமர்ந்திருந்தாள் .

அவளை இந்நிலையில் கண்ட கார்திக்க்கோ பதறி போய் "என்ன மித்து என்ன ஆச்சு உடம்புக்கு எதுவும் பண்ணுதா ??"என்று அவளது நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்து பார்த்தான் .


பின்"காய்ச்சல் எதுவும் இல்லையேடா என்ன ஆச்சு "என்று அவளது கன்னத்தை கையில் ஏந்தி கேட்க .

அவள் அவனது கையை எடுத்து அதில் தன் கையை கோர்த்து கொண்டவள் அவனது தோளில் சாய்ந்து "ஒன்னும் இல்ல கார்த்திக் என்னவோ எனக்கு இன்னைக்கு மனசு சரி இல்ல அவ்ளோ தான் .நீ பயப்புடுற அளவுக்கு ஒன்னும் இல்ல ."என்று கூற 

அவள் மனதில் ஏதோ சொல்ல முடியாத எண்ணம் இருப்பது புரிய மேலும் அவளை கேட்டு துன்பப் படுத்த அவன் விரும்பவில்லை பின் அவளை மெதுவாக தன் மடி சாய்த்தவன் அவளது தலையை மெதுவாக வருடினான் .

அவனது வயிற்றை சுற்றி தன் கை கொண்டு கட்டிக் கொண்டு அவனது மடியில் தன் தலை சாய்த்து நிம்மதியாக படுத்திருந்தாள் மித்ரா.பின் எழுந்தவள் "கார்த்திக் என்கிட்டே ஏதாவது சொல்ல விரும்புறியா?"என்று கேட்க 

அவன் "ஹ்ம்ம் "என்று கூற "என்ன?" என்று கேட்க 

அவனோ அவளது நெற்றியில் மிருதுவாக தன் இதழ் பதித்து "எப்போவும் நீ என் மடியில இப்டியே சாஞ்சுருக்கணும்னு தோணுது .உன் கூட எப்போவும் நா சண்டை போடணும்னு தோணுது அதுக்கு உன்ன சமாதானப் படுத்த நா எப்போவும் உன் பின்னாடி சுத்தணும்னு தோணுது.நம்ம கல்யாணத்த உண்மையா ஆக்கணும்னு தோணுது.கடைசி வர உன்ன காதலிக்கனும்னு தோணுது .உன்ன என்னைக்கும் பிரிய கூடாதுன்னு தோணுது."என்று தன் காதலைக் கூற 

மித்ரா அவனை கட்டி பிடித்து அழ ஆரம்பித்தாள் .

அவள் அழுகையில் பயந்தவன் "மித்து என்னடா உனக்கு புடிக்கலயா?"என்று வினவ 

அவனது கன்னத்தில் இதழ் பதித்தவள்"உன்ன காதலிக்கிற அளவுக்கு நா என்ன கூட காதலிக்கலடா "என்று கூறினால் 

பின் நிமிர்ந்தவள் "கார்த்திக் எனக்கு உன் கையாள ஊட்டி விடுவியா??"என்று கேட்க அவன் வேகமாக தன் தலையை ஆட்டிவிட்டு உணவு எடுத்து வந்து அவளுக்கு ஊட்டினான் .

பின் அவன் தட்டை வைத்து விட்டு வர அவளோ அதே நிலையில் முட்டியில் முகத்தை வைத்து அமர்ந்திருந்தாள் .அவள் அருகில் வந்தவன் அவள் முகத்தை நிமிர்த்தி பார்க்க அதிலோ கண்ணீர் .அவள் கண்கள் அவனுக்கு ஆயிரம் கதைகள் சொன்னது காதல்,ஏக்கம்,தவிப்பு ,துயர் அனைத்தையும் சேர்ந்தவாறு அவள் கண்கள் அவனை தன விழிகளில் நிரப்பிக் கொண்டிருந்தது .அவள் முகத்தில் விழும் ஒரு கற்றை முடியை அவள் காதருகில் ஒதுக்கியவன் அவள் நெற்றியில் மிக மிருதுவாய் முத்தமிட்டான்.

பின் அவளை தன் மார்பில் சாய்த்து கொள்ள அவளும் மறுப்பேதும் இல்லாமல் அவன் மார்பில் சாய்ந்து கொண்டால் ஏனொ அவளுக்கு அது இப்பொழுது தேவையாய் இருந்தது .பின் அவனை நிமிர்ந்து பார்த்தவள் "கார்த்திக் மேக் மீ யூர்ஸ் "என்றால் .அவன் மலங்க மலங்க விழிக்க அவளோ மீண்டும் "if யு really லவ் மீ மேக் மீ யூர்ஸ் "என்றால்.கணவன் மனைவியாய் இருவரும் வாழ்க்கையை துவங்கினர்(இதுக்கு மேல யாரும் இருக்க கூடாது ஒடுங்கடா) 

காலை எழுந்த கார்த்திக் தன்னவளைத் தேட அவளோ அவன் அருகில் இல்லை.

கீழே சென்றிருப்பாள் என்று நினைத்தவன் குளித்து விட்டு வெளியே வர அவனது கண்ணில் ஒரு காகிதம் தென் பட்டது.என்ன இது என்று பார்த்தவனுக்கோ அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை.

"கார்த்திக் நா உங்க எல்லாரையும் விட்டு போறேன்.நா எதுக்காக போறேன் என்ன எதுன்னு என்ன தேடாதீங்க .நான் உங்களுக்கு கிடைக்க மாட்டேன் நான் போற இடம் அப்படி.நான் உங்க எல்லாருக்கும் சொல்ல முடியாத ஒரு விஷயத்தை செய்ய போறேன்.என்னை தேட வேண்டாம்.

-காதலுடன் உங்கள் மனைவி "

இதைக் கண்ட கார்த்திக்கின் கண்களில் கண்ணீர் சுரந்தது.ஆண்களின் கண்ணீர் கோழைத்தனம் என்று கூறியவர் யார்??ஆண்களின் கடினமான மனதையும் கரைத்து கண்ணீர் வர வைப்பவள் அவனுக்கு உயிருக்கும் மேலானவளாகவே இருப்பாள்.

பின் மித்ரா என்று பெரும் குரலில் கத்தியவன் எங்கடி போன ??என்று கத்தினான்.

மித்ராவிற்கு என்ன ஆகும் ??

அவள் எங்கு சென்றால் ??

மித்ராவின் மறைவின் காரணம் என்ன??

stay tuned to know

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top